Headlines

குர்திஸ்களின் சுயாட்சியை தடுக்க சிரியாவுக்குள் நுழைந்தது துருக்கி

-எம்.ஐ.முபாறக் – ஐந்து  வருடங்களாக முடிவின்றித் தொடரும் சிரியா யுத்தம் சுமார் 4 லட்சம் உயிர்களை பறித்துள்ளது. யுத்த நிறுத்தம் என்ற ஒன்று அங்கு நடைமுறையில் இருக்கின்றபோதிலும், அது அப்பாவி உயிர்கள் பறிக்கப்படுவதைத் தடுக்கவில்லை. அரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்கு இடையிலான யுத்தம் பெயரளவில் முடிவுக்கு வந்துள்ளபோதிலும், அரசுக்கும் ஐ.எஸ் மற்றும் அல்-கைதா போன்ற ஆயுதக் குழுக்களுக்குமிடையிலான யுத்தம் தொடர்கின்றது. இந்த நிலைமையால் அப்பாவி மக்களின் உயிர்கள் இலக்கு வைக்கப்படுகின்றன.  இந்த ஆயுதக் குழுக்களை நசுக்குகின்றோம் என்ற பெயரில் சிரியா…

Read More

உலகின் சிறந்த பொலிஸ் அதிகாரியாக, இலங்கை பெண் தெரிவு

சர்வதேச பெண் பொலிஸ் அமைப்பினால் வழங்கப்படும் International Recognition and Scholarship விருது இம்முறை கிடைத்திருப்பது இலங்கை பிரதி பொலிஸ் அதிகாரி விமதி பெரியப்பெரு என்பவருக்காகும். இவ்விருதினை இதுவரையில் இலங்கை பெண் பொலிஸாரினால் பெற்றுக்கொள்ள முடியவில்லை, இதுவே முதல் தடவையாகும். குறித்த விருது  ஒகஸ்ட் மாதம் இறுதியில் இடம்பெறவுள்ள விருது வழங்கும் நிகழ்வில் வழங்கப்படவுள்ளது. உலகின் அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் பெண் அதகாரிகளின் செயற்திறன், செயல்பாடுகளை கருத்தில் கொண்டு இவ்விருது வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More

“இஸ்லாம் அன்பின் மார்க்கம்” – போப்

இஸ்லாம் அன்பின் மார்க்கம் என்பதையும் குர்ஆன் உலக சமாதானத்திர்கு வித்திடும் வேதம் என்பதையும் இஸ்லாத்தை பற்றிய குறைந்த அளவு ஞானம் உள்ளவர்களும் ஒப்பு கொள்வர். இஸ்லாம் அனைத்து மதத்தவர்களையும் அன்புடன் அறவணைத்து செல்லும் மார்க்கமாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆட்சியில் அமர்ந்திருந்த கால கட்டத்தில் அவர்களின் ஆட்சியின் முஸ்லிம்கள் மட்டும் இன்றி கிருத்துவர்களும்,  சகுனிகளான யுதர்களும் வாழவே செய்தனர். மாற்று மதத்தவரை அறவணைக்கும் மார்க்கமாக இஸ்லாம் இருந்ததால் நபிகள் நாயகத்தின் காலத்தில் அவர்களின் ஆட்சியின் கீழ் இருந்த…

Read More

சர்வதேச நாணய நிதியத்தின் எதிர்வு கூறல் பிழையானது: நிதி அமைச்சர்

சர்வதேச நாணய நிதியத்தின் எதிர்வு கூறல் பிழையானது என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். முதலீட்டு மேம்பாட்டு நிகழ்வு ஒன்றிற்காக லண்டனுக்கு விஜயம் செய்துள்ள ரவி கருணாநாயக்க சர்வதேச ஊடகமொன்றுக்கு இதனைத் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி குறித்து சர்வதேச நாணய நிதியம் எதிர்வு கூறல் வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த ஆண்டில் இலங்கை 5 முதல் 5.5 வீத பொருளாதார வளர்ச்சியை எட்டும் என சர்வதேச நாணய நிதியம் எதிர்வு கூறியுள்ளது. எனினும்…

Read More

தேனை எதனுடன் சேர்த்தால் என்ன பலன் கிடைக்கும்?.

பாலில் தேன் கலந்து இரவில் சாப்பிடநல்ல தூக்கம் வரும், இதயம் பலம் பெறும். பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல சக்தி உண்டாகும். மாதுளம் பழச்சாறுடன் தேன்கலந்து சாப்பிட்டால் புது ரத்தம்உண்டாகும். எலுமிச்சை பழச்சாறுடன் தேன்கலந்து சாப்பிட்டால் இருமல் குணமாகும். நெல்லிக்காய் சாறுடன் தேன்கலந்து சாப்பிட்டால் இன்சுலின் சுரக்கும். ஆரஞ்சுப்பழத்துடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும். ரோஜாப்பூ குல்கந்தில் தேன்கலந்து சாப்பிட்டால் உடல்சூடு தணியும். தேங்காய்பாலில் தேன் கலந்து சாப்பிட்டால் குடல் புண்,வாய்ப்புண்கள் ஆறும்….

Read More

முஸ்லிம்களை ஐவேளை தொழுகை நேரங்களிலும் புலனாய்வுப் பிரிவினர் கண்காணிக்க வேண்டும் – ஹெல உறுமய!

நாட்டின் பள்ளிவாசல்களில் புலனாய்வுப் பிரிவினரும், காவல்துறையினரும், படையினரும் சோதனை நடத்த வேண்டுமென ஜாதிக ஹெல உறுமய கடசியின் ஊடகப் பேச்சாளர் நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார். பள்ளிவாசலில் என்ன நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படுகின்றன, என்ன விடயங்கள் பேசப்படுகின்றன என்பது குறித்து கண்காணிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். பௌத்த விஹாரைகளில் சோதனை நடத்தப்படுகின்ற போது ஏன் பள்ளிவாசல்களில் சோதனை நடத்தப்பட முடியாது? என கேள்வி எழுப்பியுள்ளார். கடும்போக்குவாத மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட…

Read More

தம்மாலோக தேரர் விவகாரம் – விசாரணைகள் நிறைவு

உடுவே தம்மாலோக தேரர் அனுமதிப் பத்திரம் இன்றி யானைக் குட்டியொன்றை தன்னகத்தே வைத்திருந்தமை தொடர்பிலான, விசாரணை நடவடிக்கைகள் நிறைவுபெற்றுள்ளதாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் நீதிமன்றத்தில் தெரியப்படுத்தியுள்ளனர். இன்று குறித்த வழக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளையே, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இவ்வாறு கூறியுள்ளனர். மேலும், விசாரணை குறித்த அறிக்கைகள் அனைத்தும் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இதன்போது குறிப்பிட்ட அவர்கள், சட்ட மா அதிபரின் அறிவுரை கிடைக்கப்பெற்றதும், உரிய சட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் நீதிமன்றத்தில்…

Read More

வெளிநாடுகளுக்குச் சென்று உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு

தொழிலாளர்களாக வெளிநாடுகளுக்குச் சென்று உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு நாளை வியாழக்கிழமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புலம்பெயர் தொழிலாளர்களாக வெளிநாடுகளுக்குச் சென்று உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் காசோலை கையளிக்கும் நிகழ்வு நாளை வியாழக்கிழமை பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தலைமையில் வெளிவிவகார அமைச்சில் நடைபெறவுள்ளது. நாளை வியாழக்கிழமை காலை 11.00 மணியளவில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் பிரதி வெளிவிவகார அமைச்சர் சுமார் 45 மில்லியன் ரூபா பெறுமதியான இழப்பீட்டுத் தொகையினை பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு கையளிக்கவுள்ளார்

Read More

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதில் தவறில்லை : மங்கள ​

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் ஆட்­சியின் போது 116 அர­சியல் கைதி­களை விடு­தலை செய்ய முடி­யு­மாயின் ஏன் மீத­முள்­ள­வர்­களை விடு­தலை செய்­ய­மு­டி­யாது. அர­சியல் கைதி­களை விடு­விப்­பதில் தவறில்லை. அவர்­களை சமூ­க­ம­யப்­ப­டுத்த வேண்டும் என வெளிவி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர தெரி­வித்தார். அத்­துடன் பயங்­க­ர­வாத தடை சட்­டத்தை இன்னும் வைத்­தி­ருப்­பதில் அர்த்தம் கிடை­யாது. குறித்த தடைச்­சட்­டத்தை நீக்­கி­விட்டு சர்­வ­தேச பயங்­க­ர­வா­தி­க­ளுக்கு ஏற்றால் போல் புதிய சட்டம் உரு­வாக்­கப்­பட வேண்டும் என்றும் அவர் குறிப்­பிட்டார். ஐக்­கிய தேசிய கட்­சியின்…

Read More

க.பொ.த. சாதாரண தரத்தில் 9 ஏ சித்தி பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு!

முஸ்லிம் கல்வி முன்னேற்றக் கழகம் 10ஆவது வருடமாகவும் ஏற்பாடு செய்திருந்த 2016 ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் சகல பாடங்களிலும் 9 ஏ (A) சித்திபெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (18) கொழும்பு, நூலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. சங்கத்தின் தலைவரும், முஸ்லிம் சேவை முன்னாள் பணிப்பாளருமான அகமத் முனவ்வர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டு மாணவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும்…

Read More

VIDEO: புதிய சபாநாயகருக்கு தலைவர் ரிஷாட் வாழ்த்து!

10ஆவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ள வைத்தியகலாநிதி ஜகத் விக்கிரமரத்னவுக்கு, ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான ரிஷாட் பதியுதீன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (17) சபையில் வாழ்த்து தெரிவித்து, உரையாற்றிய அவர் கூறியதாவது, “புதிய சபாநாயகராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்; அதேபோன்று, எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். பெரும்பான்மையைக் கொண்டுள்ள ஒரு அரசாங்கத்தின் சபாநாயகராக…

Read More

கிழக்கு பல்கலைக்கழக வெளிவாரிப் பரீட்சைகள் ஆரம்பம்

கிழக்குப் பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்படும் வெளிவாரிப் பரீட்சைகள் நாளை 11 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக கிழக்குப் பல்கலைக்கழக வெளிவாரிப் பட்டங்கள், மற்றும் விரிவாக்கற் கற்கைள் நிலையம் அறிவித்துள்ளது. இது குறித்து பல்கலைக்கழகத்தினால் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிவித்தலில், தவிர்க்க முடியாத காரணங்களால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கிழக்குப் பல்கலைக்கழக வெளிவாரிப் பரீட்சைகள் தற்போது மீண்டும் 11.06.2016 இலிருந்து தொடர்ந்து நடைபெற தீர்மானிக்கப்பட்டுள்ளதால், பரீட்சார்த்திகள் அனைவரும் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டிருந்த அட்டவணையின் பிரகாரம் பரீட்சைகளுக்கு சமூகம் கொடுக்குமாறு…

Read More