Headlines

மக்களின் வாக்குரிமையை கொள்ளையிட அரசாங்கம் முயற்சி!– கபீர் ஹாசீம்

தேர்தல் தினமன்று வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டு அதன் மூலம் தேர்தலை குழப்ப திட்டமிடப்பட்டுள்ளது. சுதந்திரமான முறையில் மக்கள் வாக்களிப்பதனை தடுக்கும் நோக்கில் வன்முறகைள் கட்டவிழ்த்துவிடப்பட உள்ளது. இந்த விடயம் அம்பலமானதைத் தொடர்ந்து கட்சிää தேர்தல் ஆணையாளருடன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது. அரசாங்கம் சூழ்ச்சித் திட்டங்களை முன்னெடுத்தால் அவற்றை அச்சமின்றி எதிர்நோக்க எதிர்க்கட்சிகள் தயார். அரச சொத்து பயன்பாடு, சட்டவிரோத தேர்தல் பிரச்சாரம் போன்றவற்றை நோக்கும் போது, எதிர்வரும் 8ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் சுயாதீனமானதும் நீதியானதுமாக…

Read More

வாகன அனுமதிப்பத்திரத்திற்குப் பதிலாக விரைவில் மாற்று திட்டம்

அரசாங்க உத்தியோகஸ்தர்களுக்கான வரிவிலக்கப்பட்ட வாகன அனுமதிப்பத்திர சலுகைக்குப் பதிலாக மாற்று திட்டமொன்றை விரைவில் முன்வைக்க இருப்பதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, 2017 முதல் சகல அரச நிறுவனங்களும் தமது உண்மையான பெறுமதியை வரவு செலவுத் திட்டத்தினூடாக வெளிப்படுத்த வேண்டும். உந்துருளி,முச்சக்கரவண்டி என்பவற்றிற்கு புகைப் பரிசோதனை கட்டணம் அறவிடப்படமாட்டாது. வெளிநாட்டவருக்கு காணி விற்கப்போவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தவறானது. கடந்த ஆட்சியிலே துறைமுக நகரில் 216…

Read More

கோட்டாபயவிற்கும் லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பு

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி, எதிர்வரும் 23ம் மற்றும் 27ம் திகதிகளில் லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

கோதுமை மா ஒரு கிலோவின் விலை 2 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய 87 ரூபாவாக இருந்த கோதுமைவின் விலை 89 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இருப்பினும் கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்படவில்லை என நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது. அதிக விலைக்கு கோதுமை மாவை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவ் அதிகார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

மைதான சுற்றுவேலிக்கான அடிக்கல் நடும் அங்குரார்ப்பண நிகழ்வு!!!

தி/மூதூர் மத்திய கல்லூரி பாடசாலையின் மைதான சுற்றுவேலி அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று (02) இடம் பெற்றது. திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கம்பரெலிய வேலைத் திட்டத்தின் ஊடாக இக் கட்டிட நிர்மாண நடவடிக்கைகள் சுமார் பத்து இலட்சம் ரூபா செலவில் மேற்கொள்ளப்படவுள்ளது. இவ் நிகழ்வில் பாடசாலை அதிபர்,ஆசிரியர்கள், மாணவர்கள், மூதூர் பிரதேச சபையின் உறுப்பினர் திருமதி  அகீதா நஸார் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Read More

பேஸ்புக் அதிபருக்கு பெண் குழந்தை பிறந்தது

உலக புகழ் பெற்ற பேஸ்புக் சமூக வலைதளத்தின் தலைவர் செயல் அதிகாரி மார்க் ஷுகர்பெர்க் (31). இவரது மனைவி பிரிஸ்சில்லா சான். இவர் கர்ப்பமாக இருந்தார். இந்த நிலையில் அவருக்கு சமீபத்தில் அழகான பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு மஸிமா என பெயர் சூட்டியுள்ளனர். இத் தகவலை ஷுகர் பெர்கரும் அவரது மனைவி பிரிசில்லாவும் பேஸ்புக்கில் அறிவித்துள்ளனர். மேலும் தங்களது குழந்தையின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர். பேஸ்புக்கில் இருவரும் இணைந்து ஒரு கடிதம் எழுதியுள்ளனர். அதில் தங்களது வாழ்நாளில்…

Read More

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் மின் கசிவு

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மூன்றாவது கட்டிடத்தில் மின் கசிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் மின் வழங்கலில் நெருக்கடி நிலைமை ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் உள்ள குழாய் ஒன்றில் ஏற்பட்ட மின் கசிவே இந்த நெருக்கடி நிலைக்கு காரணம் என இலங்கை மின்சார சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இருந்த போதிலும் மின்வழங்கலில் தடை எதுவும் இல்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை இந்த மின் கசிவை சீர்செய்வதற்கான நடவடிக்கைகளை மின்…

Read More

ஐ.எப்.எம் முன்பள்ளியின் 44 வது ஆண்டு நிறைவு நிகழ்வுகள்

புத்தளம் நகரின் முதலாவது முன்பள்ளியான ஐ.எப்.எம். முன்பள்ளியின் 44 வது வருட நிறைவோடு கூடிய வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி சிறுவர் தினமான கடந்த சனிக்கிழமை (01) மாலை புத்தளம் ஸாஹிரா ஆரம்ப பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில், பிரதம அதிதியாகக் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி அவர்கள் கலந்துகொண்டற் விழாவை ஆரம்பித்து வைத்ததுடன், போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களையும் வழங்கி சிறப்பித்தார். புத்தளம் நகரில் முன்பள்ளிகள் எதுவுமே இல்லாத ஒரு கால கட்டத்தில் 04.02.1972 ம் ஆண்டு இந்த…

Read More

புள்ளே, லசந்த, எரிக் பதவி விலகல்!

பிரதி அமைச்சர்களான சுதர்ஷினி பெனாண்டோ புள்ளே, லசந்த அழகியவன்ன மற்றும் எரிக் வீரவர்த்தன ஆகியோர் பிரதி அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகியுள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் வெளியிட்ட கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தே தாம் பதவி விலகியதாக சுதர்ஷனி பெனாண்டோ புள்ளே தெரிவித்தார். பொதுத் தேர்தலில் நடுநிலை வகிக்கப் போவதாக அறிவித்த பின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தோல்வியடையும் என்ற கருத்து…

Read More

රාජ්‍ය ඇමති වරුන්ට හිමි විෂය ගැසට් නිවේදනයෙන් වෙන් කරයි

– නිලුපුලී – කැබිනට්‌ අමාත්‍යවරුන් විසින් රාජ්‍ය ඇමැතිවරුන්ට සිය අමාත්‍යාංශ සහ ඊට අනුබද්ධිත ආයතනවල විෂය පථයන් නිසි අයුරින් වෙන් කර නොදීම හේතුවෙන් රාජ්‍ය අමාත්‍යවරුන් පත්ව සිටින අසීරුකම සැලකිල්ලට ගෙන රජය විසින් අදාළ විෂය පථයන් ගැසට්‌ නිවේදනයක්‌ මගින් ඇමතිවරුන්ට වෙන් කර දීමට තීරණය කර ඇත.මේ සම්බන්ධව පසුගිය දිනවල ජනාධිපති මෛත්‍රිපාල සිරිසේන සහ අගමැති රනිල් වික්‍රමසිංහ යන…

Read More

வில்பத்துக் காடுகளை அமைச்சர் ரிஷாட் அழித்ததாக பொய்ப்பிரச்சாரம். மீள் குடியேறிய மக்களை விரட்டியடிக்க இனவாதிகள் திட்டம்: வடக்கு முஸ்லிம் கூட்டமைப்பு கண்டனம்!

கணக்காளர் நாயகத்தின் அறிக்கை தொடர்பாக வடக்கு முஸ்லிம்கள் அமைப்பு கண்டன அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, வில்பத்து வனத்தை முஸ்லிம்களும் அமைச்சர் றிஷாட்டும் அழித்து வருவதாக இனவாதிகளினால் பல வருடங்களாக  முன்னெடுத்துவரும் பொய்ப்பிரச்சாரங்களை  மீண்டும் ஆரம்பித்துள்ளனர். 3 தசாப்தங்களுக்கு மேலாக அகதி என்ற முத்திரையோடு தமது இருப்பிடத்தை இழந்து ஓலைக்குடிசையில் வெயிலிலும், மழையிலும் பல சொல்லொனாத்துயரங்களோடு வாழ்ந்த மக்கள் யுத்தத்தின் பின்னர் மீண்டும் தமது சொந்த பிரதேசங்களுக்கு மீள்குடியேறப் புறப்பட்ட காலம் முதல் அவர்களுக்கு எதிரான இனவாதிகளினதும்…

Read More

அமைச்சர் றிஷாத் பதியுதீனுடன் சிராஸ் மீராசாஹிப் இணைவு

அகமட் எஸ். முகைடீன் கைத்தொழில், வணிகத் துறை அமைச்சர் றிஷாத் பதியுதீன் தலைமையிலான  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் கல்முனை மாநகர முன்னாள் முதல்வரும் மெட்ரோ பொலிடன் கல்லூரியின் ஸ்தபகத் தலைவருமாகிய கலாநிதி சிராஸ் மீராசாஹிப் நேற்று  (05.06.2015) மாலை தனது ஆதரவாளர்களுடன் இணைந்து கொண்டார். கைத்தொழில், வணிகத் துறை அமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பின்போது கட்சியில் இணைந்து கொண்ட சிராஸ் மீராசாஹிப்பிற்கு கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளர் பதவி அமைச்சர் றிஷாத்   பதியுதீனால் வழங்கிவைக்கப்பட்டது….

Read More