விமல் வீரவன்ச, மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக 5 ஆயிரம் பேரை கூட்டி கூட்டம் வைத்தால் அரசியலில் இருந்து விலகுவேன் – அஸாத்சாலி
விமல் வீரவன்சவுக்கு முடியுமாக இருந்தால் 5 ஆயிரம் பேரை கூட்டி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்து காட்டட்டும். நான் அரசியலில் இருந்து விலகுவேன் என மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி பகிரங்க சவாலை விடுத்துள்ளார். மஹிந்த ராஜபக்சவைப் பிரதமராக்குவது எப்படிப் போனாலும், வீரவன்ச குழுவினர் ஐவரும் சேர்ந்து பிரதேச சபை ஒன்றையாவது வெற்றிகொள்ள முடியாது. நேற்று புதன்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு…
