News
புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு
இலங்கை துறை முக அதிகாரசபையின் முஸ்லிம் மஜ்லிஸ் ஏற்பாட்டில் துறை முக அதிகார சபையின் ஊழியர்களின் பிள்ளைகளுக்கான 2019 ம் ஆண்டுக்கான புலமைப் பரிசில் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு (21) சனிக் கிழமை மாலை கொழும்பு துறை முக அதிகார சபையின் மகாபொல பயிற்சி நிறுவனத்தின் மண்டபத்தில் இடம் பெற்றது. இப் புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வானது முன்னால் துறை முகங்கள் கப்பற் துறை ,புனர்வாழ்வு அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப்…
சிறுபான்மையினரை கௌரவப்படுத்தும் ஜனாதிபதி வேட்பாளரை அடையாளங்காண்பதில் முனைப்புடன் செயற்படுகின்றோம்’
இனவாத சக்திகளின் நடவடிக்கைகளையும் எண்ணங்களையும் தவிடுபொடியாக்கும் வகையில், ஜனாதிபதி வேட்பாளரை அடையாளப்படுத்தும் நல்லதொரு முடிவை, சிறுபான்மைக் கட்சிகள் ஒருமித்து மேற்கொள்ளுமென அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழான, தேசிய வடிவமைப்பு நிலையத்தின் அனுசரணையில், தையல் பயிற்சியினை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட போதே, அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். வவுனியா மாவட்ட மகளிர் அமைப்பின் அமைப்பாளரும், தையல் பயிற்சி நிலையத்தின் பொறுப்பாளருமான…
“சிறுபான்மை மக்கள் மனக்கிலேசம் கொள்ளவேண்டியதில்லை” வவுனியாவில் அமைச்சர் றிஷாட்-
சிறுபான்மை மக்களையும் அரவணைத்து செல்கின்ற,நல்ல ஒரு தலைவரை பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளில் சிறுபான்மை கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் ஒருமித்து உழைத்துவருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வவுனியா மாங்குளம் ஹாமிய மகா வித்தியாலயத்தில் ஆரம்பப்பிரிவு கற்றல்வள நிலைய திறப்புவிழாவில் (20) பிரதம விருந்தினராக அவர் கலந்துகொண்டார் பாடசாலை அதிபர் எஸ்.நிசார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய அவர் கூறியதாவது, தேசிய ரீதியில் பல்வேறு சவால்களுக்கு நாடு முகம்கொடுக்கும் இந்த நெருக்கடியான அரசியல்…
சர்வதேச தரம் வாய்ந்த ஆன்லைன் பரீட்சை மையம் பம்பலப்பிடியில் அமைச்சர் ரிஷாத் திறந்துவைப்பு
நோலெட்ஜ் மோகன்டைசிங் நிறுவனத்தின் மற்றும் ஒரு சர்வதேச தரம் வாய்ந்த ஆன்லைன் பரீட்சை மையம் பம்பலப்பிட்டியில் இருக்கும் யுனிட்டி பிளாசாவில் கைத்தொழில், வாணிப அலுவல்கள், நீண்ட காலமாக இடம்பெயர்ந்த நபர்களின் மீள் குடியேற்றம், கூட்டுறவுத்துறை அபிவிருத்தி, தொழில் பயிற்சி மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான ரிஷாத் பதியுதீனினால் அவர்களினால், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், உயர் கல்வி பிரதி அமைச்சருமான மையோன் முஸ்தபா அவர்களின் பிரசன்னத்துடன் திறந்து வைக்கப்பட்டது. இந்நிறுவனத்தின்…
கிண்ணியாவில் உள்ள சங்கங்களுக்கு உபகரணங்கள் வழங்கலும் LED வீதி மின் விளக்குகள் வழங்கும் நிகழ்வும்
திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பதிவு செய்யப்பட்டு தெரிவு செய்யப்பட்ட சங்கங்களுக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இடம் பெற்றுள்ளது கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.ஹனி தலைமையில் இன்று (19) கிண்ணியா பிரதேச செயலகத்தில் இடம் பெற்ற குறித்த சகல விதமான பொருட்களும் துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் அவர்களின் வருடாந்த பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து வழங்கி வைக்கப்பட்டுள்ளன. கிண்ணியாவில் உள்ள சுமார் 15 சங்கங்களுக்கு 13…
இலங்கை வந்துள்ள இந்திய முதலீட்டாளர்களை சந்தித்த அமைச்சர் றிஷாட் பதியுதீன்
இந்திய நாட்டு முதலீட்டாளர்களுக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் கைத்தொழில் வாணிப அலுவல்கள், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி, திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சருமான ரிஷாட் பதியுதீனுக்குமிடையிலான சந்திப்பு திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்த சந்திப்பில் இரு நாட்டு வர்த்தக உறவுகள் மற்றும் முதலீட்டு நடவடிக்கை தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
கிளிநொச்சி ஜேர்மன் பயிற்சி நிறுவனத்துக்கு 110 மில்லியன் நவீன உபகரணங்கள்.
ஜேர்மன் பயிற்சி நிறுவனத்தினால் ரூபா 110 மில்லியன் பெறுமதியான நவீன பயிற்சி உபகரணங்களை இலங்கைக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தலைமையில் (18) நடைபெற்றது. கிளிநொச்சியில் அமைந்துள்ள இலங்கை ஜேர்மன் பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் நிதியமைச்சர் மங்கள சமரவீர, இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் ஜோன் ரூட் ஜேர்மன் பயிற்சி நிறுவனத்தின் உயரதிகாரிகள், நிதியமைச்சின் உயரதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சிறிய நடுத்தர தொழிற்துறையினரின் பொதியிடல் முயற்சிகளுக்கு அரசாங்கம் நேரடி உதவி. – அமைச்சர் ரிஷாட்.
‘உலகளாவிய ஈ-கொமர்ஸ் பொதியிடலில் முன்னணி சந்தையாக ஆசிய-பசிபிக் மாறியுள்ளது. இது இலங்கையின் பொதியிடல் துறைக்கு புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது. இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி அவற்றில் முதலீடு செய்வதற்கு எங்கள் தொழில்துறையை நான் அழைக்கிறேன்’ அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். ‘லங்காபக் ‘; (Lankapak) சர்வதேச கண்காட்சி தொடரின் 38 வது ஆண்டு விழாவின் ஆரம்ப நிகழ்வில் கலந்துககொண்டு உரையாற்றுகைளிலேயே அமைச்சர் ரிஷாட் இதனை தெரிவித்தார். கடந்த வாரம் சர்வதேச பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற (14) இந்நிகழ்வில்…
இலங்கை – இந்திய உறவு மற்றும் ஒருமைப்பாடு என்ற தொனிப்பொருளில் முஸ்லிம் மீடியா, போரம் நடத்திய ஒன்று கூடல்
இலங்கை – இந்திய உறவு மற்றும் ஒருமைப்பாடு என்ற தொனிப்பொருளில் முஸ்லிம் மீடியா, போரம் கொழும்பு ரமடா ஹோட்டலில் இந்திய லோக சபை உறுப்பினர்கள், தமிழக முஸ்லிம் அரசியல் பிரமுகர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுடன் நடத்திய ஒன்று கூடலில் (13) அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் அதிதிகளில் ஒருவராக பங்கு பற்றினார். இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக அமைச்சர் ராஜித சேனாரத்தினவும் கௌரவ அதிதிகளாக அமைச்சர் மனோகணேசன் , முஸ்லிம் ராஜாங்க அமைச்சர்கள்…
விழால்ஓடை அனைக்கட்டு மற்றும் மூக்கறையன் பாலம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு
எதிர் வரும் 05.10.2019 ஆம் திகதி விவசாயிகளின் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினைக்கு தீர்வாக விழால்ஓடை அனைக்கட்டு மற்றும் மூக்கறையன் பாலம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெறவுள்ளது. எனவே அதற்கான ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் இன்று விவசாய,நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் அமீர் அலி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் நீர்பாசன மாவட்ட பொறியியளார் அஸ்ஹர், செங்கலடி பொறியியளார் நிரோஷன், தொழில்நுட்ப உதவியாளர் திலிபன், விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர் ரஷீட், பிரதேச…
தமிழக மீனவர்களின் பிரச்சினை தொடர்பான கலந்துரையாடல்
விவசாய,நீர்பாசன,மீன்பிடி நீர்வளத்துறை அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சில் கடந்த 12.09.2019 தமிழக மீனவர்களின் பிரச்சினை தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் விவசாய நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதாரஇராஜாங்க அமைச்சர் அமீர் அலி , மீன்பிடி நீரியவளத்துறை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் துலிப்வெத ஆராச்சி, சமூக வலூவூட்டல் இராஜாங்க அமைச்சர்அலி சாஹிர் மொளலான, இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களான கனிமொழி, நவாஸ் கனி , செயலாளர் றூவான் சந்திர, பணிப்பாளர் மீன்பிடி மொன்டி ரனந்துங்க ஆகியோர் கலந்து…
இலவச கல்வியின் தந்தை கன்னங்கராவின் நோக்கத்தை தற்போதைய அரசு சரிவர நிறைவேற்ற பாடுபடுகின்றது. எருக்கலம்பிட்டி மத்தியகல்லூரி விழாவில் பிரதமர் ரணில் தெரிவிப்பு..
கடந்தகால யுத்தத்தினால் கல்விக்கான நிதி ஒதுக்கீடுகள் குறைந்ததாக தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அதன் பிற்பாடு கல்வி வளர்ச்சிக்கு அதிகமான நிதியினை ஒதுக்கிய அரசாங்கத்தின் பிரதமராக தான் இருப்பது பெரும் மகிழ்ச்சிக்குரியதாகும் என்றும் கூறினார். மன்னார் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தின் 75 வது ஆண்டு பவள விழா நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரைாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். பாடசாலை அதிபர் எம்.ஷாபி தலைமையில் இ்டம் பெற்ற இந்த நிகழ்வில் அமைச்சர்…
