News
ISIS இயக்கத்தில் சேரும் வெளிநாட்டுப் போராளிகள் தொகை அதிகரிப்பு!:அமெரிக்கா
சிரியாவிலும் ஈராக்கிலும் இஸ்லாமிய தேசம் ஒன்றை உருவாக்கும் நோக்கத்தில் போராடி வரும் ISIS இயக்கத்தில் இணைவதற்காக வெளிநாடுகளில் இருந்து செல்லும் மக்களின் எண்ணிக்கை அபாய மட்டத்தைத் தாண்டிச் சென்று கொண்டிருப்பதாக அமெரிக்கத் தீவிரவாத எதிர்ப்புப் பிரிவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இது குறித்து அமெரிக்க தேசிய தீவிரவாத எதிர்ப்பு நிலையத்தின் இயக்குனர் நிக்கொலஸ் ரஸ்முஸ்ஸென் கருத்துத் தெரிவிக்கையில், ISIS இயக்கத்தில் இதுவரை 90 இற்கும் அதிகமான நாடுகளில் இருந்து 20 000 இற்கும் அதிகமான போராளிகள்…
துமிந்த சில்வாவை கைது செய்யாமை சிக்கலான விடயம்: ஹிருணிக்கா
துமிந்த சில்வா தொடர்பாக குற்ற புலனாய்வு பிரிவு மேற்கொள்கின்ற விசாரனை நடவடிக்கை ஊடுருவல் குறைவாக இடம் பெறுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். துமிந்த சில்வாவிற்கு எதிராக மேலும் பல குற்றச்சாட்டுகள் முன்வைப்பதற்கான நடவடிக்கைகள் இடம் பெறுவதாக கொழும்பில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பிக்குகளுக்கு முன் தனது நீண்டநாள் முஸ்லிம் நண்பர் மீது சீறிப்பாய்ந்தார் மஹிந்த
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபகஷவோடு மிகவும் நெருக்கமாக இருந்த ஒரு முஸ்லிம் தனவந்தருக்கு நடந்த உண்மையான கதையிது. கொழும்பிலுள்ள பிரபல ரெஸ்டுரன்டுகளுக்கும், ஹோட்டல்களுக்கும் சொந்தக் காரரான இவா் மஹிந்தவோடு கூடிக்குலாவி திாிவதில் முன்னணியில் நினறவா். முஸ்லிம்களுக்கு பிரச்சினைகள் வந்த காலங்களில் கூட மஹிந்தவுடனான இவாின் நட்பு மிகவும் நெருக்கமாகவே இருந்தது. தோ்தல் காலங்களில் முஸ்லிம்களை மஹிந்தவின் மாளிகைக்கு அழைத்து செல்லும் பொறுப்பை இவா் கடந்த காலங்களில் கச்சிதமாக நிறைவேற்றுபவராய் இருந்துள்ளாா். சுருக்கமாக சொன்னால் மஹிந்தவின் தீவிர விசுவாசியாகவே…
மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் ஆராயும் கூட்டம்
கைத்தொழில்.வணிகத் துறை அமைச்சின் கீழ் மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் ஆராயும் கூட்டமொன்று மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம் பெற்றது . அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையில் இடம் பெற்ற இந்த கூட்டத்தில் அரசாங்க அதிபர் தேசப் பிரிய உள்ளிட்ட அதிகாரிகள்.மற்றும் பிரதேச செயலாளர்கள் இதன் போது சமூகமளித்திருந்தனர். இதன் போது கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்டுவந்த அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் எதிர்காலத்தில் திட்டமிடப்பட்டுள்ள அபிவிருத்திகள் தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. கடந்த சில…
திஸ்ஸ பிணையில் விடுதலை
ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரான பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதித் தேர்தல் காலப் பகுதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் ஒப்பந்நதம் மேற்கொள்ளப்பட்டாதாக போலியான ஆவணங்களை காண்பித்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட இவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். இந்த நிலையில் கொழும்பு நீதவான் முன்னிலையில் இன்று இவர் ஆஜர்படுத்தப்பட்ட போது, இவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
கிண்ணியாவுக்கான பஸ் நிலையத்தினை நிர்மாணிப்பதற்கு அனுமதி….
அஸ்ரப் ஏ சமத் பிரதியமைச்சர் எம்.எஸ் தொளபீக் திருகோணமலை மாவட்ட இரானுவ உயர் அதிகாரியைச் சந்தித்து திருகோணமலை-மட்டக்களப்பு வீதியில் சில வருடங்களாக இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள காணியை விடுவிக்குமாறு வேண்டிக் கொண்டார். இதனை ஏற்றுக்கொண்ட இரானுவ கட்டளைத் தளபதி மேஜர் மன்சுலவுக்கு உடன் இக் காணியை விடுவிக்குமாறு வேண்டிக் கொண்டார். அதன் நிமித்தம் இக் காணியை நேற்று புதிதாக பதவியேற்ற கிழக்கு முதலமைச்சர் நசீர் அஹமட் மற்றும் செயலாளர் அசீஸ், மாகாணசபை உறுப்பினர் நிகார், பிரதேச செயலாளர்…
பொதுபலசேனாவின் தில்லுமுல்லுக்கள் அம்பலம் ;பலகோடிகள் ஊழல்
மஹிந்த அரசில் இனவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டு கடும் ஆட்டம் போட்டுக்கொண்டிருந்த இனவாத அமைப்பான பொதுபலசேனாவின் பல மோசடிகள் தற்போது அம்பலத்துக்குவர ஆரம்பித்துள்ளன. பொதுபலசேனா அமைப்பால் கடந்த வருடம் கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் நடாத்தப்பட்ட மியன்மாரைச் சேர்ந்த அசின் விராது தேரர் கலந்துகொண்ட மாநாட்டுக்கு ஒரு கோடியே இருபத்தைந்து இலட்சம் ரூபா செலவு செய்யப்பட்டதாகவும் இந்தப்பணம் வெளிநாடுகளில் பணிபுரியும் அப்பாவி இளைஞர்களிடமிருந்து பலவந்தமாகப் பெறப்பட்டது என்றும் பொதுபலசேனா அமைப்பின் முன்னாள் உறுப்பினர் அச்சல சம்பத் தெரிவித்துள்ளார். இது…
தமது முறைப்பாடு தொடர்பாக குற்ற விசாரணைப் பிரிவிற்கு சென்ற மேர்வின் சில்வா!
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக முறைப்பாடு செய்திருந்தார். இந்த முறைப்பாட்டின் தற்போதைய நிலைமை குறித்த அறிந்து கொள்வதற்காக மேர்வின் சில்வா குற்ற விசாரணைப் பிரிவிற்கு சென்றுள்ளார். முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை துரித கதியில் மேற்கொண்டு வருவதாக குற்ற விசாரணைப் பிரிவினர் தெரிவித்துள்ளதாக மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். கொலைகள், ஊழல் மோசடிகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களை மேர்வின் சில்வா சுமத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுகாதார அமைச்சின் அதிகாரிகளைப் போன்று ஊழல் மோசடிக்காரர்கள் வேறு நிறுவனங்களில் கிடையாது: ஜனாதிபதி
மஹரகம இளைஞர் சேவைகள் மத்திய நிலையத்தில் நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது நேற்று அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டில் சுயாதீனமான சுகாதார சேவை ஒன்றை முன்னெடுத்துச் செல்வதற்கு இந்த ஊழல் மோசடிகளில் ஈடுபடும் அதிகாரிகள் தடையாக அமைந்திருக்கின்றார்கள் என அவர் தெரிவித்துள்ளார். ஊழல் மோசடிகளில் ஈடுபட்டு வரும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்பில் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதி சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்னவிடம் கோரினார். ஊழல் மோசடிகளில் ஈடுபட்டு வரும் அதிகாரிகளின் நடவடிக்கைகளினால் சுகாதார…
அரச வாகனத்தை வைத்திருப்போருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை
ஜனாதிபதி செயலகத்துக்குச் சொந்தமான வாகனங்களை வைத்திருப்போருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இதுவரை ஜனாதிபதி செயலகத்துக்கு சொந்தமான 749 வாகனங்கள் காணாமற்போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. எனவே, நேற்று முதல் அரச வாகனத்தை சட்ட விரோதமாக வாகனங்களை வைத்திருப்போருக்கு மன்னிப்பு வழங்கப்படுவதில்லை என்பதுடன் அவர்களை கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவார் எனவும் பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
ஒற்றுமையுடன் இருப்பதன் மூலம் இன்னும் பல அபிவிருத்திகளை எமது கிராமங்களுக்கு கொண்டுவர முடியும்- அமைச்சர் றிஷாத்
மன்னார் நிருபர் “மருதமடு கிராமத்தின் அபிவிருத்தி தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள கோறிக்கைகள் தொடர்பில் எனது கவனத்தை செலுத்துவேன்” என்று வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கைத்தொழில், வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள மருதமடு அரசினர் கலவன் தமிழ் பாடசாலையில் இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். மன்னார் வலயக் கல்வி பணிப்பாளர் எம்.எம்.சியான் தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் பிரதேச…
முசலி ;பாடசாலை இல்ல விளையாட்டு போட்டி
மன்னார் முசலி கோட்டத்தில் அமைய பெற்றுள்ள பண்டாவெளி பாடசாலையின் அதிபர் ஹபீப் முஹ்பு உவைஸ் தலைமையில் வருடாந்த இல்ல விளையாட்டு போட் நேற்றுமாலை பாடசாலை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. இன் நிகழ்வில் பிரதம அதிதியாக கைத்தொழில் மற்றும் வாணிப துறை அமைச்சர் றிஷாத் பதியுதீன் கலந்து சிறப்பித்தார். பாடசாலை அதிபர் தெரிவிக்கையில் கடந்த காலங்களில் அமைச்சர் எங்கள் பாடசாலைக்கு அதிகமான உதவிகளை செய்து உள்ளார் என்றும் இன்னும் எங்கள் பாடசாலை பல தேவைகளை உடைய பாடசாலையாக இருக்கின்றது…
