அழிந்துவரும் விடத்தல்தீவை மீளக்கட்டியெழுப்புவது சாத்தியமா?
– சுஐப் எம்.காசிம் – மன்னாருக்கு மணி மகுடம் என விளங்கும் பிரசித்தி பெற்ற கிராமம் விடத்தல்தீவு. இறையளித்த இயற்கை வளங்களான கடல்வளமும், நிலவளமும், நீர்வளமும் கொண்டது இக்கிராமம். எமது முன்னோர்களும் நாமும் பிறந்து வளர்ந்து வாழ்ந்து வந்த பதி இது. மன்னார் நகரில் இருந்து வடதிசையில் செல்லும் பூநகரிப்பாதையில் 15ஆவது மைலில் இந்தக் கிராமம் அமைந்துள்ளது. தேவையான அளவு வாழ்க்கை வளம் காணப்படுவதால் மக்கள் நலமாகவும் ஆரோக்கியமாகவும் வாழ்ந்தனர். கிராமத்தின் மேற்கு எல்லையில் ஆழமற்றதும், மீன்…
