Headlines

கடிதத்தின் பிரதியொன்றை முஹம்மத் நபி ஊடாக, அல்லாஹ்வுக்கும் அனுப்பவும் – ஞானசார

பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பிய கடிதத்தின் பிரதியொன்றை முஹம்மத் நபி ஊடாக அல்லாஹ்வுக்கும் அனுப்பி வைக்கவும் என பொது பல சேனா அமைப்பின்  செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். கடந்த 21ஆம் திகதி மஹியங்கனை பிரதேசத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றின் போது, இலங்கை பொலிஸாருக்கு எதிராகவும், இனவாதத்தை தூண்டும் விதத்திலும் கருத்துக்களை வெளியிட்டமைக்கு எதிராக முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீ லங்கா பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் மூலம் முறைப்பாடு செய்திருந்தது. இதற்கு பதிலளிக்கும் வகையில் சிங்கள இணையத்தளமொன்றுக்கு பொது…

Read More

ஆயுதக் கொள்வனவு – முஸ்லிம் அமைச்சர்களுக்கு அவசியம் ஏற்பட்டது ஏன்? விளக்கம் கேட்கின்றது அமைச்சர் ரிஷாட்டின் ஊடகப்பிரிவு!

புலிகளிடமிருந்த அனைத்து ஆயுதங்களும் முஸ்லிம்கள் வசமே இருப்பதாகவும், இதனை வைத்துக்கொண்டே அமைச்சர் ரிஷாட் பதியுதீன், ஹிஸ்புல்லா ஆகியோர் அரசாங்கத்தை அச்சுறுத்தவும், அடிபணியவைக்கவும் முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ள புனர்வாழ்வளிக்கப்பட்ட புலிகள் அமைப்பின் முக்கியஸ்தர் ஒருவரின் கருத்துக்கள் தொடர்பில், அரசாங்கம் ஆழமான பார்வையுடன் அக்கறை செலுத்தி, உரிய விசாரணை நடாத்தி உண்மை நிலையை கண்டறிய வேண்டுமென  அமைச்சர் ரிஷாட் பதியுதீனின்  ஊடகப்பிரிவு  அரசாங்கத்தைக் கோரியுள்ளது. நல்லாட்சி அரசாங்கத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகபட்ச கருத்துச் சுதந்திரம், ஊடகச்சுதந்திரங்களைப் பயன்படுத்தி எவரும் கருத்துக்களை வெளியிட முடியும்….

Read More

விமான சேவையை சரிவர செய்யாததில் ஏர் இந்தியா விமானம் முதலிடத்தில் உள்ளது!

இந்தியாவில் விமான சேவையை சரிவர செய்யாத விமானங்களின் பட்டியலில் ஏர் இந்தியா விமானம் முதலிடத்தில் உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பயணிகளின் புகார் பட்டியலில் சேவை சரியில்லை என்கிற குற்றச்சாட்டில் ஏர் இந்தியா விமானம் முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடத்தில் ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் சேவை சரியில்லை என்று அந்த விமான நிறுவனம் இரண்டாவது இடத்தில் உள்ளது. விமானம் சரியான நேரத்துக்கு புறப்படவில்லை, முன் அறிவிப்பு எதுவும் இல்லை, விமானம் ரத்து என்பது அடிக்கடி நிகழும் நிலை என்று…

Read More

காணாமல் போன ஊடகவியலாளர்கள் தொடர்பிலும் விசாரணை!

காணாமல் போன ஊடகவியலாளர்கள் தொடர்பிலும் விசாரணை நடத்தப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு சட்டக் கல்லூரியில் நேற்று (18) நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், காணாமல் போன பிரகீத் எக்னெலிகொட உள்ளிட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பிலும் காணாமல் போனோர் அலுவலகம் விசாரணை நடத்தும். எதிர்காலத்தில் ஓர் அங்கமாக மனித உரிமைகளை கருதி செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இந்த அலுவலகத்தின் அனைத்து பணிகளும் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு…

Read More

புனிதமிகு ரமழானை வரவேற்க!

– அபூ உமர் அன்வாரி BA – இஸ்லாத்தில் ஐம்பெரும் கடமைகளில் நோன்பு முக்கியமான ஒன்று.இதில் அல்லாஹ் தனது அடியார்களுக்கு  பல சிறப்பம்சங்களை தயார்படுத்தி வைத்துள்ளான். நன்மை செய்வதற்கான பல விடயங்களையும் எமக்கு நபிவழியின் மூலம் காணபித்துள்ளான்.ஆகவே ஒவ்வொரு விசுவாசியும் இதை நல்ல முறையில் பயன் படுத்துவதற்கான ஆயத்தங்களை இப்போதிலிருந்து செய்யவேண்டும்.இதற்கென வீடுகளை சுத்தம் செய்து தூசிபடிந்த  குர்ஆனை துடைப்பதும் மாத்திரம் அல்ல.மாறாக  எத்தகைய  நல்ல செயற்பாடுகளை செய்தால் இந்த  புனித மிகு ரமழானை பயனுடையதாக அமைத்து…

Read More

இறந்த பிறகும் பேஸ்புக்!

இறந்த பின்பு தன்னுடைய பேஸ்புக் கணக்கை யார் கையாள்வது என்பதை முடிவு செய்யும் வசதியை பேஸ்புக் அறிமுகப்படுத்தியுள்ளது. மரபு தொடர்பு ‘என்ற இந்த வசதியின் மூலம் நாம் இறந்த பிறகு நமது பேஸ்புக் கணக்கை நிர்வகிக்க குடும்ப உறுப்பினர்களில் ஒருவரையோ, நண்பர்களில் ஒருவரையோ நாமினியாக நியமித்துக் கொள்ளலாம். அவ்வாறு தெரிவு செய்யப்பட்டவர் நமது தகவல்களுக்கு யை மாற்ற முடியும், போருக்கு களை சேமித்து வைக்கலாம் விவரம். ஆனால் தனியார் Messages- யை பார்க்க முடியாது, இந்த வசதி…

Read More

அனர்த்தத்தினால் ஏற்பட்ட சேதத்தை மதிப்பீடு செய்வதில் சிரமம்: நிதி அமைச்சு

இயற்கை அனர்த்தம் காரணமாக ஏற்பட்ட சேத விபரங்களை மதிப்பீடு செய்வதில் சிரமங்கள் காணப்படுவதாக நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எம்.எஸ். அமரதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பு பத்திரிகையொன்றுக்கு அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், வெள்ளம் மற்றும் மண் சரிவு காரணமாக ஏற்பட்டுள்ள சேதம் பற்றிய பொருளாதார ரீதியான மதிப்பீடுகளை மேற்கொள்வது மிகவும் சிரமமான காரியமாகும். குறிப்பாக பாதிக்கப்பட்டவர்களின் தனிப்பட்ட சொத்துக்களுக்கு ஏற்பட்ட நஷ்டம் பற்றிய விபரங்களை துல்லியமாக திரட்ட முடியாதுள்ளது.இன்னமும் வெள்ளம் முழுமையாக…

Read More

புனித கஃபாவை அழிக்கும் முயற்சியில் அப்ரஹா மன்னன் பயணித்த பாதை சவூதியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது!!

சவூதி அரேபியாவின் King Saud பல்கலைக்கழக வரலாற்று ஆய்வாளர்களான இளைஞர் குழு ஒன்று பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அப்ரஹா மன்னனின் யானைப்படை புனித கஅபாவை அழிப்பதற்காக பயன்படுத்திய பாதை ஒன்றை கண்டு பிடித்துள்ளனர். இந்த யானைப்படை தொடர்பில் புனித அல்-குர்ஆன், 1௦7 ஆம் அத்தியாயத்தில், சுருக்கமாகவும் யானைபடைக்கு நேர்ந்த கதியை தெளிவாகவும் குறிப்பிட்டுள்ளது. மேலும் இது தொடர்பில் பதினான்காம் நூற்றாண்டின் குர் ஆன் ஆய்வாளரான இப்னு கதீர் என்பவர் குறிப்பிடுகையில் அப்ரஹா அல் ஆஸ்ரம் (Abraha Al-Ashram)…

Read More

வருட இறுதியில் இலங்கை வருகிறார் ஒபாமா

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, இந்த வருட இறுதியில் இலங்கை வரவுள்ளதாக பெருந்தோட்ட அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Read More

‘பல்கலைக்கழகங்கள் கல்வி கற்பதற்கான வாய்ப்பைப் பெறாதவர்களை தொழிற்சந்தைக்கு ஏற்றாற்போல் பயிற்றுவிப்பதே மூன்றாம் நிலைக்கல்வியின் நோக்கம் அமைச்சர் றிஷாட் பதியுதீன்

தொழிற்பயிற்சி மற்றும் திறன்கள் விருத்தி அமைச்சின் தூரநோக்கு மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக தெளிவுபடுத்தும் உயர்மட்டக் கூட்டம் நாரஹேன்பிட்டியவில் அமைந்துள்ள அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. கைத்தொழில், வர்த்தகம், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி மற்றும் திறன்கள் விருத்தி அமைச்சர் றிசாட் பதியுதீன் தலைமையில் இந்த உயர்மட்ட கூட்டம் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் பிரதியமைச்சர்களான கருணாரட்டன  பரணவிதான மற்றும் புத்திக  பத்திரண    அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோக்க மற்றும் அமைச்சின் கீழ்வரும் 12…

Read More

42 வரு­டங்­க­ளுக்கு பின்பு அழைப்பு விடுத்­துள்ள ஜேர்மன் அரசு

ஜேர்­மன் நாட்­டி­லி­ருந்து இலங்கை தலை­வ­ரொ­ரு­வ­ருக்கு சுமார் 42 வரு­டங்­க­ளுக்கு பிறகு அழைப்பு கிடைக்­க­பெற்­றுள்­ளது. இதன்­படி அந்த நாட்டு அர­சாங்­கத்தின் அழைப்­பினை ஏற்று அடுத்த மாதம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஜேர்­ம­னுக்கு விஜயம் மேற்­கொள்­ள­வுள்ளார். இலங்கை அர­சாங்­கத்தின் சீரான வெளி­நாட்டுக் கொள்­கையின் கார­ண­மாக ஜேர்­மன் நாட்­டி­லி­ருந்து இந்த அழைப்பு கிடைக்­க­ப்பெற்­றுள்­ளது. ஜன­வரி 8 ஆம் திகதி ஆட்சி மாற்­றத்­திற்கு பின்னர் அபி­வி­ருத்தி அடைந்து வரும் பல்­வேறு நாடு­க­ளி­லி­ருந்து ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேனவுக்கு அழைப்­புகள் கிடைக்­க­ப்பெற்ற வண்­ண­முள்­ளமை விசேட அம்­ச­மாகும்….

Read More

சிசிலியாவின் விளக்கமறியல் நீடிப்பு

செலிங்கோ குழுமத்தின் தலைவர் லலித் கொத்தலாவலவின் மனைவி சிசிலியா கொத்தலாவலவை, தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம், இன்று (09) உத்தரவு பிறப்பித்தது. சேமிப்பாளர்களின் 430 மில்லியன் ரூபாவை மோசடி செய்தால் என்ற குற்றச்சாட்டின் பேரில், அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More