News
லசந்த விக்கிரமதுங்க கொலை: மேர்வின் சில்வாவையும் விசாரித்தது குற்றப் புலனாய்வுத் திணைக்களம்
சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலை தொடர்பில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவரிடம் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இன்று நீதிமன்றத்தில் அறிவித்தது. கல்கிஸ்ஸ நீதவான் மொஹமட் சகாப்தீன் முன்னிலையில் இன்று வழக்கு விசாரணை இடம்பெற்றது.முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவிடமும் இதுதொடர்பில் விசாரணை செய்து, வாக்குமூலம் பதிவுசெய்ததாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இதற்கமைய, விசாரணைகளை துரிதப்படுத்துமாறு உத்தரவிட்ட நீதவான், வழக்கு விசாரணைகளை ஜூன் மாதம் 17 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.2009 ஆம் ஆண்டு…
தலைமை நீதியரசர் ஸ்ரீபவன் யாழ்.சென்று நிலைமைகளை பார்வையிட்டார்
இலங்கையில் வடக்கே, யாழ்ப்பாணத்தில் புங்குடுதீவு மாணவி வித்தியா வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கோரமாகக் கொலைசெய்யப்பட்டதைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட போராட்டங்களைத் தொடர்ந்து, நாட்டின் தலைமை நீதியரசர் கே. ஸ்ரீபவன் யாழ்ப்பாணம் சென்று அங்குள்ள நிலைமைகளை நேரில் பார்வையிட்டுள்ளார். தலைமை நீதியரசருடன் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகளும் பொலிஸ்மா அதிபரும் நீதித்துறை முக்கியஸ்தர்கள் பலரும் அங்கு சென்றுள்ளனர்.யாழ்ப்பாணத்தில் நேற்றுமுன்தினம் நடந்த ஆர்ப்பாட்டப் பேரணிகளின்போது யாழ். நீதிமன்றத்தின் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. நீதிமன்றத்தின் மீது நடத்தப்பட்ட கல்வீச்சுத் தாக்குதல்…
துபாயில் பாலைவனத்தில் சோலைவனமாக உருவாகும் பசுமை நகரம் திட்டம்!
பாலைவனத்தில் சோலைவனமாக துபாயில் துபாய் லேன்ட் பகுதியில் சூரிய சக்தியில் செயல்படும் சஸ்டைனபில் சிட்டி sustainable-city எனும் பசுமை நகரம் உருவாக்கப்பட உள்ளது. 50 லட்சம் சதுர அடியில் அமைய உள்ள இந்நகரத்தில்10 ஆயிரம் மரங்களோடு 500க்கும் மேற்பட்ட பசுமை வீடுகள்,பசுமை பள்ளி,ஆராய்ச்சி கூடம், அருங்காட்சியகம், சூரிய சக்தி நிலையம், விவசாய பண்ணைகள், புல் வெளிகள், கழிவுநீர் மறுசுழற்சி என 100 சதவீதம் சுற்றுப்புற சூழலுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட உள்ளது. மேலும் புகழ் பெற்ற இண்டெர்காண்டினென்டல்…
முஹம்மது நபி நாயகம் (ஸல்) அவர்கள் உலகிற்கு சொன்ன தர்மத்தின் வழிமுறைகள்..!
“”நீர் ஆரோக்கியமாக இருக்கும் காலத்திலோ, வறுமை வந்து விடும் என்று பயப்படும் காலத்திலோ, இன்னும் அதிக செல்வம் சேரும் என்று எதிர்பார்க்கும் நேரத்திலோ தர்மம் செய்து விட வேண்டும். அதுவே, தர்மத்தில் எல்லாம் தலைசிறந்ததாகும். அதே நேரம், உமது உயிர் தொண்டைக்குழிக்கு வந்து நீர் இறக்கத் துவங்கும் போது, தர்மம் செய்ய ஆரம்பிப்பதில் பலனில்லை. அதனால் என்னபலன் உண்டாக போகிறது? அந்த செல்வம் தான் தானாகவே இன்னொருவரைப் போய் அடைந்து விடுமே!”என்கிறார். சாகப்போகும் வேளையில் புண்ணியம் தேடிப்பயனில்லை….
திருக்குர்ஆன் : “ஈ” யின் மூலம் இரு அறிவியல் உண்மைகள்!
எஸ்.ஹலரத் அலி உலக மக்கள் உண்மையை உணர்ந்து நேர் வழி பெறவேண்டும் என்பதற்காக, ஏராளமான உதாரணங்களை அல்லாஹ் அல் குர்ஆனில் கூறி மனிதனை சிந்திக்க தூண்டுகிறான். நாம் அற்பமாக கருதும் கொசு, ஈக்கள், சிலந்தி போன்ற சிறு உயிர்களை உதாரணமாக கூறி தன் வல்லமையை அறிவுறுத்துகிறான். அவ்வகையில் வரும் ஒரு வசனம்தான், “மனிதர்களே! ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது. எனவே செவி தாழ்த்திக் கேளுங்கள். நிச்சயமாக, அல்லாஹ்வையன்றி (வேறு) எவர்களை நீங்கள் பிரார்திக்கின்றீர்களோ, அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் ஓர்…
முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிவதால் உலகில் எங்கு அபராதம் விதிக்க பட்டாலும் நான் செலுத்துகிறேன்.ராசித் னேக்கா!
படத்தில் இருப்பவர் பிரான்சில் இருக்கும் பெரிய வியாபாரி ராசித் னேக்காz அங்கு ஹீஜப் அணிந்தால் விதிக்கப்படும் அபராதை தொகையை தானே செலுத்தி விடுவதாகவும். இனி இங்கு இருக்கும் இஸ்லாமிய சகோதரிகள் தாராளமாக ஹீஜாப் அணிந்து செல்லுங்கள் உங்களுக்கான அபராதை தொகையை நானே செலுத்தி விடுகிறேன். ஹீஜாப் என்னும் புனிததத்தை பாதுகாத்து கொள்ளுங்கள் என்று வேண்டுகோள் விடுததுள்ளார். உலகில் எந்த நாடாக இருந்தாலும் ஹீஜாப் காக தடைவீதிக்கப்பட்டு அபராதம் விதித்தாள் அந்த தொகையையும் தானே செலுத்தி விடுவதாகவும் அவர்…
இன்று முதலமைச்சராகப் பதவியேற்கிறார் ஜெயலலிதா
தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக இன்று காலை 11 மணிக்கு ஜெயலலிதா பதவியேற்கிறார். ஆளுனரை இன்று சந்தித்த ஜெயலலிதா, தனது புதிய அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்களின் பட்டியலை ஆளுனர் ரோசைய்யாவிடம் அளித்துள்ளார். நேற்று பிற்பகல் 1. 30 மணியளவில் தனது போயஸ் கார்டன் இல்லத்திலிருந்து புறப்பட்ட ஜெயலலிதா கிண்டியில் உள்ள ஆளுனர் மாளிகைக்குச் சென்று ஆளுனரைச் சந்தித்தார். அப்போது, இன்று தன்னுடன் பதவியேற்கவிருக்கும் அமைச்சர்களின் பட்டியலை அவரிடம் அளித்தார். தற்போது இருக்கும் அதே அமைச்சரவையில், ஆனந்தன், செந்தூர் பாண்டியன்…
மங்கள சமரவீர – ஜேர்மனி அமைச்சர் சந்திப்பு
இலங்கையின் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர, ஜேர்மனியின் வெளியுறவு அமைச்சரை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு நேற்று பேர்லினில் இடம்பெற்றுள்ளது. இதன்போது ஜேர்மனியின் வெளியுறவு அமைச்சர் பிராங்-வோல்டர் ஸ்டென்மியர், இலங்கையில் மாற்றத்துக்கான காரணவாதி என்று மங்கள சமரவீரவை புகழ்ந்தார். இலங்கையில் மேற்கொள்ளப்படும் அரசியல் தீர்வு மற்றும் நல்லிணக்கத்துக்கு ஜேர்மன் அரசாங்கம் உதவும் என்றும் அவர் உறுதியளித்தார்.இதேவேளை தமது விஜயத்தின் போது மங்கள சமரவீர, ஜேர்மனின் புத்திஜீவிகள் சபையில் உரையாற்றவுள்ளார்.
ஏன் இந்த கொடுமை..? இந்த அழகான சிசு என்ன கொடுமை செய்தது..?? (படம்)
பிறந்த உடனேயே கைவிடப்பட்ட ஆண் சிசுவொன்று அக்கரைப்பற்று சாகாமம் வடிகானுக்குள்ளிருந்து கண்டெ டுக்கப்பட்டுள்ளது. தொப்புள் கொடியுடன் இந்த ஆண் சிசு வடிகானுக்குள் இருந்ததை பெண்ணொருவர் கண்டெடுத்து அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளார்.நேற்று (22) நண்பகல் 12.30 மணியளவில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட் பட்ட சாகாம பிரதான வீதியின் அருகில் கோளாவில் பிரதேசத்தில் உள்ள வடிகானுக்குள் இருந்தே இச்சிசு மீட்கப்பட்டதாக அக்கரைப்பற்று பொலி ஸார் தெரிவித்தனர். இது தொடர்பான விசாரணைகள் அக்கரைப்பற்று பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வடபுல முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தை இனவாதத்துடன் பார்ப்போருக்கு எதிராக இன்று மருதமுனையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்
– பி.எம்.எம்.காதர் – வடக்கிலிருந்து விரட்டப்பட்ட முஸ்லிம் மக்களை மீள்குடியேற்றுவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டை போடும் சக்திகளுக்கு எதிராக நேற்று மருதமுனையில்(22-05-2015)கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. ஜூம்ஆ தொழுகையின் பின்னர் மருதமுனை மஸ்ஜிதுன் நூர் ஜூம்ஆ பள்ளிவாசலுக்கு முன்பாக இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் பெரும் தொகையான மக்கள் கலந்து கொண்டனர். இங்கு ‘பேரினவாதிகளே வடபுல முஸ்லிம்களை வாழவிடு! ,முஸ்லிம் தலைமைகளே சமூகத்திற்காக ஒன்றுபடுங்கள்! ,பொதுபல சேனாவே முஸ்லிம்களைச் சீண்டாதே உள்ளீட்ட பல சுலோகங்களை கவனயீர்ப்;பு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.
அமைச்சர் றிஷாதை வெளிநாட்டு சக்திகளுடாக தோற்கடிப்பதற்கு பல சதி- சுபையிர்
றியாஸ் ஆதம் வடமாகாணத்தில் பிறந்து இந்த நாட்டில் தேசிய அரசியலில் முஸ்லீம் மக்களின் அரசியல் தலைமைத்துவமாகப் பிரகாசிக்கும் அமைச்சர் றிசாட் பதியுத்தீனை வெளிநாட்டு சக்திகளுடாக தோற்கடிப்பதற்கு பல சதி முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின்; கொள்கை பரப்புச் செயலாளருமான எம்.எஸ்.சுபையிர் தெரிவித்தார். கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபையிரின் முயற்சியினால் ஏறாவூர் இரும்பு வியாபாரிகள் சங்க உறுப்பினர்களுக்கு வாகான உதிரிப்பாகங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர்…
வில்பத்து தொடர்பில் – பிரதமர்
அஸ்ரப் ஏ சமத் இன்று பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கவின் ஜ.தே.கட்சியின் தலைமைக் காரியலயமான ‘சிறிகொத்தவில்’ ஊடகவியலாளர் மாநாட்டின்போது அவரிடம் என்னால் எழுப்பட்ட கேள்வி – கௌரவ பிரதம மந்திரி அவர்களே – வடக்கு முஸ்லீம்கள் மீள் குடியர்த்தும் விடயத்தில் நீங்கள் இன்னும் அமைதியாகவே இருக்கின்றீர்கள் ? வில்பத்து விடயத்தினை ஒரு இன பிரச்சினையாக சிலர் முன்னெடுக்கின்றனரே ? பிரதமர் ரணில் பதில் – இல்லை இந்த விடயத்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அதனை கையாளுகின்றனர். அவரே…
