News
மு.கா, த தே, கூ ஆதரவுடன் மக்கள் காங்கிரசின் முசலிப்பிரதேசபை பட்ஜட் நிறைவேற்றம்..
அகில இலங்கை மக்கள் காங்கிரசின் நிர்வாகத்தின் கீழான முசலிப்பிரதேசபையின் அடுத்தாண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் 11 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேறியது. 16 உறுப்பினர்களை கொண்ட முசலிப்பிரதேசபையின் வரவுசெலவுத் திட்டம் இன்று (23) வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது 5 உறுப்பினர்கள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை. அதாவது 4 உறுப்பினர்களை கொண்ட முஸ்லிம் காங்கிரசின் 2 உறுப்பினர்களும், பொதுஜனபெரமுனவை சேர்ந்த 1 உறுப்பினரும், சுதந்திரக் கட்சியை சேர்ந்த 1 உறுப்பினரும்,நல்லாட்சிக்கான தேசிய முன்னணியை சேர்ந்த 1 உறுப்பினருமாக ஐவர் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. எதிர்க்கட்சியான…
கட்டாரில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனுக்கு வரவேற்பு
கட்டாரில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனுக்கு வரவேற்பு. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கட்டார் கிளையின் ஏற்பாட்டில், கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் அவர்களுக்கான வரவேற்பு நிகழ்வு- *இன்று 16ஆம் திகதி (திங்கள் கிழமை), இரவு 8 மணிக்கு, ஸைடூன் ரெஸ்டோரண்ட், சல்வா வீதி, டோஹா கட்டாரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆகவே, குறித்த நிகழ்வில் கலந்துகொள்ள விரும்பும் கட்டார் வாழ் கட்சியின் ஆதரவாளர்கள் கீழ் உள்ள தொலைபேசி…
ஏறாவூர் மீரா முன்பள்ளி பரிசளிப்பு விழா தலைவர் றிப்னாஸ் ஆசிரியர் தலைமையில் இடம்பெற்றது .
ஏறாவூர் மீரா முன்பள்ளி பரிசளிப்பு விழா 13.12.2019 தலைவர் றிப்னாஸ் ஆசிரியர் தலைமையில் இடம்பெற்றது .இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார். இந்நிகழ்வில் ஏறாவூர் பிரதேச செயலக செயலாளர் அல் அமீன், பொது சுகாதார அதிகாரி வைத்தியர் தாரிக் , பல நோக்கு கூட்டுறவு சங்க தலைவர் அல்ஹாஜ் லத்தீப், கணக்காளர் நெளபி மற்றும் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலிக்கு றிப்னாஸ் ஆசிரியரால்…
கட்டாரில் அ.இ.ம.கா தேசிய தலைவர் ரிஷாத் பதியுதீனுக்கு வரவேற்பு
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கட்டார் கிளையின் ஏற்பாட்டில், கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் அவர்களுக்கான வரவேற்பு நிகழ்வு- இன்று 16ஆம் திகதி (திங்கள் கிழமை), ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. (இடம் பின்னர் அறிவிக்கப்படும்) ஆகவே, குறித்த நிகழ்வில் கலந்துகொள்ள விரும்பும் கட்டார் வாழ் கட்சியின் ஆதரவாளர்கள் கீழ் உள்ள தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து உங்கள் வரவை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். ???? வரவை கட்டாயம் உறுதிப்படுத்தவும், 0097470440075 0097430483082
டோஹா போரம் மாநாட்டில் ரிஷாத் பதியுதீன்
கட்டார் நாட்டில் இடம்பெறும் 19ஆவது “டோஹா போரம்” சர்வதேச மாநாட்டில் முன்னாள் அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாத் பதியுதீன் (எம்.பி) பங்கேற்கின்றார். இந்த மாநாடு “பல்முனை உலகளாவிய சமூகத்தில், புத்துயிர் பெரும் ஆட்சி” எனும் தொனிப்பொருளில் நடைபெற்றுவருகிறது. கட்டார் நாட்டின் உத்தியோகபூர்வ அழைப்பையேற்றே, அவர் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றார். இம் மாநாட்டை கட்டார் மன்னர் சேக் தமீம் ஆரம்பித்து வைத்தார். உலகின் பல நாடுகளிலுமிருந்து அரசியல் தலைவர்கள், புத்திஜீவிகள், துறைசார் நிபுணர்கள் இந்த…
சஹ்ரானை சந்தைப்படுத்த முடியாதென்பதால் முஸ்லிம்கள் இலக்கு வைக்கப்படுகிறார்கள்: ரிஷாத் பதியுதீன்
இன்றைய ஆட்சியாளர்கள் பயங்கரவாதி சஹ்ரானால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்களை பெரும்பான்மைச் சமூகத்தின் மத்தியில் எடுத்துரைத்தே ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றார்கள் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் மீண்டும் சஹ்ரானை அரசியல் ரீதியில் சந்தைப்படுத்த முடியாது என்பதால் அவர்களுக்குப் புதிய இலக்குகள் தேவைப்படுகிறது. ஆகையால் அதற்கு தன்னையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமையும் இலக்கு வைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கொழும்பில் வெள்ளிக்கிழமை…
புத்தள மாவட்ட மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர்களுடனான சந்திப்பில் முன்னாள் அமைச்சர் றிஷாட் பதியுதீன் கலந்துகொண்டார்…
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கற்பிட்டி பிராந்திய அமைப்பாளர் ஆப்தீன் எஹியாவின் தலைமையில் அவரது இல்லத்தில் நேற்று(08) நடைபெற்ற கட்சியின் முக்கியஸ்தர்களுடானான சந்திப்பில் கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதேச அமைப்பாளர்கள் கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.
கிண்ணியா உப்பாறு கடலில் வல்லம் குடை சாய்ந்ததில் ஒருவர் பலி ,இருவரை காணவில்லை,இருவர் வைத்தியசாலையில் அனுமதிப்பு _மீட்புப் பணியில் படையினர்
திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உப்பாறு கடலில் இன்று (08) வல்லம் குடை சாய்ந்ததில் ஐவரில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது அதிகாலையில் வெள்ளம் காரணமாக தங்களது விவசாய செய்கைக்காக வல்லத்தில் சென்ற வேலையில் வல்லம் குடை சாய்ந்ததில் ஐவரில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் இருவர் காப்பாற்றப்பட்டு கிண்ணியா தளவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய இருவரை காணவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தற்போது மீட்புப் பணியில் கடற்படையினருடன் பொலிஸாரும் இணைந்து செயற்பட்டுவருவதாகவும்…
ஜனாதிபதி ஆணைக்குழு நியமித்து விசாரணை செய்யுங்கள் – ஜனாதிபதி கோட்டாவிடம் ரிஷாத் பதியுதீன் கோரிக்கை
அதிமேதகு ஜனாதிபதி, கோத்தபாய ராஜபக்ஷ அவர்கள் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு ஜனாதிபதி அலுவலகம், கொழும்பு 01. அதிமேதகு ஜனாதிபதி அவர்களுக்கு, வில்பத்து சரணாலயம் மற்றும் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் குறித்து விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு நியமித்தல் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதியாக நியமனம் பெற்றுள்ள தங்களுக்கு முதலாவதாக, எனது மற்றும் என்னை பிரதிநிதித்துவப்படுத்தும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்களின் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சியின்…
இனவாதமும்மதவாதமும் தொடர்ந்தும் இந்த நாட்டை ஆட்டிப்படைக்க முடியாது புல்மோட்டையில் ரிஷாத்
ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மை சமூகத்துக்கு பின்னடைவு ஏற்பட்ட போதும், அதனை சரி செய்து மீண்டும் மக்கள் பணியை தீவிரப்படுத்துவோம் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். புல்மோட்டையில் இன்று காலை (01) இடம்பெற்ற பொதுமக்கள் ,ஆதரவாளர்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ‘கடந்த காலங்களில் எமது அரசியல் பயணம் வெற்றிகரமாக இடம்பெற்ற போதும் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் தடங்கல் ஏற்பட்டுள்ளது. சகல இனங்களையும் சமனாக மதிக்கின்ற, சமத்துவத்தை பேணுகின்ற, சிறுபான்மை…
நீதியும், நியாயமும் உயிர்வாழுமேயானால் எந்தக் குற்றச்சாட்டையும் நிரூபிக்க முடியாது -வவுனியாவில் ரிஷாத் பதியுதீன்
நீதியும், நியாயமும் இந்த நாட்டிலே இன்னும் உயிர் வாழுமேயானால் தன் மீதான எந்தவொரு குற்றச்சாட்டையும் நிரூபிக்க முடியாதெனவும் எந்தத் தண்டனை வழங்க முடியாதெனவும் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் உறுதிபடத் தெரிவித்தார். சிங்கள இலத்திரனிய ஊடகங்களில் தன்னைப்பற்றி தொடர்ச்சியாக அபாண்டங்களை பரப்பினாலும் உண்மைகளை பொய்யாக்கி விட முடியாதெனவும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். வவுனியா சின்னசிப்பிக்குளம் தாருல் உலூம் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வு இன்று (30) இடம்பெற்ற போது.பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள்…
பலமான சக்தியாக மீண்டெழுவோம். மன்னாரில் றிஷாட்.
சிறுபான்மை மக்களின் ஒன்றுபட்ட ஒத்துழைப்புடன் எதிர்வரும் பொதுத்தேர்தலில் சஜித் பிரேமதாசாவை பிரதமராக்கும் முயற்சியில் ஈடுபடுவோமென அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக தேசிய முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மன்னாரில் பலகிராமங்களுக்கு சென்ற முன்னாள் அமைச்சர் அங்கு உரையாற்றிய போது இவ்வாறு தெரிவித்தார். ஆட்சியை தொடங்கிய குறுகிய காலத்தில் அராஜகம் தொடங்கியுள்ளது.புத்தளம் கனமூலைக்கு மக்களை சந்திக்க சென்றபோது…
