Headlines

ஓட்டமாவடியில் கொரோணா பீதி: வீண் அச்சம் கொள்ளத் தேவையில்லை – தவிசாளர் அஸ்மி!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடியில், நேற்று (22) ஞாயிற்றுக்கிழமை ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளானார் என்று வெளிவந்துள்ள செய்தியில், எவ்வித உண்மையும் இல்லை என்று, கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஓட்டமாவடி வர்த்தக நிலைய கடைத்தொகுதி ஒன்றில், வெளிப்பிரதேசத்தைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் அடையாளம் காணப்பட்டு, அவரை பொதுச் சுகாதார பரிசோதகர்களின் உதவியுடன் பொலிசாரினால் வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டு, அவர் வைத்திய பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டார்….

Read More

மயில் சின்னத்தில் அம்பாரையில் தனித்து களமிறங்கும் மக்கள் காங்கிரஸ்!

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், அம்பாரை மாவட்டத்தில், மயில் சின்னத்தில் தனித்துக் களமிறங்குகின்றது. அம்பாரை மாவட்டத்தில், மக்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் பொருட்டு, சட்ட முதுமாணி வை.எல்.எஸ். ஹமீட் மற்றும் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் கே.எம். ஜவாத் (அப்துல் ரஸாக்) ஆகியோர், இன்று (19) அதிகாலை வேட்புமனுவில் கையெழுத்திட்டனர். வை.எல்.எஸ்.ஹமீட் தலைமையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் போட்டியிடும் ஏனைய வேட்பாளர்கள், ஏற்கனவே வேட்புமனுவில் கையெழுத்திட்டுள்ளனர். அந்தவகையில், சட்ட முதுமாணி வை.எல்.எஸ்….

Read More

வேட்புமனுவை கையளித்தார் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!!!

எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டமைப்பில், வன்னியில் போட்டியிடவுள்ள, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான அப்துல் ரிஷாட் பதியுதீன், வவுனியா தெரிவத்தாட்சி அலுவலகத்தில் இன்று (19) வேட்புமனுவைக் கையளித்தார். சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கூட்டமைப்பில் (சமகி ஜன பலவேகய), தொலைபேசி சின்னத்தில், வன்னி மாவட்டத்தின் முதன்மை வேட்பாளராக அவர் போட்டியிடவுள்ளார்.

Read More

மக்கள் காங்கிரஸ் அம்பாரையில் தனித்தும் 06 மாவட்டங்களில் இணைந்தும் களத்தில்!

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாரையில் தனித்தும், ஏனைய 06 மாவட்டங்களில் இணைந்தும் களமிறங்குகின்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாரை மாவட்டத்தில் கட்சியின் மயில் சின்னத்தில் தனித்துக் களமிறங்குவதுடன், வன்னி, மட்டக்களப்பு, திருகோணமலை, குருநாகல், அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி சின்னத்திலும், புத்தளம் மாவட்டத்தில் பொதுக் கூட்டமைப்பின் கீழ், தராசு சின்னத்திலும் ஒட்டுமொத்தமாக 07 மாவட்டங்களில் போட்டியிடுகின்றது. வன்னி மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள்…

Read More

புத்தளம் நகரசபை உறுப்பினர் அலி சப்ரியின் முயற்சியில் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

புத்தளம் நகரசபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தருமான அலி சப்ரி ரஹீமினால், பாடசாலை மாணவர்கள் பத்தாயிரம் பேருக்கு கற்றல் உபகரணங்கள்  வழங்கி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேலதிக தேவையுடைய மாணவர்களுக்கு, புத்தளம் மாவட்டத்தின் எலவங்குளம் ரால்மடு பிரதேச மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க, கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

Read More

ஓட்டமாவடி மத்திய குழு மற்றும் வட்டாரக் குழுக்களுடனான விஷேட கலந்துரையாடல்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஓட்டமாவடி மத்திய குழு மற்றும் வட்டாரக் குழுக்களுடனான விஷேட கலந்துரையாடலொன்று, கட்சியின் தவிசாளர் அமீர் அலியின் தலைமையில்  இடம்பெற்றது. தவிசாளர் அமீர் அலியின் இல்லத்தில் (14) இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில், எதிர்வரும் பொதுத்தேர்தல் குறித்த வேலைத் திட்டங்கள் மற்றும் அதற்கான முன்னெடுப்புக்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. இந் நிகழ்வில் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள், உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் கல்விமான்கள், மௌலவிமார், ஆசிரியர்கள், நலன் விரும்பிகள், அரசியல் செயற்பாட்டாளர்கள் எனப்பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

“நமது சமூகத்தின் இருப்பைக் கேள்விக்குறியாக்க முற்படுபவர்களுக்கு பொதுத்தேர்தலில் தகுந்தபாடம் புகட்ட வேண்டும்” – முன்னாள் எம்.பி அப்துல்லாஹ் மஹ்ரூப்!

நமது சமூகத்தின் இருப்பைக் கேள்விக்குறியாக்க முற்படுபவர்களுக்கு, நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் தகுந்தபாடம் புகட்ட வேண்டுமென்றும்  சிறுபான்மை மக்கள் உரிமைகளோடும் நிம்மதியாகவும் வாழ, சிந்தித்து வாக்களிக்க வேண்டுமெனவும் முன்னாள் திருகோணமலை மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் தெரிவித்தார். கிண்ணியா, பொது நூலக மண்டபத்தில் நேற்று முன்தினம் மாலை (14) இடம்பெற்ற, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின்  திருகோணமலை மாவட்ட முக்கியஸ்தர்களுடனான சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். இந்நிகழ்வில் மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட்…

Read More

“இன நல்லுறவையும் ஐக்கியத்தையும் விரும்புவோர் நிதானமாக சிந்தித்து வாக்களிக்கும் தேர்தல் இது” – கிண்ணியாவில் முன்னாள் அமைச்சர் ரிஷாட்!

“இனங்களுக்கிடையே நல்லுறவையும் ஐக்கியத்தையும் எதிர்கால சந்ததியினரின் நல்வாழ்வையும் சிந்திக்கும் ஒவ்வொரு பிரஜையும், மிகவும் நிதானமாகவும் பொறுப்புணர்வுடனும் இந்தத் தேர்தலில் வாக்களிக்க வேண்டும்.” சிறுபான்மைச் சமூகம் மாத்திரமின்றி, பெரும்பான்மை மொழி பேசும் பௌத்த, கத்தோலிக்க மக்களுக்கும் இந்த கடப்பாடு பெரிதும் உண்டென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கட்சியின் தேசிய அமைப்பாளர் அப்துல்லாஹ் மஹ்ரூப் தலைமையில், கிண்ணியா, பொது நூலக மண்டபத்தில், இன்று மாலை (14) இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில்…

Read More

மக்கள் காங்கிரஸின் வவுனியா மாவட்ட முக்கியஸ்தர்களுடனான சந்திப்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வவுனியா மாவட்ட முக்கியஸ்தர்களுடனான சந்திப்பொன்று, கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தலைமையில் இன்று (14) நடைபெற்றது. இந்நிகழ்வில் மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Read More

ஆலங்குடா, மசூர் நகர் முக்கியஸ்தர்களுடனான சந்திப்பு!

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆப்தீன் எஹியா தலைமையில், புத்தளம், ஆலங்குடா, மசூர் நகர் முக்கியஸ்தர்களுடனான சந்திப்பொன்று நேற்று (12) இடம்பெற்றது. இச் சந்திப்பில் பிரதேச சபை உறுப்பினர் அக்மல் மற்றும் மக்கள் காங்கிரஸின் கல்பிட்டி பிரதேச முக்கியஸ்தர் தௌபீக் உட்பட ஊர் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர். இதேவேளை, ஆண்டான்கனி பகுதிக்கும் நேற்று விஜயம் செய்த  முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆப்தீன் எஹியா, அங்குள்ள முக்கியஸ்தர்களையும் சந்தித்து, பொதுத்தேர்தல் தொடர்பில் கலந்துரையாடினார்.

Read More

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில், சவரான பாடசாலை அபிவிருத்திப் பணிகள் திறந்து வைப்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில், சிலாபம், சவரான முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கரப்பந்தாட்ட மைதானம், பெவிலியன் மற்றும் நுழைவாயில் ஆகியவற்றை, மாணவர்களின் பாவனைக்காகத் திறந்துவைக்கும் நிகழ்வு நேற்று (12) இடம்பெற்றது. புத்தளம் நகரசபை உறுப்பினரும் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தருமான அலி சப்ரி ரஹீமின் முயற்சியில், சவரான கட்சிக் கிளையின் வேண்டுகோளின் பேரில், சுமார் 60 இலட்சம் ரூபா பெறுமதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த  அபிவிருத்திப் பணிகளை திறந்துவைக்கும்  நிகழ்வில்,…

Read More

அமெரிக்க தூதுவராலயத்தின் அரசியல் பொறுப்பாளர் – மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர்களுடனான சந்திப்பு!

அமெரிக்க தூதுவராலயத்தின் அரசியல் பொறுப்பாளர் ஜொன்னா (Joanna H Pritchett) மற்றும் நஸ்ரின் மரைக்கார் (Nazreen Maraikkar) தலைமையிலான குழுவினர், அம்பாறை மாவட்ட மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினர். முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜவாத்தின் இல்லத்தில் நேற்று (12) இடம்பெற்ற இந்த சந்திப்பில், மக்கள் காங்கிரஸின் கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளர் சட்டத்தரணி முஷாரப்பும் பங்கேற்றிருந்தார். இதன்போது, அம்பாறை மாவட்டத்தின் தற்போதைய அரசியல் களநிலவரங்கள் தொடர்பில், விரிவாகக் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More