Headlines

ACMC கட்சியின் தம்பலகாம பிரதேச மத்திய குழு தெரிவு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தம்பலகாம பிரதேசத்துக்கான மத்திய குழு தெரிவு துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சரும் கட்சியின் தேசிய அமைப்பாளருமான அப்துல்லா மஹரூப் தலைமையில் இடம் பெற்றது. பிரதியமைச்சர் தலைமையில் நேற்று (08) இரவு தம்பலகாம பிரதேச சபை மண்டபத்தில் இடம் பெற்ற மத்திய குழு தெரிவில் பல பிரிவுகள் உருவாக்கப்பட்டன. எதிர்கால நடவடிக்கைகள் யாவும் இவ் மத்திய குழு ஊடாக கட்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அபிவிருத்திகள் உட்பட வாழ்வாதாரம், இளைஞர்…

Read More

நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் புதிய தலைவராக டாக்டர் லலித் நிமல் செனவீர!!!

கைத்தொழில் மற்றும் வர்த்தகம், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் கீழான நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் லலித் நிமல் செனவீர அவர்களுக்கான நியமனக் கடிதம் இன்று (08) அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது. அமைச்சில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைச்சின் செயலாளர் ரஞ்ஜித் அசோகவும் கலந்து கொண்டார்.

Read More

அமைதியானதும் நிம்மதியானதுமான தேசத்தைக் கட்டியெழுப்ப பெண்களின் பங்களிப்பு அவசியம் -மகளிர் தின வொழ்த்துச் செய்தியில் ,இராஜாங்க அமைச்சர் அமீர் அலி.

பெண்கள் உலகின் கண்கள் என்பார்கள்.அத்தகைய பெண்களின் முழுமையான பங்களிப்பினூடாகவே ஒருபிரதேசத்தினதும் ழுமுநாட்டினதும் அமைதியும் நிம்மதியுமான சூழல் தங்கியுள்ளது. இவ்வாறு சர்வதேச மகளிர் தினத்தையெபாட்டி கிராமிய பொருளதார விவாசாய நீர்பாசன ,இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து அச்செய்தியில்–ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்பது அன்று முதல் இன்று வரை யதார்த்தபூர்வமாக உளவாங்கிக் கொள்ளும தத்துவமாகும். ,இன்றைய சவால்கள் நிறைந்த நவீன யுகத்தில் உலக ,யந்திரம் சமாதானமாக சுழல் பெண்களின் செயலாற்றுகைகள் அவசியமாகின்றன.பெண்கள் எல்லாவகையான…

Read More

மூதூர் பிரதேச அகில இலங்கை மக்கள் காங்கிரசின் மத்திய குழுவினர் அமைச்சர் றிஷாட் பதியுதீனை சந்தித்தனர்!!!

திருகோணமலை மாவட்ட மூதூர் பிரதேசத்தின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் மத்திய குழுவினர் துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை  பிரதியமைச்சரும் கட்சியின் தேசிய அமைப்பாளருமான  அப்துல்லா மஹரூப் அவர்களின் ஏற்பாட்டில் வர்த்தக வாணிப கைத்தொழில் கூட்டுறவு மற்றும் நீண்ட காலம் இடம்பெயர்ந்தோரை மீளக்குடியேற்றுதல் அமைச்சரும் கட்சியின் தேசிய தலைவருமான றிசாத் பதியூதீனை சந்தித்துள்ளனர். குறித்த சந்திப்பானது இன்று வியாழக்கிழமை இரவு  பிரதியமைச்சர் அலுவலகத்தில் இடம் பெற்றது. மூதூர் பிரதேச மத்திய குழுவினர் அமைச்சரை சந்தித்து…

Read More

முசலி பிரதேசத்தில் வெளி மாவட்டத்தை சார்ந்தோர் மண் அகழ தடை: அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்க கூடாதென அமைச்சர் ரிஷாட் உத்தரவு !

மன்னார் முசலி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில்   வெளி மாவட்டங்களை சார்ந்தோர்  மண் அகழ்வதை உடனடியாக தடை செய்யும் வகையிலான பிரேரணை ஒன்றை கொண்டு வருமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்த ஆலோசனைக்கிணங்க   முசலி மீளாய்வு கூட்டத்தில் அதற்கான ஏகமானதான   தீர்மானம் எடுக்கப்பட்டது. முசலி பிரதேச செயலக மீளாய்வுக்கூட்டம் இன்று காலை (06) பிரதேச செயலாளர் வசந்த குமாரவின் நெறிப்படுத்தலில்  இடம்பெற்ற போது, உள்ளூர் பிரதேசங்களில் வீடுகளை கட்டுவதற்கென  மண் எடுப்பதற்கு  அதிகாரிகளும் பொலிஸாரும் அனுமதிக்க மறுக்கிறார்கள்  என்றும்…

Read More

20 கழகங்களுக்கு 10 இலட்சம் ரூபா பெறுமதியான விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு

கிண்ணியாவில் உள்ள விளையாட்டுக் கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. துறை முகங்கள் மற்றும் கப்பற்றுரை பிரதியமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் டாக்டர் ஹில்மி முகைதீன் பாவா அவர்களினால் கிண்ணியா பிரதேச செயலகத்தில் வைத்து இன்று (06) வழங்கி வைக்கப்பட்டன. குறித்த உபகரணங்களை  மீள்குடியேற்ற செயலணியின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் தலா 50000 ரூபா  பெறுமதியான சுமார் 20 கழகங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன .10 இலட்சம் ரூபா பெறுமதியான உபகரணங்களை ஆரம்ப கட்டமாக வழங்கி வைக்கப்பட்டன தொடர்ந்தும் அடுத்தடுத்த…

Read More

இலங்கை சீன உறவை சிறார்கள் மூலம் மேலும் வலுப்படுத்துவது சிறந்தது; மன்னாரில் சீனத்தூதுவர் தெரிவிப்பு!

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவை சிறார்கள் மூலம் வளர்ப்பது மேலும்  சிறந்தது என தான் கருதுவதாக இலங்கைக்கான சீனாவின் தூதுவர்(cheng xueyuan )செங் சியூயன் தெரிவித்தார். சீன தூதுவராலயத்தின் உதவியுடன் மன்னார் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கும் நிகழ்வு தாராபுரம் அல் மினார் வித்தியாலயத்தில் இன்று மாலை (06) இடம்பெற்ற போது பிரதம விருந்தினராக கலந்து கொண்ட சீன தூதுவர்  பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களையும் வழங்கி வைத்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும்…

Read More

விகாராதிபதியுடனான நல்லிணக்க சந்திப்பு!!!

திருகோணமலை மாவட்டம் மொறவெவ கஜபா விகாராதிபதியும் கிழக்கு மாகாண  விகாராதிபதி சங்க பிரதான விகாராதிபதியுமான  களுத்துரை சோமரட்ண அவர்கள் சிநேகபூர்வமான சந்திப்பில் ஈடுபட்டார். குறித்த சந்திப்பானது இன்று (06) கொழும்பில் உள்ள துறை முகங்கள் மற்றும் கப்பற்றுரை பிரதியமைச்சரின் அலுவலகத்தில் இடம் பெற்றது. நல்லிணக்கச் சந்திப்பில் ஈடுபட்ட விகாராதிபதி பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப் அவர்களின் இணைப்புச் செயலாளர்களான எம்.பி.எம்.முஸ்தபா, எம்.ஐ.நிஸார்தீன் முஹம்மட் ஆகியோர்களுடன் பரஸ்பர விடயங்கள் தொடர்பிலும் பிரதேச அபிவிருத்திகள் தொடர்பிலும் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

Read More

சிலாவத்துறை காணி மீட்பு ; ஜனாதிபதியின்  கவனத்திற்கு கொண்டுவர முடிவு- அமைச்சர் ரிசாத் களத்திற்கு விஜயம், ஆளுநருடனும் பேச தீர்மானம்

சிலாவத்துறை கடற்படை முகாமை அவசரமாக அகற்றுமாறு ஜனாதிபதியிடம் அவசரமாக கோரிக்கை விடுப்பதுடன், மேற்கொண்டு ஆவன நடவடிக்கைகளையும் எடுப்பதென அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைமையில் இன்று (06) காலை இடம்பெற்ற   முசலி பிரதேச செயலக மீளாய்வுக்கூட்டத்தில் ஏகமனதான முடிவெடுக்கப்பட்டது. வடக்கு மாகாண ஆளுநருடன் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தொலைபேசியில் தொடர்புகொண்டு உரையாடினார். முசலி பிரதேச செயலாளர் வசந்த குமாரின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இன்றைய மீளாய்வுக்கூட்டத்தில் முசலி பிரதேச சபை தவிசாளர், உப தவிசாளர், முசலி பிரதேச சபை ஆளும்…

Read More

வடக்கு முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்துக்கு பட்ஜெட்டில் முன்னுரிமை!!!

அரசாங்கம் முன் வைத்துள்ள வரவு செலவு திட்டம் வரவேற்கத்தக்க வகையில் அமைந்துள்ளது. இந்த முன்மொழிவுகளை எதிர் வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் நிறைவேற்றும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கடந்த வருடம் முன்வைக்கப்பட்ட வரவு செலவு திட்ட யோசனைகளை நடைமுறைப்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகின்றது. இருந்த போதும் இம்முறை வரவு செலவு திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள முன் மொழிவுகளை எதிர் வரும் ஆகஸ்ட் மாத்தாத்திற்குள் நடைமுறைப்படுத்த அரசாங்கம் முயற்சிகளை எடுத்திருப்பதாக அவர் குறிப்பிட்டார். 2019…

Read More

பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி SMM. இஸ்மாயில் நாவிதன்வெளி பிரதேசத்திற்கான விஜயம்.

கம்பரெலிய வேலைத்திட்டத்தின் கீழ் Holly Cross தேவாலயம், Holly Cross வித்தியாலயம் மற்றும் வீதி புனரமைப்புகளுக்கான நிதி ஒதுக்கீடு சம்மந்தமான கலந்துரையாடல் நேற்று கௌரவ. பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி SMM. இஸ்மாயில் அவர்களின் தலமையின் கீழ் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலின் போது இப்பிரதேசத்தில் அபிவிருத்தி சார்ந்த வேலைகளை செய்ய தயாராக உள்ளதாகவும் இதற்காக பல முயற்சிகளை முன்னெடுத்துள்ளதாகவும் என பாராளுமன்ற உறுப்பினர் அவர்களினால் பேசப்பட்டது. இவற்றை அடிப்படையாக கொண்டு கம்பரெலிய நிதி ஒதுக்கீடில் நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்கு கீழுள்ள…

Read More

25 வருட காலம் வாழ்ந்த இடத்தை காப்பாற்ற போராடும் மக்கள் களத்தில் சென்று பார்வையிட்ட றிப்கான் பதியுதீன்!!!

25 வருடகாலமாக அரச காணிகளில் வாழ்ந்து வரும் நானாட்டான் இலந்தை மோட்டை கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட தீவுப்பிட்டி கிராம மக்கள் காணிகள் மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் தற்போது அரச தரப்புகளில் இருந்து தங்கள் குடியிருப்புகளுக்கு இடையூறு வழங்குவதாகவும் அங்கிருந்து வெளியேற்ற திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் இதற்கான தீர்வினை பெற்றுத் தருமாறு கேட்டுக்கொண்டதற்கிணங்க கைத்தொழில் வாணிபம் நீண்டநாள் இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் பிரத்தியேக செயலாளரும் முன்னாள் வட…

Read More