Headlines

இலங்கையில் மனித உரிமைகள் நிலை முன்னேறி விட்டது அமெரிக்கா

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் மனித உரிமைகள் நிலைமையில் குறிப்பிடத்தக்களவு மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று, ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதுவர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார். நியூயோர்க்கில் இலங்கை வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரவை சந்தித்து கலந்துரையாடிய பின்னர் அவர் தனது ருவிட்டர் தளத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Read More

சிரியாவில் ISIS இலக்குகள் மீது அமெரிக்கா விமான தாக்குதல்

ஐ.எஸ்., வாதிகள் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது. இது ஐ.எஸ். தடுப்பு நடவடிக்கை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

Read More

நாட்டை முன்னேற்ற அறிஞர்கள் மற்றும் புத்திஜீவிகள் ஒன்றினைய வேண்டும்

நாட்டை முன்னேற்றுவதற்கு அறிஞர்கள் மற்றும் புத்திஜீவிகள் ஒன்றினைய வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அரசியல்வாதிகளால் மட்டும் நாட்டை முன்னேற்ற முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நேற்று (8) பத்தரமுல்லயில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார பின்னடைவை வெற்றிக்கொள்வதுடன், அரசியல் பிரச்சினைகளை வெற்றிகொள்வதற்கும், சமூக பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் புத்திஜீவிகள் மற்றும் அறிஞர்களின் பங்களிப்பு அவசியம் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். மேலும் மேல்மாகாணம் மற்றும் நாடு பூராகவும் அதிகமான ஆசிரியர்…

Read More

இனி சீன நிறுவனங்களுக்கு முன்னுரிமை கிடையாது – ரவி

மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தினால் கொடுக்கப்பட்டதைப் போன்று முன்னுரிமைச் சலுகைகள், சீன நிறுவனங்களுக்கு இனிமேல் வழங்கப்படாது என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக தெரிவித்துள்ளார். இது குறித்து ´சவுத் சைனா மார்னிங் போஸ்ட்´ என்ற ஹாங்காங் நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், ‘கொழும்புத் துறைமுக நகர திட்டத்தை மேற்கொள்ளும் சீன நிறுவனத்திடம், சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தாக்கம் குறித்த எந்த பதிவுகளோ, சாத்திய ஆய்வு குறித்த அறிக்கைகளோ, அரசாங்கம் அங்கீகாரம் அளித்தமைக்கான ஆவணங்களோ இல்லை. இவற்றை அவர்கள் செய்யத் தவறியதால் தான், ஏதாவது…

Read More

அக்குரணை உமர் ஹஸ்ஸாலியின் மறைவுக்கு அமைச்சர் ரிஷாட் அனுதாபம்!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கண்டி மாவட்ட முக்கியஸ்தரும், அக்குரணை கிளையின் தலைவருமான உமர் ஹஸ்ஸாலியின் மறைவு குறித்து, தாம் வருந்துவதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். “கண்டி மாவட்டத்தில் கட்சியின் வளர்ச்சியில் அதீத ஈடுபாடு காட்டிய அன்னார், ஆரம்ப காலம் முதல் இந்த மாவட்டத்தில் கட்சி தொடர்பில் தெளிவுபடுத்தி, மக்கள் மனதில் வேரூன்றச் செய்தவர். பொறியியலாளரான இவர் சமுகத்தின் பால் அதிக அக்கறை காட்டியவர். சமுதாயப் பணியை சந்தோசமாக மேற்கொண்ட அவர், கண்டி மாவட்டத்தில்…

Read More

பெரும்பான்மை இன சிறுவனின் செவிப்புலனுக்கு உதவிய முஸ்லிம்.. மகிழ்ச்சியில் ஆழ்த்திய ஐ.டி.என் செய்தி

அம்பலாங்கொடை பட்டபொல பிரதேசத்தைச் சேர்ந்த குலரத்ன ஆகாஸ் என்ற ஐந்து வயது செவிப்புலனற்ற சிறுவனின் காதில் பொருத்தப்பட்டிருந்த பெறுமதிமிக்க செவிப்புலனை அறியும் கருவி கடந்த 5ம் திகதி கொழும்பு கடற்கடை பிரதேசத்தில் வைத்து களவாடப்பட்டது. இது குறித்த செய்தியை ஐ.ரி.என், வசந்தம் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டிருந்தது. இதை பார்த்த முன்னாள் ஐ.ரி.என்.பணிப்பாளர் புரவலர் ஹாசிம் உமர் சுமார் ஒரு இலட்சத்து 35 ஆயிரம் ரூபா பெறுமதியான இக்கருவியை அச்சிறுவனுக்கு பெற்றுக்கொடுக்க முன்வந்ததுடன் நேற்று (11) ஐ.ரி.என்.தொலைக்காட்சி நிறுவனத்தில்…

Read More

வாகனேரி கட்டாக்காட்டுப் பகுதியில் திருடப்பட்ட எருமை மாடுகள் கைப்பற்றப்பட்டன

(வாழைச்சேனை நிருபர்) வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் எருமை மாடுகள் திருடப்பட்ட நிலையில் பொதுமக்களின் முயற்சியால் தடுக்கப்பட்ட சம்பவம் நேற்று (26) இரவு இடம் பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். வாகனேரி கட்டாக்காட்டுப் பிரதேசத்தில் மாடுகளை வளர்க்கும் மாட்டுப்பட்டியில் இருந்து 102 எருமை மாடுகளை திருடர்கள் திருடி நேற்று இரவு 12.00 மணியளவில் கொண்டு வரும் வழியில் ஆளம்குளம் பிரதேசத்தை அன்மித்த போது இரவில் மாடுகளை சாய்த்து வருவதால் இது திருடப்பட்ட மாடுகளாகத்தான் இருக்க வேண்டும் என்ற சந்தேகத்தில்…

Read More

1500 அரச வாகனங்கள் காணாமல் போயுள்ளது-நிதி அமைச்சர்

கடந்த கால ஆட்சியின் போது பயன்படுத்தப்பட்ட 1500 வாகனங்கள் காணாமல்போயிருப்பதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். வாகன இறக்குமதியாளர்களுடன்இ டம்பெற்ற கலந்துரையாடலிலேயே அவர் இதனைத்தெரிவித்துள்ளார்.

Read More

கர்ப்பிணிகள் மைக்ரோவேவ் ஓவன், ஹேர் டிரையர் பயன்படுத்தினால் குழந்தைகளுக்கு ஆஸ்துமா வரும்!

கர்ப்பிணிகள் மைக்ரோவேவ் ஓவன், ஹேர் டிரையர் மற்றும் வேக்கம் கிளீனர் ஆகிய சாதனங்களுக்கு அருகில் நீண்ட நேரம் இருந்தால் குழந்தைகளுக்கு ஆஸ்துமா வர வாய்ப்பு அதிகம் என ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் குழந்தைகளிடம் ஆஸ்துமா நோய்க்கான காரணங்கள் குறித்து ஆய்வு செய்தனர். மைக்ரோவேவ் ஓவன், ஹேர் டிரையர் மற்றும் வேக்கம் கிளீனர் உள்ளிட்ட மின்காந்த சக்தி(மைக்ரோவேவ்) அதிகம் உள்ள கருவிகளின் பயன்பாடு பற்றி 801 கர்ப்பிணிகளிடம் கருத்து கேட்டனர். பின்னர் அவர்களுக்கு பிறந்த குழந்தைகளின்…

Read More

மதுபானசாலைகளுக்கு நாளை பூட்டு

சர்வதேச தொழிலாளர் தினமான, நாளை ஞாயிற்றுக்கிழமை மே 1ஆம் திகதியன்று, மதுபானசாலைகள் மூடப்படும் என்று கலால் திணைக்களம் அறிவித்துள்ளது. மே தினக்கூட்டங்கள் மற்றும் பேரணிகள் இடம்பெறும் கொழும்பு மாவட்டத்திலும் காலி மற்றும் நுவரெலியா நகர சபை அதிகாரத்துக்கு உட்பட்ட பிரதேசங்களில் உள்ள மதுபானசாலைகளே மூடப்படும் என்றும் அத்திணைக்களம் அறிவித்துள்ளது.

Read More

ஆதார வைத்தியசாலையின் குறைபாடுகளை நீக்கவும்: அமைச்சர் றிஷாத்

புத்தளம் ஆதார வைத்தியசாலையின் குறைபாடுகளை தீர்ப்பது தொடர்பிலும், வைத்தியசாலையின் ஏனைய தேவைகள் தொடர்பிலும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுடன் கலந்துரையாடலொன்றுக்கான ஏற்பாடுகள் இடம் பெற்றுவருகின்றது. கைத்தொழில், வணிகத் துறை அமைச்சர் றிஷாத்  பதியுதீன் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவவி அவர்களின் வேண்டுதலின் பேரில் சுகாதார அமைச்சருடன் கலந்துரையாட நேரம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. புத்தளம் ஆதார வைத்தியசாலையின் நீண்ட நாள் தேவையான குளிருட்டப்பட்ட பிரேத அறை தொடர்பிலும், காணப்படும் சில குறைபாடுகளை உடன் நீக்குவது தொடர்பிலும் இதன்போது கவனம்…

Read More

”மண்சரிவு ஏற்பட்ட மீரியபெத்த கிராமத்தவர்கள், உயிருடன் இருப்பதற்கான நம்பிக்கை இல்லை” – அமைச்சர்

பாடசாலை சென்ற மாணவர்கள் மற்றும் தோட்ட தொழிலுக்காக சென்ற தரப்பினரை தவிர மண்சரிவு ஏற்பட்ட மீரியபெத்த கிராமத்தில் இருந்த ஏனைய அனைவரும் உயிருடன் இருப்பதற்கான நம்பிக்கை இல்லை என  அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இன்றைய தினம் அந்த பிரதேசத்திற்கு விஜயம் செய்திருந்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மண்சரிவு ஏற்பட்ட மண்மேட்டு பகுதிக்கு பின்னால், நிலச்சரிவு ஏற்படுவதன் காரணமாக மீட்பு பணிகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே, மண்சரிவில் காணாமல் போனவர்களை…

Read More