News
பொலிஸார் ஐவரை கைது செய்ய உத்தரவு!
சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்திருந்த சந்தேகநபரை சித்திரவதைக்கு உள்ளாக்கி, கொலை செய்து, சடலத்தை இரணைமடுக் குளத்தில் போட்ட வழக்குத் தொடர்பில் சந்தேகநபர்களாக அடையாளங் காணப்பட்ட 5 பொலிஸ் உத்தியோகத்தர்களை கைது செய்து, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதிக்கு முன்னர், கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு, குற்றப்புலனாய்வு பொலிஸாருக்கு நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா, நேற்று புதன்கிழமை (21) உத்தரவிட்டார். மேலும், 5 சந்தேகநபர்களின் வெளிநாட்டு பயணங்களையும் தடை செய்து, அதனை உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்குமாறும் உத்தரவிட்டார்.
‘அலைபேசிக் கட்டணங்களுக்கான வரி நீக்கப்படும்’
-வி.நிரோஷினி – தொலைபேசிக் கட்டணங்களுக்காக விதிக்கப்பட்டுள்ள வரியை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திறன்பேசி (smartphone) வழியாக மேற்கொள்ளப்படும் அழைப்புகளுக்கான கட்டண வரியை, முழுமையாக நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என, தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார். இணையம் மூலமாக அழைப்புக்களை மேற்கொள்வதற்கான வசதி வாய்ப்புக்களை அதிகரித்துக் கொடுக்கவுள்ளதாகவும் இதற்கான கட்டண அறவீடு, நிதி ஒதுக்கீடு தொடர்பான யோசனையை, எதிர்வரும் 2017ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டத்திலும் உள்ளவாங்க முயற்சித்து வருவதாகவும் குறிப்பிட்டார்….
இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்கு மேஜர்ஜெனரல் கமால் புகழாரம்
சிறிலங்காவின் முதன்மையான புலனாய்வுச் சேவையான இராணுவப் புலனாய்வுப் பணியகத்தின் வீழ்ச்சியைத் தடுக்காவிடின், நாடு கடுமையான விலையை கொடுக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளார் சிறிலங்கா இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன. தெரண தொலைக்காட்சிக்கு அளித்துள்ள செவ்வியில் அவர், ‘உயர்மட்ட வழக்கு ஒன்றுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் இரண்டு லெப்.கேணல் அதிகாரிகள் உள்ளிட்ட இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தீவிரமான கவலையை ஏற்படுத்தியுள்ளது. மரபு ரீதியான இராணுவ அச்சுறுத்தலை…
சங்ககார முல்லைத்தீவுக்கு விஜயம்
வருடாந்தம் நடைப்பெற்று வருகின்ற முரளி கிண்ணம் கிரிக்கெட் சுற்றுப் போட்டி2016ஆம் ஆண்டுக்கான ஆரம்ப நிகழ்வு கிளிநொச்சி இரணைமடு நிலும்பியசவில்ஆரம்பமாகியது. நேற்று மாலை (20) இலங்கை கிரிகெட் அணியின் முன்னாள் தலைவரும், உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவருமான குமார் சங்ககார விஷேட அதிதியாக கலந்துகொண்டு குறித்த நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். நாளைய தினம் கடினப்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டிகள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, ஒட்டுசுட்டான், மாங்குளம் போன்ற இடங்களில் நடைபெறவுள்ளது இப்போட்டியில் 23 அணிகளுக்கான போட்டிகள் ஆரம்பமாகும். இதில்…
கொழும்புக் குப்பைகளை புத்தளத்தில் கொட்டும் நடவடிக்கையை உடன் கைவிடுங்கள் – பாராளுமன்றில் அமைச்சர் றிஷாத்
-ஊடகப்பிரிவு புத்தளம் தொகுதியில் அமைந்துள்ள நுரைச்சோலையில் அனல் மின்சாரத்தை அமைத்து கடந்த அரசாங்கம் அங்கு வாழ்ந்து வரும் மக்களை துன்பத்துக்குள்ளாக்கியது போல இந்த அரசாங்கமும் கொழும்பில் கொட்டப்படும் குப்பைகளை புத்தளத்திற்குக் கொண்டு போய் அந்த மக்களை தொடர்ந்தும் துன்பத்திற்கு உள்ளாக்கக் கூடாதென்று பாராளுமன்றத்தில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார். எத்தனையோ தொகுதிகளையும் மாவட்டங்களையும் தாண்டி, கொழும்பில் சேரும் குப்பைகளை புத்தளத்திற்குக் கொண்டு சென்று அங்கு கொட்டும் திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டுமெனவும் அவர் பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார்….
வட மாகாண தமிழ் மொழிச் சேவைக்கு புதிய பொலிஸ் அவசர இலக்கங்கள்
தமிழ் மொழியில் தகவல்களைப் பெறுவதற்காகவும் முறைப்பாடுகளை மேற்கொள்வதற்காகவும் புதிய பொலிஸ் அவசர அலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய பகுதிகளிலுள்ள மக்களுக்காக இந்தப் புதிய இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக, பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. இதற்கமைய, 0766 224949 மற்றும் 0766 226363 ஆகிய அலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்புகொள்வதன் மூலம் தமிழில் சேவைகளைப் பெற்றுக் கொள்ளலாம். இந்நடவடிக்கை வவுனியா பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சரத் வீரவன்சவின் விளக்கமறியல் நீடிப்பு
பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் சகோதரர் சரத் வீரவன்சவை எதிர்வரும் ஒக்டோபர் 5 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று (21) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரச வாகனங்களை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் வாக்குமூலமளிப்பதற்காக சரத் வீரவன்ச நிதி மோசடி விசாரணைப்பிரிவுக்கு கடந்த முதலாம் திகதி அழைக்கப்பட்டிருந்த நிலையில், கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தேசிய நுளம்பு ஒழிப்பு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது
இம்மாதம் 27ஆம் திகதி முதல் அடுத்த மாதம் 3ஆம் திகதி வரை தேசிய நுளம்பு ஒழிப்பு வாரம் நடைமுறைப்படுத்தப்படும். நுளம்புகள் உருவாகும் வகையில் சுற்றுச் சூழலை வைத்திருப்போருக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் பாலித்த மஹிபால தெரிவித்துள்ளார். நுளம்பு ஒழிப்பு வாரத்தில் வீடுகள், நிறுவனங்கள் என்பனவற்றின் சுற்றுச் சூழல்கள் பரிசோதிக்கப்படவிருக்கின்றன. நான்காயிரத்து 500 பேரை உள்ளடக்கிய குழுக்கள் இந்தப்பணியில் ஈடுபடும்.
இராணுவ அருங்காட்சியகம் பொது மக்களின் பார்வைக்காக
திருகோணமலை காலனித்துவம் மற்றும் அண்மைய இராணுவத்தின் வரலாறு தொடர்பான அருங்காட்சியகம் பொது மக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டள்ளது. இலங்கை இராணுவம் திறந்தவெளி அருங்காட்சியகம் ஒன்றை திருகோணமலை உவர் மலை பகுதியில் அமைத்துள்ளது. நேற்று முன்தினம் (19) 22ம் பிரிவு தலைமையகத்தில் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிசாந்த டி சில்வா இதனை திறந்து வைத்தார். இன்று முதல் பொதுமக்கள் இதனை பார்வையிட முடியும். காலாற்படை ஆயுதங்கள்,கவச வாகனங்கள், பீரங்கி துப்பாக்கிகள் மற்றும் ஆடியோ காட்சி போன்றவை இதில்…
இணையத்தளத்தின் ஊடாக மாத்திரமே பதிவுகளை மேற்கொள்ள வேண்டும்
2015/2016 ஆண்டு பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்றுள்ள மாணவர்கள் இணையத்தளத்தின் ஊடாக மாத்திரமே பதிவுகளை மேற்கொள்ள முடியும். 2015ம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர பத்திர உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளுக்கு அமைய பல்கலைக்கழகங்களுக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த வருடத்திலும் பார்க்க இவ்வருடம் மேலதிகமாக 10% ஆன மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கான அனுமதியை பெற்றுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இம்முறை பல்கலைக்கழக அனுமதிக்காக 68 ஆயிரத்து 299 பேர் விண்ணப்பித்துள்ளனர். எந்தவொரு மாணவருக்காவது மேன்முறையீடு செய்ய வேண்டுமாயிருந்தால் அதற்கென நேற்று…
அரபு நாடுகளுக்கு செல்லும் ஜனாதிபதி மைத்திரி
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெகுவிரைவில் அரபு நாடுகளுக்கான விஜயமொன்றினை மேற்கொள்ளவுள்ளார். அவர் ஐக்கிய அரபு இராச்சியம், கட்டார், சவூதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு பயணிக்கவுள்ளார். சவூதி அரேபியா விஜயத்தின்போது சவூதி மன்னரிடமும் ஹஜ் மேலதிக கோட்டா தொடர்பாக கலந்துரையாடவுள்ளார். இதனை முஸ்லிம் சமய விவகார மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் தெரிவித்துள்ளார்.
வடக்கிலும் கிழக்கிலும் சிங்களவர்கள் குடியேற்றப்பட வேண்டும்
-விடிவெள்ளி ARA.Fareel- நாட்டில் மக்கள் சிங்கள கிராமம், முஸ்லிம் கிராமம், தமிழ் கிராமம் என பிரிந்து வாழ்வதினாலேயே இன ரீதியிலான மோதல்கள் ஏற்படுகின்றன. கல்ஹின்னை சம்பவமும் இதன் பின்னணியிலே இடம்பெற்றுள்ளது. எனவே இவ்வாறான சம்பவங்களைத் தவிர்ப்பதற்கு முஸ்லிம் கிராமங்களில் சிங்களவர்களும் சிங்கள கிராமங்களில் முஸ்லிம்களும் குடியேற்றப்பட வேண்டும் என சிங்ஹலே அமைப்பின் செயலாளர் மெதில்லே பஞ்சாலோக தேரர் தெரிவித்தார். கல்ஹின்னையில் இடம்பெற்ற சம்பவத்தினையடுத்து காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மூன்று பெரும்பான்மை இனத்தவர்களையும் சிங்ஹலே அமைப்பின் பிரதிநிதிகள்…
