அகில உலக பலஸ்தீன அல் குத்ஸ் மாநாட்டில்; பிரதி அமைச்சர் அமீர் அலி
கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தவிசாளர் அமீர் அலி துருக்கியில் இடம்பெறும் அகில உலக பலஸ்தீன அல் குத்ஸ் மாநாட்டில் கலந்துகொண்டார்.
கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தவிசாளர் அமீர் அலி துருக்கியில் இடம்பெறும் அகில உலக பலஸ்தீன அல் குத்ஸ் மாநாட்டில் கலந்துகொண்டார்.
தம்புள்ள பள்ளிவாசலுக்கு அருகில் சில விஷமிகள் பட்டாசுகளை வெடிக்கச் செய்த சம்பவத்தை ஊடக மேற்பார்வை எம்.பி. ஏ.எச்.எம். அஸ்வர் வன்மையாக கண்டித்துள்ளார். ஊவா மாகாண சபைத் தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடித்துள்ள நிலையில் அங்கு வாழும் முஸ்லிம்களின் கவனத்தை திசை திருப்ப வேண்டுமென்னும் ஒரே நோக்கிற்காக இது விஷமிகளால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட செயல் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லையெனவும் அவர் உறுதியாக கூறினார். புலனாய்வுத் துறையினர் மேற்படி கைக்குண்டு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையிலும் விஷமத்தனத்திற்கு…
மன்னார் மாவட்டத்தின் முருங்கன் மற்றும் சிலாவத்துறை பிரதேச வைத்தியசாலைகளுக்கு வியாழக்கிழமை (16) விஜயமொன்றை மேற்கொண்டிருந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், வைத்தியசாலைகளுக்கு தேவையான சில அத்தியாவசியப் பொருட்களையும் கையளித்தார். இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர் முத்து முஹம்மட், கட்சியின் உயர்பீட உறுப்பினர் Dr.மிக்றா மற்றும் Dr. ஒஸ்மன், Dr. கியாஸ், கட்சியின் முக்கியஸ்தர்களானா பைறூஸ், சாஹிர், ஞானராஜ், சந்திரிக்கா, ராபி மௌலவி, ஜௌசி, ஹலீம் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
பல்கலைக்கழகத்திற்குள் காணப்படும் பல்வேறு பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கொழும்பில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை நாளை நடாத்தவுள்ளனர். பல்கலைக்கழகத்தினுள் காணப்படும் பல குறைப்பாடுகள் இதுவரை நிவர்த்தி செய்யப்படாமை,கல்வி தனியார் மயப்படுத்தல் மற்றும் பல்கலைக்கழக்திற்குள் பணம் வசூலித்தலை தடுத்தல் போன்ற பிரச்சினைகளை மையப்படுத்தி இந்தப் பேரணி நடாத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பிரச்சினைகள் தொடர்பாக அரசாங்கம் இதுவரை தீர்வினை பெற்றுக் கொடுக்காததாலேயே அனைத்து பல்கலைக்கழக மாணவர்களையும் ஒன்று திரட்டி இந்த பேரணியை ஏற்பாடு செய்திருப்பதாக அனைத்து பல்கலைக்கழக…
ASHRAFF SAMAD புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் இரு நாட்கள் மாவட்டச் செயலாளர்களது மீளாய்வுச் செயலமர்வு ஒன்றை உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு நேற்று கொழும்பில் ஆரம்;பதித்து வைக்கபட்டது. இச் செயலமர்வு நேற்றும் இன்றும் இரு நாட்கள் நாட்டில் உள்ள சகல மாவட்டச் செயலாளர்களும் கலந்து கொள்கின்றனர். இன்று இச் செயல்மர்வினை உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜேசப் மைக்கல் பெரேரா தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வின் போது ஒவ்வொரு மாவட்டத்திலும் மேற்கொள்ளப்படுகின்ற பல்வேறு அபிவிருத்தித்திட்டங்கள் மற்றும்…
தாம் ஜனாதிபதியாக பதவியேற்றவுடன் சில மணித்தியாலங்களில் முன்னாள் ராணுவத் தளபதி சரத்பொன்சேகாவின் அகற்றப்பட்ட அனைத்து தரங்களையும், வரப்பிரசாதங்களை மீளளிக்கவுள்ளதாக பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளருக்கு ஆதரவளிப்பதற்கு ஜனநாயக கட்சி எடுத்த தீர்மானத்தை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் நிகழ்வு இன்று கொழும்பில் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றிய பொது வேட்பாளர், 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் பின்னர் சரத் பொன்சேகாவுக்கு முகம்கொடுக்க நேர்ந்த சம்பவங்கள் தொடர்பாக அரசாங்க அமைச்சர் என்ற…
யாழ்ப்பாணத்தில் உள்ள வங்கியொன்றில் 2 இலட்சம் ரூபா பெறுமதியான போலி நாணயத்தாள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் அது தொடர்பான விசாரனைகளை மேற்கொண்டு வருவதாக காங்கேசன்துறைக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எம்.ஜவ்பர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, இன்றைய தினம் காலை இளவாளை பகுதியைச் சேர்ந்த குடும்பம் ஒன்று திருமண செலவுக்காக மானிப்பாயில் உள்ள தனியார் வங்கியொன்றுக்கு சென்று பதினேழு பவுண் நிறையுடைய ஆபரணங்களை அடகு வைத்துள்ளனர். இவ்வாறு அடகு வைத்து அவர்கள் வங்கிகளிடமிருந்து…
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமிக்கு இலங்கை வர்த்தக சம்மேளனம் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது. நாட்டின் பணவியல் ஆணையம் புதிய ஆளுநரின் நியமனத்தின் பின் பொதுநம்பிக்கையை மீட்க உதவுவதுடன் அவரது 6 ஆண்டு சேவைக்காலத்தில் இலங்கை வர்த்தக சம்மேளனம் அவரது முழு ஆதரவையும் எதிர்பார்த்துள்ளது. இதேவேளை, நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப உறுதிப்பாடு, சுபீட்சம் நோக்கிய புதிய மத்திய வங்கியின் ஆளுநரின் முயற்சிக்கு அனைத்து பங்குதாரர்களும் அதரவு வழங்க வேண்டுமென இலங்கை வர்த்தக சம்மேளனம்…
-ஊடகப்பிரிவு- குருநாகல் மாவட்டத்தின் குருநாகல் மாநகர சபை, குளியாப்பிட்டிய பிரதேச சபை, ரிதீகம பிரதேச சபை, நாரம்மல பிரதேச சபை, பொல்கஹவெல பிரதேச சபை ஆகிய ஐந்து உள்ளூராட்சி சபைகளில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனித்துக் களமிறங்குவதற்கான கட்டுப்பணத்தை இன்று மாலை (18) செலுத்தியது. வடமேல் மாகாணசபை முன்னாள் உறுப்பினரும், கட்சியின் முக்கியஸ்தருமான எம்.என்.நசீர் தலைமையில், மாவட்ட செயலகத்தில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது. இதன்போது, குருநாகல் மாநகர சபை தலைமை வேட்பாளர் அசார்தீன் மொய்னுதீன், குளியாப்பிட்டிய பிரதேச…
பீகொக் மாளிகையின் நீச்சல் தடாகத்தில் நிரப்பப்பட்டுள்ள மணல் இன்று அகற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளின் மேற்பார்வையில் இத் தடாகத்தில் உள்ள மணல் அகற்றப்படவுள்ளது. பீகொக் மாளிகையின் நீச்சல் தடாகத்தில் முன்னாள் ஜனாதிபதியின் தங்கம் உள்ளதாக தகவல்கள் வெளிவரும் நிலையில் இந்த மணல் அகற்றப்படவுள்ளது. இது குறித்து பிரபல வர்த்தகரும் தொழிலதிபருமான ஏ.எஸ்.பி. லியனகே பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்தார். இந்த தடாகத்தில் தங்கம் உள்ளதா என்பது குறித்து எதிர்வரும் முதலாம்…
பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்கக்கோன் யாழ்ப்பாணம் சென்றுள்ளார். யாழ்ப்பாணத்தின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் ஆராய நேற்று இரவு இவர் யாழ் புறப்பட்டுச் சென்றுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். இதேவேளை யாழில் நேற்று ஏற்பட்ட பதற்ற நிலை தொடர்பில் இதுவரை 130 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். புங்குடுத்தீவில் பாடசாலை மாணவி ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், கைதான சந்தேகநபர்களை யாழ் நீதிமன்றத்துக்கு கொண்டு வந்த வேளை…
வில்பத்து சரணாலயத்துக்கு சொந்தமான பகுதியை விரிவுபடுத்தி அதனை வனஜீவராசிகள் வலயமாக வர்த்தமானியில் அறிவிக்குமாறு ஜனாதிபதி விடுத்திருக்கும் அறிவிப்பானது 26 வருடங்களுக்குப் பின்னர் மீளக்குடியேறியுள்ள முசலிப் பிரதேச முஸ்லிம் அகதிகளை மீண்டுமொரு முறை அகதியாக்கும் முயற்சியெனவும் ஜனாதிபதி தனது அறிவிப்பை ரத்துச்செய்ய வேண்டுமெனவும் வட மாகாணசபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவசரமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். முசலிப் பிரதேச முஸ்லிம்களை அந்தப் பிரதேசத்திலிருந்து வெளியேற்றுவதற்காக இனவாதிகள்; தொடர்ந்து மேற்கொண்டு வரும் சதி முயற்சிகளின் இன்னுமொரு அங்கமாகவே, அவர்கள் அந்தப் பிரதேசத்தின்…