மனைவியை சுட்ட விவகாரம்: சுழல் துப்பாக்கியும் ஆற்றிலிருந்தே மீட்பு
அத்துருகிரிய, இசுருபுரவில் தன் வீட்டில் வைத்து மனைவியின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ள லெப்டினன்ட் கேணல் பிரதீப் குமார தென்னசிங்கவை இராணுவ சேவையிலிருந்து இடைநீக்கம் செய்ய, இராணுவம் தீர்மானித்துள்ளதாக இராணுவ ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. இராணுவத் தளபதியினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பிலான ஆரம்பக்கட்ட விசாரணைகளை நீதிமன்றத்திலிருந்து பெற்றுக்கொள்ளுமாறு இராணுவத்தளபதி கட்டளையிட்டுள்ளார். அதேபோல, இவ்வாறான சம்பவங்களில் குற்றவாளியாக்கப்படும் இராணுவ அங்கத்தவர்களுக்கு ஆகக்கூடிய ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இராணுவ ஊடகப்பிரிவு அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில்…
