News
அமைச்சர் ராஜிதவுக்கு எதிராக முறைப்பாடு
அமைச்சர் ராஜித சேனாரட்னவிற்கு எதிராக தேசிய சுதந்திர முன்னணி இன்று லஞ்ச மற்றும் மோசடி விசாரணை ஆணைக்குழுவிடம் முறைப்பாடொன்றை செய்துள்ளது. கடந்த அரசாங்கத்தின் போது மீன்பிடித்துரை அமைச்சராக இருந்த சமயம் அவர் மோசடியாக 2 ஆயிரம் மில்லியன் ரூபாயை பெற்றுக்கொண்டார் என்று குற்றம் சுமத்தியே இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முறைப்பாட்டை சமர்ப்பித்ததன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய அமைப்பாளர் ஜயந்த சமரவீர, பலவந்தமாக இந்த வளங்களை அமைச்சர் ராஜித சேனாரட்ன…
கண்டி தலதா மாளிகையில் தேசியக் கொடியை கீழிறக்கி சிங்கள கொடியை பறக்கவிட முயற்சித்ததால் அசாதாரண நிலை
கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் உள்ள ‘மகுள் மதுவ’யில் ஏற்றப்பட்டு இருந்த இலங்கையின் தேசியக் கொடியை கீழிறக்கி அங்கு (படத்தில் உள்ள : சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவ அடையாளங்களை நீக்கிய ) சிங்கள கொடி என அழைக்கப்படும் ஒரு கொடியை பறக்கவிட ஒரு கும்பல் முயற்சி செய்ததால் அங்கு பதட்ட நிலை தோன்றியது. இது தொடர்பில் கண்டி போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வருகை தந்து குறிப்பிட்ட கும்பலின் செயலை தடுத்து நிறுத்திய போது இரு தரப்பினருக்கும் இடையில்…
ஜனாதிபதி மைத்ரியை நம்பும் நாமல் ராஜபக்ஷ
இந்திய-இலங்கை மீனவர்களின் பிரச்சினையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்த்துவைப்பார் என்று தான் நம்புவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்தியா – இலங்கை மீனவர்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காணுவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் மிக நெருக்கமாக நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். அதேபோன்று தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறசேனவும் செயற்படுவார். இந்திய – இலங்கை மீனவர்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காணுவதற்கான கலந்துரையாடலை ஒத்திவைக்குமாறு இலங்கை, இந்தியாவிடம் கேட்டுக்கொண்டுள்ளதாக இந்தியா ஊடகம் ஒன்று…
பெற்றோர்களுக்கு ஓர் எச்சரிக்கை…இது பதுளை சம்பவம்
இந்த பிரபஞ்சத்தில் பெற்றோர்களுக்கு ஈடாக எதையுமெ நிகராக கருதவே முடியாது.தாங்கள் என்த துன்பத்திலும்,துயரங்களிலும் கடினமான பட்டனியிலும் இறுந்தபோதிலும் எம் குழந்தைகளுக்கு எவ்வித குறைகளும் நிகழ்ந்துவிடக்கூடது என்பதற்காக கடும் பாடுபட்டு அரவனைக்கும் ஓர் உன்னதமானவர்கள் தான் பெற்றோர்கள். இப்படியெல்லாம் அரவனைப்புக்குள் இருந்த ஒரு 16 வயது இளமைப் பெண்ணும் 18வயது வாலிபரும் நேற்று சுமார் 11 மணியலவில் பதுளை அன்மித்த பகுதியில் இருந்து பதுளையில் உள்ள சாதாரன பிரபல்யமான விடுதி(Rest house)யில் தன்ஞம் புகுந்துள்ளனர். அதனை தொடர்ந்து இவர்களுடன் வந்த…
கிழக்கு மாகாண சபையில் மீண்டும் அமைச்சு மாற்றம் (படங்கள் இணைப்பு)
(மூஸா உமர்) கிழக்கு மாகாண சபையில் ஏற்பட்டிருந்த குழப்பமான சூழ்நிலை நீங்கி இன்று (03) மீண்டும் புதிய அமைச்சுக்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. இன்று (03) காலை 11 மணிக்கு கிழக்கு மாகாண ஆளுணர் ஒஸ்றின் பெர்ணாண்டோவின் காரியாலயத்தில் இடம்பெற்ற அமைச்சுக்கள் பொறுப்பேற்கும் நிகழ்வில் கிழக்கு மாகாண சபையின் த.வி.கூ , ஸ்ரீ.மு.கா, ஐ.தே.க, ஐ.ம.சு.கூ. உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில் அமைச்சர்களாக: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சார்பாக எம்.ஐ.எம்.மன்சூர் மீண்டும் சுகாதார அமைச்சராகவும், தமிழ் தேசிய கூட்டமைப்பு…
உதிரிகளால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வரங்கு!
அஷ்ரப் எ சமத் தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் அதிவேகமான வளர்ச்சியும் அதன் எழுச்சியும் இந்த நாட்டின் கல்வியலாளர்கள் தொடக்கம் சாதாரண மக்கள் வரைக்கும் இன்று பேசப்படுகின்ற ஒன்றாகும். கடந்த காலத்தில் அது தன்னுடைய இலட்சியப்பயனத்தில் பல்வேறு தடங்களை தேசிய ரீதியாக பதித்துவருவது சமூகத்தின் பல மட்டத்தினராலும் இன்று பேசுபொருளாக மாறி இருக்கிறது. இது ஒரு அபரிமிதமான குறிப்படத்தக்க வளர்ச்சி என்றே சொல்லலாம். குறிப்பாக கடந்த சில வருட காலப்பகுதிக்குள் பல்வேறு அடைவுகளை தன்னகத்தே கொண்டுள்ளது. அந்த வகையில்…
அமைச்சர் றிஷாத் – இலங்கைக்கான ஜேர்மன் நாட்டுத் தூதுவருக்கிடையிலான சந்திப்பு
கைத்தொழில் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சர் றிஷாத் பதியுதீனுக்கும், இலங்கைக்கான ஜேர்மன் நாட்டுத் தூதுவருக்கிடையிலான சந்திப்பு ஒன்று நேற்று 02/03/2015 ஏற்றுமதி அபிவிருத்தி அதிகார சபை கட்டிடத்தில் நடைபெற்றது. இதில் புதிய அரசாங்கத்தின் பொருளாதார கொள்கைகளை அமைச்சர் தூதுவருக்கு விளக்கினார், இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக துறையை எவ்வாறு அதிகரிப்பது என்பதுடன், இரு நாடுகளுக்கிடையிளான சந்தை வாய்ப்பை அதிகரிக்க முயற்சிப்பதாகவும் தூதுவர் உறுதியளித்தார். அத்துடன் இரு நாடுகளுக்கிடையிலான திறமையான தொழிலாலர்களை (Skill labour)பரிமாறிக்கொள்வது போன்றவை கலந்துரையாடப்பட்டது. அமைச்சர் கருத்துத்தெரிவிக்கையில்…
சீகிரியா சுவரில் காதலனின் பெயரை கிறுக்கிய பெண்ணுக்கு 2 வருட சிறை
சீகிரியாவின் கண்ணாடி சுவரில் தனது காதலனின் பெயரை எழுதிய யுவதிக்கு 2 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பை சேர்ந்த உதேனி என்ற யுவதிக்கே இவ்வாறு 2 வருட சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தனியார் கைத்தொழிற்சாலையொன்றில் பணியாற்றும் குறித்த யுவதி கடந்த பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி சீகிரியாவுக்கு சுற்றுலா சென்றிருந்தார். அப்போது தனது காதலனின் பெயரை கண்ணாடி சுவரில் எழுதி சேதப்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த நிலையிலேயே அவருக்கு தம்புள்ளை நீதிமன்றம் 2 வருட சிறைத்…
கட்டாரில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறையை சேர்ந்த இருவர் மரணம்!
file image கட்டாரில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற விபத்தில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் இருவர் மரணமடைந்துள்ளனர். கோவில் போரதீவை சேர்ந்த ச.துவாரகன், பெரியநீலாவணையை சேர்ந்த ச.சுகந்தன் ஆகியோரே மரணமடைந்துள்ளனர். இவர்கள் இருவரும் பயணித்துக்கொண்டிருந்த காரும் லொறியொன்றும் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு ஆதரவு
கிழக்கு மாகாண சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு ஆதரவு வழங்க தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது என நம்பத்தகுந்த வாடாரங்களில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளது. அத்துடன் இத்தீர்மானத்திற்கமைய மாகாணத்தில் மீதமாகவுள்ள இரண்டு அமைச்சர் பதவிகளையும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர்கள் இன்று பொறுப்பேற்கவுள்ளதாவும் மேலும் தெரிய வருகிறது. நேற்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முதலமைச்சரான ஹாபீஸ் நசீர் அஹமதிற்கு வழங்கிய ஆதரவினை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் எட்டு உறுப்பினர்கள் வாபஸ் பெற்றனர். அதேவேளை…
தேசிய நிறைவேற்றுக்குழுவில் நான் அங்கத்துவம் வகிக்கவில்லை : சோபித்த தேரர்
அரசாங்கத்தின் உயர் அமைப்பான தேசிய நிறைவேற்றுக்குழுவில் நான் இடம்பெறவில்லை. எனக்கு இதுவரை அழைப்பு விடுக்கப்படவுமில்லை. நான் இதுவரை அந்த குழுவின் கூட்டத்தில் கலந்துகொள்ளவும் இல்லை என்று என்று சமூக நீதிக்கான அமைப்பின் தலைவர் மாதுலுவாவே சோபித்த தேரர் தெரிவித்தார். கொழும்பு இலங்கை மன்றக்கல்லூரியில் நேற்று நடைபெற்ற சமூக நீதிக்கான அமைப்பான நிபுணத்துவ கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாறறிய சோபித்த தேரர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தேரர் அங்கு மேலும் குறிப்பிடுகையில் நான் அரசாங்கத்தின் உயர் அமைப்பான தேசிய நிறைவேற்றுக்குழுவில் அங்கத்துவம்…
