Headlines

இலங்கையின் முதலாவது சபாரி பூங்கா

இலங்கையின் முதலாவது சபாரி பூங்கா இன்று அம்பாந்தோட்டை, ரிதிகம பிரதேசத்தில் திறந்து வைக்கப்படவுள்ளது. இந்த சபாரி விலங்கியல் பூங்காவை நிர்மாணிப்பதற்காக 2008 ஆம் ஆண்டு அடிக்கல் நடப்பட்டதுடன் 2 ஆயிரத்து 600 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டு, பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. 500 ஏக்கர் நிலப்பரப்பில் உருவாக்கப்பட்டுள்ள இச்சபாரி பூங்காவில்  சிங்கவலயம், உலக விலங்கு வலயம் மற்றும் ஆசிய யானைகள் வலயம் என மூன்று வலயங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இப்பூங்காவில் 22 வகையான 200 இற்கும் மேற்பட்ட விலங்குகளை காணக்கூடியதாக…

Read More

யாப்புக்கு அப்பால் எவருக்கும் முன்னுரிமை இல்லை

– எஸ்.ரவிசான் – கட்சியின்கொள்கைகள் உட்பட யாப்புக்கு அப்பால்சென்று எந்தவொறு தரப்பினருக்கும் முன்னுரிமை வழங்க கூடாது எனவும் கட்சியினை நேசிக்கும் ஒருவரே உண்மையான மக்கள் பிரதிநிதியாக போற்றப்படுவார் எனவும் முன்னால் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார். காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் ஆலோசகரும் முன்னால் ஜனாதிபதியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமார துங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Read More

உயிரை பறிக்கும் உஷ்ணத்திற்கு முற்றுப்புள்ளி

தொடர் உஷ்ணத்திற்கு இன்று முதல் முற்றுப்புள்ளியாக இலங்கையில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது. இலங்கையின் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தொட்டை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார்.

Read More

தீர்க்கமான பாதையை தீர்மானிக்க வேண்டிய தருணம் இது – றிஷாத் அமைச்சர் றிஷாத்

– சுஐப் எம்.காஸிம் – மாநாடுகளைக் கூட்டி, மக்களைக் காட்டி அரசியல் நடத்த வேண்டிய அவசியம் எமது கட்சிக்கு ஒரு போதும் கிடையாதென்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். மூதூரில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது, தேர்தலுக்கு முதல் ஒரு கதையும், தேர்தலுக்குப் பின்னர் மற்றொரு கதையும் கூறுபவர்கள் நாங்கள் அல்ல. திருமலை மாவட்டத்தில், தேர்தல் காலத்தில் நாம் வழங்கிய வாக்குகளை நிறைவேற்றித் தருவோம். மர்ஹூம் அஷ்ரப்…

Read More

18 முன்னாள் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் அ.இ.ம.காவுடன் இணைவு

குச்சவெளி, தம்பலகாமம், மூதூர் ஆகிய பிரதேசங்களில் உள்ள 18 முன்னாள் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இன்று (27/03/2016) இரவு இணைந்துகொண்டனர். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றைச் சேர்ந்த இந்த உறுப்பினர்கள், இன்று இரவு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் றிசாத் பதியுதீன் முன்னிலையில் கட்சியில் இணைந்துகொண்டு, கட்சியின் வளர்ச்சிக்காக தொடர்ந்தும் பாடுபடப் போவதாகப் பகிரங்கமாக அறிவித்தனர். கிண்ணியா,…

Read More

சாரதியின் நித்திரை கலக்கத்தினால் வாகனம் தடம்புரண்டது : கட்டிடம் சேதம்

கொழும்பு அட்டன் பிராதான வீதியில் கித்துள்கலை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் காயமுற்ற ஒருவர் கினிகத்தேன வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டுள்ளார். கித்துள்கலை பொலிஸ்பிரிவிற்குட்பட்டு கலுகல பகுதியிலே இன்று அதிகாலை 3 மணியளவில் இவ்விபத்து நிகழ்ந்துள்ளது. கொழும்பிலிருந்து அட்டன் வழியாக ராகலை நோக்கி சென்ற லொறியொன்று பாதையை விட்டு விலகி கலுகல சிங்கள வித்தியால சிறுவர் பாடசாலை கட்டிடத்தின் மீது மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் காயமுற்ற சாரதி கினிகத்தேன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் பாடசாலையின் மலசலகூடம், பாடசாலை மதில் என்பன சேதமாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்….

Read More

மீண்டும் மின்தடை.!

நாளொன்றுக்கு ஒரு மணித்தியால மின்சாரத் தடையை அமுல்செய்வது தொடர்பில் மக்களுக்கு கூறுமாறு இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் அரசாங்கத்திடம் கோரியுள்ளனர். மின்சார உற்பத்திக்கான நீர்நிலைகளில் கிரமமாக நீர் மட்டம் குறைந்து வருவதன் காரணமாக மின்சார உற்பத்தியில் பாதிப்பு ஏற்படக்கூடும் என்று பொறியியலாளர் சங்கத் தலைவர் அதுல வன்னியாராச்சி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

கழுத்தை அறுத்துக் கொண்ட தமிழ் அகதி

தமிழகத்தின் சேலம் பகுதியில் கழுத்தை அறுத்துக் கொண்ட இலங்கைத்  தமிழர் முகாமை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு சேலம் அரச வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை, இலங்கைத்  தமிழர் முகாமை சேர்ந்த முத்துகிருஷ்ணன் மகன் சசிகுமார் என்பவரே இவ்வாறு  தனது கழுத்தை அறுத்துக் கொண்துள்ளார். இவர் கோவையில் பெயின்டராக வேலை செய்து வருகிறார். விடுமுறை நாளில், திருவண்ணாமலை முகாமுக்கு சென்று, குடும்பத்தினரை பார்த்து வருவது வழக்கம். நேற்று கோவையில் இருந்து, சேலம் பஸ்ஸில் வந்த இவர், புது…

Read More

ஆண் சிசுவின் சடலம் மீட்பு.!

கண்டி, அம்பிட்டிய வீதியின் காண் ஒன்றில் இருந்து ஆண் சிசுவின் சடலத்தை இன்று அதிகாலை பொலிஸார் மீட்டுள்ளனர். இது தொடர்பாக எவரும் இதுவரை கைது செய்யப்படாத நிலையில் கண்டிப் பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

குடிநீர் வேண்டி ஆர்ப்பாட்டம்

சுத்தமான குடிநீர் வேண்டும் என கோரி ரொசல்ல கிராம பகுதி மக்கள் இன்று வட்டவளை ரொசல்ல சந்தியில் பதாதைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பிய வண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 35ற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். பல வருட காலமாக குடிநீர் சுத்தமாக கிடைப்பதில்லை எனவும், சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை தெரிவித்தும் பிரச்சினை தீராத பட்சத்தில் இம்மக்கள் இப் போராட்டத்தில் ஈடுப்பட்டதாக தெரிவிக்கின்றனர்.

Read More

அரச வங்கிகள் ஒருபோதும் தனியார் மயமாக்கப்படாது

அரச வங்கிகள் ஒருபோதும் தனியார் மயமாக்கப்படாது என உறுதியளிக்கும்  அரசாங்கம்  சர்வதேச நாணய நிதியத்திடம் “தயார் நிலை ஏற்பாடாக”  (Standby Arrangement)  கடன் பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாகவும் அரசு அறிவித்தது. இது தொடர்பாக   அரச தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாசிம் மேலும் தெரிவிக்கையில் பொது எதிர்கட்சி எனக்கூறிக்கொள்வோர் பாராளுமன்றத்திற்குள்ளும்  வெளியேயும் பொய்யான  கருத்துக்களை தெரிவித்து மக்களை, பிழையாக வழிநடத்துக்கின்றனர். அரச வங்கிகள் ஒரு போதும்  தனியார்  மயமாக்கப்பட மாட்டாது  அதனை பாதுகாப்பதற்கான  அனைத்தையும்  அரசு முன்னெடுக்கும்….

Read More

அனுமதி கிடைக்காத டாக்டர்களின் பிள்ளைகளுக்கு அனுமதி வழங்கப்படும்

பாடசாலை அனுமதி கிடைக்காமல் உள்ள டாக்டர்களின் பிள்ளைகளுக்கு பாடசாலைகளில் அனுமதி பெற்றுக் கொடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுமென ஜனாதிபதி உறுதிப்படுத்திருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அரச வைத்திய சங்கத்தினர் வியாழக்கிழமை ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்திய போதே இந்த உறுதிமொழி ஜனாதிபதியால் வழங்கப்பட்டதென சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் நளின்த ஹேரத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டாக்டர் நளின்த ஹேரத் மேலும் தெரிவித்திருப்பதாவது, இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ள டாக்டர்கள் மற்றும் வெளிநாட்டு பயிற்சிகளை  முடித்துக் கொண்டு…

Read More