Headlines

ஒரு பள்ளிவாசலின் சொத்தில் 5 ஸ்டார் ஹோட்டல் கட்டியுள்ளார்கள்: உயர் நீதிமன்ற நீதியரசர் சலீம் மர்சுப்

அஸ்ரப் ஏ. சமத்: சட்டத்தரணி ஏ.ஜி.எச். அமீன் இதுவரை 17 சட்டத்துறை புத்தகங்களை மும்மொழிகளிலும் எழுதியுள்ளார். வெள்ளவத்தை மூர் இஸ்லாமிய கலாச்சார மண்டபத்தில் ஆங்கில மொழி மூலமான அல் அமீன் லோ றிபோட் நூல் இன்று வெளியீட்டு வைக்கப்பட்டது. இந் நிகழ்வு ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா தலைமையில் நடைபெற்றது. நீதியமைச்சர் ரஊப் ஹக்கீம், உயர் நீதிமன்ற நீதிபதி சலீம் மர்சுப் நூலாசிரியர் ஏ.ஜி.எச். அமீன் மற்றும் சட்டத்தரணி பசீர் அஹமட் ஆகியோறும் உரை நிகழ்தினார்கள். நூலின்…

Read More

நாட்டின் பாதுகாப்புக்கு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை தேவை: டி.எம்.ஜயரட்ண

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை இல்லை என்றால் நாடு எதிர்கொள்ளும் பிரச்சினைகளை கட்டுக்குள் கொண்டு வந்து பாதுகாப்பாக வைக்க முடியாது போகும். எனவே, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைய அவசியமானது என்று பிரதமர் டி.எம்.ஜயரட்ண தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர், “நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்போம்” என்பவர்களுக்கு கட்டுக்கட்டாக (அமெரிக்க) டொலர்கள் கிடைப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “சிலர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை…

Read More

இலங்கையின் சமூக பதற்றம் ஐ.நாவின் கவனத்தில் உள்ளது

சமாதானத்துக்கான பாலங்களை கட்டியெழுப்ப “சீரிய சமூக இணையம்” போன்ற அமைப்புக்கள் முக்கிய பங்கை வகிப்பதாக ஐக்கிய நாடுகளின் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்தோனேசியா பாலியல் சீரிய சமூக இணையத்தின் மாநாடு நடைபெற்று வருகிறது. இதன்போது உரையாற்றிய நாடுகளின் இணையம் அமைப்பின் உயர் பிரதிநிதி நாஸிர் அப்துல்லாசிஸ் அல் நாஸர், தமது அமைப்பு வன்முறை தடுப்பு மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி அபிவிருத்திக்கு முனைப்புக்காட்டுவதாக குறிப்பிட்டார். இந்த நிகழ்வில் ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் பேன் கீ மூனும் பங்கேற்றார்.

Read More

மலேசியன் ஏர்லைன்ஸில் பணியாற்றிய 6000 பேருக்கு வேலை இழப்பு!

இவ்வருடம் அடுத்தடுத்து இரு மலேசியன் ஏர்லைன்ஸின் சர்வதேச பயண விமானங்கள் விபத்தில் சிக்கி அவற்றில் பயணித்த அனைவருமே உயிரிழந்து இருந்ததை அடுத்து மலேசியன் ஏர்லைன்ஸ் விமான சேவை நிறுவனம் மிகவும் நட்டத்துடன் இயங்குவதால் சமீபத்தில் இந்நிறுவனத்தில் பணியாற்றிய 6000 பேரை வேலையை விட்டு நீக்கி வீட்டுக்கு அனுப்பியுள்ளது அந்நிறுவனம். மார்ச் 8 ஆம் திகதி கோலாலம்பூரில் இருந்து பீஜிங்கிற்கு 239 பயணிகளுடன் சென்ற MH370 என்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் மாயமாகி இதுவரை ஒரு சிறிய…

Read More

வினாத்தாள்கள் திருத்துமிடங்களைத் தவிர, அரச பாடசாலைகள் திங்கள் ஆரம்பம்!

க.பொ.த. உயர்தர மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள்கள் திருத்தும் பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய பாடசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பிக்கவுள்ளன. செப்டெம்பர் மாதம் 1ஆம் திகதி திங்கட்கிழமை மூன்றாம் தவணைக்கான கல்வி செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட விருப்பதாக கல்வி அமைச்சின் பாடசாலைகள் செயற்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. உயர்தர பரீட்சை விடைத்தாள்களை முதலாவது கட்டமாக மதிப்பீடு செய்யும் மத்திய நிலையங்களாக செயற்படும் 10 பாடசாலைகள் மற்றும் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் மத்திய நிலையங்களாக…

Read More

நீர் நிறைத்து வைக்கப்பட்டிருந்த வாளியில் தலை கீழாக விழுந்து குழந்தை பலி ஏறாவூர் – ஐயங்கேனியில் சம்பவம்

ஏறாவூர் அபூ பயாஸ் ஏறாவூர்: ஏறாவூர் பொலீஸ் பிரிவுக்குட்பட்ட ஐயங்கேனி தமிழ் பிரிவில் இன்று மாலை திருமால் பவித்திரன் என்ற பதினெட்டு மாத ஆண் குழந்தை இதனது வீட்டு குளியலறையில் நீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் ரக வாளியினுள் தலை கீழாக விழுந்து மூச்சுத்திணறி மரணமாகிய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. குளியலறையில் உடுப்புகள் கழுவிக்கொண்டிருந்த இக்குழந்தையின் தாயாரான பிரியா என்பவர் தனது ஒரு மாத பெண் குழந்தைக்கு தாய்ப்பால கொடுப்பதற்காக எழுந்து சென்றபின்னர் இதாயை தேடி…

Read More

அரசாங்கத்துக்கு நாம் அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க வேண்டும் – ரவூப் ஹக்கீம்

அரசாங்கம் சார்பில் எந்தவொரு முஸ்லிம் வேட்பாளர்களும் களமிறக்கப்படாமையானது ஊவா வாழ் முஸ்லிம்களை புறந்தள்ளியிருப்பதை தெட்டத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. எனவே நடைபெறவுள்ள ஊவா மாகாண சபை தேர்தலில் அனைவரும் ஒன்றிணைந்து அரசுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க வேண்டும் என மு.கா. தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். பதுளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்; இந்நாட்டில் அனைத்து இன மக்களும் பலஸ்தீனத்துக்கு ஆதரவு வழங்கி வரும் நிலையில் பொதுபலசேனா மாத்திரம் இஸ்ரேலுக்கு…

Read More

வடக்கு, வட கிழக்கு கரையோரங்களில் கடும் காற்று வீசும்

நாட்டின் வடக்கு மற்றும் வட கிழக்கு கரையோரங்களில் கடும் காற்று வீசும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 60 கிலோமீற்றருக்கும் அதிகமாகக் காணப்படும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேற்கு, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளை மழை பெய்வதுடன், ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் பிற்பகல் அல்லது மாலை வேளைகளில் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்யும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்போது, வங்காள…

Read More

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்கள் ஜும்ஆ தொழுகையை தம்புள்ள பள்ளிவாசலில் நிறைவேற்றினர்

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கும் இலங்கை கிரிக்கெட் அணிக்கும் இடையிலான மூன்றாவது ஒரு நாள் போட்டி நாளை தம்புள்ள ரன்கிரி மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இதில் கலந்துகொள்வதற்காக இன்று தம்புள்ளைக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியினர் சென்றுள்ளனர். இதன்போது இன்று நண்பகல் ஜும்ஆ தொழுகையில் கலந்துகொள்வதற்காகவே பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் தம்புள்ள பள்ளிவாசவலுக்கு விஜயம் செய்துள்ளனர். எனினும் ஜும்ஆ தொழுகையில் கலந்துகொள்வதற்கு கலேவ பள்ளிவாசலிற்கு செல்லூமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களின் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும் அதனை…

Read More

ISIS விடயத்தில் இலங்கை வாழ் முஸ்லிம்கள் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் – ஜம்இய்யத்துல் உலமா

அஷ்-ஷைக் எம்.எப்.எம். பாழில் அண்மைக் காலமாக IS பற்றியும் அவர்களின் நடவடிக்கைகள் பற்றியும் ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டுக் கொண்டிருப்பதை நாம் அறிவோம். ISIS என்று முன்னால் அறியப்பட்ட இவ்வியக்கம் ஈராக், சிரியா போன்ற நாடுகளின் சில பகுதிகளை கைப்பற்றி இஸ்லாமிய ஆட்சியைப் பிரகடனப்படுத்தியுள்ளதாக சொல்லிவருகின்றது. இப்பிரகடனம் இஸ்லாமிய விழுமியங்களுக்கு மாற்றமானது என்று உலக நாடுகளின் இஸ்லாமிய மார்க்க அறிஞர்களும், இஸ்லாமிய இயக்கங்களும் கருதுகின்றன. இவர்களின் தீவிரப் போக்கும், அத்துமீறிய கொடூறக் கொலைகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு…

Read More

சவூதி அரேபியா அதிகாரிகள், இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர்

தென்னாசிய நாடுகளில் இருந்து வீட்டு பணியாட்களை அழைப்பதில் ஏற்பட்டுள்ள கஸ்டங்களை சீர்செய்து கொள்ளும் ஒரு கட்டமாக சவூதி அரேபியாவின் அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர். ஐந்து நாள் பயணமாக அவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சவூதி வர்த்தக சம்மேளனத்தின் பாரசீக குடா தேசிய ஆட்சேர்ப்பு குழுவினால் இந்த பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனினும் மேலதிக தகவல்கள் எவையும் வெளியிடப்படவில்லை. இலங்கையின் பணிப்பெண் ரிசானா நபீக் சவூதியில் மரண தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டதன் பின்னர் அங்கு செல்லும் இலங்கை…

Read More

யூதரான பொலிஸ் உயர் அதிகாரி இஸ்லாத்தை ஏற்றார்..!

ஒரு சராசரி அமெரிக்கன் எவ்வாறு தனது வாழ்வை நகர்த்துவானோ அது போலவே எனது வாழ்வும் நகர்ந்தது. தொடக்க காலத்திலிருந்தே நேர்மையாக வாழ பழக்கப்பட்டவன். ஒரு முக்கிய காவல் துறை அதிகாரியாக இருந்தாலும் எனது தேவைகளுக்கான பணத்தை கொடுத்து விட்டே எனது பணிகளை முடிப்பேன். நேர்மையாக வாழ்வை நடத்திட முடிந்த வரை முயற்சிப்பேன். எனது நண்பன் நஜீர் மூலமாகத்தான் எனக்கு இஸ்லாம் அறிமுகமானது. 1980 களில் அவனோடு எனக்கு பழக்கம் ஏற்பட்டது. அவனது நடவடிக்கைகள் அவன் என்னோடு பழகிய…

Read More