Headlines

ஜெனீவாவில் புதிய பிரேரணையை அமெரிக்கா சமர்ப்பிக்கும்

ஜெனீவாவில் மார்ச் மாதம் ஆரம்பமாகவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கை குறித்த மற்றொரு பிரேரணையை சமர்ப்பிப்பதற்கு அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று நாள் இராஜாங்க விஜயத்தை மேற்கொண்டு நாளை திங்கட்கிழமை கொழும்பு வரவுள்ள தெற்கு, மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் இது தொடர்பாகவும் ஆராய்வார் எனவும் தெரியவந்திருக்கின்றது. 2013, 2014 ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணைகளின் அடுத்த கட்டமாகவே இந்தப் பிரேரணை அமைந்திருக்கும் எனவும்,…

Read More

மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்படும் வித்தியா வழக்கு!

புங்குடுதீவில் வன்முறைக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மாணவி சிவலோநாதன் வித்தியா மீதான படுகொலை வழக்கு தொடர்பில் குற்றவாளிகளுக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களம் மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யும் என ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் வை.எம்.எம். றியால் தெரிவித்துள்ளார். குறித்த மாணவி படுகொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அது தொடர்பில் இதுவரை பன்னிரண்டு சந்தேகநபர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கு விசாரணையானது ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் நேற்றைய வழக்கு விசாரணையின் போது,…

Read More

வரலாற்று முக்கியத்துவான இன்னாலை எந்த ஒரு இலங்கை பிரஜையாலும் மறக்கமுடியாது

இந்திய நாட்டின் பிரதம மந்திரி நரேந்திர மூடி இன்று தலைமன்னார்வரையான புகையிரத பயணத்தை ஆரம்பித்து வைக்க உள்ளார். பிரதமரை வரவேற்க கைத்தொழில் வர்த்தக அமைச்சரும்,வட மாகான அபிவிருத்திக்குழு தலைவருமான றிஷாத் பதியுதீன் தலைமன்னார் பியர் புகையிரத நிலையத்தில் நிற்கும் காட்சி.

Read More

காஸாலை மீண்டும் கட்டியெழுப்ப தயாராக இருக்கிறோம் – கட்டார்

இஸ்ரேல் – ஹமாஸ்  யுத்த நிறுத்தத்தை வரவேற்றிருக்கும் கட்டார் காசா பகுதியை வெகு விரைவில் மீண்டும் கட்டியெழுப்புவதற்கான பங்களிப்பை செய்ய தயாராக இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. யுத்த நிறுத்தத்தை வரவேற்றிருக்கும் துருக்கி அனைத்து எல்லை கட்டுப்பாடுகளையும் இஸ்ரேல் உடன் அகற்றிக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

Read More

நாங்கள் திருகுர்ஆனை நேசிக்கும் சமுதாயம் வானில் பறந்தாலும் நீரில் மிதந்தாலும் திருமறையை நாங்கள் ஓதி கொண்டே இருப்போம் !

சவுதி விமான நிறுவன மேலாளர் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள படத்தை தான் நீ்ங்கள் பார்க்கின்றீர்கள் விமானம் பறந்து கொண்டிருக்கும் நிலையிலும் துணை விமானி ஒருவர் திருகுர்ஆன் ஓதி கொண்டிருக்கும் காட்சியைதான் படம் விளக்குகிறது இது பற்றி கருத்து தெரிவித்த அந்த விமானி “நாங்கள் திருமறை குர்ஆனை நேசிக்கும் சமுதாயம் வானில் பறந்தாலும் நீரில் மிதந்தாலும் எங்கள் இறைவன் வழங்கிய வேதம் எங்களுடன் இருக்கும் எப்போதும் அதை நாங்கள் ஓதி கொண்டே இருப்போம். ” என கூறியிருப்பது…

Read More

இலங்கை சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் பிரதித் தலைவர் நியமனம்

அஸ்ரப் ஏ சமத் சிறுவர் பராமரிப்பு இராஜாங்க அமைச்சர் ரோசி சேனாநாயக்கவினால் இலங்கை சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் பிரதித் தலைவியாக திருமதி நட்டசா பாலேந்திராவை நியமித்து நியமனக் கடிதத்தை செத்சிரிபாயவில் உள்ள அவரது அமைச்சின் வைத்து வழங்கினார். திருமதி பாலேந்திரா லண்டன் ஒக்ஸ்போட் நியோக் ஹாவட் பல்கலைக்கழகங்களில் சட்ட முதுமாணி பட்டம் பெற்று சட்த்துறையில் நியோக் நகரில் சேவையாற்றியவர். அத்துடன் நியோக் நகரில் பரிஸ்டர் லோ சட்ட வல்லுனுராக சிறந்த சேவையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

மருதமுனையில் பலமடையும் மயில்!

ஏ.எச்.எம். பூமுதீன் கல்முனை மாநகர சபையை கைப்பற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வியூகத்துக்குப் பக்கபலமாக செயற்பட மருதமுனை இளைஞர் சமூகம் உறுதிபூண்டுள்ளது. மருதமுனை திறந்த வெளியில் நேற்று மாலை (24) இடம்பெற்ற கலந்துரையாடலில் நான்கு வட்டாரங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி சுமார் 50 இளைஞர்கள் கலந்துகொண்டனர். குறுகிய நேர அழைப்பின் பேரில் கலந்துகொண்ட இவர்கள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வெற்றிக்கு உழைப்பதென்றும், தலைமையின் கரத்தை பலப்படுத்தவும் உறுதிபூண்டனர். அத்துடன், மருதமுனையில் களமிறங்கியுள்ள…

Read More

பாதுகாப்பு செலவீனங்கள் குறைப்பு

கடந்த காலங்களில் 5.5 சதவீதமாக இருந்த பாதுகாப்பு செலவீனங்கள் தற்போது 3 சதவீதமாகக் குறைக்கப்பட்டு  உட்கட்டமைப்பு வசதிகளுக்கு பயன்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.   இதேவேளை கடந்த காலங்களில் பாதுகாப்பு செலவீனங்கள் சதவீதம் இந்த முறை குறைக்கப்பட்டதுடன்  உட்கட்டமைப்பு வசதிகளுக்கு இம்முறை முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

அவன்ட்கார்ட், தாஜூடீன் வழக்குகள் குறித்து உத்தரவு பிறப்பித்த நீதவான் இடமாற்றம்

அவன்ட்கார்ட் மற்றும் தாஜூடீன் வழக்குகள் குறித்து உத்தரவு பிறப்பித்த நீதவான் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்குகள் தொடர்பில் உத்தரவுகளை பிறப்பித்த கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸிற்கு இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீதிசேவை ஆணைக்குழுவினால் இந்த உடனடி இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கொழும்பு பிரதான மஜிஸ்திரேட் நீதிமன்றின் 3ம் இலக்க நீதிமன்றில் நீதவானாக கடமையாற்றிய மேலதிக நீதவான் நிசாசந்த பீரிஸ் 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மாத்தறை மாவட்ட நீதிமன்ற நீதவானாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்….

Read More

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு தாஹிர் எம்.பி விஜயம்!

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்ட (24) பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர், வைத்திய அத்தியட்சகர் டொக்டர் டீ.பிரபாசங்கரை சந்தித்துக் கலந்துரையாடினார் இதன்போது, சம்மாந்துறை பிரதேசத்திற்கான அரச ஒசுசல ஒன்றின் தேவை குறித்து கலந்துரையாடியதுடன், வைத்தியசாலையின் தேவைகள் தொடர்பிலும் பாராளுமன்ற உறுப்பினர் கேட்டறிந்துகொண்டார். இந்நிகழ்வில், சம்மாந்துறை பிரதேச முன்னாள் தவிசாளரும் கட்சியின் அரசியல் அதிகாரபீட உறுப்பினருமான ஐ.எல்.எம்.மாஹிர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியக செயலாளர் எஸ்.முஹம்மட் அலி ஜின்னா உட்பட வைத்தியசாலையின் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

Read More

நேபாளத்தில் விமான விபத்து

துருக்கி நாட்டின் விமான சேவைக்குச் சொந்தமான விமானமொன்று நேபாளத்தின் காத்மண்டுவில் உள்ள விமானநிலையத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளது. துருக்கியின் ஸ்தான்புல் நகரிலிருந்து வந்த விமானமொன்று ‘திரிபுவன்’ விமானநிலையத்தில் தரையிரங்க முற்பட்ட வேளையில் ஓடுபாதையை விட்டு விலகியுள்ளமையாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது 238 பேர் விமானத்தில் இருந்ததாகவும் அவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Read More

பொலிஸ் பாிசோதகரொருவர் கைது!

மாரவில பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த பொலிஸ் பரிசோதகரொருவர் கொழும்பு விஷேட விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த பொலிஸ் அதிகாரி இதற்கு முன்பதாக சீதுவ பிரதேசத்தில் கடமையாற்றி வந்துள்ளார். அக் காலப்பகுதியினுள் வீடுடைப்பு மற்றும் திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரொருவரை தடுத்து வைத்து வன்மையாக தாக்கியதாக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடொன்றில் பெயரிலேயே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More