News
கின்னஸ் சாதனை மேற்கொள்ள முயற்சித்தவர் வைத்தியசாலையில் அனுமதி!
கின்னஸ் உலக சாதனை படைக்க முயற்சித்த துறைமுக உத்தியோகத்தர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மட்டக்குளி டிலாசல் மஹாபொல நிலையத்திற்கு அருகாமையில் இன்று (29) இந்த சாதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த நாபர் 1.5 தொன் எடையைக்கொண்ட வாகனங்களை உடலின் மீது ஏற்றி சாதனை படைக்கும் முயற்சியை மேற்கொண்டிருந்தார். இடையில் ஏதோ சில காரணங்களுக்காக வாகனத்தை உடலின் மீது நிறுத்த வேண்டாம் என சாதனை முயற்சியாளர் குறிப்பிட்ட போதிலும் வாகனம் உடலில் ஏற்றப்பட்டுள்ளது. இதனால் சுகவீனமுற்ற குறித்த சாதனை…
அரச ஊழியர்களுக்கு மேலதிகக் கொடுப்பனவு
அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்துடன் 20 வீதத்தை சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அரச நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த 20 வீத கொடுப்பனவு அடுத்த மாதம் முதல் அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்துடன் சேர்க்கப்படவுள்ளது. கடந்த காலத்தில் அரசாங்க ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவாக வழங்கப்பட்டிருந்த தொகையிலிருந்து 20 வீதத்தை அடிப்படைச் சம்பளத்துடன் சேர்க்கவுள்ளதாக அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜீ.தடல்லகே தெரிவித்தார். இதன் பிராகாரம் அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் அதிகரிக்கப்படவுள்ளது. சம்பள அதிகரிப்பு தொடர்பான சுற்றுநிருபத்தை…
ஞானசாரருக்கு நிதி எங்கிருந்து கிடைக்கின்றன: விசாரணைகள் ஆரம்பம்
பொதுபலசேனா பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு நிதி கிடைக்கும் வழிகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. ஞானசாரருக்கு எங்கிருந்து நிதிக்கிடைக்கின்றது. அவர் பயன்படுத்தும் வாகனம் எவ்வாறு கிடைத்தது என்ற விடயங்கள் குறித்தே விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் காலத்தில் கோத்தபாயவின் ஆதரவுடனேயே ஞானசார தேரர் செயற்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின்போது ஞானசாரர் மஹிந்தவுக்கே ஆதரவை வழங்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வத்தளையில் கடலுக்கு நீராட சென்ற இருவர் பலி
வத்தளை – பிரிதிபுர கடலில் நீராட சென்ற இருவர் நேற்று (28) மாலை உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. தலவாக்கலை – லிந்துலை – பரகம் பிரதேசத்தை சேர்ந்தவர்களே பலியாகியுள்ளனர். குறித்த இருவரும், மேலும் சில நபர்களுடன் நீராட சென்ற போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் சடலங்கள், ராகம போதனா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இன்று பிரேத பரிசோதனைகள் இடம்பெறவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆசிரிய இடமாற்றத்தின்போது தேசிய கொள்கை பின்பற்றப்படுவதில்லை
– க.கிஷாந்தன் – இலங்கையில் தேசிய இடமாற்றக்கொள்கை இருந்தும் நுவரெலியா – வலப்பனை கல்வி வலயத்தில் 2012ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்த கொள்கை பின்பற்றப்படுவதில்லை என அகில இலங்கை ஆசிரியர் சங்கத்தின் நுவரெலியா மாவட்ட செயலாளர் ஆசிரியர் வே.இந்திரசெல்வன் தெரிவிக்கின்றார். பின்தங்கிய இடங்களில் கடமையாற்றுகின்ற ஆசிரியர்கள் 10 வருடங்களுக்கு மேல் ஒரே பாடசாலையில் சேவையாற்றி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஒரு சிலர் 20 வருடங்களுக்கும் மேலாக வசதியான பாடசாலைகளிலே கடமையாற்றுவதால், பல ஆசிரியர்கள் உள ரீதியாக பாதிப்புக்குள்ளாவதோடு,…
மஹிந்த, ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாரிய ஊழல் மோசடி விசாரணை ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார். சுயாதீன தொலைக்காட்சியில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே இங்கு ஆஜராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எரிபொருள் விலை தொடர்பில் பேச்சு : பிரதமர்
எரிபொருள் விலை தொடர்பில் திறைசேரி மற்றும் ஏனைய தரப்பினருடன் பேச்சு நடத்த நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அறிவிக்கவிருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று வியாழக்கிழமை நாடாளுமன்றில், மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தபோதே அவர் இவ்வாறு குறி்ப்பிட்டுள்ளார். உலக பொருளாதார நிலை, எமது பொருளாதாரத் திட்டங்கள் என்பவற்றைக் கருத்தில் கொண்டே இது தொடர்பில் ஆராய வேண்டுமென குறிப்பிட்ட அவர் எரிபொருள் விலை தொடர்பில் இரண்டு நாட்கள் விவாதம் நடத்தவுள்ளதாகவும்…
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஸிகா வைரஸ் பரிசோதனை
இலங்கைக்கு வரும் பயணிகள் ஸிகா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளார்களா என்பது தொடர்பில் கண்டறிவதற்கான பரிசோதனைகளை மேற்கொள்ள, கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாட்டுக்குள் வருபவர்களை பரிசோதிக்க கண்காணிப்பு அமைப்பு நிறுவப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக அமெரிக்க மற்றும் ஆபிரிக்க நாடுகளில் இருந்து வருபவர்களை கூடுதல் பரிசோதனைக்கு உட்படுத்த உத்தேசித்துள்ளதாகவும் மேலும் ,இதுவரை நாட்டுக்கு அது தொடர்பில் எந்த அச்சுறுத்தலும் ஏற்படவில்லை எனவும் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். ஸிகா என்ற வைரஸ் தற்போது வெளிநாடுகளில் பரவி வருகிறன்றமை…
தெமட்டகொடை விபத்து: தாய், மகனுக்கு பிணை
தெமட்டகொடை பகுதியில் மஞ்சள் கடவையில் பாதை மாறிக்கொண்டிருந்த தாயையும் மகளையும் காரில் வேகமாக வந்து மோதி உயிரிழக்க செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 15 வயதுடைய சிறுவன் மற்றும் சிறுவனின் தாய் ஆகியோரை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அத்துடன் பாதிக்கப்பட்ட தரப்பான கொல்லப்பட்ட பெண்ணின் மூத்த மகளுக்கு 2 இலட்சம் ரூபா கருணைக் கொடை வழங்கவும் நீதிமன்றம் சந்தேக நபர்களுக்கு உத்தரவிட்டது. குறித்த விபத்தின் போது காரை செலுத்தியதாக கூறப்படும் 15 வயதுடைய…
ரயில் மோதி ஒருவர் பலி
கம்பஹா ரயில் கடவையில், கடமையில் ஈடுபட்டிருந்த ஊழியர் ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளார். நேற்று மாலை பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் பெம்முல்ல ரயில் பாதையின் மேற்பார்வை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. பெம்முல்ல ரயில் கடவையில் காவலாளியாக கடமையாற்றிய அத்தனகல்ல பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய நபரே ரயில் மோதுண்டு உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது
கல்முனையில் கண்டுபிடிக்கப்பட்ட 16வயது சிறுமி சோனியாவா?- அப்றாவா?
கல்முனையில் கடந்தவாரம் கண்டுபிடிக்கப்பட்ட 16வயது சிறுமி கேசானியா? அப்றாவா? என்பது தொடர்பில் கல்முனை நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. ஆழிப்பேரலையின் போது ஆறு வயதில் காணாமல்போன கேசானி தனது குழந்தை தான் எனக்கோரி வழக்குத்தாக்கல் செய்ததாக கல்முனையைச் சேர்ந்த எஸ்.ஜெயராசா தெரிவித்தார். கல்முனைப் பொலிஸார் கண்டுபிடித்த இச்சிறுமி சிறுவர் நன்னடத்தைப் பிரிவினூடாக அம்பாறையிலுள்ள சிறுவர் பாதுகாப்பு புகலிடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். தற்சமயம் 16 வயது நிரம்பிய இச்சிறுமி அம்பாறையிலுள்ள சிறுவர் புகலிடத்தில் வைக்கப்பட்டிருக்கிறார். இச்சிறுமிக்கு உரிமை கோரி…
இனவாத சுவரொட்டிகளை அகற்ற ஒரு வாரகால அவகாசம்
இனவாதத்தை தூண்டும் வகையிலான சுவரொட்களை அகற்றுவதற்கு பஸ் உரிமையாளர்களுக்கு ஒரு வாரக்கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்க தலைவர் கெமுனு விஜேயரட்ன தெரிவித்துள்ளார். இந்த சுவரொட்டிகள் தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இந்தநிலையில் சட்டப்படி பஸ் உரிமையாளர்கள், இவ்வாறான சுவரொட்டிகளை தமது பஸ்களில் ஒட்டுவதற்கு இடமளிக்கக்கூடாது என்று கெமுனு கோரியுள்ளார். ஏற்கனவே கடந்த ஜனாதிபதி தேர்தலின் போதும் பொதுத்தேர்தலின் போதும் அரசியல் சுவரொட்டிகளை பஸ்களில் ஒட்டுவதற்கு இடமளிக்கவில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தநிலையில் தனியார்…
