Headlines

விலை அதி­க­மாக விற்­­கப்­படும் வர்த்­தக நிலை­யங்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை

வரு­டப்­பி­றப்பு காலங்­களில் பொருட்களின் விலை அதி­க­ரித்து விற்­கப்­படும் வர்த்­தக நிலை­யங்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என அமைச்சர் றிஷாத் பதி­யுதீன் தெரி­வித்தார். அவர் மேலும் கூறு­கை­யில், நஷ்டத்தில் இயங்கும் ஒரு நிறு­வ­ன­மாக பேசப்­பட்ட நிறு­வ­னத்தை எம்மிடத்தில் பொறுப்புத் தந்­ததன் பின்னர் குறு­கிய காலத்தில் அதனை லாப­மீட்டும் நிறு­வ­ன­மாக மாற்­றி­யுள்ளோம். சதொச நிறு­வ­னத்தின் தலைவர் உட்­பட அமைச்சின் செய­லா­ளர்கள் சதோச நிறு­வ­னத்தின் அதி­கா­ரி­களின் பூரண ஒத்­து­ழைப்­போடு இது சாத்­தி­ய­மா­கி­யுள்­ளது. அது மாத்­தி­ர­மின்றி அரசாங்­கத்தின் நிதி­யின்றி முழு­மை­யாக இந் நிறு­வ­னத்தின்…

Read More

அமைச்சரவைப் பதவிப் பிரமாணம் ஜூம்ஆ நேரம் 12.30 மணிக்கு – முஸ்லிம் MPகள் தர்ம சங்கடத்தில்

இலங்கையின் புதிய அமைச்சரவை இன்று (04) வெள்ளிக்கிழமை ஜூம்ஆ நேரம் 12.30மணிக்கு பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளது. கெபினட் அமைச்சர்களின்; எண்ணிக்கை 45ஆக அதிகரிப்பதற்கு நேற்று பாராளுமன்றம் அனுமதி வழங்கியதையடுத்தே இன்று இந்த அமைச்சரவை பதவிப்பிரமானம் இடம்பெறவுள்ளது. குறித்த அமைச்சரவையில் முகா தலைவர் ரவுப் ஹக்கீம் , அ.இ.ம.கா தலைவர் ரிசாத் பதியுதீன், ஐதேக எம்பிக்களான கபீர் ஹாசிம், ஹலீம் மற்றும் சுகா எம்பியான ஏ.எச்.எம் பௌசி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவ்வாறு தேசிய முஸ்லிம் அரசியல் தலைவர்கள் அமைச்சர்களாக…

Read More

சிறுபான்மை மக்களை திருப்திப்படுத்தாத தேர்தல் முறைக்கு நாம் ஆதரவில்லை

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சர்வதேச தேர்தல் நிபுணர் வொலோனை, அமைச்சர் றிசாத் பதியுதீன் பாராளுமன்றத்தில் சந்தித்து கலந்துரையாடினார். தேர்தல் நடைமுறை மாற்றம் தொடர்பில் வெளிநாட்டிலிருந்து அழைக்கப்பட்டு, அனைத்துக் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடாத்தி வரும் நிபுணர் வொலோனை, கைத்தொழில்,வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் நேற்று (08/06/2016) பாராளுமன்றத்தில், அமைச்சரின் காரியாலாய அறையில் சந்தித்தார். இந்தச் சந்திப்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், பிரதி அமைச்சருமான அமீர் அலி, நவவி எம்.பி, இஷாக் எம்.பி உட்பட பலர் பங்கேற்று,…

Read More

‘பயங்கரவாதத்தின் எந்தச் செயற்பாடுகளுடனும் எமக்கு தொடர்பில்லை’ – 10 மணிநேர விசாரணையின் பின்னர் முன்னாள் அமைச்சர் ரிஷாட் ஊடகவியலாளரிடம் எடுத்துரைப்பு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடனோ வேறு எந்த பயங்கரவாதச் செயற்பாடுகளுடனோ தனக்கும் தனது குடும்பத்துக்கும் துளியளவும் தொடர்பு கிடையாதென முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இன்று காலை (09) குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்ட அவர், சுமார் 10 மணிநேர விசாரணையின் பின்னர், ஊடகவியலாளரிடம் கருத்து தெரிவித்த போதே இவ்வாறு கூறினார். மேலும் தெரிவித்ததாவது, “நேற்றுக் காலை (08) மன்னாரில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் நான் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, குற்றப்புலனாய்வு பிரிவிலிருந்து எனக்கு தொலைபேசி அழைப்பொன்று கிடைக்கப்பெற்றது….

Read More

அமானுல்லாஹ் அதிபரின் மறைவு சமூகத்துக்கு பாரிய இழப்பு அமைச்சர் றிஷாட் அனுதாபம்

முன்னாள் அதிபர் அமானுல்லாஹ் ஆசிரியரின் மறைவு ஈடுசெய்ய முடியாதது என்று அமைச்சர் றிஷாட் பதியுதீன் விடுத்துள்ள அனுதாபச்செய்தியில் தெரிவித்துள்ளார். மன்னார் தாராபுரத்தில் சிறந்த கல்விக்குடும்பத்தில் பிறந்த அவர், நீண்ட காலம் நல்லாசிரியராகவும் திறமை மிக்க அதிபராகவும் பணியாற்றியவர். அவரது தந்தையார் ஒரு புலவர் ஆவார். . எனது அரசியல் வாழ்வில் மறக்க முடியாத ஒருவராக அவர் இருந்தார். தந்தையைப்போல எனது அனைத்து செயற்பாடுகளுக்கும் ஆலோசனை வழங்குபவராகவும் உற்சாகம் அளிப்பவராகவும் இருந்து அந்தப் பணிகளில் என்னுடன் இணைந்து செயற்படுபவராகவும்…

Read More

கூட்டுறவுத்துறையைப் பொறுப்பேற்ற பின்னர் வீண்விரயம் இடம்பெறவில்லை – அமைச்சர் றிஷாத்

-சுஐப் எம்.காசிம்   – கூட்டுறவுத்துறையை நான் பொறுப்பேற்ற பின்னர் அந்தத் துறை வளர்ச்சிப்  பாதையில் சென்றுகொண்டிருக்கின்றது. ஒரு சதமேனும் வீண்விரயமாக செலவழிக்கவுமில்லை. செலவழிப்பதற்கு அனுமதி வழங்கவுமில்லை இவ்வாறு கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். கொழும்பு, தாமரைத் தடாகக் கலையரங்கில் 94 வது சர்வதேச கூட்டுறவுதின விழா இன்று (02/07/2016) நடைபெற்றபோது, சிறப்பு விருந்தினராக அவர் கலந்துகொண்டு உரையாற்றினார். இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், அதிதிகளாக பிரதி அமைச்சர் சம்பிக்க…

Read More

தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் மக்கள் காங்கிரஸின் பிரமுகர்கள், உறுப்பினர்களுடனான கலந்துரையாடல்…

உள்ளூரட்சித் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி நாடளாவிய சபைகளில் தனித்துப் போட்டியிடுவதா? அல்லது இணைந்து போட்டியிடுவதா? என்பது தொடர்பான கலந்துரையாடல் கட்சித் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையில் இன்று மாலை   (08/ 12/ 2017) இடம்பெற்றது. நாட்டின் பல பாகங்களிலுமுள்ள கட்சியின் முக்கியஸ்தர்கள், அமைப்பாளர்கள், தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் மற்றும் கட்சியின் கிளை உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டு தமது கருத்துக்களை முன்வைத்தனர். தனித்துப் போட்டியிடுவதால் ஏற்படும் சாதக பாதகங்கள்…

Read More

சுனாமி நிவாரண மோசடி – டிரான் அலஸ் வௌிநாடு செல்லத் தடை!

கடந்த சுனாமி அவல காலத்தில் வடகிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு கட்டவென கூறி ´ராதா´ என்ற நிறுவனத்தின் ஊடாக நிதி மோசடி செய்ததாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டினால் பாராளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸிற்கு வௌிநாடு செல்ல நீதிமன்றம் தடை விதித்துள்ளது. சம்பவம் வருமாறு, கடந்த சுனாமி அவல காலத்தில் வடகிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு கட்டவென கூறி அப்போதைய ஜனாதிபதி அலுவலகத்தில் அனுமதி பெற்று ´ராதா´ என்ற நிறுவனம் 2006இல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவன தலைவராக டிரான் அலஸ் செயற்பட்டுள்ளார்….

Read More

இலங்கையில் மெகி நூடில்ஸ் தடை?

அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகம் மொனோ சோடியம் குளுட்டாமேட் காணப்படுவதால் இந்தியாவில் தடைசெய்யப்பட்ட மகி நூடில்ஸ் உள்ள சரக்குகளை இறக்குமதியாளர்களுக்கு வழங்குவதை நிறுத்துமாறு இலங்கை சுங்க திணைக்களத்திடம்  நுகர்வோர் அதிகார சபை நேற்று கோரியுள்ளது. இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மகி நூடில்ஸை தடை செய்யுமாறு இலங்கைக்கான இந்திய தூதரகம் நுகர்வோர் அதிகார சபையிடம் கோரியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

முஸ்லிம்களை குறிவைக்கும் விபச்சார ஊடகங்கள்!

வாஞ்ஜுர் எந்த இழிசெயலுக்கும் தயங்காம‌ல் ஏதாவது செய்திகளைப் புனைந்து வெளியிட்டுத் தம் அரிப்பைத் தீர்த்துக் கொள்ள வேசியாகி கீழிறங்கி ஊடகங்கள். ஒரு புறத்திலிருந்து மற்றொரு புறத்துக்கு ஒன்றைக் கடத்த உதவுவதே ஊடகம் ஆகும். மின்சாரத்தை ஒரு முனையிலிருந்து மற்றொரு முனைக்குக் கொண்டு வரும் உலோகக்கம்பி அல்லது நீர், அல்லது மின்சாரம் பாயும் எதுவானாலும் மின் கடத்தும் ஊடகமாகும். ஒலி அலைகளைச் சுமந்து வருவதற்குக் காற்று ஊடகம் ஆகும். சிங்கப்பூரிலிருந்து தங்கத்தைக் கடத்தி வரும் ‘குருவி’யும் ஊடகம்தான். யாஹூ…

Read More

நாவிதன்வெளி இளைஞர் சம்மேளனத்தின் புதிய தலைவராக ஊடகவியலாளர் ஜபீர்

நாவிதன்வெளி இளைஞர் சம்மேளனத்தின் புதிய தலைவராக ஊடகவியலாளர் எம்.முஹம்மட் ஜபீர் நேற்று (11) ஏகமானதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். முஸ்லிம் இளைஞர் ஒருவர் நாவிதன்வெளி இளைஞர் சம்மேளனத்தின் தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ளமை இதுவே முதல் முறையாகும்.  நாவிதன்வெளி இளைஞர் சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் ரீ.சுதன் என்பவர் மாவட்ட இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவராக தெரிவு செய்யப்பட்டமையினால் அவருடைய ஏனைய பதவிகளையும் வகித்து அதன் பணிகளை செய்வதிலுள்ள வேலைப்பளு காரணமாக நாவிதன்வெளி இளைஞர் சம்மேளனத்தின் தலைவர் பதவியிலிருந்து பதவி விலகியதைத் தொடர்ந்து புதிய தலைவரைத்…

Read More

புத்தளம், கரைத்தீவு “ரிஷாட் பதியுதீன்” முன்பள்ளி பரிசளிப்பு விழா!

பிரதம அதிதியாக புத்தளம் மாவட்ட அமைப்பாளர் N.T.M.தாஹிர் பங்கேற்பு! புத்தளம், கரைத்தீவு “ரிஷாட் பதியுதீன்” முன்பள்ளியின் வருடாந்த பரிசளிப்பு விழா, சனிக்கிழமை (04) முன்பள்ளி வளாகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில், பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் புத்தளம் மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான N.T.M.தாஹிர் மற்றும் கட்சியின் கரைத்தீவு உறுப்பினர் ஷிபான் உட்பட முக்கியஸ்தர்களும் பங்கேற்றிருந்தனர்.

Read More