Headlines

ஊவா மாகாணசபை தேர்தல் ; 11,380 தபால் மூல விண்ணப்பங்கள் நிராகரிப்பு

ஊவா மாகாண சபைத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்கவென விண்ணப்பித்த 11 ஆயிரத்து 380 அரசாங்க உத்தியோகத்தர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருப்பதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்தது. நாடு முழுவதுமுள்ள அரசாங்க காரியாலயங்களில் செப்டம்பர் 04 மற்றும் 05 ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பு நடத்தப்படவிருப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார். இந்நிலையில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக ஊவா மாகாணத்திற்கென 42 ஆயிரத்து 37 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றன. இவற்றுள் 30 ஆயிரத்து 657 விண்ணப்பதாரிகளே தபால்…

Read More

சிறுபான்மையினர் அச்சுறுத்தப்படுவதற்கு அரசாங்கம் இடமளிக்கக் கூடாது: சூறா சபை

பொதுபலசேனா அமைப்பும் மியான்மர் நாட்டின் முஸ்லிம் எதிர்ப்பு இயக்கமான  989வும் இலங்கையினுள் இணைந்து செயற்படப் போவது குறித்து விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு தொடர்பில் தேசிய சூறா சபை ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தேசிய சூரா சபை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “பொதுபலசேனா அமைப்பு செப்டெம்பர் மாதம் 28 ஆம் திகதி கொழும்பில் மாநாடொன்றை நடாத்தியது. அம்மாநாட்டைத் தொடர்ந்து இந்த இரண்டு முஸ்லிம் விரோத தீவிர வாதக் குழுக்களும் ஒன்றிணைந்து…

Read More

எதிர்வரும் தேர்தலில் அ.இ.ம.காவினூடாகப் போட்டியிடுவேன் -கலாநிதி ஜெமீல்

கடந்த 09.03.2019ம் திகதி சனிக்கிழமை மாவடிப்பள்ளியில் இடம்பெற்ற இலவச மின்சார மற்றும் குடிநீர் வழங்கும் செயற்றிட்டம் – 2019 நிகழ்வின் பிரதம அதிதியாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கலாநிதி ஜெமீல் கலந்து கொண்டிருந்தார். சுமார் ஒரு வருட காலமாக நேரடி அரசியல் செயற்பாடுகளில் கலந்து கொள்ளாமலிருந்த ஜெமீல், இந்நிகழ்வில் கலந்து கொண்டதோடு, பல்வேறு விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அவரின் பேச்சுக்களனைத்தும், அவர் மீது முன்வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கெதிராகவும், தனது கட்சி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தான்…

Read More

“அப்பொழுதே அவர் இப்படித்தான்”

ஓர் உண்மைச் சம்பவம்!!! -எஸ். ஹமீத்- இற்றைக்குச் சரியாக இருபத்தெட்டு வருடங்களுக்கு முன்னம் நடந்த சம்பவம் இது. விளையும் பயிரொன்றின் இளமைக் காலத்து இயங்குதல் பற்றிய சத்தியம் இது. தனது சமூகத்தின் பசி போக்கும் எத்தனத்தில் அந்தச் சிறிய சிட்டுக் குருவி ஆழிக் கடலின் அலைகளை எதிர்த்துப் போராடிக் கரை மீண்ட நிகழ்வின் சாட்சியம் இது. அது 1990ம் ஆண்டின் இதே கால கட்டம். பாசிஸப் புலிகளின் வெறித்தனமான அடக்குமுறைக்குள் வட, கிழக்கு மாகாணங்களின் முஸ்லிம் சமூகம்…

Read More

அக்குரனை நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக அக்குரனை நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. வெள்ள நீர் வீதியில் நிரம்பி வழிவதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன் வாகனங்கள் வீதியில் செல்ல முடியாத நிலைமை காணப்படுகின்றது. வியாபார நிலையங்கள், வீடுகள், பாடசாலைகள் என்பனவற்றில் வெள்ள நீர் நிரம்பியுள்ளது பல முஸ்லிம் குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Read More

மஹிந்தவின் அலுவலகத்திற்கருகில் ஒருவர் கைது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அலுவலகத்திற்கருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய ஒருவர்  கைதுசெய்யப்பட்டுள்ளனர். பத்தரமுல்லையில் அமைந்துள்ள மஹிந்த ராஜபக்ஷவின் காரியாலயத்திற்கருகில் இன்று மதியம் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய நிலையிலேயே குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read More

மின்சார சபையின் யோசனையை பயன்பாட்டு ஆணைக்குழு நிராகரிப்பு

55 மெகாவோட்ஸ் அளவு சக்திவளத்தை கொள்முதல் செய்ய இலங்கை மின்சாரசபை முன்வைத்த யோசனையை பொது பயன்பாட்டு ஆணைக்குழு நிராகரித்துள்ளது. நாட்டின் மின்சாரத் தேவையை கருத்திற்கொண்டு இந்த 55 மெகாவோட்ஸ் மின்சார கொள்வனவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் பெற்றுத்தருமாறு மின்சாரசபை, பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்திருந்தது. எனினும் இது நடைமுறைகளை மீறும் செயல் என்று பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது

Read More

சவூதியில் ஜின்கள் பயத்தால் பள்ளிக்கூடம் செல்ல மறுக்கும் மாணவிகள்: சவூதியில் பரபரப்பு!

தெற்கு மதீனா மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் அமைந்திருக்கும் பெண்களுக்கான ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் சுமார் 181 மாணவிகள் கடந்த வாரம் புதன் மற்றும் வியாழக் கிழமைகளில் பள்ளிக் கூடம் செல்ல மறுத்துள்ளனர். அந்த பள்ளிக் கூடத்தில் ஜின்கள் நடமாட்டம் இருப்பதாகவும் அதனால் தாங்கள் அந்த பள்ளிக்கு செல்ல முடியாது என்று அச்சம் தெரிவித்துள்ளதாக சவூதியின் பிரபல ஆங்கில இணையதளமான ‘அரப் நியூஸ்’ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருக்கிறது. இது குறித்து மண்டல கல்வித் துறை…

Read More

பிரதமர் நாடு திரும்பினார்

ஜப்பானிற்கு ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளார். ஜப்பான் பிரதமரின் அழைப்பையேற்று கடந்த 3 ஆம் திகதி பிரதமர்  ஜப்பான் சென்றமை குறிப்பிடத்தக்கது.

Read More

கிழக்கு பல்கலையின் கல்வி நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பம்

மட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழகத்தில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கல்வி நடவடிக்கைகள் இன்று (9) மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி தங்கமுத்து ஜயசிங்கம் தெரிவித்தார்.

Read More

பிரதேச சபை உறுப்பினர் முஸ்தபா ஜலீலின் வேண்டுகோளின் பேரில் மாவடிப்பள்ளி பொதுநூலகத்தின் சிரமதானப் பணிகள் முன்னெடுப்பு! 

-சாஜித்- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் காரைதீவுப் பிரதேச சபையின் மாவடிப்பள்ளி வட்டார பிரதேச சபை உறுப்பினர் முஸ்தபா ஜலீலின் முயற்சியில், மாவடிப்பள்ளி பொதுநூலகத்தின் சிரமதானப் பணிகள் இன்று (12) முன்னெடுக்கப்பட்டன. “மாவடிப்பள்ளி பொதுநூலகம் சில காலமாக பற்றைக்காடுடன், தூசுகள் படிந்து சீரின்மையாகக் காட்சியளித்தது. இதனைப் பார்வையிட்ட உறுப்பினர் ஜலீல், எதிர்வரும் றமழானுக்கு முன்பு இதனை  சுத்தம் செய்ய வேண்டுமென்ற நோக்குடன், மாவடிப்பள்ளி SEDO அமைப்புக்கு பரஸ்பர சிரமதான அழைப்பு ஒன்றை விடுத்திருந்தார். இதனை ஏற்ற SEDO…

Read More

மருதமுனை கண்டுகொண்ட வரலாறு காணாத அரசியல் தளம்!

-ஊடகப்பிரிவு- கல்முனை கிழக்கில் அரசியல் வரலலாற்றில் பெரும் எண்ணிக்கையிலான மாற்றுக்கட்சியைச் சேர்ந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் அங்கத்தவர்கள், இன்று (06) மருதமுனையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின்போது, மேடையில் ஏறி கட்சியின் தேசியத் தலைவர் ரிஷாட் பதியுதீன் முன்னிலையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டனர். சுனாமி அனர்த்தத்தின் பின்னர் மருதமுனை கிராம மக்களின் பல்வேறு தேவைகள் தொடர்பில் கண்டறிந்து, அவற்றை இந்த மக்களுக்காக பெற்றுக்கொடுத்ததுடன், இலங்கை முஸ்லிம்களின் பாதுகாப்பினை பெரும்பான்மை…

Read More