Headlines

அமைச்சர் றிசாத் பதியுதீன் இனவாதமற்ற ஒரு சிறந்த தலைவராவார்

அமைச்சர் றிசாத் பதியுதீன் இனவாதமற்ற ஒரு சிறந்த தலைவராவார்.அவரினால் வன்னி மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கனை இன்று சகல சமூகங்களும் அனுபவித்துவருகின்றனர்.எதையும் செய்ய முடியாத பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர்களது இயலாத் தன்மையினை மறைப்பதற்காக வேண்டி அமைச்சர் றிசாத் மீது இனவாத சாயத்தை பூசுகின்றனர் என்று மாந்தை கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் நந்தன் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டத்தில் முஸ்லிம்களை குடியேற்றவிடாமல் தடுக்கும் செயலை கண்டித்து அவர் வெளியிட்ட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.மேலம் அவர் அதில் குறிப்பிட்டுள்ளாவது- வன்னியில்…

Read More

பொதுபல சேனாவுக்கு ஹெல உறுமய ஆதரவு: அமைச்சர் ரிஷாத் பதியுதீன் குற்றச்சாட்டு

இலங்கையில் அண்மைக் காலமாக முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பில் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கின்ற பொது பல சேனா என்ற கடும்போக்கு பௌத்த அமைப்புக்கு அரசாங்கம் நேரடியாக ஆதரவளிக்கிறது என்று கூறமுடியாது என்று அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவிக்கிறார்ஆனால் அரசாங்கத்தில் பொது பல சேனாவை ஆதரிக்கின்ற ஜாதிக ஹெல உறுமய போன்ற கட்சிகள் இருப்பதாகவும் அவர் கூறினார்.இதேவேளை, பொது பல சேனா அமைப்பே தங்களுக்கு அரசாங்கத்துடன் தொடர்பில்லை என்று கூறியிருப்பதாகவும்…

Read More

த.தே.கூட்டமைப்புடன் பேசுவதற்கு எந்நேரமும் தயாராக உள்ளோம்: றிசாத் பதியுதீன்

தமிழ்- முஸ்லிம் உறவுக்காகவும் உரிமைக்காகவும் குரல் கொடுக்க நாங்கள் திடசங்கற்பமாக இருக்கின்றோம். அத்துடன் இவ்விடயம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசுவதற்கு நாங்கள் எந்நேரமும் தயாராக இருக்கின்றோம் என அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மீள்குடியேற்றக் கிராமமான உறுகாமத்தில் இடம்பெற்ற அபிவிருத்திப் பணிகளை ஆரம்ப வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கிழக்கு மாகாணசபை பிரதித் தவிசாளரும் முன்னாள் மாகாணசபை அமைச்சருமான எம்.எஸ்.சுபைர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண…

Read More

ஸ்தலத்திற்கு விரைந்த அமைச்சர் றிசாத் பதியுதீன்

பஷன் பங் வர்த்தக நிலையத்தின் களஞ்சியசாலை தாக்கப்பட்டமையின் பின்னணியில் உள்ளவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் இவ்விடயம் குறித்து துரித நடவடிக்கையெடுக்கப்பட வேண்டும் என்பதை ஜனாதிபதி,பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்,மற்றும் பொலீஸ் மா அதிபர் ஆகியோரை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். நேற்று இரவு பிரஸ்தாப களஞ்சியசாலை தாக்கப்பட்ட தகவல் கிட்டியதும்,ஸ்தலத்திற்கு விரைந்த அமைச்சர் றிசாத் பதியுதீன் சேதத்துக்குள்ளான பொருட்களை…

Read More

அடுத்த ஜெனீவாவுக்கு முஸ்லிம் நாடுகளின் ஆதரவு தேவையா என அரசே தீர்மானிக்க வேண்டும் – ஹமீட்

அடுத்த ஜெனீவா கூட்டத்தொடரில் முஸ்லிம்களும் ஒரு தரப்பினராக இருக்க வேண்டும் என்ற பொது பல சேனாவின் நோக்கம் நிறைவேற வேண்டுமா  இல்லையா என்பது அரசின் கைகளிலேயே  தங்கியுள்ளது. என அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். வை.எல்.எஸ். ஹமீட் தெரிவித்துள்ளார். முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட்டு வரும் பொதுபல சேனா அமைப்பினர் மறைந்த தலைவர் அஷ்ரப் ஆயுதங்கள் கொண்டுவந்ததாக கற்பனைக்குள் அடங்காத பொய்களைக் கூறியதை வன்மையாக கண்டித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில்…

Read More

பாடசாலைகளுக்கு உதவி செய்தாலும் இனவாதம் பேசுகின்றனர்-அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கவலை

பயங்கரவாத செயற்பாடுகள் காணமாக பாதிப்புக்களை கண்ட பாடசாலைகளை புனரமைப்பு செய்கின்ற போது அதில் முஸ்லிம் மாணவர்கள் கற்கின்றார்கள் எனில் அதனை இனவாதமாக சித்தரிக்கும் அமைப்புக்கள் மன்னாரில் காணப்படுவதாக தெரிவித்துள்ள வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன்,முன்னால் அமைச்சர் மர்ஹூம் நுர்தீன் மசூர் அவர்கள் விட்டுச் சென்ற அபிவிருத்திகளை முன்னெடுக்க அனைவரும் ஒன்றுபட வேண்டும் எனவும் கூறினார். மன்னார் மாவட்டத்தின் பிரபல பாடசாலையாக காணப்பட்ட எருக்கலம்பிட்டி மகளிர் கல்லுரிக்கான இரு மாடிக்கட்டிடத்துக்கான அடிக்கல்நடும் நிகழ்வில் கலந்து கொண்டு…

Read More

வடக்கில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை தடுக்க பெரும்பான்மை கள் சதி-கண்டிக்கிறார் அப்துல் பாரி

வடக்கில் பயங்கரவாதிகளினால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை அவர்களது சொந்த மண்ணில் அரசாங்கம் குடியேற்றுவதுடன்,அவர்களுக்கான அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் என்று வவுனியா நகர சபை உறுப்பினரும்,வவுனியா மாவட்ட இன நல்லுறவுக்கான ஒன்றியத்தின் தலைவருமான  அப்துல் பாரி கோறிக்கை விடுத்துள்ளார். 1990 ஆம் ஆண்டு முதல் வடக்கில் வாழ்ந்த முஸ்லிம்களை புலிகள் வெளியேற்றினர்.கடந்த 22 வருட காலமாக அந்த மக்களின் மீள்குடியேற்றம் உரிய முறையில் இடம் பெறவில்லை.இருந்த போதும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர் றிசாத் பதியுதீன்,வன்னி மாவட்ட அபிவிருத்தி…

Read More

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹூனைஸ் பாருக் அவர்கள் ஆற்றிய உரையின் முழு வடிவம்

பிஸ்மில்லாஹிர்  ரஹ்மானிர்  ரஹீம். கெளரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் அவர்களே, கெளரவ  உறுப்பினர் சம்பந்தன் ஐயா அவா்களால் பிரேரிக்கப்பட்ட, சிறுபான்மை இனத்துக்கு மறுக்கப்படுகின்ற விடயங்கள் தொடர்பிலான இந்த ஒத்திவைப்புப் பிரேரணையில், சிறுபான்மையிலும் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவன் என்ற வகையில் பேசுவதற்கு இந்த நேரத்தைப் பயன்படுத்துவது பொருத்தமாக இருக்குமென்று நினைக்கின்றேன். கடந்த காலத்தில் ஒரு வரலாறு இருந்தது. சிறுபான்மை இனத்துக்கு ஒரு பாதிப்பு என்றால்,அல்லது ஒரு சிறுபான்மை இனத்தின் உரிமைகள் மறுக்கப்படும்பொழுது அடுத்த சிறுபான்மை இனம் அதற்காகக் குரல் கொடுக்கும். அதாவது, முஸ்லிம்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டபொழுது தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அதற்காகக்…

Read More

நெசவுத் துறையில் தொழில் இழந்தோருக்கு நஷ்டயீடு வழங்கப்பட்டது

1980,1981,1982 ஆம் ஆண்டுகளில் தனியார் துறையினால் பெற்றுக் கொள்ளப்பட்ட நெசவு கைத்தொழில் துறையில் பணியாற்ற முடியாமல் வேலையிழந்தவர்களுக்கு நஷடயீட்டை பெற்றுக் கொடுக்கும் வேலைத் திட்டத்தை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. 1960-70 ஆம் ஆண்டு காலப்பகுதி இத்துறையின் மிகவும் முக்கியத்துமிக்கதாகும்.அதன் ஆட்சிக்கு வந்த அரசு மேற்கொண்ட நடை முறையினால் இத்துறையானது பின்னடைவை சந்திக்க நேரிட்டது. அதனால் அத்துறையில் பணியாற்றிய ஊழியர்கள் பெரும் சிரமங்களை எதிர் கொள்ள வேண்டியேற்பட்டது.அன்றைய அரசு தமது கட்டுப்பாட்டில் இருந்த இத்திணைக்களத்தினை தனியார் துறைக்கு வழங்கியதால்,10 வருடங்களுக்கு மேலாக  பணியாற்றி ஊழியர்கள்…

Read More

வவுனியாவில் இன துவேசிகளுக்கு எதிராக பாரிய ஆரப்பாட்டம்

வவுனியா மாவட்டத்தில் தமிழ் முஸ்லிம்,சிங்கள மக்களிடையே காணப்படும் இன உறவைில் விரிசலை ஏற்படுத்தும் வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்படுவதாகவும்,அதன் மூலம் மீண்டும் பயங்கரவாதத்தை தோற்றுவிக்க முயல்வதாகவும் தெரிவித்து அதனை தோற்கடிக்க அனைத்த மக்களும் ஒன்றுபடுமாறு வவுனியா நகரத்தில்வெள்ளிக்கிழமை பாரிய  பேரணியொன்று இடம் பெற்றது. வவுனியா மாவட்ட இன நல்லுறவுக்கான ஒன்றியம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.வவுனியா பசார் வீதியிலிருந்தும்,வவுனியா மன்னார் வீதியிலிருந்தும் இரு வேறு பேரணிகள் ஆரம்பமானதுடன் இவ்விரு பேரணிகளும் வவுனியா அரசாங்க அதிபர் பணிமனையினை வந்தடைந்தன. பேரணியில்…

Read More

மின்சாரம் வழங்கியமைக்கு நன்றி-மக்கள் கடிதம்

வவுனியா மாவட்டத்தில் உள்ள பூவரசன்குளம் மணியார் குளம் 50 வீட்டுத்திட்டத்திற்கு மின்சாரம் பெற்றுத் தந்தமைக்கு அப்பிரதேச மக்கள் வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீனுக்கு நன்றி தெரிவித்து கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளனர். கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் க.கணகலிங்கம் தலைமையிலான செயலாளர் மகேந்திர ராசா,பொருளாலர் இ.விஜயகுமார் ஆகியோர் கையொப்பமிட்டு இந்த கடிதத்தை அனுப்பியுள்ளனர். அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது – நீண்ட காலமாக இருளில் இருந்த எம்மை வெளிச்சத்தின் பால் கொண்டுவரும் வகையில் எமது கிராமத்திற்கு…

Read More

திவி நெகும திட்டத்தின் மூலம் வடமாகாணமே அதிக நன்மையடையும்-ஹூனைஸ் எம்.பி

திவிநெகும தேசிய திட்டத்தின் மூலம் அதிகமான நன்மையினை வடமாகாணமே அடையப் போகின்றது.இவ்வாறு நன்மையடையும் போது எமது பிரதேசங்களும் பல் துறைகளிலும் அபிவிருத்திகானும் என்பதை உறுதியாக கூறுகின்றேன் என்று மன்னார் மாவட்டத்தின் மடு பிரதேச ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும்,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி ஹூனைஸ் பாருக் இன்று கூறினார். மடு பிரதேச செயலகப் பிரிவில் வறுமையற்ற இலங்கையினை ஏற்படுத்தும் தேசிய திட்டத்தினை மக்கள் மத்தியில் அறிமுகம செய்து வைக்கும் கூட்டத்திற்கு தலைமை தாங்கி உரையாற்றும் போது அவர்…

Read More