Headlines

மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளின்போது இந்தியா தூய்மையானதாக இருக்கவேண்டும் – மோடி!

மகாத்மா காந்திஜியின் 150 வது பிறந்த நாளுக்குள் தூய்மையான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று, பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். நரேந்திர மோடி, தமது சுதந்திர தின உரையில் தூய்மையான இந்தியாவை உருவாக்குவதில் மாநில அரசுகள் ஒத்துழைக்க வேண்டும் என்றும், இது காந்தியின் கனவு என்றும் கூறியுள்ளார். காந்திஜியின் 150 வது பிறந்த நாள் விழாவைக் கொண்டாடும்போது இந்தியா தூய்மையானதாக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதனையொட்டி மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு சில விஷயங்களை வலியுறுத்தி…

Read More

கூகுள் நிறுவன நெட்வொர்க் கேபிள்களை கடித்த சுறாக்கள்

கடலுக்கடியில் கூகுள் நிறுவன நெட்வொர்க் கேபிள்களை சுறாக்கள் கடித்து சேதப்படுத்தியுள்ளது. கூகுள் நிறுவனம் தனது நெட்வொர்க் பயன்பாட்டிற்காக கண்ணாடி இழை கேபிள்களை பசிபிக் கடலுக்கு அடியில் பதித்து உள்ளது. இந்த கண்ணாடி இழைகள் சூப்பர் கார்டு மெட்டிரியல் மற்றும், புல்லட் புரூப், போன்றவைகளல் உருவாகப்பட்ட பொருட்களால் மிகுந்த பாதுகாப்பாக மூடபட்டு இருக்கும். அப்படி இருந்தும் இந்த கண்ணாடி இழை கேபிள்களை சுறாக்கள் கடித்து சேதபடுத்தி உள்ளது. கடலுக்கு அடியில் பொருத்தபட்டு உள்ள கேபிள் இழைகளில் இருந்து சுறாக்களுக்கு…

Read More

இந்திய மீனவர்களின் படகுகளை ஒருபோதும் கையளிக்கமாட்டோம் – அமைச்சர் ராஜித

இலங்கைச் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் படகுகளை அவர்களிடம் மீண்டும் கையளிக்கப் போவதில்லை என கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்தனர் என்ற குற்றச் சாட்டில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 94 பேர் இந்திய சுதந்திரதினத்தையயாட்டி ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய விடுதலைசெய்யப்பட்டனர். எனினும், அவர்களிடமிருந்தும் முன்னர் கைதாகி விடுதலைசெய்யப்பட்ட மீனவர்களிடமிருந்தும் பறிமுதல் செய்யப்பட்டு யாழ்ப்பாணம், மன்னார் பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ள 69 படகுகளைத்…

Read More

ஐ.தே.கவின் பிரதித் தலைவராக நியமனம் பெறுகிறார் சஜித்?

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராக சஜீத் பிரேமதாஸ நியமிக்கப்படுவார் என அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இவ்வாறு அவர் பிரதித் தலைவராக நியமிக்கப்படும் பட்சத்தில் மூன்றாவது தடவையாக பிரதித் தலைவர் பதவியைக் கைப்பற்றிய சந்தர்ப்பமாக அமையும். அடுத்த செயற்குழுக் கூட்டத் தின்போது கட்சியின் பிரதித் தலைவராக சஜீத் பிரேமதாஸ அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும், சஜீத்தின் இந்த நியமனத்துக்கு மங்கள சமரவீர, ரவி கருணாநாயக்கா, விஜயதாஸ ராஜபக்­ ஆகியோர் கடும்…

Read More

2004 சுனாமியை விட இலங்கைக்கு வருட இறுதியில் பாரிய பேரழிவு – உலக வளிமண்டலவியல் திணைக்களம்

2004 இல் ஏற்பட்ட சுனாமியை விடவும் பாரிய இயற்கைப் பேரழிவு ஒன்று இந்த வருட இறுதியில் இலங்கையில் இடம்பெறக்கூடிய சாத்தியம் உள்ளதாக உலக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. எல்னிலா என்ற கடுமையான புயற்காற்றின் சீற்றம் இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகளை பாதிக்கும் எனத்  தெரிவிக்கப்படுகிறது. இதனால் ஆசியக் கண்டத்தில் இருக்கும் இந்தோனேசியா, இலங்கை போன்ற நாடுகளில் வெப்ப நிலை உயர்ந்து பாரியளவில் வறட்சி ஏற்படக்கூடும் எனவும் திணைக்களம் அறிவித்துள்ளது.

Read More

18 வருடங்களுக்கு முன்னர் எல்.ரீ.ரீ.ஈ இனரால் கடத்தப்பட்ட வாகனம் ஏறாவூர் பொலிஸாரால் நேற்று மீட்பு!

18 வருடங்களுக்கு முன்னர் எல்.ரீ.ரீ.ஈ இனரால் மட்டக்களப்பு சித்தாண்டிப் பகுதியில் வைத்துக் கடத்தப்பட்ட ஹையேஸ் வேன் கொழும்பில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சமயம் ஏறாவூர் பொலிஸாரால் நேற்று மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தின் பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி எம்.எஸ்பி. பிறேமதிலக்க தெரிவித்தார். கம்பஹா – வெலிவேரியாப் பகுதியில் பாதையோரத்தில் வாகன விற்பனைச் சந்தையில் விற்பனைக்கிடப்பட்டிருந்த சமயம் இந்த வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளது. வாகனத்தை விற்பனைக்கு வைத்திருந்த பீற்றர் பெரேரா, மற்றும் வாகனப் பதிவுப் பெயரை மாற்றுவதற்கு விண்ணப்பம் செய்திருந்த மெதகெதர…

Read More

பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் 26 ஆம் திகதி ஆரம்பம்!

நாடு முழுவதிலும் நேற்று நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பமாகும் என பரீட்சைகள் ஆணையாளர் டபிளியு.எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்தார். ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை நேற்று அமைதியான முறையில் இடம்பெற்றதாகவும் பரீட்சை நடவடிக்கையின் போது எந்தவித மோசடிகளும் இடம்பெறவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார். நாடளாவிய ரீதியாக 2 ஆயிரத்து 870 மத்திய நிலையங்களில் இடம்பெற்ற பரீட்சையில் 3 லட்சத்து 35 ஆயிரத்து 585 பரீட்சார்த்திகள் தோற்றியுள்ளனர்…

Read More

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

இரண்டு தமிழ் மாணவர்கள் கடந்த 9 ஆம் திகதியன்று பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டமை தொடர்பிலேயே இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மாணவர் தலைவர் ரசிந்து ஜெயசிங்க தெரிவித்துள்ளார். இந்தநிலையில் கடந்த புதன்கிழமையன்று இரண்டு மாணவர்களை விடுவிக்கக்கோரி ஆர்ப்பாட்டம் ஒன்றும் நடத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார் தம்மை தாமே காயப்படுத்திக் கொண்டதாக கூறி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். இதனையடுத்தே ஏனைய இரண்டு மாணவர்களும் கைது செய்யப்பட்டனர். இயல்பற்ற சூழ்நிலையை ஏற்படுத்த முயன்றனர் என்று குற்றச்சாட்டின் பேரிலேயே…

Read More

‘சுனாமி பேபி’ அபிலா’_க்கு நேற்று புலமைப்பரிசில் பரீட்சை: சித்தியடைவேனென நம்பிக்கையுடன் கூறுகிறார்

‘சுனாமி பேபி’ என்று பத்து வருடங்களுக்கு முன்னர் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த அபிலாஷ் மட்டக்களப்பு செட்டிப் பாளையத்தில் உள்ள பாட சாலையில் தரம் – 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றியுள்ளான். கடந்த 2004 ஆம் ஆண்டு பேரழிவை ஏற்படுத்திய சுனாமிப் பேரலையில் சிக்கி அபூர்வமான முறையில் உயிர்தப்பிய அபிலாஷ் அக்காலத்தில் உலகத்தையே தனது பக்கம் ஈர்த்தவர். அன்று கைக்குழந் தையாக இருந்த அபிலாஷ் தற்போது பத்து வயதுடைய சிறுவனாக நேற்று புலமைப்பரிசில் பரீட்சை எழுதினான்….

Read More

இலங்கையில் 10,400 போலி மருத்துவர்கள்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் போலி மருத்துவர்களை கண்டறியும் குழுவின் தலைவர் மருத்துவர் ஹரித அளுத்கே இது தொடர்பாக தெரிவிக்கையில், மருத்துவச் சபை, ஆயுர்வேத மருத்துவ கட்டளைச் சட்டம் மற்றும் ஹோமியோபதி மருத்துவம் ஆகியவற்றின் கீழ் பதிவு செய்யாத எவருக்கும் சிகிச்சை அளிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது. நாட்டில் சகல பிரதேசங்களிலும் தனியார் மருத்துவ சேவைகளில் ஈடுபடும் நபர்களில் 26.4 வீதமானவர்கள் போலி மருத்துவர்கள் எனவும் அளுத்கே குறிப்பிட்டுள்ளார். அதிகளவான போலி மருத்துவர்கள் கம்பஹா மாவட்டத்திலேயே உள்ளனர்….

Read More

முஸ்லிம்கள் போட்டியிட முன்வராமையை மூடிமறைக்கவே போலிப்பிரச்சாரம் – அரசின் வங்குரோத்து நிலையை சாடுகிறார் ரிசாத்

எ.எச்.எம்.பூமுதீன் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு இணங்கவே முஸ்லிம் கட்சிகள் கூட்டமைப்பாக போட்டியிடுகின்து என்ற அரசாங்கத்தினதும் ஐ.தே.க வினதும் குற்றச்சாட்டு எந்தவித அடிப்படை ஆதாரமும் அற்றது என மிகக் காட்டமாக கருத்து வெளிப்படுத்தியுள்ள அ.இ.ம.கா. தேசியத்தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் , இது அவ்விரு கட்சிகளினதும் முஸ்லிம்கள் ஆதரவு இன்மை  தொடர்பிலான வங்குரோத்து நிலையை எடுத்துக் காட்ட போதுமானது என்றும் குறிப்பிட்டுள்ளார். ஊவாத் தேர்தலில் அரசின் சார்பாக போட்டியிட கெஞ்சிக் கூத்தாடியும் கூட ஒரு முஸ்லிமேனும் முன்;வராமையை மூடி…

Read More

உடலுறுப்புக்களை கடத்தும் மையங்களில் இலங்கை முக்கியமானது – NEWYORK TIMES

மத்திய கிழக்கு நாடுகளுக்கு சிறுநீரகங்கள் உள்ளிட்ட உடலுறுப்புக்களை கடத்தும் முக்கிய மையங்களில் ஒன்றாக இலங்கை தொடர்ந்தும் உள்ளதாக அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு வெளிவரும் ‘நியூயோர்க் ரைம்ஸ்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையிலிருந்து உடலுறுப்புக்கள் கடத்துவது தொடர்பில் இஸ்ரேலைச் சேர்ந்த முன்னாள் காப்புறுதி உத்தியோகத்தரான அவிகாட் சாண்ட்லர் என்பவருக்குத் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகின்றது. ஒபிரா டொறின் என்ற பெண்ணுக்கு சிறுநீரகங்களைப் பெற முயற்சித்த போது இருவரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். சிறுநீரகங்களின் கடத்தலுக்காக இஸ்ரேலில் இருந்து 2 இலட்சம்…

Read More