Headlines

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் நிதி ஒதுக்கீட்டில் கொங்றீட்ட இடப்பட்ட அமீனிய்யா அரபு கல்லூரியின் உட்பாதை திறப்பு விழா

குருநாகல் மாவட்டம் நிகவெரட்டிய தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள அமீனிய்யா அரபு கல்லூரி அதிபரின் வேண்டுகோளுக்கிணங்க கல்லூரியின் உட்பாதை கொங்ரீட் இட்டு செப்பனிடும் வேலைகள் பூர் தி அடைந்துள்ளது இந்த பாதையை முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் சதொச பிரதி தலைவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் குருநாகல் மாவட்ட பிரதான அமைப்பாளருமான என்.எம்.நஸீர் திறந்து வைத்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசியத் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அவர்களின் நிதியொதுக்கீட்டில் இடம்பெற்ற இந் நிகழ்வில் குளியாப்பிடிய…

Read More

தென்னாபிரிக்க நாட்டவர் கைது

தென்னாபிரிக்க நாட்டை சேர்ந்த ஒருவர் தங்காலை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது. காலாவதியான கடவு சீட்டுடன் தங்காலையில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த போதே 37 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் தங்காலை மஜிஸ்திரேட் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Read More

மக்கள் காங்கிரஸுக்கும் மருதூர் அன்சாருக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்துகொண்ட மருதூர் அன்சாருக்கும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கும் எந்தவொரு தொடர்பும் கிடையாதெனவும், அவர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்புரிமை கொண்டவரல்ல, அம்பாறை மாவட்டக் கொள்கைபரப்புச் செயலாளர் என்ற பதவி அவருக்கு எச்சந்தர்பத்திலும் வழங்கப்படவில்ல எனவும் அக்கட்சியின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது . அகில இலங்கை மக்கள் காங்கிஸில் நாடளாவிய ரீதியில் கட்சி அமைப்பாளர்களை நியமிக்கும் அதிகாரம், அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பிக்கு மாத்திரமே உரித்துடையது எனவும்,…

Read More

காரமுனை கிராமத்திற்கு செல்லும் பாதையில் அவதிப்படும் மக்கள்

– ஹைதர் அலி – மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள காரமுனை கிராமத்திற்கு செல்லும் பாதையில் அமைந்துள்ள மியான்குள வீதியில் கோறளைப்பற்று மேற்கு மற்றும் கோறளைப்பற்று ஆகிய இரு பிரதேச சபைகளினாலும் நாளாந்தம் கொட்டப்படுகின்ற குப்பைகள் காரணமாக வீதி போக்குவரத்து மிகவும் பாதிப்படைந்த நிலையில் காணப்படுகின்றது. இவ்வீதியால் விவசாயிகள், மீன் பிடியாளர்கள், பன்ணை தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரால் இரவு பகலாக பயன்படுத்தக்கூடிய  வீதியாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இப்பிரதேசத்தில் ஒழுங்கற்ற முறையில்…

Read More

சோபித தேரரின் பதவிக்கு தம்பர அமில தேரர்

நியாயமான சமூகத்திற்கான மக்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் தம்பர அமில தேரர் நியமிக்கப்பட்டுள்ளார். நியாயமான சமூகத்திற்கான மக்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக இருந்த மாதுளுவாவே சோபித தேரர் அண்மையில் காலமானதை அடுத்து, அந்த பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டது. மாதுளுவாவே சோபித்த தேரரினால் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகளை அவ்வாறே முன்னெடுக்குமாறு நியாயமான சமூகத்திற்கான தேசிய அமைப்பின் நிறைவேற்று குழு, தம்மர அமில தேரரிடம் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அதனை அவர் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும், நிறைவேற்றுக் குழுவிற்கும்…

Read More

கொழும்பில் விமான விபத்து (படங்கள் இணைப்பு)

கொழும்பின் புறநகர்ப் பகுதியான அத்துருகிரிய ஹோகந்தரவில் விமானமொன்று இன்று காலை விபத்துக்குள்ளாகியுள்ளது.  அன்ரனோவ் 32 ரக விமானமே விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த விமான விபத்து காரணமாக இரண்டு வீடுகள் சேதமடைந்துள்ளன. 6.20 மணியளவில் ஹோகந்தர கத்தரீன் பார்க் பகுதியில் விமானமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த உள்ளூர் விமானத்தில் நால்வர் பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது. மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். தற்போது பொலிஸாரும் மீட்புப் பணியாளர்களும் இணைந்து காயமடைந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இன்று அதிகாலை…

Read More

மு.கா தனிமனித செல்வாக்கை பயன்படுத்தி தேர்தலை வெற்றிகொள்ள வியூகம் வகுக்கும் நிலையில் உள்ளது!

-துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்- மு.கா என்ற கட்சியில் தும்புத்தடியை நிறுத்தினாலும் அதுவெற்றி பெறும் என்ற ஒரு காலம் இருந்தது. தற்போது அது முற்றுமுழுதாக மாறிவிட்டது என்றே தோன்றுகிறது. முன்னர் போன்றல்லாது மு.காவில் மிக கடுமையான முறையில் வேட்பாளர் தெரிவுகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. இதனை சாதாரணமாக அவதானிக்கும் ஒருவராலேயே புரிந்துகொள்ள முடியும். எதிர் வரும் தேர்தலில் சம்மாந்துறையில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மாஹிரும், நிந்தவூரில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீனும் தேர்தல் கேட்கவுள்ளனர். இந்த…

Read More

அரிசி இறக்குமதியாளர்களுக்கு அமைச்சர் றிஷாட் எச்சரிக்கை மாற்று நடவடிக்கை எடுக்கவேண்டி நேரிடுமென அறிவிப்பு

சுஐப் எம் காசிம் அரிசியின் விலையை கிலோ ஒன்றுக்கு 76 ரூபாவுக்கு மேல் விற்பனை செய்பவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென அமைச்சர் றிஷாட் எச்சரித்துள்ளார். அரிசி இறக்குமதியாளர்களின் கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டு அதற்கு இணக்கம் தெரிவித்த பின்னரும் அரிசியின் விலையை அதிகரித்து விற்பனை செய்வதும் சந்தைக்கு அதனை விடாமலிருத்தலும் பிழையான நடவடிக்கையெனவும்  அமைச்சர் மேலும் தெரிவித்தார். பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று இடம்பெற்ற (2017.01.03) தோற்பொருட்கள் காலணி தொடர்பான 9வது கண்காட்சியில் பிரதம விருந்தினராக அவர்…

Read More

ஏறாவூர் இரட்டைக்கொலை: சந்தேகநபர்கள் 6 பேரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு

ஏறாவூர் இரட்டைக்கொலை சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டிருந்த சந்தேகநபர்கள் 6 பேரையும் ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் 6 பேரும் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதவான் முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, கொலை செய்யப்பட்ட 32 வயதுடைய பெண்ணின், கணவரது சகோதரரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதுதவிர தாயும், மகளும் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சான்றுப்பொருட்களை அரச இரசாயன பகுப்பாய்வுத்…

Read More

ரிஷாட் பதியுதீன் பவுண்டேஷனால் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு! இஸ்மாயில் எம்.பி பங்கேற்பு!

சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்துக்குட்பட்ட 36 பாடசாலைகளின் அதிபர்களினால் கடந்த 2018-03-29 ஆம் திகதி சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் A.M.M.நௌசாத்திடம் கோரப்பட்டிருந்த கோரிக்கைக்கு அமைவாக, அகில இலங்கை மக்கள் காங்கரஸின் தலைவரும் அமைச்சருமாகிய ரிஷாட் பதியுதீனின் ஆலோசனையின் பேரில், Rishad Bathiudeen Foundationனால் மாணவர்களுக்கான புத்தகப்பை மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை (31) மல்வத்தை கமு/சது/மஜீத்புர வித்தியாலயத்தில் இடம்பெற்றது. அதிபர் எம்.எம்.முசம்மில் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், மக்கள் காங்கிரஸின் திகாமடுல்ல…

Read More

அம்பாறை மக்களை சந்திக்கிறார் அமைச்சர் றிஷாத்!

ஆசிரிய பீடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் அமைச்சு பதவி ஏற்ற பின்னர் தனது முதலாவது அம்பாறை மாவட்ட விஜயத்தினை மேற்கொள்கிறார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பொது செயலாளர் வை.எல்.எஸ்.ஹமீதின் அழைப்பின் பேரில் வரும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல ஊர்களுக்கும் விஜயம் செய்யவுள்ள அமைச்சர் றிஷாத்; சனி மாலை கல்முனை குடி பிரதேசத்தில் இடம்பெறவுள்ள விஷேட கலந்துரையாடலிலும் ஞாயிறு மாலை ஆறு…

Read More