Headlines

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் 7324 குடும்பங்களுக்கு புதிய சமுர்த்தி உறுதிப் பத்திரங்கள்

மூதூர் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ளவர்களுக்கான புதிதாக தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கான சமுர்த்தி நிவாரண உறுதிப்பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன. சமூக நலன் புரி மற்றும் ஆரம்ப கைத்தொழில் அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு வரும் இக் குறித்த நிகழ்வு நேற்று (02) மூதூர் பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உறுதிப் பத்திரங்களை வழங்கி வைத்தார் மொத்தமாக சுமார் 7324 புதிய சமுர்த்தி பயனாளிகளுக்கான…

Read More

வெளிமாகாணங்களில் நியமனம் பெற்ற கல்வியல் கல்லூரி ஆசிரிய ஆசிரியைகளை சொந்த மாவட்டங்களில் நியமிக்க பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் அகிலவிராஜிடம் வேண்டுகோள்.

வெளி மாவட்டங்களுக்குள் வழங்கப்பட்ட கல்வியல் கல்லூரி ஆசிரிய நியமனங்களை தங்களுடைய சொந்த பிரதேசங்களுக்குள் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் கோரிக்கை விடுத்துள்ளார். அண்மையில் வழங்கப்பட்ட கல்வியல் கல்லூரி ஆசிரியர்களுக்கான நியமனங்கள் வெளிமாவட்டங்களுக்குள் வழங்கப்பட்டுள்ளது இது தொடர்பில் பிரதியமைச்சரிடத்தில் வெளிமாவட்டங்களில் நியமனக் கடிதங்களை பெற்ற ஆசிரிய  ஆசிரியைகள் தங்களை சொந்த மாவட்டங்களில் பணியாற்றுவதற்கான நடவடிக்கைகளை செய்து தருமாறு கோரியிருந்தனர் .இது தொடர்பில் கல்வி அமைச்சர் அகிலோஇராஜ் காரியவசமிடத்தில் இன்று (10) பிரதியமைச்சரினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விசேட…

Read More

அமைச்சர் ரிஷாட்டின் முயற்சியில் குருணாகலில் மினி ஆடைத்தொழிற்சாலை

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் முயற்சியில் குருணாகல் வாரியப்பொல, துத்திரிவௌ கிராமத்தில் மினி ஆடைத்தொழிற்சாலை  அமைக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கான தொழில்வாய்ப்பை மேம்படுத்தும் வகையில், அமைக்கப்பட்டுள்ள இந்த மினி ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்களுக்கு பயிற்சியும் வழங்கப்பட்டு, தையல் இயங்திரங்களும் வழங்கப்பட்டுள்ளன. ஆடைத்தொழிற்சாலையின் அங்குரார்ப்பன நிகழ்வு அண்மையில் இடம்பெற்ற  போது குருணாகல் மாவட்டத்தின் பல்வேறு அரசியல் பிரமுகர்களும் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் உரையாற்றிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் குருணாகல் மாவட்ட இணைப்பாளரும், லங்கா சதொச நிறுவனத்தின் முகாமைத்துவ…

Read More

வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து புத்தளத்தில் வாகனப் பேரணி..!

கடந்த 33 வருடங்களாக, பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் இன்றி காணப்பட்ட புத்தளம் மாவட்டத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக, முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின் தராசுச்  சின்னத்தில் போட்டியிட்டு, வெற்றிபெற்று பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள அலி சப்ரி ரஹீமுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து, புத்தளத்தில் மாபெரும் வாகனப் பேரணியொன்று இடம்பெற்றது. நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில், மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட அமைப்பாளரான அலி சப்ரி ரஹீமுக்கு வாக்களித்து, வெற்றிபெறச் செய்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக, இன்று…

Read More

பொலிஸ் சேவையை மக்கள் நட்புடைய சேவையாக ஆக்குவதே எமது நோக்கம்

பொலிஸ் சேவையை உண்மையான மக்கள் நட்புடைய சேவையாக ஆக்குவதே புதிய அரசாங்கத்தின் நோக்கமாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நேற்று (27) பொலன்னறுவையில் ஜனாதிபதி அலுவலகம், சட்டமும் ஒழுங்கும் தொடர்பான அமைச்சு மற்றும் பொலிஸ் திணைக்களம் ஆகியன இணைந்து மேற்கொள்ளும் ஒன்றிணைந்த பொலிஸ் நடமாடும் சேவையின் முதலாவது நிகழ்ச்சித்திட்டத்தில் இணைந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். ‘சிறந்ததோர் சமூகம் – பாதுகாப்பான ஒரு நாடு’ என்ற கருப்பொருளின் கீழ் பொலன்னறுவை மாவட்டத்தில் வெலிகந்த,…

Read More

தொடரும் பெண் ஊடகவியலாளர்கள் மீதான பாலியல் தொல்லை

இலங்கை ஊடகத்துறையில் பணியாற்றுகின்ற 29 வீதமான பெண்கள் பாலியல் தொல்லைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர் என்று சர்வதேச ஊடகவியலாளர் சம்மேளனத்தின் புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டீல்ரூக்சி ஹந்துன்நெத்தி என்ற ஊடகவியலாளர்கள் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் 45 பெண்களில் 13 பெண்கள் (28.8மூ) தாம் வேலைத்தளங்களில் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாக வேண்டியிருக்கிறது என்று தெரிவிக்கின்றனர். ஆனால் இவ்வாறான தொல்லைகள் குறித்து இதுவரை எதுவித முறைப்பாடுகளும் பதிவாகவில்லை என்றும், தமது எதிர்காலம் கருதி முறைப்பாடுகளை பதிவுசெய்ய பாதிக்கப்பட்டவர்கள் முன்வருவதில்லை என்றும்…

Read More

இலங்கைக்கான சீனாவின் புதிய தூதுவர் உடன் அமைச்சர் றிஷாத்

ஏற்றுமதி அபிவிருத்தி அதிகார சபையில் இன்று காலை இலங்கைக்கான புதிய தூதுவர் yi xianliang வரவேற்றதுடன்.சீனா அரசாங்கத்தினால் இலங்கையில் கடந்தகாலங்களில் செய்த அபிவிருத்தி உற்கட்டமைப்பு உதவிகள் அனைத்துக்கும் எமது புதிய அரசாங்கம் சார்பாக நன்றியைத் தெரிவிப்பதுடன்,தொடர்தும் அபிவிருத்திக்கு ஒத்தழைப்புகளை வழங்குமாறு கைத்தொழில் வர்த்தக அமைச்சர் தூதுவரிடம் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து பேசிய தூதுவர் நான் உற்பட சீனா அரசாங்கம் ஆகியன புதிய அரசாங்கத்துடன் தொடர்ந்து நற்புறவுடன் செயற்பட ஆர்வமாக உள்ளதுடன்,புதிய கைத்தொழில் பேட்டைகளை அமைக்கவும் முதலீடு செய்யவும் சீனா…

Read More

பஷில் கைது!

வாக்குமூலம் வழங்குவதற்காக நிதிக்குற்ற தடுப்புப் பிரிவில் இன்று (18) முன்னிலையாகியிருந்த முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Read More

மின்சாரக்கதிரை என்ற சொல் இன்று அகராதியிலிருந்து நீங்கிச் சென்றுள்ளது

மக்களின் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கு அர்ப்பணித்த ஒரு அரசாங்கம் என்ற வகையில் இன்று இலங்கை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு உட்பட உலகின் சகல நாடுகளினதும் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளதுடன், அந்த அங்கீகாரத்தின் மூலம் பல வருடங்களாக இந்த நாட்டு மக்களும் அரசியல்வாதிகளும் ஊடகவியலாளர்களும் பேசிவந்த மின்சாரக்கதிரை என்ற சொல் அகராதியிலிருந்து நீங்கிச் சென்றுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். நேற்று பிற்பகல் (28) நாரம்மலை மயுரபாத மத்திய கல்லூரியின் பரிசளிப்பு விழாவில் பிரதம…

Read More

நம்பிக்கையில்லா பிரேரனை மீண்டும் தோற்கடிக்கப்பட்டு கட்சி பேதமற்ற ஒற்றுமையை அரசுக்கு வழங்கியுள்ளோம்

அரசாங்கத்து எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரனையை கட்சி பேதமற்ற முறையில் மீண்டும் தோற்கடித்து சிறுபான்மை கட்சிகளின் பலத்தை காட்டியுள்ளோம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஃறூப் தெரிவித்தார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று (14) திருகோணமலை மக்கேய்சர் மைதானத்தில் காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இதில் காணி அமைச்சர் கயந்த கருணாதிலக, நாடாளுமன்ற…

Read More

இளைஞர் பாராளுமன்ற கல்முனை தொகுதி வேட்பாளர்கள் (photos)

– ஏ,பி.எம்.அஸ்ஹர் – நடை பெறவுள்ள இளைஞர் பாராளுமன்றத்திற்காக கல்முனை தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் செய்யு நிகழ்வு இன்று கல்முனை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது, பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.கனி தலைமையில் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் இப்பிரதேசத்திலு ள்ள நான்கு இளைஞர்கள் இதில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்யதுள்ளனர்.

Read More

20 இலட்சம் முஸ்லிம்களுக்காக எனது உயிரை இழக்கத்தயார்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், வர்த்தக கைத்தொழில் அபிவிருத்தி முன்னாள் அமைச்சருமான, றிஷாத் பதியுதீன் அரசிலிருந்து வெளியேறி பொது எதிரணியில் இணைந்து கொண்டமை தொடர்பாக அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்துக்கள் முழுவடிவமாக; திடீரென விலகியமைக்கான காரணம்  2005,2010 ஆகிய தேர்தல்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வெற்றிபெறச் செய்வதற்காக நானும், எனது கட்சியின் பாராளுமன்ற, மாகாண சபை, உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகளும் பெரும் பங்காற்றிருக்கிறோம். அவரது வெற்றியிலேயே அதிகளவு  பங்களிப்பினை நாங்கள் வழங்கியுள்ளோம். 2005…

Read More