News
“வில்பத்து தொடர்பிலான உண்மையை வெளிப்படுத்த எந்த அரசியல் தலைமையும் முன்வரவில்லை”
வில்பத்து” விவகாரம் தொடர்பில், பேரினவாதிகள் தன்மீது தொடர்ச்சியான பொய்க் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றபோதும், எந்த ஓர் அரசியல் தலைமையும் இந்தக் குற்றச்சாட்டில் உண்மை இல்லையெனத் தெரிந்திருந்தும், அதனை வெளிப்படையாகச் சொல்வதற்கு தயங்குகின்றனர் என்று பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னார், முசலியில் நேற்று முன்தினம் (29) இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று, உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது, “இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக மக்கள் வாழாத பிரதேசம் காடுகளால் சூழப்பட்டு, கண்ணிவெடிகள் விதைக்கப்பட்டிருந்த வேளைதான்,…
’ஐக்கிய மக்கள் சக்தி” கூட்டணி உதயம்
சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்கும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை இன்று (02) கைச்சாத்திடப்பட்டன.
எருக்கலம்பிட்டி மகளீர் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி
எருக்கலம்பிட்டி மகளீர் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வு கடந்த (01) இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும் , முன்னாள் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் கலந்துகொண்டார்
அல்-ஹாமியா மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டியின் இறுதிநாள் நிகழ்வு
வவுனியா, மாங்குளம் அல்-ஹாமியா மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டியின் இறுதிநாள் நிகழ்வு கடந்த (29) இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், முன்னாள் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் கலந்துகொண்டார்
“இன ஐக்கியம், புரிந்துணர்வின் மூலமே சமூகங்களுக்கிடையிலான பாதுகாப்பை நிலைப்படுத்த முடியும்” – முசலியில் ரிஷாட்!!!
இனங்களுக்கிடையிலான ஐக்கியம், புரிந்துணர்வே சமூகத்துக்கான பாதுகாப்பையும் இருப்பையும் நிலைப்படுத்துமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். ‘ரிஷாட் பதியுதீன் பவுண்டேஷனின்’ ஏற்பாட்டில், பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழகத்துக்கு தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் வைபவம், மன்னார், கொண்டச்சியில் நேற்று (29) இடம்பெற்றபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது, “வன்னி மாவட்டத்தில் சிதைந்துபோய்க் கிடந்த தமிழ் – முஸ்லிம் உறவை துளிர்க்கச் செய்து, அதனை வலுப்படுத்துவதில் மக்கள் காங்கிரஸ்…
‘நான்கு தேர்தல்களில் தொடர்ச்சியாக கிடைத்த அதிகாரத்தினால் நேர்மையுடன் பணியாற்றியிருக்கின்றோம்’
வன்னிச் சமூகம் கடந்த நான்கு தேர்தல்களிலும் தொடர்ச்சியாக பெற்றுத்தந்த அதிகாரங்களின் மூலம், நேர்மையாகவும் உண்மையாகவும் உச்சளவில் பணியாற்றியுள்ளோம் என்ற மனநிறைவு தமக்கு இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னார், கொண்டச்சி அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையின் சஞ்சிகை வெளியீடு, மாணவர் கெளரவிப்பு, “ரிஷாட் பதியுதீன் பவுண்டேஷனினால்” தெரிவுசெய்யப்பட்ட 100 பல்கலை மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு மற்றும் 2019 உயர்தரத்தில் சிறந்த பெறுபேறு பெற்ற மாணவர்களுக்கான கெளரவிப்பும் நேற்று மாலை (29) நடைபெற்றது….
உதுமான் வித்தியாலயத்தின் 1வது வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி
மீராவோடை உதுமான் வித்தியாலயத்தின் 1வது வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி 26.02.2020 புதன்கிழமை அதிபர் முபாரக் தலைமையில் மீராவோடை அல் ஹிதாயா பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்நிகழ்வுக்கு பிரதிக் கல்விப் பணிப்பாளர்அஜ்மீர், பிரதேச சபை உறுப்பினர் நெளபர், கோட்டக் கல்விப் பணிப்பாளர் அஹ்சாப், முன்னாள் தவிசாளர் ஹமீட், உதவி கல்விப் பணிப்பாளர் , ஜாபீர் கரீம், ஆசிரியர் ஆலோசகர் சித்தீக், அதிபர்கள்,…
விசேட தேவையுடைய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு
கமு/கமு/அல்-அதான் வித்தியாலயத்தில் நேற்று (28) விசேட தேவையுடைய மாணவர்களுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்கள் நிந்தவூர் பிரதே சபையின் தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது. கடந்த சுதந்திர தின விழாவை முன்னிட்டு நிந்தவூர் பிரதேச சபையினால் நடைமுறைப்படுத்தப்பட்ட கல்வி அபிவிருத்தித் திட்டத்தின் ஒரு அங்கமாகவே இந் நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் தேர்தல் எமது சிறுபான்மை சமூகத்தின் உரிமையை பாதுகாக்கும் தேர்தலாகும்_அப்துல்லா மஃறூப் எம்.பி
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் அபிவிருத்திக்கான தேர்தல் அல்ல அது எமது சிறுபான்மை சமூகத்தின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான தேர்தலாகும் எனவும் இதனை பாதுகாக்க நாம் சரியான தலைமகளை நாடாளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப் தெரிவித்தார். தம்பலகாமம் அல் ஹிக்மா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நேற்று (27) மாலை இடம் பெற்ற இல்ல விளையாட்டு போட்டியில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்துரைக்கையில்…
“பன்முக ஆளுமையின் மறைவு கவலை தருகிறது” ரிஷாட் பதியுதீன் எம்.பி!!!
பன்முக ஆளுமை கொண்ட புத்தளத்தின் பொக்கிஷம் அல்-ஹாஜ் அப்துல் லதீப் ஆசிரியரின் மறைவு கவலை தருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “அன்னார் சிறந்த மனித நேயம் கொண்டவராகவும் சமூகத்தின் நன்மதிப்பை பெற்றவராகவும் விளங்கினார். நல்லாசிரியராக, பன்னூலாசிரியராக, சிறந்த ஊடகவியலாளராக, கவிஞராக இன்னும் பல்வேறு துறைகளிலும் தடம்பதித்திருந்த அன்னாரின் மறைவு புத்தளம் மண்ணுக்கு பேரிழப்பாகும். இவர் சமூகத்திற்காக பல நூல்களை…
நிந்தவூர் கடற்கரைப் பிரதேசங்களில் ஆசனவசதி! 75 இலட்சம் நிதி ஒதுக்கீடு
நிந்தவூர் கடற்கரைப் பிரதேசத்திற்கு பொழுதுபோக்கிற்காக வருகை தரும் பொதுமக்களைக் கவரும் வண்ணமும் அத்தகைய பொது மக்கள் மற்றும் மீனவ சமூகத்தினருக்கும் வசதிகளை ஏற்படுத்தும் வகையிலான செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அண்மைக்காலமாக நிந்தவூர் கடற்கரைப் பகுதிக்கு பொழுது போக்கிற்காக வருகைதரும் பொது மக்களின் தொகை அதிகரித்துவருவதுடன், குறிப்பாக அயல் பிரதேசங்களைச் சேர்ந்தோர் குடும்பம், குடும்பமாகப் பெருமளவில் மாலை நேரங்களில் வருகை தரவும் தொடங்கியுள்ளனர். இதனையடுத்து நிந்தவூர் பிரதேச சபைத் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் தனது எண்ணக்கருவிற்கு அமைய வருகைதரும் பொது மக்களுக்கு…
பூம் பூம்” விளையாட்டு கழகத்திற்கான விளையாட்டு சீருடை வழங்கும் நிகழ்வு
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்பிட்டி பிராந்திய அமைப்பாளரும், முன்னால் மாகாண சபை உறுப்பினருமான ஆப்தீன் எஹியா அவர்களின் தனிப்பட்ட நிதியிலிருந்து, “எஹியா பௌண்டேசன்” ஊடாக கடையாமோட்டை “பூம் பூம்” விளையாட்டு கழகத்திற்கான விளையாட்டு சீருடை (25) உத்தியோக பூர்வமாக கழகத்தினருக்கு வழங்கி வைக்கப்பட்டது
