பிரகடனத்தில் ஜனாதிபதி கையெழுத்திட்டார்
மற்றொரு பதவிக் காலத்துக்காக ஒரு ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு விருப்பம் என்பது தொடர்பிலான பிரகடனத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர் கையெழுத்திட்டார் என்று ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
மற்றொரு பதவிக் காலத்துக்காக ஒரு ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு விருப்பம் என்பது தொடர்பிலான பிரகடனத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர் கையெழுத்திட்டார் என்று ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
சர்வதேச குழந்தைகள் தினமாக நவம்பர் 20 ஆம் திகதி கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொது சபையால் 1954 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20 ஆம் திகதி ஐ சர்வதேச குழந்தைகள் தினமாக பிரகடணப்படுத்தியது. அதிகளவிலான குழந்தைகள் நாள்தோறும் பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் பலவிதமான வன்முறைகளுக்கு ஆளாகின்றனர். அடிப்படை கல்வி இல்லாத குழந்தைகள் அனேகம் பேர். மூன்று வேளை உணவுகூட கிடைக்காமலும், சரியான உடை கிடைக்காமலும், முறையான தங்குமிடம் இல்லாமலும் அல்லலுறும் குழந்தைகள் ஏராளமான பேர்,…
கைத்தொழில் வானிபத்துறை அமைச்சின் கீழ் செயற்படும் கஹட்டகஹ கிரபைட் லங்கா லிமிட்டட் நிறுவனத்தில் தற்காலிகமாக கடமையாற்றிய சுமார் 40 உத்தியோகத்தர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு கடந்த 18ம் திகதி அமைச்சில் இடம்பெற்றது. பிரதம அதிதியாக கலந்து கொண்ட அமைச்சர் ரிசாத் பதியுதீன் இந்நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தார்.
நியாயமான தேர்தல் ஒன்றுக்கான பொதுமக்கள் நடவடிக்கை என்ற பெப்ரல் அமைப்பு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இதன்படி 35 ஆசிய நாடுகளின் கண்காணிப்பாளர்களும் உள்ளுர் கண்காணிப்பாளர்களும் சர்வதேச கண்காணிப்பாளர்களும் கடமைகளில் ஈடுபடுத்தப்படுவர் என்று பெப்ரலின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராட்சி தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணையாளருடன் கலந்துரையாடிய பின்னரே இந்த அழைப்பு விடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை பொதுநலவாய நாடுகளின் பிரதிநிதிகளும் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடுவர் என்று அமைப்பின் செயலாளர் கமலேஸ் சர்மா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஈரானுடன் தற்போது ஐ.நா பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பினர்களான P5+1 நாடுகள் வியென்னாவில் நடத்தி வரும் அணுவாயுதக் கட்டுப்பாட்டுப் பேச்சு வார்த்தையின் காலக்கெடு நவம்பர் 24 இல் முடிவடையவுள்ளது. இந்நிலையில் இதற்கு முன்னர் உறுதியான ஒருமித்த ஓர் தீர்வை எட்ட வேண்டும் என சீனாவின் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ஹொங் லெய் புதன்கிழமை பத்திரிகையாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார். பல மாதங்களாக நீடிக்கும் ஈரானின் அணுச் செறிவூட்டலைக் கட்டுப்படுத்தும் இப்பேச்சுவார்த்தையில் ஈரானின் அணுசக்தித் திட்டத்தின் அளவு மற்றும் நோக்கம்…
தேர்தல் நிச்சயமாக ஜனவரி 2ம் திகதி நடைபெறாது. ஏனெனில் அது ஒரு வெள்ளிக்கிழமை அத்துடன் பௌர்ணமி தினம் என்று ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில் தேர்தல் ஜனவரி 3ம், 7ம் அல்லது 10ம் திகதிகளில் நடைபெறுமா? என்று கேட்ட போது அது கடவுளுக்கே தெரியும் என்று தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார். எல்லாமே, ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ அறிவிப்பிலேயே தங்கியுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டையும், மக்களையும் பாதுகாப்பதற்காகவே பொது எதிரணியாக எதிர்க்கட்சிகளும், சிவில் அமைப்புக்களும் ஒன்றிணைந்துள்ளதாக சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் இணைப்பாளரும், கோட்டை நாக விகாரையின் விகாராதிபதியுமான மாதுலுவாவே சோபித தேரர் தெரிவித்துள்ளார். அத்தோடு, நாட்டில் பயங்கரவாதத்தினை வளர்க்கவோ, இனவாதத்தினை தூண்டவோ சகல எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைக்கவில்லை. அரசாங்கத்தின் கொள்கைத் திட்டத்தினை மாற்றியமைக்கவே நாம் கைகோர்த்துள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்புடனும், சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடனும் பொது எதிரணி தனி நிபந்தனைகளுடன் உடன்படிக்கை செய்துள்ளதாக பொது பல சேனா…
போதை மருந்து கடத்திய குற்றச்சாட்டின் பேரில் இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் ஐந்து பேரும் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டிருப்பதாக இலங்கை இந்திய தூதரக அதிகாரிகள் கூறுகிறார்கள். தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து மீனவர்கள் 2011ம் ஆண்டில் இலங்கைக்கு போதை மருந்து கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு , கொழும்பு உயர்நீதிமன்றத்தால், அக்டோபர் 30ந்தேதியன்று மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்தனர். இந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இவர்கள் மேல்முறையீட்டுக்கு இந்தியா அனைத்து உதவிகளையும் செய்யும் என்று…
ஐக்கிய தேசியகட்சி தமது அடையாளத்தை இழக்கக்கூடாது என்று பொதுபலசேனா தெரிவித்துள்ளது கொழும்பு செய்தியாளர் சந்திப்பின்போது இன்று கருத்துரைத்த பொதுபலசேனாவின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் இதனை தெரிவித்துள்ளார் ஐக்கிய தேசியக்கட்சி ஒரு தலைவரை உறுதிப்பட தெரிவுசெய்யவேண்டும். இதனை விடுத்து பல்வேறுப்பட்ட இடங்களில் பணியாற்றிய பலர் இன்று பொதுவேட்பாளர் பதவிக்காக தடுமாறுகின்றனர் எனவே நாட்டில் கொள்கை ரீதியாக செயற்படக்கூடியவர் என்ற அடிப்படையில் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி வேட்பாளராக முன்வரவேண்டும் என்று கோருவதாக ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.
கட்டாரில் இருந்து பழுலுல்லாஹ் பஹ்ஜான் (அப்பாஸி) காத்தான்குடி-1ம் குறிச்சியைச் சேர்ந்த மௌலவி எம்.ஐ.எம்.ஹஸ்ஸாலி (பலாஹி) (வயது 55) நேற்று புதன்கிழமை காத்தான்குடியில் வபாத்தானார்கள். இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன். ஒரு ஜனாஸா தொழுகைக்காக அவர் சென்ற போதே இம்மரணம் ஏற்பட்டுள்ளது. காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அரபுக்கல்லூரியில் பட்டம் பெற்று வெளியாகிய இவர், கட்டார் கொழும்பு ரெஸ்டுரண்டில் பல வருடங்களாக பணிபுரிந்தது மட்டுமல்லாமல் பல்வேரு சமூக சேவைகளில் ஈடுபட்டும் வந்துள்ளார். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பற்றி இதுவரை எவ்வித…
டாக்டர். ILM. றிபாஸ் MBBS, MSc, MD (Reading at PGIM Colombo): நவம்பர் மாதம் நீரிழிவு நோய்க்குரிய மாதமாக அந்த நோய் பற்றிய விளிப்புனர்வுக்குரிய மாதமாக உலகில் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக நவம்பர் 14 ம் திகதியை உலக நீரிழிவு வியாதிக்கான தினமாக பிரகடனப்படுத்தப்பட்டு உலக நாடுகளின் சுகாதார திணைக்களங்களும் வைத்திய துறை சார்ந்த பல்வேறு நிறுவனங்களும் இந்த தினத்தில் நீரிழிவு நோய் பற்றிய விழிப்புணர்வினை தூண்டி வருவதுடன் இவ்வியாதியினை கட்டுப்படுத்துவதற்கான பல நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு…
ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ அழைப்பு, இன்று வியாழக்கிழமை (20) பிற்பகலில் உள்ள நல்ல நேரத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் அறிவிக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம், நேற்று இரவு இடம்பெற்ற போது, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது, மஹிந்த ராஜபக்ஷவே போட்டியிடுவதற்கான கட்சியின் அங்கிகாரம் கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.