Headlines

தாஹிராவுக்கு நீதி கிடைத்தது; அமெரிக்க விமானப் பணிப்பெண் பணியிலிருந்து நீக்கப்பட்டதாகவும் அறிவிப்பு! (அல்லாஹு அக்பர்)

முஸ்லிம் பெண் பயணி ஒருவர் விமானப் பயணத்தின்போது அவர் முஸ்லிம் என்பதால் மோசமாக நடத்தப்பட்ட சம்பவம் ஊடகங்கள் மற்றும் சமூக வலை தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சம்மந்தப்பட்ட விமான நிறுவனம் இந்த சம்பவத்திற்கு காரணமான தங்கள் நிறுவனத்தின் துணை நிறுவனமான ’சியாட்டில் அமெரிக்கா’வின் பணிப்பெண், பணியிலிருந்து நீக்கப்பட்டதாகவும் அறிவித்துள்ளது. அமெரிக்காவில் வசித்து வரும் தாஹிரா அகமத், கடந்த வாரம் சிகாகோவிலிருந்து வாஷிங்டன் செல்லும் யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானத்தில் பயணித்தார். பயணத்தின்போது விமானப் பணிப்பெண்ணிடம்…

Read More

திரியதரு பிரணாம புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு

– இர்ஷாத் றஹ்மத்துல்லா – திரியதரு பிரணாம புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு இன்று மஹரகம தேசிய இளைஞர் சேவை மன்ற கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.அமைச்சர்களான றிசாத் பதியுதீன்,ராஜித சேனாரத்ன,வாசுதேவ நாணயக்கார எம்.பி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். சுகாதார கூட்டுறவு அமைப்பின் உறுப்பினர்களின் பிள்ளைகளுக்கு இந்த புலமைப் பரிசில் வழங்கப்பட்டது.நாடு தழுவிய முறையில் தெரிவு செய்யப்பட்ட 600 மாணவர்கள் இதனை பெற்றுக் கொண்டனர்.கைத்தொழில்,வணிகத துறை அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள கூட்டுறவு சங்க செயற்பாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது….

Read More

இலங்கையின் நெசவுத்தொழிலில், நவீன தொழில்நுட்பம்  உலகளாவிய போட்டிக்கு இலங்கையை தயார் படுத்த அமைச்சு நடவடிக்கை 

பல தசாப்தங்களின் பின்னர் இலங்கையின் புடைவைத் தொழிலையும் நெசவுத்துறையையும் பாரியளவில் மேம்படுத்தும் வகையில் இந்த வருடம் நவீன தொழில்நுட்பங்களை அந்தத்துறையின் விருத்திக்காக புகுத்த கைத்தொழில் வர்த்தக அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் மூலம் உள்ளூர் கைவினைஞர்களும், நெசவு வடிவமைப்பாளர்களும் உலகளாவிய தொழில்நுறட்பத்துடன் போட்டி போடக்கூடிய வாய்ப்பை அமைச்சு உருவாக்கி வருகிற்து. ‘நெசவுத்தொழிலில் நவீன தொழில் நுட்பங்களை புகுத்தி நெசவு உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்‘ என்று இந்த துறைக்கு பொறுப்பான அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.  கைத்தொழில்…

Read More

ஜிம்பாப்வே நாடாளுமன்றத்தில் தவறான உரை: அதிபர் உடல்நிலை பற்றி எதிர்க்கட்சிகள் சந்தேகம்

நேற்று தொடங்கிய நாடாளுமன்றத்தின் புதிய கூட்ட தொடரில் துவக்க உரை நிகழ்த்திய  ஜிம்பாவே நாட்டு அதிபர் ராபர் முகாபே, ஒரு மாதத்திற்கு முன்பு படித்த உரையை மீண்டும் படித்ததால் பரப்பரப்பு ஏற்பட்டது. அதிபர் ராபர் முகாபே தான் வாசிக்க வேண்டிய உரைக்குப் பதிலாக வேறு தவறான பழைய உரையை படிக்க ஆரம்பித்ததும், தொலைக்காட்சியின் நேரடி ஒலிபரப்பு உடனடியாக நிறுத்தப்பட்டது. அவர் வாசித்த உரையானது கடந்த மாதம் ஆற்றிய உரையாகும்.  அதிபரின் செயலகத்தில் நடந்த குழப்பத்தின் காரணமாகவே தவறு…

Read More

சச்சின் தெண்டுல்கர் இலங்கை வருகை

உலகப் புகழ்பெற்ற இந்தியாவின் நட்சத்திர கிரிக்கட் வீரர் சச்சின் தெண்டுல்கர் யுனிசெப் நிறுவனத்தின் வைபவமொன்றில் கலந்து கொள்வதற்காக இலங்கைக்கு வருகை தந்துள்ளார். இலங்கையின் சிறுபராயத்தினரின் சுகாதாரப் பழக்கவழங்களை மேம்படுத்தல் மற்றும் ஆரோக்கியத்தைப் பாதுகாத்தல் ஆகிய நோக்கங்களுடன் இந்த வைபவம் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதிய அனுசரணையில் நேற்று ஆரம்பமானது. இந்த வைபவத்தில் சச்சின் தெண்டுல்கருடன், இலங்கையின் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரனும் கலந்து கொண்டிருந்தார். யுனிசெப் அமைப்பின் சுகாதார மேம்பாட்டுத்திட்டத்தின் பிராந்திய நல்லெண்ணத் தூதுவராக சச்சின்…

Read More

பூமி போன்ற புதிய கோளை கண்டுபிடித்தது கெப்ளர் விண் தொலைநோக்கி

மிகப் பெரிய விண் தொலைநோக்கியான கெப்ளர் பூமி போன்ற புதிய கோளை கண்டுபிடித்ததுள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கெப்ளர் விண்கலம் என்பது விண் தொலைநோக்கி ஆகும். கடந்த 2009ம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்ட கெப்ளர் தற்போது பூமியிலிருந்து 150 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் சுற்றி வருகிறது. கெப்ளர் தொலை நோக்கி  இதுவரை 1028 கிரகங்களையும், 4661 கிரகம் போன்றவற்றையும் கண்டுபிடித்துத் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கெப்ளர் தொலைநோக்கி கிட்டத்தட்ட பூமி போலவே உள்ள ஒரு புதிய கோள்ளை கண்டுபிடித்துள்ளது….

Read More

அமெரிக்காவில் பூஜித்த

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர அமெரிக்காவிற்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். நேற்று -01- பொலிஸ் மா அதிபர் அமெரிக்காவிற்கான பயணத்தை ஆரம்பித்திருந்தார். உலகப் பொலிஸ் மா அதிபர்களுக்கான மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் இவ்வாறு அமெரிக்காவிற்கு விஜயம் செய்கின்றார். பூஜித் ஜயசுந்தர மீளவும் நாடு திரும்பும் வரையில் பதில் பொலிஸ் மா அதிபராக எஸ்.எம். விக்ரமசிங்க கடமையாற்றுவார். பொலிஸ் மா அதிபர்களின் மாநாடு அமெரிக்காவின் நியூயோர்க்கில் நடைபெறவுள்ளது. எதிர்வரும் 10ம் திகதி பொலிஸ் மா அதிபர் ஜயசுந்தர நாடு…

Read More

வடக்குக்கு விஜயம் செய்யும் ஐ.நா உயர் அதிகாரிகள் முஸ்லிம் சமூகப் பிரதிநிதிகளை சந்திப்பதில் ஆர்வம் காட்டாதது ஏன்? ஐ.நா நிரந்தர வதிவிடப் பிரதிநிதியிடம் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு

வடமாகாணத்திற்கு விஜயம் செய்யும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் ,ராஜதந்திரிகளும், உயர் அதிகாரிகளும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பை மாத்திரமே சந்திப்பதில் அக்கறைகாட்டுவதாகவும், வடக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இன்னுமொரு சமூகமான முஸ்லிம்களின் பிரதிநிதிகளையோ, அமைப்புக்களையோ சந்திப்பதில் எத்தகைய கரிசனையும்  காட்டுவதில்லையெனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் விசனம் தெரிவித்தார்.  இலங்கைக்கான ஐக்கியநாடுகள் வதிவிடப் பிரதிநிதி உனா மெக்லோலே அவர்களுக்கும், அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்குமிடையில் கைத்தொழில் வர்த்தக அமைச்சில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்….

Read More

பயங்கரவாதத்திற்கு எதிராக இணையுங்கள் – துருக்கி

துருக்கி அதிபர் ரிசப் தாயிப் எர்துவான், தீவிரவாத அமைப்புகளுக்கு எதிரான உலக நாடுகளின் போராட்டத்தில் இஸ்தான்புல் விமான நிலையத்தில் நடந்த தாக்குதல், ஒரு திருப்பு முனையாக அமைய வேண்டும் என தெரிவித்துள்ளார். உலகில் உள்ள எந்த ஒரு விமான நிலையத்திலும் இம்மாதிரியான தாக்குதல் நடந்திருக்கலாம் ஆகையால் பயங்கரவாதத்திற்கு எதிராக அனைத்து அரசுகளும் கூட்டாக இணைய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். அமெரிக்காவின் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர், இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் மற்றும் நேடோ உறுப்பு…

Read More

முஸ்லிம் சமூகத்தை உசுப்பி தமது நோக்கத்தை நிறைவேற்ற நாசகாரிகள் துடிக்கின்றனர். – குருநாகலையில் அமைச்சர் றிஷாட்.

(அமைச்சின் ஊடகப்பிரிவு) அமைதியாக வாழுகின்ற – அவ்வாறே தொடர்ந்தும் வாழவிரும்புகின்ற முஸ்லிம் சமூகத்தின் மீது அவதூறுகளையும் பழிச் சொற்களையும் சுமத்தி எம்மை சீண்டுவதற்கு இனவாதிகளும், இஸ்லாமிய விரோதிகளும் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டுவருவதாகவும் எமது சமூகத்தை உசுப்பிவிடுதன் மூலம் தங்கள் இலக்கினை அடைவதற்கு முயற்சிப்பதாகவும்; அமைச்சர் றிஷாட் தெரிவித்தார்.. குருநாகல் மாஹோ ரந்தனிகமவில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். குருநாகல் மாவட்ட மக்கள் காங்கிரசின் கல்விப்பணிப்பாளரும், உயர்பீட உறுப்பினருமான டொக்கடர் ஷாபி தலைமையில் இடம்பெற்ற இந்தக்…

Read More

காத்தான்குடியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்ளவுள்ள தேர்தல் மேடை

இன்று (19) வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காத்தான்குடிக்கு விஜயம் செய்து காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ள 2015 ஜனாதிபதி தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்திலும் உரையாற்றவுள்ளார்

Read More

சாய்ந்தமருது கபீரின் மறைவுக்கு, அமைச்சர் ரிசாத் பதியுதீன் அனுதாபம்

சாய்ந்தமருது நம்பிக்கையாளர் சபை உறுப்பினரும், சமூக பற்றாளருமான எஸ்.ரீ. கபீரின் மறைவு  வருத்தம் தருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.  மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக அயராது பாடுபட்டு உழைத்த அவர், கல்முனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினராவார்.  சாய்ந்தமருதுவிலும் , அம்பாறை மாவட்டத்திலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வளர்ச்சிக்காக உழைத்த அன்னார், மக்கள் சேவைக்காக தன்னை பெரிதும் அர்ப்பணித்தவர். பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் தனது சமூக பணிகளையும் மேற்கொண்டுவந்தார்….

Read More