தோப்பூரில் Digital Score board திறந்து வைப்பு!
இன்றைய தினம் (14) திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அப்துல்லாஹ் மஃறூப் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் தோப்பூரில் டிஜிடல் ஸ்கோர் போட்” உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டு விளையாட்டுப் போட்டிகளும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
செம்மண்ணோடை அல் ஹம்றாவில் இல்ல விளையாட்டுப்போட்டி : மர்வா இல்லம் சம்பியன்
வாழைச்சேனை – செம்மண்ணோடை அல் ஹம்றா வித்தியாலயத்தின் 7வது இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நிகழ்வு புதன்கிழமை (12) பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது. பாடசாலையின் அதிபர் எம்.எஸ்.சுபைதீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்து கொண்டதோடு, ஏனைய அதிதிகளாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலய உதவிக் கல்விப்பணிப்பாளர்களான எம்.எஸ்.கே.ரகுமான், எம்.யூ.எம்.இஸ்மாயில் மற்றும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எஸ். ஜவாஹிர் சாலி, ஆசிரிய ஆலோசகர்கள், பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள்…
சர்வதேச ஈரவல தின நிகழ்வில் தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்
வருடந்தோரும் பிப்ரவரி 2 யில் அனுஷ்டிக்கப்படும் சர்வதேச ஈரவல தினத்தினையொட்டியதாக நேற்று (13) நிந்தவூர் கமு அல் மஸ்ஹர் பெண்கள் உயர் தரப் பாடசாலையில் “ஈர நிலங்களும் உயிர் பல்வகைமையும்” எனும் கருப்பொருளில் அனுஷ்டிக்கப்பட்டது. மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அம்பாரை மாவட்ட காரியாலயத்தின் ஏற்பாடாட்டில் நடாத்தப்பட்ட இவ் வைபவத்திற்கு நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர் பிரதம அதிதியாக கலந்துகொண்டதோடு நிந்தவூரின் பல இடங்களிலும் மரக்கன்றுகளையும் நட்டுவைத்தார். இதன் போது மத்திய சுற்றாடல் அதிகார…
ஜனாதிபதி இன்னும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? நாடாளுமன்ற உறுப்பினர் கேள்வி
நாட்டில் இன ஐக்கியத்தை சீர்குலைப்பதற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தும் ஏன் இன்னும் இன ஐக்கியத்தை சீர் குழைப்பவர்கள் கைது செய்யப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார். கிண்ணியாவில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில், கடந்த இரண்டு வார காலமாக மீண்டும் இந்த நாட்டின் இனவாதிகளின் இனவாத பேச்சுக்கள் மேலோங்கி இருப்பதை நாங்கள் காண்கின்றோம். இதேவேளை சில பௌத்த…
“அக்கினி அறிவுச் சவால்-2019”
சன சமூக அறிவியல் ஒன்றியத்தின் “அக்கினி அறிவுச் சவால்-2019” நிகழ்வு கடந்த (8) நிந்தவூர் பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் ஒன்றியத்தின் தவிசாளரும் ஓய்வுபெற்ற கல்வி அதிகாரியுமான அல்ஹாஜ் ஏ.எல்.எம். அமீன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. க.பொ.த. உயர்தர பிரிவில் கணிதம் மற்றும் வணிக பிரிவுகளில் மாவட்ட ரீதியில் 1லாம் நிலையினை பெற்று நமது மண்ணுக்கும் மக்களுக்கும் பெருமை சேர்த்த நிந்தவூர் கல்வி கோட்ட மாணவிகளுக்கு சனசமூக அறிவியல் ஒன்றியத்தினால் தலா ஒரு லட்சம் ரூபாய் பணப்பரிசும்…
பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் முன்னாள் அமைச்சர் ரிஷாட்டுடன் பேச்சு
பாகிஸ்தான் நாட்டின் இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகர் முஹம்மத் சாத் ஹத்தாக் அவர்களின் அழைப்பையேற்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அவரை சந்தித்துக் கலந்துரையாடினார்.
அ.இ.ம.காங்கிரஸினால் மாவடிப்பள்ளியில் 6 மாத கால தையல் பயிற்சிநெறியை நிறைவு செய்த யுவதிகளுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கி வைப்பு..!
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னால் அமைச்சருமான அல்ஹாஜ் றிஸாட் பதியுதீன் அவர்களினால் அவர் அமைச்சராக இருந்த காலப் பகுதியில் மாவடிப்பள்ளியிலுள்ள 20 யுவதிகளுக்கு சுயதொழிலை மேற்கொள்ளுவதற்காக, 06 மாதகாலம் தையல் பயிற்சி நெறிகளைப் பெறுவதற்காகவும் தையல் இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டு பயிற்சி நெறிகளும் ஆரம்பிக்கப்பட்டது. அப் பயிற்சி நெறியை நிறைவு செய்த யுவதிகளுக்கு தங்களது சுயதொழிலை மேற்கொள்ளுவதற்காக பெறுமதி வாய்ந்த தையல் இயந்திரங்கள் இன்று 13.02.2020 வழங்கி வைக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ். இந் நிகழ்வில் காரைதீவு…
மதீனா வித்தியாலயத்தின் 2வது வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி
கேணிநகர் மதீனா வித்தியாலயத்தின் 2வது வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி 11.02.2020 திங்கட்கிழமை அதிபர் மீராமுகைதீன் தலைமையில் பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்நிகழ்வுக்கு பிரதி கல்விப் பணிப்பாளர் அஜ்மீர் , கோட்டக் கல்விப் பணிப்பாளர் அஹ்சாப், உதவி கல்விப் பணிப்பாளர்களான கலீல்றகுமான், இஸ்மாயில், ஜாபீர் கரீம், ஆசிரியர் ஆலோசகர் சித்தீக், கிராம அபிவிருத்தி சங்க தலைவர் , அதிபர்கள் மற்றும் பாடசாலை…
அமைச்சர் விமலிடமிருந்து முன்னாள் அமைச்சர் ரிஷாட் 100 கோடி கோரி நஷ்டஈடு!
அமைச்சர் விமல் வீரவன்ச தன்மீது சுமத்திய பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், தனது சட்டத்தரணி ஊடாக 100 கோடி ரூபா நஷ்டஈடு கோரி கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாகவும், இரண்டு வாரங்களுக்குள் விமல் வீரவன்ச அதனைக் கவனத்திலெடுத்து மன்னிப்புக் கோராவிடின் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இன்று மாலை (11) இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போது, விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டுக்களை அவர் முற்றாக மறுத்துள்ளதுடன். உயிர்த்த ஞாயிறு…
சிங்கள இனவாத ஊடகங்களில் தினமும் என்னைப்பற்றிய அவதூறுகளே!– ரிஷாட் பதியுதீன் குற்றச்சாட்டு…
சிங்கள ஊடகங்கள் தினமும் தன்னைப்பற்றி ஏதாவது பொய்களையும் சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களையும் புனைந்து, தலைப்புச் செய்திகளாகவும் முன்பக்கங்களில் கொட்டை எழுத்துக்களில் முன்னுரிமை கொடுத்தும் பிரசுரித்து வருவதாக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். சிங்கள மக்களிடமிருந்து என்னை அந்நியப்படுத்துவதற்காக, திட்டமிட்டு இந்தக் காரியத்தை அவர்கள் செய்து வருவதாகவும் அவர் மேலும் கூறினார். மன்னார், மாந்தை மேற்கு, சொர்ணபுரி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின்போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார். “சிங்கள மக்களிடம் என்னை எதிரியாகக் காட்டுகின்றனர். அவர்களின் விரோதியாகவும் துரோகியாகவும் சித்தரிக்கின்றனர்….
தாராபுரம் சையித் சிட்டியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு
மன்னார் தாராபுரம் சையித் சிட்டி கிராமத்தினரை சந்தித்துக் கலந்துரையாடிய போது..
