News
போதையற்ற குடும்பம் உருவாக வேண்டும் – ஜனாதிபதி
போதைபொருள் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தல் தொடர்பாக பொலிஸார் தினமும் தனியாக பல மணித்தியாலங்களை ஒதுக்கி நேரடிப் பங்களிப்பை வழங்க வேண்டுமென தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,போதையிலிருந்து மீட்டு சுதந்திரமான நாட்டை உருவாக்கி போதையற்ற குடும்பம் உருவாக வேண்டுமென்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். போதையிலிருந்து சுதந்திரம் பெற்ற நாடு என்ற தொனிப் பொருளிலான தேசிய போதைபொருள் தடுப்பு வேலைத்திட்டத்தின் 5 ஆம் கட்டம் குருநாகலையை மையப்படுத்தி மாளிகாபிட்டிய மைதானத்தில் ஜனாதிபதியால் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன்போது உரையாற்றுகையிலேயே…
அஸ்கிரிய பீடத்தின் புதிய மகாநாயக்கர் தெரிவு இன்று
அஸ்கிரிய பீடத்தின் 22 ஆவது மகாநாயக்கர் இன்று பிற்பகல் 3 மணியளவில் தெரிவு அஸ்கிரிய மகா விகாரையில் இன்று இடம்பெறவுள்ளது. கலகம அத்ததஸ்ஸி தேரரின் மறைவினை அடுத்து அஸ்கிரிய பீடத்தின் தலைமை பதவி வெற்றிடமானதை தொடர்ந்து அவ்வெற்றிடத்திற்க்கான தேர்வே இன்று இடம்பெறவுள்ளது. கலகம அத்ததஸ்ஸி தேரர் கடந்த மாதம் 9 ஆம் திகதி குளியல் அறையில் வீழ்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
மஹிந்தவிற்கு தேரர்கள் படை பாதுகாப்பு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு 100 தேரர்களை இணைத்து பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக முறுத்துட்டுவாவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார். நேற்று (6) கொழும்பில் இடம்பெற்ற தேரர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் அதனை தெரிவித்துள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையம் பகுதியளவில் மூடப்படும்
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையம் 2017ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் பகுதியளவில் மூடப்படவுள்ளது. அவசரமான விஸ்தரிப்பு திருத்தப்பணிகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதன்படி ஜனவரி மாதம் முதல் முற்பகல் 9 மணிமுதல் 6 மணித்தியாலங்களுக்கு கட்டுநாயக்க விமானநிலையம் பகுதியளவில் மூன்று மாதங்களுக்கு மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திருத்தப் பணிகளுக்காக ஏற்கனவே ஜப்பான் அரசாங்கத்துடன் இலங்கை அரசாங்கம் உடன்படிக்கை ஒன்றை செய்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சில ஆய்வக பரிசோதனைகளுக்கு நியாயமான விலை
தனியார் வைத்தியசாலைகளில் மேற்கொள்ளப்படும் சில ஆய்வக பரிசோதனைகளுக்கு நியாயமான விலையை நிர்ணயிக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. சீ.டி ஸ்கேன், எக்ஸ்ரே ஆகிய பரிசோதனைகள் இதில் அடங்குவதாக சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் பாலித மஹிபால தெரிவித்துள்ளார். தற்போது 33 ஆய்வக பரிசோதனைகளுக்கு நியாயமாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரதியமைச்சரானார் பாலித்த தேவரப்பெரும
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சராக லக்ஷ்மன் செனவிரத்ன இன்று (06) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், உள்விவகார, வடமேல் மாகாண அபிவிருத்தி மற்றும் கலாச்சார அலுவல்கள் பிரதி அமைச்சராக பாலித்த தேவரப்பெருமவும்,வெளிநாட்டு வேலை வாய்ப்பு பிரதி அமைச்சராக, மனுஷ நாணயக்காரவும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது.
பீகாரில் மதுபானங்கள் விற்பனை செய்ய முழு தடை
இந்தியாவில் குஜராத், நாகாலாந்து, மிசோரம் மாநிலங்களை தொடர்ந்து நான்காவதாக பீகாரிலும் அனைத்து வகையாக மதுபானங்கள் விற்பனை செய்வதற்கு முழு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பீகார் மாநிலத்தின் முதலமைச்சர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். நேற்று முதல் பூரண மதுவிலக்கு அமுல்படுத்தப்படுவதாக பீகார் அரசு அறிவித்துள்ளது. ஹோட்டல் மற்றும் பார்களில் இனி மதுவிற்பனை செய்ய அனுமதி இல்லை .அதன்படி பீகார் மாநிலத்தில் உள்நாட்டு, வெளிநாட்டு மற்றும் நாட்டு மதுபானங்கள் விற்பனை செய்ய முழுவதுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் இராணுவ சிற்றுண்டிச்சாலைகளில் மதுவிற்பனை தொடரும்…
பிரதமர் சீனா பயணமானார்
பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று பகல் 1.30 மணிக்கு சீனாவுக்கு விஜயமானார். சீன அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இவர் அங்கு செல்கிறார். இவருடன் 15 தூதுவர்களும் பயணமாகினர். இலங்கை விமானச்சேவைக்கு சொந்தமான UL 868 இல் 5 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளனர் . இவ்விஜயத்தின் போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க சீன ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அந்த நாட்டின் முக்கிய பிரமுகர்களுடன் இணைந்து கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளதோடு, இரு நாடுகளுக்கும் இடையில் பல்வேறு ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிசிலியா கொத்தலாவவின் விளக்கமறியல் நீடிப்பு.!
முன்னாள் செலிங்கோ நிறுவன உரிமையாளர் லலித் கொத்தலாவலவின் மனைவி சிசிலியா கொத்தலாவல ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பில்லப்பிட்டிய இன்று உத்தரவிட்டுள்ளார். சிசிலியா கொத்தலாவலவின் உடல் நிலை பற்றிய வைத்திய அறிக்கையை உரிய நேரத்தில் சமர்ப்பிக்குமாறும் இதன் போது நீதவான் உத்தரவிட்டுள்ளார். மேலும், இது தொடர்பான விசாரணகளை மேற்கொள்ள கால அவகாசம் தருமாறு குற்றபுலனாய்வு விசாரணைப்பிரிவினர் நீதிமன்றத்தில் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோல்டன் கீ நிறுவன சேமிப்பாளர்களின்…
சு.கவின் மே தின கூட்டம் காலியில்
– வி.நிரோஷினி – ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டம் காலி சமனல விளையாட்டு மைதானத்தில் நடத்த தீர்மானித்துள்ளதாக கனிய எண்ணெய் மற்றும் பெற்றோலிய வாயுத்துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அலுவலகத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
எனக்கு எதுவும் கூற முடியாது
– வி.நிரோஷினி – பனாமா இரகசிய வங்கிக் கணக்குகள் தொடர்பில் என்னால் எதுவும் கூற முடியாது. அது தொடர்பில் நாடாளுமன்றத்திலேயே கூடி பேசி தீர்மானிக்க முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அலுவலகத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். உலகில் இரசிய வங்கிக்கணக்குகள் உள்ள நாடுகளில் இலங்கையும் அடங்குவதாக ஐரிஸ் டைம்ஸ் பத்திரிகை…
பொத்துவில் மக்கள் பெரும் துயரில் – அமைச்சர் றிஷாத் கவலை
– சுஐப் எம். காசிம் – “ வாழ்க்கையில் நாங்கள் மிகவும் கஷ்டப்படுகின்றோம். குடிப்பதற்கு நீரில்லை. குளிப்பதற்கும் எந்த வசதிகளும் இல்லை. இரவு நேரங்களிலே மிருகங்களின் தொல்லைகளால் மிகவும் பீதியுடனேயே நாங்கள் காலத்தைக் கழிக்கிறோம். எங்களுக்கு உதவி செய்ய எவருமே முன்வருகிறார்கள் இல்லை. நீங்களாவது உதவி செய்வீர்களா? “ என்று சாங்காம மக்கள் அமைச்சர் றிஷாத்திடம் மிகவும் கவலையுடன் வேண்டினர். பொத்துவில் சாங்காமத்துக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர், அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையிலான அக்கட்சியின்…
