Headlines

நவவி எம் பி யின் முயற்சியால் புத்தளம் மாவட்டத்தில் அபிவிருத்தி பணிகள்.

நமது பாராளுமன்ற உறுப்பினரின் முயற்சியால் மாண்புமிகு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களின் கீழான “தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார மேம்பாட்டு ” அமைச்சின் ஊடாக 15 திட்டங்களுக்கு இரண்டு கோடி (200,000,00/=) ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது . இதன் பணிகள் உடனடியாக இம்மாதமே ஆரம்பம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. திட்டமும் ஒதுக்கீடுகளும் கீழே – 01). உடப்பு ஆண்டிமுனை பாதை – 01 மில்லியன் 02). விருதோடை அல்முபாரக் பாதை – 1.5 மில்லியன் 03). விருதோடை –…

Read More

தம்புள்ளை பள்ளிவாசலுக்கு, புதிய இடத்தில் காணி

– பரீல் – நான்கு வருட கால­மாக பெரும் சர்ச்­சைக்­குள்­ளா­கி­யுள்ள தம்­புள்ளை ஹைரியா ஜும்ஆ பள்­ளி­வா­சலை அவ்­வி­டத்­தி­லி­ருந்து அகற்றிக் கொள்­வ­தற்கு மாற்­றீ­டாக தம்­புள்­ளையில் அடுத்த மாதம் புதிய காணி வழங்­கப்­ப­ட­வுள்­ளது. நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை தம்­புள்ளை நக­ரத்­துக்கு அண்­மையில் சுமார் 150 மீற்றர் தூரத்தில் தம்­புள்ளை பள்­ளி­வா­ச­லுக்­கான காணி­யொன்­றினை இனங் கண்­டுள்­ள­தா­கவும், எதிர்­வரும் மே மாதத்தில் இதற்­கான ஏற்­பா­டுகள் பூர்த்­தி­யா­கு­மெ­னவும் நகர அபி­வி­ருத்தி அதி­கார சபையின் தலைவர் ரஞ்சித் பெர்­னாண்டோ தெரி­வித்தார். தம்­புள்­ளையில் பள்­ளி­வா­சலை தற்­போது…

Read More

மல்வானை விஜயம் வீடியோ

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் நேற்று (23) இரவு மல்வானை பிரதேசத்திற்கு விஜயம் செய்திருந்தார். மல்வானையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட காந்தியவலவ, ஆட்டாமாவத்த, ரக்‌ஷபான போன்ற பகுதிகளுக்கு சென்று அங்கு பாதிக்கப்பட்ட  மக்களை சந்தித்து அவர்களின் பிரச்சினைகளையும் அமைச்சர்  கேட்டறிந்தார். இந்த சத்திப்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் சுபைர்தீன் ஹாஜி அவர்களும் அமைச்சர் றிஷாதுடன்  விஜயம் செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது. Produce_0

Read More

கம்பஹா மாவட்டமும் முஸ்லிம் பிரதிநிதித்துவமும்

இன்று தேர்தல்களம் சூடு பிடித்துள்ள நிலையில் அனேகர் தாம் யாருக்கு வாக்களிப்பது என்பதை முடிவெடுத்திருப்பர். இம்முடிவுகளின் தொகுப்பே இனி வரும் ஐந்தாண்டுகளுக்கு எம்மை ஆளப்போகிறது. இவை சாதாரண முடிவுகளல்ல எம்மை ஆளப்போகும் எமது தலையெழுத்துக்களின் பிரதிகள். கம்பஹாவில் A.H.M நவ்ஷாத் மற்றும் சிலர் போட்டியிடுகின்றனர். எமது வாக்கு ஒரு அந்நியருக்குப் போவதால் தனிப்பட்ட இலாபங்கள் தவிர்ந்து சமூகத்திற்கான பிரயோசனங்கள் மிகக் குறைவே. கம்பஹாவைப் பொறுத்தவரை ஒரு முஸ்லீம்பாராளுமன்றபிரதிநிதித்துவம் இன்றைய சூழ்நிலையில் அசாத்தியமே. இருப்பினும் A.H.M நவ்ஷாதிற்கு இடும்…

Read More

ஊடக சுதந்திரத்தை பாதுகாப்பேன்: மைத்திரிபால சிறிசேன

கடந்த காலங்களில் ஊடகவியலாளர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட துன்புறுத்தல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவேன் என்று பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சுதந்திர ஊடக இயக்கத்துக்கும், மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போது, ஊடக சுதந்திரம், தடை நீக்கம், மற்றும் சமூக பொறுப்புக்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் அடங்கிய கோவை ஒன்றை சுதந்திர ஊடக இயக்கத்தின் ஏற்பாட்டாளர் சுனில் ஜயசேகர, மைத்திரிபால…

Read More

கல்குடாவில் மீனவ தங்குமிடம் அமைத்து தருவதாக அமீர் அலியிடம்  அமைச்சர் மஹிந்த அமரவீர உறுதி

கடற்தொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்று முன்தினம் 28.01.2017 வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்திற்கு வருகைதந்திருந்தார். இந்நிகழ்வில் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலியும் கலந்து கொண்டார். கடற்தொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்களிடம் கல்குடா பிரதேசத்தில் மீன்பிடி துறையை விருத்தி செய்யும் வகையில் கல்குடாவில் மீனவ தங்குமிடம் அமைத்து தருமாறு பிரதி அமீர் அலியிடம் மக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை பிரதி அமைச்சர் மஹிந்த அமரவீர விடம் கூறியதற்கு அமைவாக…

Read More

திருகோணமலையில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பு!

கடந்த பாராளுமன்றத் தேர்தலில்,  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளர் வைத்தியர்.ஹில்மி மஹ்ரூபுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு, சனிக்கிழமை (21) கிண்ணியாவில், அவரது இல்லத்தில் இடம்பெற்றது.   இந்நிகழ்வில், மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் உட்பட கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள் எனப் பலரும் பங்கேற்றிருந்தனர்.

Read More

ஞானசார தேரரின் ரகசிய குர்ஆன் வகுப்பு

புனித அல்குர்ஆனை களங்கப்படுத்திய குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருப்பவர் பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர். இவர்மீது இது தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கும் பதியப்பட்டு, விசாரணைகள் நடைபெற்று வருவதும் பலரும் அறிந்ததே. இந்நிலையில், அல்குர்ஆன் விளக்கமும் அது பற்றிய அறிவும் போதாத நிலையில், அல்குர்ஆனை அவமதித்த வழக்கு விசாரணைகளுக்கு முகம் கொடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் ஞானசார தேரர், தற்போது அல்குர்ஆன் விளக்க வகுப்புக்களில்  ரகசியமாக குர் ஆணை பற்றி தெரிந்து வருவது  குறித்து தகவல்கள் கசிந்துள்ளன. தனக்கு…

Read More

இலங்கையின் முதல் அறபுக் கல்லூரியின், 130 வருட பூர்த்தி விழாவும் பட்டமளிப்பு விழாவும்

இலங்கையின் முதல் அறபுக் கல்லூரியான வெலிகம பாரீ அறபுக் கல்லூரியின் 130வது வருட பூர்த்தி விழாவும் 30வது ‘அல்-ஆலிம்’ பட்டமளிப்பு விழாவும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு கல்லூரியில் நடைபெறவுள்ளன. கல்லூரி அதிபர் மெளலானா மெளலவி ஏ.ஆர். அப்துர் ரஹ்மான் ஹாபிழ் (மழாஹிரி) தலைமையில் இடம்பெறும் இவ்விழாவில் யூ.கே.யைச் சேர்ந்த ஷைகுல் ஹதீஸ் ஹழ்ரத் மெளலானா முகம்மது ஸலீம் தவ்ராத் பிரதம அதிதியாகக் கலந்து கொள்கிறார். விசேட பேச்சாளர்களாக இப்னு உமர் ஹதீஸ் உயர்…

Read More

‘மஹிந்தவை தோற்கடித்தது நானே” : பொன்சேகா

– ஜவ்பர்கான் – நாட்டில் மக்கள் எதிர்பார்த்த நல்லாட்சி இன்னும் மலரவில்லை. அரசாங்கம் மக்கள் எதிர்பார்த்த திசையில் செல்ல வேண்டுமானால் மஹிந்தவுடன் ஒட்டியிருந்தவர்கள் தோற்கடிக்கப்பட வேண்டும். மேலும் மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடித்த பெருமை என்னையே சாரும் என  ஜனாநாக கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்தார். மட்டக்களப்பு கூட்டுறவு மண்டபத்தில் நடைபெற்ற ஜனநாயக கட்சி மாவட்ட பிரதிநிதிகளுடனான சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவத்தார். எதிர்வரும் உள்ளுராட்சி சபை தேர்தலில் ஜனாநாயக கட்சி…

Read More

அமைச்சர்களுக்கு தீர்வையற்ற வாகன இறக்குமதி

பாராளுமன்ற உறுப்பினர்கள் 225 பேருக்கும் பயன்படுத்துவதற்காக விசேட தீர்வையற்ற வாகனங்கள் இன்னும் மூன்று அல்லது நான்கு மாதங்களுக்குள் இறக்குமதி செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்துறை பிரதியமைச்சர் நிமல் லன்சா மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள ஆகியோர் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர். தான் 85 இலட்சம் ரூபாய் பெறுமதியான டொயோட்டா வி8 வாகனம் ஒன்றை கொள்வனவு செய்துள்ளதாக நிமல் தெரிவித்தார். இதேவேளை, தன்னுடைய சொந்த பணத்தில் டொயோட்டா வாகனம் ஒன்றை கொள்வனவு செய்துள்ளதாக தலதா அத்துகோரள  தெரிவித்தார். இவை,…

Read More

மக்கள் காங்ரஸின் சர்வதேச விவகார பணிப்பாளராகவும், கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளராகவும் அன்வர் நியமனம்

அகில இலங்கை மக்கள் காங்ரஸின் சர்வதேச விவகார பணிப்பாளராகவும், கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளராகவும் அன்வர் எம். முஸ்தபா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் கட்சியின் தேசிய தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீனினால் அண்மையில் வழங்கப்பட்டது. சிம்ஸ் கெம்பஸின் பணிப்பாளர் நாயகமான அன்வர் எம் முஸ்தபா, தென் கிழக்கு பல்கலைக்கழக பேரவையின் முன்னாள் உறுப்பினராவார்.

Read More