Headlines

எந்த விட்டுக் கொடுப்புக்கும் இடமில்லை. மறிச்சிக்கட்டியில் அமைச்சர் ரிஷாட்

சுஐப் எம் காசிம் முசலி பிரதேச மக்களின் நில மீட்பு போராட்டத்தை எனது சொந்த போராட்டம் என இனவாத நயவஞ்சகர்களுக்கு நமது சமூகத்தில் உள்ள கயவர்கள் காட்டிக்கொடுத்து, மக்களின் உண்மையான போராட்டத்தை மலினப்படுத்துவதற்கு துணை போகின்றார்கள் என்று  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னர் மறிச்சிக்கட்டி பள்ளிவாசலுக்கு முன்னால் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பாதிக்கப்பட்ட மக்களை இன்று (01) மாலை சந்தித்த பின்னர் அமைச்சர் அங்கு உரையாற்றினார். அமைச்சர் மேலும்…

Read More

வடக்கு தொடருந்து போக்குவரத்து வழமைக்கு

ரத்து செய்யப்பட்டிருந்த வடக்கு தொடருந்து வழி போக்குவரத்துக்கள் இன்று காலை முதல் வழமைக்கு திரும்பியுள்ளதாக தொடரூந்து கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. வவுனியாவிலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரஜரட்ட ரெஜின தொடரூந்து தம்புத்தேகம மற்றும் செனரத்கம தொடரூந்து நிலையங்களுக்கு இடையில் நேற்று தடம்புரண்டது. இந்தநிலையில் தடம்புரண்ட தொடரூந்து நேற்றிரவு வரை மீளமைக்கப்பட்டிருக்காத நிலையில் அஞ்சல் தொரூந்து சேவைகள் இடம்பெறவில்லை என தொடரூந்து கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக வடக்கு தொடருந்து வழித் தடத்தில் நேற்று இரவு பயணிக்கவிருந்த 4…

Read More

கொழும்பு வருவதற்கு மேலதிக சேவை.!

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சொந்த இடங்களுக்கு சென்ற மக்கள் கொழும்பு மற்றும் ஏனைய நகரங்களுக்கு மீண்டும் செல்வதற்காக மேலதிக பஸ் சேவையை இன்று முதல் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்துவதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. மேலும், சொந்த இடங்களுக்கு சென்ற பொது மக்கள் மீண்டும் கொழும்புக்கு வருவதற்கு விசேட புகையிரத சேவை இன்று முதல் நடைமுறைப்படுத்துவதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது. பஸ் சேவைகளில் எவ்வித பிரச்சினைகள் காணப்படுமாயின்  1955, 011 1333…

Read More

மன்னார் புதுக்குடியிருப்பு விளையாட்டு மைதானத்தின் பார்வையாளர் அரங்கிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வின் பிரதம அதிதியாக றிப்கான் பதியுதீன்.

கௌரவ அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்களின் நிதி ஒதிக்கீட்டில் சகல வசதிகளுடனான பார்வையளர் அரங்கிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று மன்னார் புதுக்குடியிருப்பு மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது இந்த நிகழ்வில் அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளரும் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினருமான றிப்கான் பதியுதீன் மற்றும் மன்னார் பிரதேச சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிர் மற்றும் மீள்குடியேற்ற செயலணியின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் முஜீபுர் றஹ்மான் மற்றும் மன்னார் பிரதேசபை உறுப்பினர்கள் மேலும் மீள்குடியேற்ற செயலணியின் அதிகாரிகள் உட்பட…

Read More

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில் கண்டியில் இளைஞர் யுவதிகளுக்கான முழு நாள் செயலமர்வு.

கைத்தொழில்,வர்த்தகம்,நீண்ட காலம் இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் கீழ் பதிவு செய்யப்பட்ட Coop- yes அமைப்பு இலங்கையிலுள்ள இளைஞர் யுவதிகளை ஒன்று சேர்த்து அவர்களின் திறமைகளை இனங்கண்டு, சர்வதேசத்திற்கு கொண்டு செல்லும் வகையில் பல திட்டங்களை மேற்கொண்டுள்ளது. அந்த வகையில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் ஆலோசனைக்கிணங்க கடந்தவருடம் குருநாகலையில் முதற்தடவையாக இடம்பெற்ற செயலமர்வைப்போல், இவ்வருடமும் கண்டி பொல்கொல்லையில் இரண்டாவது செயலமர்வை இன்று (24) நடாத்தி வருகின்றது. சுமார் 500 க்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகளின்…

Read More

நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதவரளிக்கப்படாது!– ஜே.வி.பி

நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவளிக்கப்படாது என ஜே.வி.பி கட்சி அறிவித்துள்ளது. கூட்டு எதிர்ககட்சியினால் சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவளிக்கப்படாது கட்சியின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். நம்பிக்கையில்லா தீர்மானம் நிதி அமைச்சருக்கு எதிராக சமர்ப்பிக்கப்படுவதில் அர்த்தமில்லை. அசராங்கத்தின் தற்போதைய பொருளாதார கொள்கைகளுக்கு எதிராகவே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட வேண்டும். நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து ஜே.வி.பி ஆராய்ந்து வருகின்றது. அரசாங்கத்தின் பொருளாதார கொள்கைகளுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படுவது மிகவும்…

Read More

கட்டாருடன் வலுவான பொருளாதார வர்த்தக உறவை மேம்படுத்த இலங்கை நாட்டம். கட்டாரில் அமைச்சர் றிஷாட்

“கட்டாருடன் வலுவான வர்த்தக மற்றும் பொருளாதார தொடர்புகளை மேம்படுத்த   இலங்கை நாட்டங்கொண்டுள்ளதாகவும் இரண்டு நாடுகளும் நீண்ட கால பொருளாதார வர்த்தக உறவுகளை கொண்டிருப்பதால் அதனை நீடிக்க பரஸ்பர செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. “   கட்டார் டோஹாவில் நடைபெற்ற “ கட்டார் – இலங்கை வர்த்தக சம்மேளன கூட்டத்தில்”  கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உரையாற்றுகையில்   இவ்வாறு தெரிவித்தார்.   கட்டார் வர்த்தக சம்மேளனம் டோஹாவிலுள்ள இலங்கை தூதரகத்துடன் இணைந்து   ஏற்பாடு…

Read More

சர்வாதிகாரி போன்று செயற்படத் தயாரில்லை

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை அழிக்கும் பாவச்செயலில் பங்குகொள்ளமுடியாது என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் (09) நாடாளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 51 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனியான குழுவாக செயற்பட அனுமதி கோரி நிற்கின்றனர்.எனினும், இந்த விடயம் குறித்து தனித்து தீர்மானிக்க முடியாது எனவும், சர்வாதிகாரியைப் போன்று செயற்படத் தயாரில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கட்சிக்குள் குழுக்கள் இருக்க முடியும் என்ற போதிலும் குழுக்களுக்குள் கட்சிகள் இருக்க முடியாது என…

Read More

பிரதமர் ரணிலுக்கு இன்று பிறந்த நாள்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று 66ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார் 1949ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24ஆம் திகதி பிறந்த ரணில் விக்கிரமசிங்க, எஸ்மன்ட் மற்றும் நஸினி விக்கிரமசிங்க தம்பதிகளுக்கு பிறந்த இரண்டாவது மகனாவார். கொழும்பு றோயல் கல்லூரி பழைய மாணவரான இவர், கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டத்துறை பட்டதாரியாகவும் 1972ஆம் ஆண்டு இலங்கை சட்டக்கல்லூரி சட்டப் பரீட்சையில் சித்தியடைந்து வழக்கறிஞராகவும் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். ஐக்கிய தேசியக்கட்சியின் களனி தேர்தல் தொகுதி பிரதான அமைப்பாளராக 1970ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட…

Read More

மாவனல்லையில் முஸ்லிம் வியாபாரியின் வர்த்தக நிலையம் தீக்கிரையானது தொடர்பில் முறையான விசாரனை வேண்டும்

அளுத்கம வர்த்தக நிலைய தீவைப்பு சம்பவம் நடைபெற்று ஒரு வாரம் கடந்துள்ள நிலையில் மாவனல்லையில் முஸ்லிம் வர்தகரொருவருக்கு சொந்தமான மற்றுமொரு வர்த்தக நிலையம் எரியூட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கிறது .பல சேனாக்களின் வருகைக்கு பின்னர்தான் இந்த சம்பவங்கள் இடம்பெறுகிறது என அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.  நேற்று 18 அதிகாலை மாவனலை நகரில் தீக்கிரையாகியுள்ள முஸ்லிம் நபர் ஒருவருக்கு சொந்தமான வர்த்தக நிலையம் தொடர்பில் வினவியபோதே மேற்படி தெரிவித்தார் .  மேலும் அவர் தெரிவித்த தகவலில் , மதவாதிகளின்…

Read More

சல்மான் எம்.பி அவசர அவசரமாக இராஜினாமாச் செய்ததன் பின்னணி என்ன? அமைச்சர் ரிஷாட் விபரிப்பு!

  -ஊடகப்பிரிவு- அம்பாறை மாவட்டத்தில் மயில் வீரியம் கொண்டு தோகை விரித்தாடுவதைக் கண்டு அச்சம் கொண்ட காரணத்தினால்தான் பாராளுமன்ற உறுப்பினர் சல்மானை இராஜினாமா செய்ய வைத்துவிட்டு, அந்தப் பாராளுமன்ற உறுப்புரிமையினை அம்பாறை மாவட்டத்திற்கு வழங்க நாங்கள் தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கூறி வருகின்றது. ஆகையினால், அம்பாறை மாவட்ட மக்கள் மயில் சின்னம் கொண்ட கட்சிக்கு நன்றிகளை தெரிவிக்க வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்….

Read More

சிங்கப்பூரிலிருந்து கொழும்பு வந்த விமானத்தில் இலங்கையர் திடீர் மரணம்

சிங்கப்பூரில் இருந்து இலங்கையை நோக்கி வந்து கொண்டிருந்த விமானத்தில் பயணம் மேற்கொண்டிருந்த இலங்கையரொருவர், திடீரென அவ்விமானத்தினுள் மரணத்தைத் தழுவிய சம்பவமொன்று இன்று இடம்பெற்றுள்ளது. பொல்காவலையைச் சேர்ந்த 57 வயது நபரொருவரே இன்று (22) அதிகாலை 1.35 மணியளவில் திடீரென சுகயீனமுற்ற நிலையில் இவ்வாறு  விமானத்தினுள் மரணமாகியுள்ளார். பிரேத பரிசோதனைகள் நீர்கொழும்பு வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படுவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Read More