News
அமைச்சர் றிஷாத் பதியுதீனின் விடாமுயற்சியால் 117 ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்
அமைச்சர் றிஷாத் பதியுதீன் அவர்களின் விடா முயற்சியால் தற்காலிகமாக புல்மோட்டை கனியவல தினைக்களத்தில் பணிபுரிந்த 117 ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
புத்தளம் முல்லிபுரம் பாடசாலை வீதி அபிவிருத்திக்கான வேலைத்திட்டம்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் புத்தளம் முல்லிபுரம் பாடசாலை வீதி அபிவிருத்திக்கான வேலைத்திட்டத்தை பார்வையிடும் போது..
மன்னார் நகரமண்டபத்தில் அமைச்சர் றிஷாத் உரையாற்றும்போது… (வீடியோ)
29.09.2016 அன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிஷாத் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில், வடபிராந்திய தேசிய இளைஞர் சேவைகள் மன்றப் பணிப்பாளர் முனவ்வரின் தலைமையில், மன்னார் மாவட்ட இளைஞர் கூட்டுறவுச் சங்கத்தினால் (நிஸ்கோ) இளைஞர்களுக்கு சுயதொழில் திட்டங்களுக்கான காசோலை வழங்கும் நிகழ்வில் அமைச்சர் றிஷாத் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போது…
கடல் நீர் கரையை நோக்கி வருவதை தடுப்பதற்கு நடவடிக்கை
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் புத்தளம் கடற்கரை வீதியில் மழை காலங்களில் கடல் நீர் கரையை நோக்கி வருவதை தடுப்பதற்காக தொட்டாபுரம் அமைப்பதற்காக வேலை திட்டம் ஆரம்பிக்கப் பட்டுள்ளது.
ஐ.எப்.எம் முன்பள்ளியின் 44 வது ஆண்டு நிறைவு நிகழ்வுகள்
புத்தளம் நகரின் முதலாவது முன்பள்ளியான ஐ.எப்.எம். முன்பள்ளியின் 44 வது வருட நிறைவோடு கூடிய வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி சிறுவர் தினமான கடந்த சனிக்கிழமை (01) மாலை புத்தளம் ஸாஹிரா ஆரம்ப பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில், பிரதம அதிதியாகக் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி அவர்கள் கலந்துகொண்டற் விழாவை ஆரம்பித்து வைத்ததுடன், போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களையும் வழங்கி சிறப்பித்தார். புத்தளம் நகரில் முன்பள்ளிகள் எதுவுமே இல்லாத ஒரு கால கட்டத்தில் 04.02.1972 ம் ஆண்டு இந்த…
வீடமைப்பு திட்டத்தின் அடிக்கல் நாட்டும் விழா (வீடியோ)
வவுனியா – சிங்கள பிரிவு வீடமைப்பு திட்டத்தின் அடிக்கல் நாட்டும் விழா
இலங்கை மற்றும் தென்கொரியாவுக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
இலங்கை மற்றும் தென்கொரியாவுக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. குறித்த ஒப்பந்தத்தினை தென்கொரிய தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் தலைவர் லெப்டினன் ஜெனரல் வீ சேங்கோ மற்றும் இலங்கை பாதுகாப்பு இராஜாங்க செயலாளர் ருவான் விஜேவர்தன மற்றும் பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி ஆகியோர் கைச்சாத்திட்டுள்ளனர்.
குருநாகலையில் அமைச்சர் றிஷாத்……
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றிஷாத் பதியுதீன் அவர்களின் குருநாகல் மாவட்ட இணைப்பாளர் ஜனாப் அஸார்தீன் – மொயீனுத்தீன் அவர்களின் ஏற்பாட்டில் குருநாகல் வெஹெர விளையாட்டு மைதானத்தில், நேற்று (02.10.2016) இடம்பெற்ற சமூக நல்லிணக்கத்திற்கான ஹஜ் விளையாட்டுப் போட்டி நிகழ்வில், அமைச்சர் றிஷாத் பதியுதீன் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். அவ்வப்போது அங்கு உரையாற்றிய அமைச்சர் றிஷாத் பதியுதீன் “ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமையில் இயங்கும் இன்றைய அரசாங்கம் இன…
மாத்தளை அரபுக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் றிஷாத்
அரசியல் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் சமுதாய நலனுக்காக முஸ்லிம் அரசியல் கட்சிகளும், உலமாக்களும், புத்திஜீவிகளும், இணைந்து பணியாற்ற வேண்டிய காலகட்டம் உருவாகியுள்ளதாகவும், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா இந்தப் பணியை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய பாரிய கடப்பாட்டைக் கொண்டிருப்பதாகவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். மாத்தளை, உக்குவெல உம்மு சலாமா பெண்கள் அரபுக்கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு அமைச்சர் உரையாற்றினார். அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் ரிஸ்வி முப்தி மற்றும் இஸ்லாமியப்…
அ.இ.ம.கா.வின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட விளையாட்டுப்போட்டி
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றிஷாத் பதியுதீன் அவர்களின் குருநாகல் மாவட்ட இணைப்பாளரும், அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தேசிய இணைப்புப் பணிப்பாளருமான அஸார்தீனின் ஏற்பாட்டில் குருநாகல் வெஹெர நகர விளையாட்டு மைதானத்தில், நேற்று காலை (02) இடம்பெற்ற நல்லிணக்கத்திற்கான ஹஜ்விளையாட்டுப்போட்டியில், அமைச்சர் றிஷாத் பதியுதீன் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் அஷோக் அபேசிங்ஹ, வடமேல் மாகாண முதலமைச்சர் தர்மசிரி தசநாயக்க, மக்கள்…
இந்திய ஊடகவியலாளருக்கு அமைச்சர் றிஷாத் வழங்கிய விசேட பேட்டி
இலங்கையில் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடில் அதிபர் மைதிரிபால சிறீசேனா, பிரதமர் ரணில் விக்கிரமசிங் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்;இரண்டாண்டுக்கு ஒரு முறை உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு நடத்தப்படும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாத் பதியுதீன் நவமணி நாளிதழுக்கு சிறப்பு பேட்டி –`திருச்சி எம்.கே. சாஹூல்ஹமீது – இலங்கைக்கு இந்திய ஊடகவியலாளர் திருச்சி எம்.கே. சாஹூல்ஹமீது பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விஜயம் செய்தார். பின்னர் பல்வேறு அரசியல் முக்கிய முஸ்ஸிம்…
