Headlines

உள்நாட்டலுவல்கள் அமைச்சின் “நிலமெவகர” ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய வேலைத்திட்டத்தினை  மன்னார் முசலியில் ஆரம்பித்துவைத்த அமைச்சர் றிஷாட் பதியுதீன்.

உள்நாட்டலுவல்கள் அமைச்சின் “நிலமெவகர” ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய வேலைத்திட்டத்தினை  மன்னார் முசலி பிரதேச செயலகத்தின் வழிகாட்டலுடன், முசலி தேசிய பாடசாலையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் ஆகியோர் இணைந்து அங்குரார்ப்பணம் செய்து வைத்தனர். முசலி பிரதேச செயலாளர் கே எஸ் வசந்தகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், வட மாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன், உள்நாட்டலுவல்கள் அமைச்சின்…

Read More

கல்முனை வாழ் முஸ்லிம்களின் நீண்ட நாள் தாகமொன்று தணிகிறது…!

(டாக்டர் என். ஆரிப்) இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் முக்கியமான பிரதேசங்களில் கல்முனையும் ஒன்றாகும். இது முஸ்லிம்களைப் பெரும்பாண்மையாகக் கொண்ட ஒரு கரையோரப் பிரதேசமாகும். இந்தப் பிரதேசம் கல்வி மற்றும் பொருளாதார நிலைகளில் முன்னேற்றம் கண்டதுமாகும். நீண்ட காலக்குறைபாடு இத்தகைய பிரதேசத்தில் இதுவரை ஜனாஸாக்களை அரச, தனியார் வைத்தியசாலைகளில் இருந்து எடுத்து வருவதற்கான பிரத்தியேகமான வாகனங்கள் இல்லாமை ஒரு பெரும் குறைபாடாகவே இருந்து வந்தது. முன்னேற்றம் கண்ட இந்தப் பிரதேசத்தில் வாகனங்கள் மலிந்தே காணப்பட்டாலும், ஜனாஸாக்களை தமது வாகனங்களில்…

Read More

வசீம் தாஜூதின் கொலை, சர்வதேச உதவியை நாடவேண்டும் – கொழும்பு பல்கலைகழகம்

வசீம் தாஜூதினின் கொலை தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்க சர்வதேசத்தின் உதவியை நாட வேண்டும் என கொழும்பு பல்கலைகழகம் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளது. வசீம் தாஜூதினின் உயிரிழப்பு தொடர்பில் பாதுகாப்பு பிரிவினரால் திரட்டப்பட்ட சீ.சீ.டி.வி காணொளிகள் ஆய்விற்காக கொழும்பு பல்கலைக்கழக கணனி பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டடிருந்தது. எனினும் சீ.சீ.டி.வி காணொளிகளில் தெளிவின்மை ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் அந்த வாகனங்களின் இலக்கங்களையும் அதில் காணப்படும் நபர்களையும் அடையாளம் காணமுடியாத நிலை காணணப்படுவதாக பல்கலைகழகத்தினர் நீதிமன்றில் குறிப்பிட்டள்ளனர்.

Read More

அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி தொடர்பில் ஆலோசிக்க விசேட குழு நியமனம்

2015ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் தெரிவுசெய் யப்பட்ட அமைச்சர்களுக்கு ஒதுக் கப்பட்ட நிதித்தொகை தொடர்பில் கலந்துரையாடுவதற்கு சபை முதல் வரும் அமைச்சருமான நிமல் சிறி பாலடி சில்வா தலைமையில் 20 பேர் கொண்ட நாடாளுமன்ற விசேட குழுவொன்று நியமிக்கப்பட் டுள்ளது என பிரதியமைச்சர் சந்திர வீரக்கொடி நேற்று சபை யில் அறிவித்தார். நாடாளுமன்றம் நேற்று வியாழக்கிழமை ஒரு மணிக்கு கூறியது. இதன்போது சபாநாயகரின் அநிவிப்பை விடுக்கும் வேளையிலேயே பிரதிசபாநாயகர் சந்திம வீரக்கொடி இதனைத் தெரிவித்தார்….

Read More

இனி பிரதமரிடம் நேரடியாக கேள்வி கேட்கலாம்!

ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் பாராளுமன்ற அமர்வுகளின் போது, அரை மணிநேரம் பிரதமரிடம் நேரடியாக உறுப்பினர்கள் தமது கேள்விகளை கேட்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

இரத்தினபுரி ஜூம்ஆபள்ளியில் பாதிக்கப்பட்டவர்களுடன் தமிழ் முஸ்லிம் தலைவர்கள் சந்திப்பு

ஊடகப்பிரிவு இரத்தினபுரி வெள்ளத்தாலும் மண்சரிவாலும் பாதிக்கப்பட்ட மக்களை இரத்தினபுரி தொகுதி அனர்த்த நிவாரணத்துக்கான அமைப்பாளரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும்,  அமைச்சருமான  றிஷாட் பதியுதீன் இரத்தினபுரி ஜன்னத் ஜூம்ஆ பள்ளிவாயலில் சந்தித்து பாதிக்கப்பட்ட மக்களுக்களுடன் கலந்துரையாடி தேவைகளை கேட்டறிந்தார். இவ்விசேட  கலந்துரையாடலில் எதிர்க்கட்சித்  தலைவர் இரா.சம்பந்தன் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா எம்.பி, சுமந்திரன் எம்.பி ஆகியோர் பங்கேற்றனர். இந்தப் பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் துன்பங்களில் தாங்களும் பங்கேற்று அன்பையும் நல்லெண்ணத்தையும்…

Read More

‘அஷ்ரப்’ என்னும் விருட்சம் மீண்டும் றிஷாத்’ என்னும் பெயரில் (கவிதை)

நபீஸா எம். மபாஸ் – கல்முனை சம்மாந்துறையில் வித்தாகி கல்முனையில் வேரூன்றி முஸ்லிம்களின் விருட்சமாகி முழு நாட்டிற்கும் நிழல் பரப்ப விருந்திருந்த விருட்சம் அன்று விதையாகி விட்டதுவோ? முஸ்லிம்களின் குரல் ஓங்க முழங்கிய அவர் குரலோசை முழு உலகும் தெரிவிக்க ஏதிரொலித்த இடியோசை இறுதிப்படியை ஏறும் முன்னே இழந்து விட்ட சோகம் என்ன வட-கிழக்கின் விடி-விளக்கு வபாத்தான செய்தி அன்று அத்துத் காக்கா வந்து சொல்ல வதந்தியாகாதா? என நினைத்தும் வானொலியும் பறைசாற்ற வெடித்துவிட்ட இதயங்கள் துடிப்பதையும்…

Read More

மத்திய வங்கி ஆளுநராக இந்திரஜித் குமாரசுவாமி

இலங்கை மத்திய வங்கி ஆளுநராக கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கையைச் சேர்ந்த சர்வதேச பொருளாதார நிபுணரான இந்திரஜித் குமாரசுவாமி,  பொதுநலவாய செயலகத்தின் பொருளாதார விவகாரங்களுக்கான முன்னாள் பணிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி கற்ற இவர், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பை நிறைவு செய்ததுடன், சசெக்ஸ் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டத்தை பெற்றிருந்தார். 1973ஆம் ஆண்டு இவர், இலங்கை மத்திய வங்கியில் இணைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. புதிய ஆளுநர், தனது…

Read More

“யாழ் மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் போதை பொருள் கடத்தல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக் வேண்டும்” பிரதேச சபை உறுப்பினர் நிலாம்!

யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களிலில் போதைப் பொருள் கடத்தல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் யாழ் மாநகர சபை உறுப்பினர் கே.எம் நிலாம் தெரிவித்தார். எமது யாழ்ப்பாண மாநகர சபைக்கு உட்பட்ட அநேகமான பகுதிகளில் போதைப்பொருட்களின் விநியோகம் பயன்பாடு அதிகரித்து வருகின்றது. இந்த விடயத்தை எனது சபையின் கன்னி உரையில் கூட தெரிவித்திருந்தேன். குறிப்பாக, யாழ்ப்பாணத்தில் ஒரு சிலர் வெளியிடங்களிலிருந்து வருபவர்களுடன் இணைந்து இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளில்…

Read More

மைத்திரியின் முன்மாதிரி

-tM- எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பிரசாரத்தில் பொலித்தீன், கட்டவுட், போஸ்டர்கள் பயன்படுத்தப்படுவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தேர்தல் கூட்டங்கள் தொடர்பில் அறிவிப்பதற்காக கூட்டம் நடைபெறும் பிரதேசத்தை அண்டிய பகுதிகளில் பிரசார சுவரொட்டிகள் ஒட்டப்படும் என்று மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இதேவேளை, எதிர்வரும் சில நாட்களில் கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை ஆரம்பமாகவுள்ளதால் பரீட்சை நிலையங்கள் நடைபெறும் இடங்களை அண்மித்த பகுதிகளில் எந்தவொரு பிரசார நடவடிக்கையும் முன்னெடுக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர்…

Read More

நாட்டு மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர் – மஹிந்த

நாட்டு மக்கள் ஆட்சி மாற்றத்தையே விரும்புகின்றனர். அதன் வெளிப்பாடு பாதயாத்திரை ஊடாக உலகிற்கு அம்பலப்படுத்தப்பட்டுள்ளது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். பாதயாத்திரையை குழப்புவதற்கு முயற்சிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன. ஆனால் கொழும்பை நோக்கி செல்வதை யாராலும் தடுத்துவிட முடியாது. பொதுமக்கள் எம்முடன் உள்ளமை உலகிற்கு வௌிப்பட்டுள்ளது. ஆகவே தடைகளை கடப்பது கடினமான விடயமல்ல எனவும் அவர் குறிப்பிட்டார்.

Read More