Headlines

பிரதமரின் சிங்கப்பூர் விஜயம் 17 இல்!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு நாளை மறுதினம்(17) சிங்கப்பூர் செல்லவுள்ளார் என பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இவ்விஜயத்தின் போது பிரதமர் சிங்கப்பூர் ஜனாதிபதி டோனி டென் கெங் யெம் (Tony Tan Keng Yam), மற்றும் பிரதமர் லீ சியென் லுல் (Lee Hsien Loong) ஆகியோருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார். 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் சிங்கப்பூர் நகர மநாட்டு நிலையத்தில் நடைபெறும் மூன்றாவது தெற்காசிய புலம்பெயர்ந்தோர் மாநாட்டின்…

Read More

உலக சுகாதார நிறுவனத்தினால் இலங்கைக்கு சான்றிதழ்!

மலேரியா மற்றும் யானைக்கால் நோய்களிலிருந்து விடுதலை பெற்ற நாடாக உலக சுகாதார நிறுவனத்தினால் இலங்கை பிரகடணப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதனைக் குறித்து அவ் நிறுவனத்தினால் இலங்கைக்கு சான்றிதழ் வழங்கப்படவுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் தெரிவித்த அவர், அடுத்த வாரம் இறுதியில் உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதிகள் இலங்கைகக்கான விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளனர். இலங்கையின் சுகாதார சேவை மற்றும் சர்வதேச ரீதியில் அடைந்துள்ள முன்னேற்றம் என்பவற்றினை கருத்தில் கொண்டே இவர்களது இவ் விஜயம் அமைந்துள்ளது. பிரதிநிதிகளின்…

Read More

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பின் துணை அதிபர் வேட்பாளர் மைக் பென்ஸ்

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பின் துணை அதிபர் வேட்பாளராக மைக் பென்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 8-ந்தேதி நடைபெறுகிறது. குடியரசு கட்சியின் அதிபர் பதவி வேட்பாளராக கோடீசுவர் டொனால்டு டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. எனவே, அவர் தனது தேர்தல் பிரசாரத்தை தீவிரமாக தொடங்கி விட்டார். இதற்கிடையே குடியரசு கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் தேர்வும் நடைபெற்றது. இந்த நிலையில் மைக் பென்ஸ் (57) துணை அதிபர்…

Read More

“முஸ்லிம் மாண­வர்­களை காலில் வீழ்ந்து, வணங்­கு­மாறு வற்­பு­றுத்த எவ­ரு­க்கும் உரிமையில்லை”

வத்­தளை, ராகுல வித்­தி­யா­ல­யத்தின் ஆரம்ப பிரிவில் கல்வி பயிலும் முஸ்லிம் மாண­வனை வகுப்­பா­சி­ரி­ய­ருக்கு கெள­ரவம் செய்யும் முக­மாக அவ­ரது காலில் விழுந்து வணங்க கட்­டா­யப்­ப­டுத்­தி­ய­மை­யா­னது இலங்கை அர­சி­ய­ல­மைப்பு மற்றும் ஐக்­கிய நாடுகள் சபையின் மனித உரி­மைகள் சாசனம் உள்­ளிட்­ட­வற்­றுக்கு எதி­ரா­னது என இலங்கை மனித உரி­மைகள் ஆணைக் குழு தீர்ப்­ப­ளித்­துள்­ளது. தனது பிள்­ளையை வகுப்­பா­சி­ரி­யரும் பாட­சா­லையின் தேரர் ஒரு­வரும் காலில் விழுந்து வணங்க கட்­டா­யப்­ப­டுத்­து­வ­தாக வத்­தளை அக்பர் டவுன் பகு­தியைச் சேர்ந்த எம்.ஆர்.எம். சஜானி இலங்கை மனித…

Read More

பிரான்ஸ் தாக்குதலில் இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை

பிரான்ஸ் தாக்குதலினால் இலங்கையர்கள் எவருக்கும் எந்தவித பாதிப்பும் இதுவரையில் இல்லையென பாரிஸில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் மஹிஷினி கொலன்னே  இதனை தனது டவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளார். இதேவேளை பிரான்ஸ் தாக்குதலில் இலங்கையர்கள் பாதிக்கப்பட்டார்களா? என்பதனை கண்டறிய பிரான்ஸிலுல்ல இலங்கை தூதரகம் தொடர்ந்தும்  உள்நாட்டு அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read More

லஹிருவிற்கு பிணை!

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் லஹிரு வீரசேகரவிற்கு பிணை வழங்கப்பட்டள்ளது. 7,900 ரூபாய் காசுப் பிணை மற்றும் 3 இலட்சம் ரூபாய் பெறுமதியிலான சரீரப் பிணையில் விடுவிக்க, கோட்டை நீதவான் சற்று முன்னர் உத்தரவிட்டுள்ளார். நீதிமன்றக் கட்டளையையும் மீறி, பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படும் வகையில் நடந்துகொண்டார் என்ற குற்றச்சாட்டிலேயே, அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை, குறித்த வழக்கு விசாரணையானது எதிர்மாவரும் மாதம் 5ஆம் திகதி இடம்பெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More

நல்லாட்சி அரசாங்கத்தை அசைக்க முடியாது

இன்னும் ஐந்து வருடங்களுக்கு இந்த அரசாங்கத்தை சட்டரீதியாக எவராலும் வீழ்த்த முடியாது. இன்று பிரதான இரண்டு கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைத்துள்ளன. இந்நிலையில் வேறு கட்சிகள் இணைந்து கூட்டணி அமைப்பதில் பலன் இல்லை என்று நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார். மஹரமகவில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அமைச்சர் அங்கு மேலும் குறிப்பிடுகையில், நல்லாட்சி அரசாங்கத்தின் அபிவிருத்தி பயணத்தை ஸ்தம்பிக்கச் செய்வதற்கு சுயநல அரசியல்வாதிகள் சிலர் முயற்சித்து…

Read More

கட்சித் தலைமையை விமர்சிப்போருக்கு வேட்புமனு வழங்கப்படமாட்டாது

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைமையையும் கட்சியையும் விமர்சிப்போருக்கு உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படமாட்டாது என்ற தீர்மானம் உறுதியாக எடுக்கப்பட்டுள்ளது  என்று அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளருமான மஹிந்த அமரவீர  தெரிவித்தார். தேர்தலில் போட்டியிட இளையோருக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளதாகவும்  அவர் குறிப்பிட்டார். இது தொடர்பாக கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவிக்கையில், அடுத்த வருடம் ஆரம்பத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் நடத்தப்படவுள்ளன. இதில் போட்டியிடுவதற்காக ஸ்ரீ லங்கா சுதந்திரக்…

Read More

தேசிய கனிஷ்ட கைப்பணிப் போட்டி மற்றும் கண்காட்சி

பாடசாலைகளில் அருங்கலைகளைக் கற்பிக்கும் நோக்கில், எனது அமைச்சின் கீழான அருங்கலைகள் பேரவை தயாரித்துள்ள பாடவிதானங்களை கல்வி அமைச்சு நடைமுறைப்படுத்தி வருவதாக  கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். தேசிய அருங்கலைகள் பேரவையும், கல்வி அமைச்சும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள தேசிய கனிஷ்ட கைப்பணிப் போட்டி மற்றும் கண்காட்சியின்  அங்குரார்ப்பண நிகழ்வு கைத்தொழில், வர்த்தக அமைச்சில் இடம்பெற்ற போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இந்த நிகழ்வில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், இராஜாங்க அமைச்சர் சம்பிக்க…

Read More

முஸ்லிம்களிடம் எடுபடுமா சம்பந்தனின் கோரிக்கை?

– எம்.ஐ.முபாறக் – தமிழ்-,முஸ்லிம் மக்களுக்குப் பெரும் சாபக்கேடாக இருந்து வந்த மஹிந்தவின் ஆட்சி கவிழ்ந்தது முதல் இந்த  மக்கள் ஓரளவு நிம்மதிப் பெரு மூச்சை சுவாசிக்கத் தொடங்கினார்கள் என்றால் அதை மறுப்பதற்கில்லை.முஸ்லிம்களுக்கு எதிரான பௌத்த பேரினவாதம் ஓரளவு முடிவுக்கு  வந்தது.தமிழர்களின் ஓரிரு பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்பட்டன. அதேபோல்,இந்த வருடத்துக்குள்  அரசியல் தீர்வு  வழங்கப்படும் என அரசு அரசு அறிவித்துள்ளமையால்  இந்த வருடத்தையும் மேலும் நம்பிக்கையூட்டும் வருடமாக  சிறுபான்மை இன மக்கள் எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கின்றனர்.அது அனைத்து இன…

Read More

பொதுபல சேனாவுக்கு எதிரான வழக்குகள் ஒத்திவைப்பு

-ஷெஹான் சாமிக்க சில்வா – பொதுபல சேனாவுக்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டு வழக்குகளும் எதிர்வரும் செம்டெம்பர் மாதம் 15ஆம்  திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. கடந்த 2014ஆம் ஆண்டு இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாடொன்றின் போது, புனித குர்ஆனை அவமதித்தமை மற்றும் ஜாதிக பல சேனாவின் ஊடகவியலாளர் மாநாட்டை நடத்த விடாமல் தடையாக இருந்தமை போன்ற இரண்டு குற்றச்சாட்டுகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கே, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் நேற்று வியாழக்கிழமை (14) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த வழங்குகள்  தொடர்புடைய…

Read More

முடியுமானால் ஜாகிர் நாயக்கின், ஒரு முடியை பிடுங்குங்கள் – தவ்ஹீத் ஜமாஅத் அதிரடி

ஜாகிர் நாயக் தலையை வெட்டி கொண்டு வந்தால் ரூ 50 லட்சம் பரிசு தருவதாக விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர்களில் ஒருவரான பெண் சாமியார் சாத்வி பிராச்சி அறிவித்திருந்தார். அவரது அறிவிப்புக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொதுச்செயலாளர் முஹம்மது யூசுப் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்…. ஜாகிர் நாயக்கின் தலையை கொண்டு வர மற்றவரை தூண்டி விடுவதற்கு பதிலாக நீயே நேரடியாக சென்று ஒரு முடியை புடுங்கி காட்டினால் அதே 50…

Read More