News
உனகலா வெஹர புனர்நிர்மாண நடவடிக்கை ஜனாதிபதி தலைமையில்!
பொலன்னறுவை வரலாற்று முக்கியத்துவமிக்க உனகலா வெஹர ரஜமஹா விகாரையை உலகெங்கிலுமுள்ள பௌத்த மக்கள் தரிசிப்பதற்குப் பொருத்தமான வகையில் புனர்நிர்மாணம் செய்யும் நடவடிக்கைகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று (28) பிற்பகல் ஆரம்பமானது. இப்புனர்நிர்மாணப் பணி எழுச்சி பெறும் பொலன்னறுவை மாவட்ட அபிவிருத்திக் கருத்திட்டத்துடன் இணைந்ததாக பொலன்னறுவை மாவட்டத்திலுள்ள புன்னிய ஸ்தானங்களை மேம்படுத்தும் நிகழ்ச்சித்திட்டங்களின் கீழ் நடைமுறைப்படுத்தப்படுகிறது. நேற்று பிற்பகல் வரலாற்று முக்கியத்துவமிக்க உனகலா ரஜமகாவிகாரைக்குச் சென்ற ஜனாதிபதி சமய நிகழ்வுகளில் பங்குபற்றி ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து…
கடும் வெப்பம்: பாடசாலைகளுக்கு பூட்டு
வடமத்திய மாகாணத்தில் அமைந்துள்ள பாடசாலைகள் அனைத்தும் மே மாதம் 2 ஆம் திகதி முதல் நண்பகல் 12 மணியுடன் நிறைவடையுமென வடமத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை,மறு அறிவித்தல் வரை நண்பகல் 12 மணியுடன் பாடசாலைகள் மூடப்படுமென வடமத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார். வட மத்திய மாகாணத்தில் நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக அனைத்து பாடசாலைகளும் நண்பகல் 12 மணியுடன் மூடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உழைப்பாளர் தினமும் இஸ்லாத்தின் தீர்வுகளும் (கட்டுரை)
முதலாளிகள் உழைப்பாளர் நலனில் அக்கறை கொள்ளவும் உழைப்பாளர்கள் இஸ்லாம் வழங்கியிருக்கின்ற தங்களின் உரிமைகளை தெரிந்து கொள்ளவும் எழுதப்பட்ட ஆக்கம் வருடத்திற்கொரு முறை மே 1 அன்று உலகம் முழுவதும் உழைப்பாளிகள் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. அன்றைய தினத்தில் உழைப்பாளிகளின் கோரிக்கைகள், மாத ஊதியம், அவர்களின் அடிப்படைப்பிரச்னைகள், அவர்கள் சந்திக்கும் அவலங்கள், இன்னும் இவை போன்ற உழைப்பாளிகளைப் பற்றிய பல விஷயங்கள் உலகம் முழுவதும் பேசப்படும் அல்லது அலசப்படும். ஆனால் அன்றைய தினத்திற்கு முன்போ அல்லது பின்போ உழைப்பாளிகளை ஆளும்…
கா.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப் திகதி முடிவு மே 31
இவ் வருடத்திற்கான கா.பொ.த. சாதாரண தர பரீட்சை டிசம்பர் மாதம் 6 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2016 ஆம் ஆண்டுக்கான கா.பொ.த. சாதாரண தர பரீட்சை டிசம்பர் மாதம் 6 ஆம் திகதி முதல் டிசம்பர் 17 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. இதேவேளை, இம்முறை பரீட்சைக்கு தோற்றவுள்ள அனைத்து பாடசாலை மற்றும் தனியார் பரீட்சாத்திகளினதும் விண்ணப்பங்களை ஏற்கும் இறுதித் திகதி இம் மாதம் 28…
சிசிலியாவிற்கு பிணை!
பினான்ஸ் என்ட் கெரன்ட் நிறுவனத்தில் இடம்பெற்ற பண மோசடி தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சிசிலியா கொத்தலாவலைக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்து இலட்ச ரூபாய் ரொக்கப் பிணையிலும், 4 சரீரப் பிணையிலும் இவர் விடுதலை செய்யப்படுவதாக கொழும்பு மாவட்ட நீதவான் கிஹான் பிலபிட்டிய இன்று (29) உத்தரவிட்டு்ள்ளார். இதேவேளை, இவரது வெளிநாட்டுப் பயணங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் குறித்த வழக்கிலிருந்து இவர் விடுதலை செய்யப்பட்டமையை அடுத்து கோட்டை நீதிமன்றில் ,இவர் மீது தொடுக்கப்பட்டுள்ள மற்றுமொரு வழக்கு…
பொலிஸ் அதிகாரிகள் நான்கு பேருக்குப் பதவி உயர்வு
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் மூலம் பொலிஸ் அதிகாரிகள் நான்கு பேருக்குப் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் இரண்டு பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் மற்றும் இரண்டு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் என்போர் உள்ளடங்கியுள்ளனர். முன்னைய அரசாங்கத்தின் பழிவாங்கல் போக்கு காரணமாக பொலிஸ் அத்தியட்சகர்கள் சீ.ஏ. பிரேமசாந்த மற்றும் எச். எச். சூலசிறி ஆகியோருக்கான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பதவி உயர்வுகள் வழங்கப்படாமல் இருந்தது. இதுகுறித்து பொலிஸ் ஆணைக்குழுவில் மேற்கொள்ளப்பட்ட மேன்முறைrifkas rikasadminயீட்டை அடுத்து தற்போது அவர்களுக்கான பதவி…
தம்புள்ளை பள்ளிவாசலுக்கு, புதிய இடத்தில் காணி
– பரீல் – நான்கு வருட காலமாக பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ள தம்புள்ளை ஹைரியா ஜும்ஆ பள்ளிவாசலை அவ்விடத்திலிருந்து அகற்றிக் கொள்வதற்கு மாற்றீடாக தம்புள்ளையில் அடுத்த மாதம் புதிய காணி வழங்கப்படவுள்ளது. நகர அபிவிருத்தி அதிகார சபை தம்புள்ளை நகரத்துக்கு அண்மையில் சுமார் 150 மீற்றர் தூரத்தில் தம்புள்ளை பள்ளிவாசலுக்கான காணியொன்றினை இனங் கண்டுள்ளதாகவும், எதிர்வரும் மே மாதத்தில் இதற்கான ஏற்பாடுகள் பூர்த்தியாகுமெனவும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரஞ்சித் பெர்னாண்டோ தெரிவித்தார். தம்புள்ளையில் பள்ளிவாசலை தற்போது…
மே 2 ஆம் திகதி விடுமுறை
மே தினத்தை முன்னிட்டு சகல அரச நிறுவனங்களுக்கும் மே 2 ஆம் திகதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கண்டி உடதலவின்னவில் முஸ்லிம் கடைக்கு தீ வைப்பு
கண்டி உடதலவின்னவில் முஸ்லிம்களுக்கு சொந்தமான கடைக்கும் வீதியில் நிறுத்தப்பட்டிருநத வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்ட சம்பவமொன்று நேற்று வியாழன்(28) இடம்பெற்றுள்ளது கண்டி உடதலவின்னை புகையிரத நிலைய பாதையை அண்மித்த வீதியிலேயே இச்சம்பவம் நடத்தப்பட்டுள்ளது. முஸ்லிம்களுக்குச் சொந்தமான கடை அறையை பெரும்பான்மையின சகோதரர் அண்மையில் வாடகைக்கு எடுத்திருந்தார். அந்தக் கடைக்கே தீ மூட்டப்பட்டுள்ளது. இக்கடை அறை முற்றாக சேதமடைந்துள்ளதுடன் வாகனங்களும் எரிந்துள்ளன. அத்துடன் அந்த வீதியில் நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் லொறிக்கும் தீ வைக்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பில் உடதலவின்னை பொலிசார்…
வடக்கு புகையிரத சேவைகள் பாதிப்பு.!
புகையிரதம் ஒன்று தடம் புரண்டதால் வடக்கு புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதம் ஒன்று இன்று (29) காலை சாலியபுரம் பகுதியில் தடம் புரண்டதால் வடக்கு புகையிரத சேவைகள் பாதிப்பு அடைந்துள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தினால் கடனுதவி
இலங்கைக்கு 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனுதவியாக வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் அங்கீகாரமளித்துள்ளது. இது தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன. நாட்டின் ஓர் நிலையான நிதி நிலைமையை உறுதிப்படுத்த சர்வதேச நாணய நிதியத்தினால் கடனுதவியை பெற்றுக் கொள்வதற்கு ஒருமித்த கருத்துணர்வு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இரு தரப்பினருக்கும் இடையில் கடந்த காலத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதுடன், நாணய நிதியம் தொடர்பில் அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டது.
வவுனியாவில் 13 வயது சிறுவனைக் காணவில்லை!
வவுனியா தரணிக்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த 13 வயது பாடசாலை மாணவனை காணவில்லை என வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. வவுனியா பெரியகோமரசன் மகாவித்தியாலயத்தில் கல்வி பயிலும் வடிவேல் ரவிக்குமார் (வயது 13) என்ற சிறுவன் 25ஆம் திகதி பாடசாலைக்கு சென்று இதுவரை வீடு திரும்பவில்லை. அன்றைய தினம் குறித்த சிறுவன் பாடசாலை சென்று கல்வி கற்க மாட்டேன் எனவும் தான் வேலைக்கு செல்லப் போவதாவும் தாயாரிடம் தெரிவித்துள்ளார். குறித்த சிறுவன் தொடர்பில் தகவல்…
