Headlines

வடக்கு முஸ்லிம்கள் கள்ளத்தோணிகளா? அல்லது ஆப்கானிஸ்தானிலிருந்து வந்தவர்களா? முஸ்லிம் எம் பிக்கள் கேள்வி!

-சுஐப் எம் காசிம் வடமாகாணத்தில் தமது பூர்வீகப் பிரதேசங்களில் குடியேற முயற்சிக்கும் முஸ்லிம்களுக்கெதிராக இனவாதச் சூழலியலாளர்களும் இனவாதிகளும் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு முஸ்லிம் அமைச்சர்கள், எம் பிக்கள், மற்றும் சமூகம் சார்ந்த நிறுவனங்களின் பிரதிநிகள் தமது ஒட்டுமொத்தமான எதிர்ப்பை வெளியிட்டதோடு கண்டனத்தையும் தெரிவித்தனர். வில்பத்துக் காட்டை அழித்து முஸ்லிம்கள் அங்கு சட்ட விரோதமாக குடியேறியுள்ளதாக  இனவாதிகள் மேற்கொண்டு வரும் தீவிரமான, பொய்யான பிரசாரம் தொடர்பிலும், வில்பத்து சரணாலயத்தை விஸ்தரித்து வன ஜீவராசிகள் வலயமாக பிரகடனப்படுத்தப் போவதான ஜனாதிபதியின் அறிவிப்பினால்…

Read More

உடநிதிகம அல்-இம்ரான் பொது விளையாட்டுமைதானத்தின் அபிவிருத்திப்பணிகளுக்கு 10 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு

அநுராதபுரம், கெகிராவ தேர்தல் தொகுதியின் உடநிதிகம அல்-இம்ரான் பொது விளையாட்டு மைதானத்தின் அபிவிருத்திப்பணிகள் அநுராதபுரம் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் இஸ்ஹாக் ரஹுமான் அவர்களின் 10 இலட்சம் ரூபா சொந்த நிதியிலிருந்து ஆரம்பிக்கப்பட்டது.

Read More

ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கம்; அமைச்சர் றிஷாத் சந்திப்பு

ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ,ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்க உறுப்பினர்களுக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், வர்த்தக வாணிபத்துறை அமைச்சருமான அல் ஹாஜ் றிஷாத் பதியுதீன் மற்றும் அகில இலங்கை இலங்கை மக்கள் காங்ரஸ் தவிசாளரும்,கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சருமான எம்.எஸ்.எஸ். அமீர் அலி ஆகியோருக்கிடையில் நேற்று (2017.01.04) இடம்பெற்ற கலந்துரையடலின்போது எடுக்கப்பட்ட புகைப்படம்.

Read More

கடந்த காலங்களில் கொள்ளைக்காரர்களாக இருந்தவர்கள் தற்போது கொள்கை அரசியலைப்பற்றி பேசுவதற்கு யோக்கியதை அற்றவர்கள் – அமீர் அலி

கடந்த காலங்களில் கொலைகாரர்களாகவும் கொள்ளைக்காரர்களாகவும் இருந்தவர்கள் தற்போது கொள்கை அரசியலைப்பற்றி பேசுவதற்கு யோக்கியதை அற்றவர்கள் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். இன்று (4.1.2017) புதன்கிழமை அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே  மேற்கண்டவாறு கூறினார்.. அவர் மேலும் தெரிவிக்கையில் ஓரிரு தினங்களுக்கு முன்னர் மட்டக்களப்பிலுள்ள கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஒருவர் பிரதியமைச்சர் அமீர் அலி ஒரு கொள்கை அரசியல் வாதி அல்ல எனவும் முஸ்லிம் காங்கிரசிலும் அகில இலங்கை மக்கள் காங்கிரசிலும்…

Read More

வில்பத்து விவகாரம் – முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்கும் பௌத்த பிக்கு (வீடியோ)

வில்பத்து விவகாரம் – சிங்கள அரசியல் பிரதிநிதியும் பௌத்த பிக்குவும் முஸ்லிம்களுக்காக குரல் எழுப்பியுள்ளனர் (video – 01) (video – 02)  

Read More

முஸ்லிம்கள் வில்பத்தை அழித்துக் குடியேறவில்லை, பூர்வீகக் காணிகளிலேயே வசிக்கிறார்கள் – அமைச்சர் ராஜித திட்டவட்டம்

வில்பத்துவில் முஸ்லிம் மக்களோ, அமைச்சர் ரிஷாட் பதியுதீனோ எந்தவிதமான காடழிப்புக்களிலும் ஈடுபடவில்லையெனவும் வில்பத்து சரணாலயத்தை அவர்கள் ஆக்கிரமித்து வீடுகளை அமைத்துள்ளதாகவும் எழுந்துள்ள குற்றச்சாட்டு முற்றிலும் பிழையானதென சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு இன்று (04)  காலை கொழும்பில் இடம்பெற்ற போது வில்பத்து தொடர்பில் ஊடகவியலாளர் ஓருவர் கேட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் ராஜித  இந்த கருத்துக்களை முன்வைத்தார். இந்த விடயம் தொடர்பில் அமைச்சர் ராஜித மேலும்…

Read More

ஜனாதிபதியின் ஈரானுக்கான விஜயத்தின் பின்னர் இலங்கை வர்த்தகர்களுக்கு புதிய வாய்ப்புக்கள் – றிஷாத் நம்பிக்கை

ஜனாதிபதி தலைமையிலான உயர்மட்ட தூதுக்குழு ஒன்று இம்மாத இறுதியில் ஈரானுக்கு விஜயம் செய்யவுள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இந்த விஜயத்தின் மூலம் இலங்கை வர்த்தகர்களுக்கு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகள் ஏற்படுமெனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார். கைத்தொழில் வர்த்தக அமைச்சின் அதிகாரிகள், ஏற்றுமதி அபிவிருத்தி சபை. முதலீட்டு ஊக்குவிப்பு சபை, வர்த்தகத் திணைக்களம், தேயிலை சபை, சிலோன் வர்த்தக சம்மேளனம், தேசிய வர்த்தக சம்மேளனம் மற்றும் வெளிவிவகார அமைச்சின் பிரதிநிதிகள் ஆகியோரை அமைச்சின் அலுவலகத்தில் சந்தித்த…

Read More

முஸ்லிம்களின் வயிற்றில் பாலைவார்த்துவிட்டு புளியைக் கரைக்கும் நல்லாட்சி!

வில்பத்து சரணாலயம் விஸ்தரிக்கப்பட்டு வனஜீவராசிகள் வலயமாக அந்தப் பிரதேசம் பிரகடனப்படுத்தப்படுவதான அறிவிப்பு தொடர்பில் முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்பட்டுள்ள ஆபத்துக் குறித்து கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அமைச்சர்கள், அரசாங்க எம்பிக்கள், ஜம்இய்யதுல் உலமா, சிவில் சமூகம், மற்றும் பாதிக்கப்பட்டோர் வெளியிட்ட கருத்துக்களின் தொகுப்பு. அமைச்சர் ஹலீம் முஸ்லிம் சமூகம் இன்று அமைதியிழந்கு தவிக்கின்றது. நெருக்கடியான, மிகவும் மோசமான சோதனை மிகுந்த காலகட்டத்திலே நாங்கள் இருக்கின்றோம். நமது சமூகத்திற்கெதிரான பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. தினமும் வௌ;வேறு வடிவங்களில்…

Read More

வட முஸ்லிம்களின் பிரச்சினை சம்பந்தமாக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம்

வடபுல முஸ்லிம்கள் எதிர் நோக்கி இருக்கும் வில்பத்து வன ஜீவராசிகள் பிரகடனம் சம்பந்தமான பிரச்சினைகளுக்கு தீர்வு காண முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து ஜனாதிபதியை மற்றும் பிரதமரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்த தீர்மானம் மேற் கொண்ட கூட்டம் அண்மையில் இடம்பெற்றபோது.

Read More

மீள்குடியேற ஆசைப்படும் எமது உறவுகளுக்காக ஒன்றுபடுவோமா???

அன்பான காருண்யம் வாய்ந்த உறவுகளே! உங்களால் முடிந்த சின்ன உதவிதான் இந்த வீடியோ காணொளியை பெருபான்மைச் சகோதரர்கள் பார்வையிடும் வகையில் கொண்டுபோய் சேர்ப்பது… அப்பாவி அகதிகளுக்காக இந்த உதவியைச் செய்வீர்களா??? மீள்குடியேற ஆசைப்படும் எமது உறவுகளுக்காக ஒன்றுபடுவோமா??? இந்த வீடியோவை share செய்வதால் நாம் ஒன்றும் இழக்கப்போவதில்லை.

Read More

முஸ்லிம் சமூகம் சட்டிக்குள் இருந்து அடுப்புக்குள்ளே விழுந்து விட்டதா?

வில்பத்து சரணாலயத்தை விரிவு படுத்தி வன ஜீவராசிகள் வலயமாக பிரகடனப்படுத்தும் ஜனாதிபதியின் தீர்மானத்தை கைவிட வேண்டுமெனக் கோரி அமைச்சர் ரிஷாட்டின் ஏற்பாட்டில் சிரேஷ்ட அமைச்சர் பௌசியின் தலைமையில் முஸ்லிம் எம் பிக்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், முஸ்லிம் தேசிய கவுன்ஸில், தேசிய ஷூரா சபை ஆகியோர் கலந்து கொண்ட கூட்டத்தில் முக்கிய மூன்று தீர்மானங்கள் ஏகமனதாக எடுக்கப்பட்டன. முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கையெழுத்திட்டு ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் மகஜர் ஒன்றை கையளித்தல் 2012 ஒக்டோபர் 10 ஆம்…

Read More