Headlines

“தலைகளை எண்ணி மொத்த வியாபாரம் செய்யும் கேவலமான அரசியல் கலாச்சாரத்துக்கு முடிவுகட்ட முன்வாருங்கள்” அம்பாரை முஸ்லிம்களுக்கு அமைச்சர் ரிஷாட் அழைப்பு!

-சுஐப் எம்.காசிம்- முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை பாதுகாக்க வந்த கட்சியானது, தலைகளை எண்ணி மொத்த வியாபாரம் செய்து, சமுதாயத்தின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிக் கொண்டிருக்கும் துரதிஷ்ட நிலைக்கு, இந்தக் குட்டித் தேர்தலின் மூலம் முடிவு கட்ட முன்வாருங்கள் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கூறினார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு மற்றும் தூய முஸ்லிம் காங்கிரஸ், சிவில் அமைப்புக்கள் இணைந்து உருவாக்கியுள்ள ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில், அம்பாரை…

Read More

ஹம்பாந்தோட்டை இளைஞனுக்கு பிணை

பொலிஸ் தடுப்பில் இருந்தபோது தப்பிச்சென்றிருந்த நிலையில் மீண்டும் கைதான,  ஹம்பாந்தோட்டை இளைஞனுக்கு, இன்று வெள்ளிக்கிழமை (30) பிணை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், அவ்விளைஞனை மறைத்து வைத்திருந்ததான குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, சகோதரன் மற்றும் சகோதரி ஆகிய இருவரையும், பிணையில் விடுவிக்க, ஹம்பாந்தோட்டை நீதவான் மஞ்ஜுல கருணாரத்ன, இன்று உத்தரவிட்டார்.

Read More

மைத்திரிபால சிறிசேன குறித்து முஸ்லிம் காங்கிரஸிடம் கவலை வெளியிட்ட பசில்

முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகளுக்கும், அமைச்சர் பசில் ராஜபக்ஸவுக்கும் இடையிலான சந்திப்பொன்று 20-11-2014 அன்று நடைபெற்றுள்ளது. இதன்போது முஸ்லிம் காங்கிரஸினரைப் பார்த்து கருத்து வெளியிட்டுள்ள பசில் ராஜபக்ஸ, பாருங்களேள் எங்கட செயலாளர் (மைத்திரிபால சிறிசேன) பிரச்சினை படுத்துகிறார் என தனது கவலையை வெளிப்படுத்தியதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறியமுடிகிறது.

Read More

மைத்­தி­ரி நாளை காலிக்கு விஜயம்

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நாளை காலிக்கு விஜயம் செய்­கிறார். காலி மழ்­ஹருஸ் ஸுல்­ஹியா மத்­திய கல்­லூ­ரியில் அமைக்­கப்­பட்­டுள்ள தொழில்­நுட்ப கூட திறப்பு விழாவில் ஜனா­தி­பதி பங்­கு­பற்­றுவார். காலை 10.00 மணிக்கு வைபவம் இடம்­பெறும். அமைச்­சர்­க­ளான அகில விராஜ் காரி­ய­வசம், வஜிர அபே­வர்­தன, பிர­தி­ய­மைச்சர் மனுச நாண­யக்­கார உட்­பட பாரா­ளு­மன்ற, மாகாண சபை உறுப்­பி­னர்கள் விழாவில் பங்­கு­பற்­றுவர். பாட­சாலை மாண­வர்­களின் கலை, கலாசார நிகழ்ச்சிகளும் இடம்பெறும்.

Read More

புத்தளம் போராட்டத்தை திசைதிருப்ப  முயற்சி:  அறுவைக்காட்டுக்கும், வில்பத்துவுக்கும் முடிச்சுப்போட இனவாதிகள் சூழ்ச்சி 

அறுவைக்காட்டு குப்பைக்கெதிரான புத்தளம் மக்களின் நியாயமான போராட்டத்தை மழுங்கடித்து,  திசை திருப்புவதற்காக மெளனித்து கிடந்த வில்பத்து புரளியை மீண்டும் கிளறிவிட்டு இரண்டையும் ஒன்றுடன் ஒன்று முடிச்சுப் போட்டு போராட்டத்தை திசை திருப்பும் வகை சூத்திரதாரிகள் சிலர் செயற்பட்டு வருவதாக கைத்தொழில், வர்த்தகம்,நீண்ட காலம் இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி, திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சர் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் குற்றஞ்சாட்டினார். கலைவாதி கலீலின் பவள விழாவும் “என் வில்பத்து டயரி” நூல் வெளியீடும் கொழும்பு…

Read More

வாஸ் குணவர்தனவிற்கு மரண தண்டனை! BREAKING NEWS

கொழும்பு, பம்பலப்பிட்டி பிரபல வர்த்தகர் மொஹம்மட் சியாம் கொலை வழக்கின் தீர்ப்பு இன்று கொழும்பு விசேட மேல் நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்டுள்ளர்த்து. இதன் படி முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவிற்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன, அவருடைய மகன் மற்றும் ஏனைய நால்வரையும் குற்றவாளி என கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்து இருந்த அதேவேளை சற்று முன்னர் அவர்களுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளதாக…

Read More

தவறு செய்தவர்களை பாதுகாக்க வேண்டிய அவசியமில்லை!- பிரதமர்

தவறு செய்தவர்கள் யாராக இருப்பினும் அவர்களை பாதுகாக்க வேண்டிய அவசியமில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் மத்திய வங்கி ஆளுநர் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளைகோப் குழு முன்னெடுத்து வருவதாகவும் அவர் குற்றவாளியாக நிருபிக்கப்பட்டால்அவர் மீது சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். தேசிய தொலைக்காட்சி ஒன்றுக்கு நேற்றைய தினம் (29) வழங்கிய நேர் காணலிலே அவர் இதனைத்தெரிவித்துள்ளார். அத்துடன் மத்திய வங்கி ஆளுநருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள்தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையின்…

Read More

கடமையைப் பொறுப்பேற்றார் அமைச்சர் ஹக்கீம்

அஸ்ரப் ஏ சமத் நகர அபிவிருத்தி மற்று நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சராகப் பதவியேற்றுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தனது கடமையைப் பொறுப்பேற்றார். இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் அதியுயர் பீட உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

Read More

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டி முன்மாதிரிகள் என்ற தொணிப்பொருளில் கருத்தரங்கு-அமைச்சர் ரிசாத் பதியுதீன் கலந்து கொண்டார்.

  அகிலத்திற்கோர் அருட்கொடையாக வந்த முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டி முன்மாதிரிகள் என்ற தொணிப்பொருளில் சர்வதேச இஸ்லாமிய நிவாரண அமைப்பின் ஏற்பாட்டில் கருத்தரங்கு ஒன்று நேற்று   (21) மாலை கலதாரி ஹோட்டலில் ஜனாதிபதி ஆலோசகர் எம்.எம்.சுகைர் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் அமைச்சர் றிஷாட் பதியுதீன் , பாராளுமன்ற உறுப்பினர்களான ஹூனைஸ் பாறுக்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.     

Read More

எனது மகனை தாக்கியது மகிந்தவின் மகன் யோஷிதவே ; மேர்வின் சில்வா

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷத ராஜபக்சவே எனது மகனைத் தாக்கியுள்ளதாக மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும், கொழும்பில் உள்ள பிரபல ஆடை விற்பனை நிலையம் மற்றும் இரவு நேர களியாட்ட விடுதி ஆகியவற்றில் தனது மகன் மீது தாக்குதல் நடாத்தப்பட்டது. மாலக்க சில்வா யோஷிதவின் பாதுகாப்பாளர் ஒருவரை எச்சரித்திருந்தார். அதனை அடிப்படையாக வைத்தே எனது மகன் தாக்கப்பட்டார். எனினும் முன்னாள் ஜனாதிபதிக்கு குறித்த தாக்குதல்…

Read More

தேவையில்லாதவற்றை பேசி நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்க வேண்டாம் நீதிபதி குமாரசாமி

ஜெயலலிதா உள்ளிட்டவர்கள் மேல்முறையீட்டு வழக்கு விவாதத்தில் தேவையில்லாதவற்றை பேசி, நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று, ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞருக்கு நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டவர்களின் சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு விசாரணை பெங்களூரு உயர் நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு முன்னிலையில் நடைபெற்று வருகிறது. ஜெயலலிதா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நாகேஷ் ராவ் தரப்பு வாதங்கள் எடுத்து வைக்கப்பட்டு விட்ட நிலையில், அவரது உதவியாளர் ஆனந்த் இன்னும் கொஞ்சம் வாதத்தை எடுத்து வைக்க வேண்டியுள்ளது…

Read More