கிழக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பிரதித் தவிசாளர் சுபைருக்கு நன்றி தெரிவிப்பு!
கிழக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் நியமனத்தை இரத்துச் செய்ய வேண்டும் என்ற தமிழ்தேசியக் கூட்டமைப்பின் சூழ்ச்சியிலிருந்து எமது நியமனத்தைப் பாதுகாத்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை பிரதித் தவிசாளர் எம்.எஸ்.சுபைருக்கு புதிதாக கிழக்கு மாகாணத்தில் நியமனம் பெற்ற அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர். கிழக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நன்றி தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்ட வாறு தெரிவித்துள்ளனர். அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கிழக்கு மாகாண அரச அபிவிருத்தி உத்தியோகத்தர் தரம்…
