Headlines

மைத்திரிக்கு ஆதரவு தெரிவிக்கும் சமல்!

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை வெற்றியடையச் செய்ய எனது முழு ஆதரவினையும் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவுக்கு வழங்குவேன் என முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். மஹாவலி கேந்திர நிலையத்தில் ஜனாதிபதியின் தலைமையில் நேற்று (26) இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நிர்வாகக்குழு கூட்டத்திலேயே இதனை தெரிவித்துள்ளார். அத்துடன் இந்தக் கட்சிக்குள் நிலவும் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக குழு ஒன்றை நியமிக்குமாறும் சமல் ராஜபக்ஸ ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சிக்குள் நிலவும் உட்பூசல்களைத் தடுக்க ஜனாதிபதியின் தலையீட்டின் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்….

Read More

2017 ஆம் ஆண்டிக்கான வரவு செலவுத்திட்டம்

2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் 10ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். குறித்த திட்டத்தின் மீதான விவாதம் டிசெம்பர் 10 ஆம் திகதி வரை நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

Read More

அஷ்ரப் என்ற ‘வயற்காரன்’

 – முகம்மது தம்பி மரைக்கார் – அஷ்ரப்பை நினைவுகூருதல் என்பது சிலருக்கு, ஒரு சடங்காக மாறி விட்டது போலவே தெரிகிறது. விருப்பமில்லா விட்டாலும், அவரை நினைத்துப் பார்க்க வேண்டிய கட்டாயத்துக்குள் முஸ்லிம் அரசியல்வாதிகள் தள்ளப்பட்டுள்ளார்கள். அஷ்ரப் என்கிற ‘லேபிள்’ இல்லாமல், தங்கள் அரசியற் பண்டங்களை, முஸ்லிம்களிடத்தில் விற்க முடியாது என்பதை, பெரும்பாலும் முஸ்லிம் அரசியல்வாதிகள், மிக நன்கு அறிந்து வைத்துள்ளார்கள்.முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப்பின் 18ஆவது நினைவு நாள் நேற்று முன்தினமாகும். 2000ஆம் ஆண்டு…

Read More

இளைஞர் பாரளுமன்றத்தின் 10ஆவது அமர்வு 30 மற்றும் 31ம் திகதிகளில்…

பழுலுல்லாஹ் பர்ஹான் இலங்கை இளைஞர் 2ஆவது பாரளுமன்றத்தின் 10ஆவது அமர்வு எதிர்வரும் 30 மற்றும் 31ம் திகதிகளில் மஹரகம இளைஞர் நிலையத்தில், இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப் பெரும தலைமையில் இடம்பெறும் என தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் சட்டத்தரணி லலித் பியூம் பெரேரா தெரிவித்தார். இப்பாராளுமன்ற முதல் நாள் அமர்வுக்கு பிரதம அதிதியாக இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்த்தானிகர் திருமதி ரெபின் மூடி கலந்து கொண்டு விசேட உரையாற்றவுள்ளார். முதல்…

Read More

நாட்டில் மாவட்ட செயலாளராக ஒரு முஸ்லிம் கூட இல்லை; ஹுனைஸ் பாரூக் குற்றச்சாட்டு

நாட்டில், மாவட்ட செயலாளராக ஒரு முஸ்லிம் கூட இல்லை எனவும் ஒரு முஸ்லிம் மாவட்ட செயலாளரையாவது நியமிக்குமாறும் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் பாராளுமன்றத்தில் நேற்று கருத்து வெளியிட்டார். இதன்போது அவரது கருத்துக்களுக்கு அமைச்சர் டபிள்யூ.டி.ஜே. செனவிரத்ன பதிலளித்தார். எமது நாட்டில் 10% முஸ்லிம்கள் உள்ளனர். எனவே, இந்த வகையில் கூடுதலாக முஸ்லிம் மக்களிடம் என்றும் எதிர்பார்க்கக்கூடிய ஒரு விடயமாக இருக்கின்றது, இந்த நாட்டில் 25 மாவட்டங்கள் காணப்படுகின்றன. ஆனால், இந்த 25 மாவட்டங்களில் ஒரு முஸ்லிம் மாவட்ட…

Read More

நிர்க்கதியான இந்திய மீனவர்களை மீட்ட இலங்கை கடற்படையினர்

நெடுந்தீவு கடற்பகுதியில் வைத்து படகில் எற்பட்ட இலத்திரனியல் கோளாறு காரணமாக நிர்க்கதியான 3 இந்திய மீனவர்களை மீட்டு இந்திய கடலோர காவற்படையினரிடம் இலங்கை கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர். தமிழகத்தின் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்களே இவ்வாறு இந்திய கடலோர காவற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இலத்திரனியல் கோளாறு காரணமாக நிர்க்கதியான குறித்த மீனவர்களை மீட்டதுடன், குறித்த தகவலை இந்திய கடலோர காவற்படையினரிடம் அறிவித்து, குறித்த மீனவர்களையும் அவர்களுடைய படகையும் சர்வதேச கடல் எல்லையில் வைத்து ஒப்படைத்தள்ளனர்.

Read More

பொதுபல சேனாவிற்கும் ஐ.எஸ்.களுக்கும் தொடர்பு கிடையாது: புலனாய்வுப் பிரிவு

பொதுபல சேனா அமைப்பிற்கும் ஐ.எஸ் அமைப்பிற்கும் இடையில் எவ்வித தொடர்பும் கிடையாது என புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது. ஐ.எஸ் அமைப்பிற்கும் பொதுபல சேனாவிற்கும் தொடர்பு இருப்பதாக உலமா அமைப்பு அண்மையில் குற்றம் சுமத்தியிருந்தது. எனினும், இந்தக் குற்றச்சாட்டு பொய்யானது என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக புலனாய்வுப் பிரிவு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Read More

கஹட்டகஸ்திகிலிய பாடசாலை சுற்றுமதில் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா!

பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானின் 100 நாளில் 110 விசேட வேலைத்திட்டம் மற்றும் 100 நாளில் 115 அதிரடி வேலைத்திட்டம் என இந்த ஆண்டுக்குள் நிறைவு செய்வதற்காய் மிக வேகமாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் 225 வேலைத்திட்டங்களில் ஒன்றாக, கஹட்டகஸ்திகிலிய பிரதேச செயலகத்துக்குட்பட்ட, கஹட்டகஸ்திகிலிய முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு சுற்றுமதில் அமைப்பதற்கான அடிக்கல் 2018.10.23 பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானினால் நடப்பட்டது. (ன) 

Read More

அறிஞர் PJ யின் இலங்கை, வருகையை முன்னிட்டு…!

-A. அஹ்மத் ஜம்ஷாத் (அல் அஸ்ஹரி) Turkey- சமகால அறிஞர்களில் நான் பலதரப்பட்ட கொள்கை கோட்பாடுகளை கொண்ட அறிஞர்களை வாசித்துள்ளேன். அவர்களின் சிந்தனை செல்நெறிகளில் காணப்பட்ட சமூக அக்கறைகளையும் தியாக உணர்வுகளையும் கண்ட பின் அவர்களில் உள்ள முரண்பட்ட நிலைகளை மாத்திரம் வைத்து அவர்களை அனுக என்னால் முடியவில்லை. நான் அதிகம் முரண்படும் உஸ்தாத் மௌதூதி,சிந்தனை சிகரம் அஸ்ஷைக் ரஷீத் ரிலா,முஹம்மத் அல் கஸ்ஸாலி,கலாநிதி முஸ்தபா மஹ்மூத் போன்றவர்களை இஸ்லாமிய சமூக எழுச்சிக்கு சேவையாற்றியவர்கள் என்றே கருதுகிறேன்….

Read More

வர்த்­தகர் சியாம் கொலை வழக்கின் தீர்ப்பு நவம்பர் 27ம் திகதி

பம்­ப­லப்­பிட்டி கோடீஸ்­வர வர்த்­தகர் மொஹமட் சியாம் கொலை வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் நவம்பர் 27ம் திகதி அறிவிக்கப்படும் என இன்று கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது. பிரபல வர்த்தகர் மொஹமட் சியாம் கொலை வழக்கு தொடர்பில், முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. முஹமட் சியாமை படுகொலை செய்தல், கொலை செய்ய சூழ்ச்சித் திட்டம் தீட்டியமை உள்ளிட்ட பத்து குற்றச்சாட்டுக்கள் இவர்கள் மீது…

Read More

ஜனாதிபதி அடுத்தவாரம் சீனா விஜயம் ஆசிய வருடாந்த மாநாட்டில் பங்கேற்பு

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நான்கு நாள் உத்­தி­யோ­க­பூர்வ அரச விஜயம் ஒன்றை மேற்­கொண்டு அடுத்­த­வாரம் சீனா­வுக்கு பய­ண­மா­கின்றார். சீன ஜனா­தி­ப­தியின் அழைப்­பை­யேற்று எதிர்­வரும் 25 ஆம் திகதி சீனா செல்­ல­வுள்ள ஜனா­தி­பதி 28 ஆம் திகதி வரை சீனாவில் தங்­கி­யி­ருப்­ப­துடன் சீன ஜனா­தி­பதி, பிர­தமர், வெளி­வி­வ­கார அமைச்சர் உள்­ளிட்ட பல்­வேறு தரப்­பி­ன­ரையும் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்ளார். மேலும் சீனாவில் நடை­பெறும் ஆசிய வரு­டாந்த மாநாட்­டிலும் ஜனா­தி­பதி சிறி­சேன மற்றும் சீன ஜனா­தி­பதி ஷி. ஜின்பின் உள்­ளிட்ட பல நாடு­களின் தலை­வர்கள்…

Read More

மக்களுடன் இணைந்து வழக்கு தாக்கல் செய்ய முடிவு

தமக்குரிய காணிகளை ஜி. பி. எஸ். (GPS) தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி வனப் பிரதேசமாக பிரகடனப்படுத்த 2012 ல் வெளியிடப்பட்டுள்ள வர்த்த மானிக்கு எதிராக மரிச்சுக்கட்டி, பாலக்குழி, கரடிக்குளி மற்றும் முள்ளிபுரம் ஆகிய மக்கள் நீதிமன்றம் செல்லவிருப்பதாக கைத்தொழில் அபிவிருத்தி மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாத் பதியுதீன் நேற்றுத் தெரிவித்தார். ஏற்றுமதி அபிவிருத்தி சபையில் நேற்று இடம்பெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டின்போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பாக அமைச்சர் றிஷாத் பதியுதீன் தொடர்ந்தும் குறிப்பிடுகையில் வில்பத்து விளாந்திபுரம் இந்நாட்டு…

Read More