என் வாழ்நாளிலேயே இதுபோன்ற கொடூரமான தாக்குதலை நான் பார்த்ததில்லை – இம்ரான் கான்
பாகிஸ்தான் அரசியலில் திடீர் திருப்பமாக, ராணுவப் பள்ளியில் தாக்குதலை தொடர்ந்து, அரசுக்கு எதிரான போராட்டத்தை நிறுத்திக் கொள்வதாக எதிர்க்கட்சி தலைவர் இம்ரான் கான் அறிவித்துள்ளார். பாகிஸ்தானில், நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், முறைகேடுகளை செய்து நவாஸ் ஷெரீப் ஆட்சியை பிடித்ததாக குற்றம் சாட்டிவந்த இம்ரான்கான், ஷெரீப் பதவி விலக வலியுறுத்தி கடந்த ஆகஸ்ட் 14ம் தேதியில் இருந்து தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார். அதேபோன்று, ஷெரீபின் ஆட்சியில் ஊழல் மலிந்து விட்டதாக குற்றம் சாட்டி, அவருக்கு எதிராக…
