பஸ் கட்டணம் உயர்த்துவது குறித்து பேச்சு
தனியார் மருத்துவம், கல்வி மற்றும் தொலைபேசிக்கட்டணம் ஆகியவற்றுக்கான வற் வரி மே மாதம் 3ஆம் திகதி முதல் அதிகரிக்கப்படவுள்ளது. எனவே தனியார் பஸ் போக்குவரத்து கட்டணங்களையும் அதிகரிக்க நேரிடுமா என்பது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தனியார் போக்குவரத்து சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்தார். வற் வரி அதிகரிக்கப்படுமாயின் தனியார் பஸ் போக்குவரத்து கட்டணத்தில் அதிகரிப்பு ஏற்படுமா என்ற கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கருத்து கூறினார்.
