பேரினவாதிகளின் செயற்பாடுகளினால் பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம்களுக்காக ஐ.தே.க. ஏன் குரல்கொடுப்பதில்லை?
வடக்கு கிழக்குக்கு வெளியே உள்ள முஸ்லிம்களில் பெரும்பான்மையினர் ஐ.தே. கட்சிக்கே வாக்களிக்கின்றனர். ஆனால் இன்று வட கிழக்கிற்கு வெளியே வாழ்கின்ற முஸ்லிம்கள் பேரினவாதிகளின் இனவாத செயல்களினால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றபோது முஸ்லிம்களின் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்ற ஐ.தே.கட்சி ஏன் பேசாமல் இருக்கிறது? என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; இலங்கையிலுள்ள 20 இலட்சம் முஸ்லிம்களில் மூன்றில் இரண்டு…
