Headlines

தாருல் உலும் வித்தியாலய அதிபர் பைஸல் தலைமையிலான குழு பிரதி அமைச்சர் அமீர் அலியை சந்திப்பு

ஒட்டமாவடி தாருல் உலும் வித்தியாலய அதிபர் பைஸல் தலைமையில் பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி சந்தித்து பாடசாலையின் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து தருமாறு அன்மாயில்  கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை ஏற்ற பிரதி அமைச்சர், அடுத்த வருடம் எனது நிதி ஒதுக்கீட்டு மூலம் நிவர்த்தி செய்து தருவதாக உறுதியளித்தார்.

Read More

கோத்தபாயவை நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவு!

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஷங்க சேனாதிபதி உட்பட 8 பேரை செப்டம்பர் 30ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய முன் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொண்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கொழும்பு பிரதான நீதிமன்றில் வழக்கு ஒன்றை நேற்று தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. குறித்த சந்தேகநபர்கள் அவன்கார்ட் பாதுகாப்பு நிறுவனத்திற்கு…

Read More

3 மில்லியன் பெறுமதியான வீதி புனரமைப்பு வேலைத்திட்ட ஆரம்ப நிகழ்வு!!!

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் மன்னார் பிரதேச சபை எல்லைக்கரப்பட்ட தலைமன்னார் படப்படி மற்றும் தலைமன்னார் கிராமம் போன்ற பகுதிகளுக்கு பாதை அமைக்கும் வேலைத்திட்டம் மன்னார் பிரதேச சபை தவிசாளர் முஜாஹிர் அவர்களது தலைமையின் கீழ் இடம்பெற்றது. 2 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் தலைமன்னார் படப்படி கிராமத்திற்கான கிறவள் பாதை மற்றும் தலைமன்னார் கிராமத்திற்கு 1 மில்லியன் பெறுமதியான தார் வீதியும் அமைக்கும் இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக…

Read More

இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க ஐரோப்பிய ஒன்றியம் தயார்

இலங்கையின் பங்காளியாக முன்னின்று இலங்கை முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுப்பதற்கு தயாராக இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இதன்படி இலங்கையில் நல்ல ஜனநாயகத்தைக் கட்டியெழுப்புவதற்கு ஒத்துழைப்பு வழங்குவது தமது நோக்கம் என்றும் தெரிவித்துள்ளது. நடைபெற்று முடிந்த தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்காக இலங்கை வருகை தந்திருந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினர்கள் சில சிவில் அமைப்புக்களுக்கு பெறுமதிமிக்க பொருட்களை கையக்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது. 108,000 யூரோ பெறுமதியான மடிக்கணிணிகள் மற்றும் தொலைபேசிகள் உட்பட பல அலுவலக உபகரணங்கள்…

Read More

ஐரோப்­பிய ஒன்­றி­யத்தை விட்டு வெளியேறும் தீர்­மானம் நன்­மைக்­கு­­ரி­ய­தல்­ல – டேவிட் கெமரூன்

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்­தா­னியா வெளியேறும் தீர்மானம் நாட்டின் நன்மைக்குரியதல்ல என அந்­நாட்டின் பிர­தமர் டேவிட் கெமரூன் தெரி­வித்­துள்ளார். ஆனால் அந்த தீர்மானம் மதிக்கப்பட்டு சிறந்த சாத்தியமான முறையில் நடைமுறை படுத்தப்பட வேண்டும் என்றும் கூறி­யுள்­ளார். பிரித்­தா­னிய பிர­­தமர் டேவிட் கெமரூன்  விலக போவதாக அறிவித்த பின்னர் நாடா­ளு­மன்­றத்தில் நேற்று முன்­தினம் ஆற்­றிய உரை­யில், ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தி­லி­­ருந்து முறையாக விலகல் நடைமுறை குறித்து தனக்கு அடுத்து வரும் பிரதமர் தீர்மானிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். ஐரோப்பிய…

Read More

அஸாதுதீன் உவைஸியை கைதுசெய்ய முயற்சி

உவைசி’யை கைது செய்ய கையெழுத்து இயக்கம் நடத்தும் காவிகள்..! Telangana State BJP is launching a signature campaign on Wednesdaydemanding arrest of MIM MP Asaduddin Owaisi for his alleged support to ISIS modules arrested by NIA recently. The signature drive would be launched near Chandana Brothers in Dilsukhnagar tomorrow at 11 am. The campaign was against terrorism and…

Read More

உகண்டாவில் சகல சமூக வலைதளங்களையும் அந்நாட்டு அரசு முடக்கியது

உகண்டா நாட்டில் பேஸ்புக் ,டுவிட்டர் , வட்ஸ் அப் , வைபர் உள்ளிட்ட சகல சமூக வலைதளங்கள் மற்றும் தொலைதொடர்பு மென்பொருள்கள் என அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. சர்வாதிகார ஆட்சியாளர் ஆண்ட உகண்டாவில் இம்முறை பெப்ரவரி மாதம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்றது. அந்த தேர்தலில் அந்த நாட்டு ஜனாதிபதி முசவெனி வெற்றிபெற்றபோதும் அங்கு நீதியான தேர்தல் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்பட்டது. பெப்ரவரி தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்ற முசவேனி இன்று (13) பதவியேற்கும் நிலையில்…

Read More

முஸ்லிம் மக்களுக்காக பேசுகின்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைமையின் குரலை நசுக்கிட வேண்டும் என்று எல்லோரும் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கின்றார்கள். -ராஜாங்க அமைச்சர் அமீர் அலி

முஸ்லிம் மக்களுக்காக பேசுகின்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைமையின் குரலை நசுக்கிட வேண்டும் என்று எல்லோரும் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கின்றார்கள் என விவசாய நீர்ப்பாசன மற்றும் கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். மட்டக்களப்பு மத்தி வலய கல்வி அலுவலக பிரிவில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மீள்குடியேற்ற கிராமத்தில் அமையப்பெற்றுள்ள மாஞ்சோலை அல் ஹிரா வித்தியாலயத்தின் மிக நீண்ட நாள் தேவையாக இருந்து வந்த வகுப்பறை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும்…

Read More

காத்தான்குடியில் குரங்குகளை சுட்டுக் கொல்லத் திட்டம்

(BBC) வீடுகள் மற்றும் கடைகளில் புகுந்து தொல்லை கொடுக்கும் குரங்குகளை சுட்டுத்தள்ள அரசிடம் துப்பாக்கியை கேட்டுள்ளது காத்தான்குடி நகரசபை. இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பிரதேசத்தில் நாளாந்தம் அதிகரித்து வரும் இத்தொல்லையை கட்டுப்படுத்த குரங்குகளை சுடுவதற்கு காத்தான்குடி நகர சபை தீர்மானித்துள்ளது. இதற்கான அனுமதி நகர சபை நிர்வாகத்தினால், பாதுகாப்பு அமைச்சிடம் வைக்கப்பட்டுள்ளது. மக்கள் நெரிசல் மிகுந்த காத்தான்குடி பிரதேசத்திற்குள் கூட்டம் கூட்டமாக வரும் குரங்குகளை கலைப்பதற்கு வனவிலங்குத்துறை அதிகாரிகளின் உதவி கோரப்பட்டபோது, அவர்கள் ஆட்கள் பற்றக்குறை…

Read More

இராணுவத் தளபதியின் பதவிக் காலம் நீடிப்பு

இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷாந்த டிசில்வாவின் பதவிக் காலம் மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் ஜயனாத் ஜயவீர தெரிவித்துள்ளார். இந்த பதவி நீடிப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால்வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் ,குறித்த பதவி நீடிப்பு ஆகஸ்ட் மாதம் 22 ஆம் திகதியில் இருந்துஅமுலாகும் விதமாக வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Read More

கல்லாறு விபத்தில் உயிரிழந்தவர்களின் சுவன வாழ்வுக்கு பிரார்த்திகின்றேன்

இன்று கல்லாற்று பாலத்தில் இடம் பெற்ற வாகன விபத்து குறித்து கேள்வியுற்றதும்,தாம் பெரும் அதிர்சியடைந்துள்ளதாகவும், மரணமானவர்களின் சுவன வாழ்வுக்கு பிரார்த்திப்பதகாவும் தெரிவித்துள்ள அமைச்சர் றிசாத் பதியுதீன் காயமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் துரித சுகத்திற்குமாக பிரார்த்திப்பதாகவும் கூறினார். இன்று காலை புத்தளத்திலிருந்த எலுவலங்குளம் ஊடாக பெரியமடுவிக்கு பயணித்துக்கொண்டிருந்த போது ஏற்பபட்ட விபத்தினால் ஏற்பட்ட உயிர் இழப்புக்கள் மற்றும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலையில் உயிர் இழந்தவர்களின் குடும்பங்கள் பெரும் கவலையடைந்துள்ள நிலையில் அவர்களுக்கு அல்லாஹவின் அருளும்,மன ஆறுதலும்…

Read More