Headlines

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின்  முயற்சியினால் அம்புலன்ஸ் வழங்கி வைப்பு!

யுனிசெப் நிறுவனத்தினால் வடமாகாண வைத்தியசாலைகளுக்கான அம்புலன்ஸ் வண்டிகள் வழங்கும் நிகழ்வு வடமாகாண ஆளுனர் தலைமையில் இன்று காலை (13) கைதடியில் அமைந்துள்ள  வடமாகாண சபை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மன்னார் மாவட்ட வைத்தியசாலைகளுக்கும் அம்புலன்ஸ் வழங்கப்பட்டன. அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வேண்டு கோளிற்கிணங்க மன்னார் மாவட்டத்தின் முருங்கன், சிலாவத்துறை, தலைமன்னார் ஆகிய வைத்தியசாலைகளுக்கான அம்புலன்ஸ் வண்டிகள்  வழங்கி வைக்கப்பட்டன. இந்த நிகழ்வில் யாழ் மாவட்ட ,வன்னி மாவட்ட எம்.பிக்கள், மாகாண சபை முன்னாள் அமைச்சர்கள்,  அமைச்சர் ரிஷாட் பதியுதீனின்  பிரதிநிதியாக முன்னாள்  வடமாகாண சபை உறுப்பினரும்  அமைச்சர் ரிஷாட் பதியுதீனின்  பிரத்தியேக செயலாளருமான…

Read More

ISIS யினால் அமெரிக்காவுக்கு கடும் பாதிப்பு – பெண்டகனில் முக்கிய ஆலோசனை

”வழக்கமான முஸ்லிம் அமைப்பிலிருந்து, ஐ.எஸ்.ஐ.எஸ்., முற்றிலும் வேறுபட்டு உள்ளது. இது போன்ற அமைப்பை, நாங்கள் பார்த்ததே இல்லை. இந்த கும்பலை ஒழிக்காவிட்டால், மத்திய தரைக்கடல் நாடுகளுக்கும், அமெரிக்காவுக்கும் கடும் பாதிப்பு ஏற்படும்,” என, அமெரிக்க ராணுவ அமைச்சர், சுக் ஹேஜெல் கூறினார். ஆலோசனை : ‘பென்டகன்’ எனப்படும், அமெரிக்க ராணுவ தலைமையகத்தில், ஐ.எஸ்.ஐ.எஸ்., வாதிகளை ஒடுக்குவது குறித்து, நேற்று முக்கிய ஆலோசனை நடைபெற்றது. அதில், சுக் ஹேஜெல் மேலும் பேசியதாவது: இந்த ஐ.எஸ்.ஐ.எஸ்., வாதிகளை ஒடுக்க, நாம் எதையும்…

Read More

இதுவரை 4 சடலங்கள் மீட்பு: ஏனையோர் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை? (படங்கள் இணைப்பு)

ஹப்புத்தளை – ஹல்துமுல்ல – மீறியபெந்த பிரதேசத்தில் இன்று காலை ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி உயிரிழந்த மூவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பதுளை மாவட்ட பிரதிப் பணிப்பாளர் எம்.எல்.உதயகுமார அத தெரணவிடம் தெரிவித்தார். மீறியபெந்த தோட்டம் முழுமையாக மண்சரிவில் சிக்கியுள்ளதால் அங்கு இருந்த மக்கள் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என அவர் கூறுகின்றார். ஒட்டுமொத்த அரச அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வருகை தந்துள்ளதாகவும் மீட்புப் பணிகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது தொடர்பில் முக்கிய…

Read More

குரங்கு ஆப்பிழுத்த கதையாக மாறிய ஆனந்த தேரரின் விவாதம்!

– ஏ.எஸ்.எம்.ஜாவித் – முஸ்லிம் சமுகத்தினை அழிக்கத் துடிக்கும் இனவாதிகளுக்கு அமைச்சர் றிஷாதின் தொலைக்காட்சி மோதல் முஸ்லிம் சமுகத்திற்கு கிடைத்த வெற்றியாகவே மக்களால் நோக்கப்பட்டுள்ளது. கடந்த திங்கள் இரவு ஆனந்த தேரர் வில்பத்து விவகாரம் தொடர்பாக அமைச்சர் றிஷாத் பதியுதீனை வீண் வம்புக்கு இழுத்து தகுந்த ஆதாரங்களுடன் அவர் கொடுத்த பதிலடிகள் குரங்கு ஆப்பிழுத்த கதையாக ஆனந்த தேரரை திக்குமுக்காட வைத்ததையும் தெனைத் தாங்கிக் கொள்ள முடியாத தேராத் இனவாதக் கருத்துக்களையும், றிஷாதின் குடும்பங்களையும் இழுத்து சம்பவத்தை…

Read More

அமைச்சர்களின் எண்ணிக்கை: அனுமதி வழங்கினார் சபாநாயகர்

தேசிய அரசாங்கத்தில் அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பில் பாராளுமன்றத்தின் அனுமதியை கோரும் வகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் சபையில் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுக்கு சபாநாயகர் அனுமதி வழங்கியுள்ளார். அந்தவகையில் அமைச்சர்கள் 48 பேரும் பிரதியமைச்சர்கள் 45 பேரும் நியமிக்கப்படுவர்.

Read More

ஒன்லைன் மூலம் தெரிவியுங்கள்

நல்லிணக்க பங்காளர்கள், நிபுணர்கள் மற்றும் பொது மக்கள் ஆகியோரின் நல்லிணக்க பொறிமுறைகள் பற்றிய கருத்துக்களை ஒன்லைனில் சமர்பிப்பதற்காக நல்லிணக்க பொறிமுறைகளுக்கான ஆலோசனை வழங்கும் விஷேட செயலணி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளது. காணாமற் போனோர் அலுவலகம், உண்மை, நீதி, நல்லிணக்கம் மற்றும் மீள்-நிகழாமைக்கான ஆணைக்குழு, சட்டப் பொறிமுறைகள், இழப்பீட்டிற்கான அலுவலகம் என்பனவற்றை உள்ளடக்கியதாக நல்லிணக்க பொறிமுறைகளை அமைப்பதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. மேலும், கருத்துக்களை சமர்ப்பிக்க்கும் வகையில் இவ் ஆலோசனை கோரல் செயன்முறை இணையத்தளத்திற்கான சமர்ப்பணப் படிவத்தினை மும்மொழிகளிலும்…

Read More

பெறுபேறுகளை மீள் பரிசீலனை செய்ய 23க்கு முன் விண்ணப்பிக்கவும்

ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சை முடி­வுகள் நேற்று வெளியா­கி­யுள்ள நிலையில், இவற்றில் மீள் திருத்தம் செய்ய விரும்­பு­ப­வர்கள் எதிர்­வரும் 23 ஆம் திக­திக்கு முன்­ன­தாக விண்­ணப்­பிக்­கு­மாறு பரீட்­சைகள் திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது. சம்­பந்­தப்­பட்ட மாண­வர்கள் பாட­சாலை அதிபர் ஊடாக குறித்த விண்­ணப்­பங்­களை அனுப்ப முடியும் எனவும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இது குறித்த மேல­திக விப­ரங்கள் பாட­சாலை அதி­பர்­க­ளுக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் பரீட்­சைகள் திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

Read More

10 இலட்சம் பேருக்கு தொழில் வாய்ப்புகள் வழங்கப்படும் -ரணில்

எதிர்வரும் 05 ஆண்டுகளுக்குள் 10 இலட்சம் தொழில் வாய்ப்பு வழங்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வேலைத்திட்டத்தின் கீழ் குளியாப்பிட்டியவில் ஜேர்மன் வொக்ஸ்வேகன் வாகன உற்பத்தி தொழிற்சாலையொன்று நிறுவப்படும். இந்த தொழிற்சாலையில் வாகனங்கள் உற்பத்தி செய்யப்படும் அதேநேரம், இதன் மூலம் 10 இலட்சம் பேருக்கு தொழில் வாய்ப்புகள் வழங்கப்படும். மேற்படி வெளிநாட்டு முதலீட்டுக்காக அரசாங்கத்தின் பொரு ளாதாரக் குழு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் இத்தொழிற்சாலையை ஆரம்பிப்பதற்கான சாத்தியம் இருப்பதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த…

Read More

ஆசிய அபிவிருத்திக்கான ஐநா பிரதி பொதுச் செயலாளர்- நிதியமைச்சர் சந்திப்பு

ஆறுநாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஆசிய அபிவிருத்திக்கான ஐநா பிரதி பொதுச் செயலாளர் ஹஓலியங் ஷுவிற்கும் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (06) காலை இடம்பெற்றது. இச்சந்திப்பின் போது ஐநாவுடனான உறவை மேம்படுத்த மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள்-முன்னேறுதல் மற்றும் வாய்புக்களை ஏற்படுத்தல் என்பன தொடர்பில் அரசாங்கத்தின் பங்களிப்பு தொடர்பில் இச்சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டது.

Read More

சிறுபான்மை மக்களின் வாக்குகளினாலேயே தோற்றுள்ளேன்: மஹிந்த

ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளிலிருந்து அளிக்கப்பட்ட வாக்குகளினாலேயே தான் தோற்கடிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அதனைத் தவிர்த்து, தான் தோல்வி அடைந்ததாகக் கருதவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று வெள்ளிக்கிழமையே தன்னுடைய சொந்தக் கிராமமான அம்பாந்தோட்டையின் மெதமுலனவிற்கு சென்றார். அங்கு, கூடியிருந்த மக்கள் மத்தியில் பேசும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

Read More