Headlines

தர்மபால மீது இனவாதி முத்திரை குத்தப்பட்டது, ஆனால் அதனை நாங்கள் மாற்றியுள்ளோம் – மகிந்த

-Gtn- இலங்கையின் பெரும்பான்மை இனத்தவர்கள் தாங்கள் சிங்கள பௌத்தர்கள் என பெருமையுடன் சொல்ல கூடிய நிலைக்கு அல்லது துட்டகெமுனு குறித்து பெருமையுடன் பேசகூடிய நிலைக்கு நாட்டை தனது அரசாங்கம் மாற்றியுள்ளதாக  ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பு மாளிகாகந்தவில் அனாகரிக தர்மபாலாவின் 150 பிறந்ததினத்தை குறிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். 10 வருடங்களுக்கு முன்னர் மக்கள் தாங்கள் சிங்களபௌத்தர்கள் என சொல்வதற்கே தயங்கினர். நான் அவ்வாறு சொன்னவேளை பலர் என்னை கடிந்துகொண்டனர், யாரும்…

Read More

சார்க் மாநாடு ஒத்திவைப்பு

19ஆவது சார்க் மாநாட்டை தள்ளிவைப்பதாக பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. 19ஆவது சார்க் மாநாடு  எதிர்வரும் நவம்பர் மாதம் பாகிஸ்தானின் இஸ்லாமபாத் நகரத்தில் இடம்பெறவிருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாநாடு இடம்பெறும் திகதி விவரங்கள்  இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படும் என்றும் பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது. இந்தியா – பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ள பதற்றமான நிலை காரணமாக மாநாட்டை புறக்கணிக்க போவதாக இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் தெரிவித்திருந்த நிலையில் இந்த…

Read More

உலகின் ஆளுமை மிக்க 500 முஸ்லிம் தலைவர்களில் அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவு

உலகின் ஆளுமை மிக்க 500 முஸ்லிம் தலைவர்களில் அகில இலங்கை  மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவர் தெரிவு அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவு.

Read More

வடக்கு, கிழக்கில் கண்ணிவெடிகள் அகற்றும் பணிகள் 98 வீதம் பூர்த்தி: 80 சதுர கி.மீ பிரதேசமே மிச்சம்

வடக்கு, கிழக்கில் கண்ணிவெடிகள் அகற்றும் பணிகள் 98 சதவீதம் பூர்த்தியடைந்துள்ளதாக இராணுவப் பேச்சாளரும், பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தின் பணிப்பாளருமான பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார். கண்ணிடி வெடிகளை அகற்றுவதற்காக சுமார் 80 சதுர கிலோ மீற்றர் பிரதேசம் மாத்திரமே எஞ்சியுள்ளது என்று தெரிவித்த அவர், இவற்றை அகற்றும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மேலும் தெரிவித்தார். பாதுகாப்பு மற்றும் சமகால விடயங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்க மளிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு…

Read More

குளியாப்பிட்டிய பிரதேச சபை வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வில் மஹ்ரூப் எம்.பி பங்கேற்பு!

-ஊடகப்பிரிவு- குருநாகல் மாவட்டத்தின் குளியாப்பிடிய பிரதேச சபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வு இன்று (14) விசினவ, மடலஸ்ஸ பிரதேசத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மக்கள் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் கலந்துகொண்டதுடன், வேட்பாளர்களுக்கு எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான விளக்கங்களையும் அளித்தார். இந்நிகழ்வில் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், சதொச நிறுவனத்தின் பிரதித் தலைவருமான எம்.என்.நஸீர் மற்றும் குளியாப்பிட்டிய பிரதேச சபை வேட்பாளர்கள்…

Read More

“மக்கள் காங்கிரஸுக்கு வழங்கும் வாக்குகளை சமூகத்துக்கான சிறந்த முதலீடாக எண்ணுங்கள்” புல்மோட்டையில் அமைச்சர் ரிஷாட்!

-ஊடகப்பிரிவு- மக்கள் காங்கிரஸுக்கு வழங்கும் ஒவ்வொரு வாக்குகளையும் உங்களின் வாழ்வுக்கும், எதிர்கால செழிப்புக்கும், சமூக அபிவிருத்திக்குமான முதலீடாக எண்ணுங்கள் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர்  ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். நேற்று முன்தினம் (09) புல்மோட்டையில் இடம்பெற்ற மக்கள் காங்கிரஸின் தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில், அமைச்சர் உரையாற்றிய போது கூறியதாவது, தேர்தலுக்காக மட்டும் வந்து…

Read More

யாழ் மாநகர சபை உறுப்பினர் கே.எம்.நிலாம், அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் வீட்டுக்கு விஜயம்!

-எப்.சனூன்- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் யாழ் மாவட்ட கிளைத் தலைவரும், யாழ் மாநகர சபை உறுப்பினருமாகிய கே.எம்.நிலாம், அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனின் வீட்டிற்கு இன்று (11)விஜயம் செய்து, அக்குடும்பத்திற்கு தனது ஆறுதலை தெரிவித்தார். அத்துடன் பிள்ளைகளை கிளிநொச்சி நகர்ப்புற கடைகளுக்கு அழைத்துச் சென்று, அவர்கள் விரும்பிக்கேட்ட பொருட்களை வாங்கிக் கொடுத்தார். மேலதிமாக வீட்டில் கல்வி கற்பதற்கான தளபாடங்கள், மகள் சங்கீதா ஆசைப்பட்டுக்கேட்ட பாடசாலைக்குச் செல்ல துவிச்சக்கர வண்டி மற்றும் பாதனிகள், வீட்டில் அணிவதற்கான ஆடைகள்…

Read More

இலங்கை திறந்த பல்கலைக்கழகம் இன்று வரை திறக்கப்படவில்லை

இலங்கை திறந்த பல்கலைக்கழகம் எவ்வித காரணங்களுமின்றி மூடப்பட்டு மூன்று வாரங்கள் கடந்துள்ள போதிலும், பல்கலைக்கழகம் இன்று வரை திறக்கப்படவில்லை என பல்கலைக்கழக மாணவ ஒன்றியம் தெரிவித்துள்ளது. இதனால் சுமார் 15000 திற்கும் அதிகமான மாணவர்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் அமில சந்தரூவன் தெரிவித்துள்ளார். ஊழியர்கள் கடமையாற்றவில்லை என தெரிவித்து ஜனவரி மாதம் 22ஆம் திகதி இந்த பல்கலைக்கழகம் மூடப்பட்டதாகவும், எனினும், ஊழியர்கள் சாதாரண பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எதிர்வரும் மார்ச் மாதம் அனைத்து…

Read More

மு.கா பிரதேச சபை உறுப்பினர் ஹனீபா GS, மக்கள் காங்கிரஸ் தவிசாளர் அமீர் அலிக்கு ஆதரவு..!

மட்டக்களப்பு மாவட்ட, ஐக்கிய மக்கள் சக்தியின் முதன்மை வேட்பாளர் சட்டத்தரணி எம்.எஸ்.எஸ்.அமீர் அலியை ஆதரித்து, ஓட்டமாவடியில் (04) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரும் ஐக்கிய தேசிய கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளருமான ஹனீபா GS, அமீர் அலியின் வெற்றிக்கு ஆதரவு வழங்கும் முகமாக, சஜித் பிரேமதாஸவின் மேடையில் கைகோர்த்தார். இந்நிகழ்வில், பிரதம அதிதியாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவும், விஷேட அதிதியாக தேசிய ஐக்கிய முன்னனியின்…

Read More

‘அலைபேசிக் கட்டணங்களுக்கான வரி நீக்கப்படும்’

-வி.நிரோஷினி – தொலைபேசிக் கட்டணங்களுக்காக விதிக்கப்பட்டுள்ள வரியை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திறன்பேசி (smartphone) வழியாக மேற்கொள்ளப்படும் அழைப்புகளுக்கான கட்டண வரியை, முழுமையாக நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என, தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார். இணையம் மூலமாக அழைப்புக்களை மேற்கொள்வதற்கான வசதி வாய்ப்புக்களை அதிகரித்துக் கொடுக்கவுள்ளதாகவும் இதற்கான கட்டண அறவீடு, நிதி ஒதுக்கீடு தொடர்பான யோசனையை, எதிர்வரும் 2017ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டத்திலும் உள்ளவாங்க முயற்சித்து வருவதாகவும் குறிப்பிட்டார்….

Read More

வளைகுடா ஒத்துழைப்பு சபை சந்தையில் இலங்கையின் ஏற்றுமதி துறைக்கு புதிய திருப்புமுனை!

இலங்கை ஏற்றுமதி செயற்பாடுகளில் நுழைவதற்கு இதுவரை வழங்கப்படாத இணையற்ற சலுகைகளுடன் உலகின் வேகமாக வளர்ந்து வரும் மிகப்பெரிய தடையற்ற துறைமுகங்களில் ஒன்றான சோஹாரின் சக்திவாய்ந்த வளைகுடா ஒத்துழைப்பு சபை அதன் கதவுகளை திறந்துள்ளது. இது இலங்கையின் ஏற்றுமதி துறைக்கு ஒரு புதிய திருப்புமுனையாகும்.   உலக மற்றும் வரலாற்று பிரசித்திபெற்ற சிலோன் தேயிலை மற்றும் இலங்கையின் ஏனைய உற்பத்திகளினை கொண்டு  உடனடி பயனாளிகளாக முன்வாருங்கள் என  ஓமன் நாட்டின் வெளியுறவு அமைச்சின் அரச விவகாரங்களுக்கான தற்காலிக துணைச்செயலாளர்…

Read More