News
வவுனியா வளாகத்தை பல்கலைக்கழகமாக தரமுயர்த்த பாடுபடுவேன் : அமைச்சர் றிஷாட்
-அமைச்சின் ஊடகப்பிரிவு – வவுனியா வளாகத்தை பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். புதிய சாளம்பைக்குளம் ஆயிஷா வித்தி;யாலயத்தில் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி அதிபர் கே.எம்.பைசர் தலைமையில் இடம்பெற்ற போது பிரதம விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சர் கூறியதாவது வவுனியா மாவட்டத்தில் குறிப்பாக சாளம்பைக்குளப் பிரதேசம் இன ஐக்கியத்துக்கு முன்னுதாரணமாக திகழ்கின்றது. தமிழ் முஸ்லிம் உறவுக்கு எடுத்துக் காட்டாக விளங்கும் இந்தக்…
“வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினை தீர்க்கப்படும்” அமீரலியிடம் பிரதமர் உறுதி
-எஸ்.முர்சித் – மட்டக்களப்பு அம்பாரை மாவட்டங்களில் தொடர்ச்சியாக உண்ணாவிரதம் மேற் கொண்டுவரும் வேலையற்ற பட்டதாரிகளுக்கு வெகுவிரைவில் தீர்வைப் பெற்றுத் தருவதாக பிரதியமைச்சர் அமீர் அலியிடம் பிரதமர் ரணீல் விக்ரமசிங்க மீண்டும் உறுதியளித்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இன்று (27.02.2017) மீண்டும் சந்தித்துப் பேசிய பிரதியமைச்சர் அமீர் அலி இந்த மாவட்டங்களில் வேலையற்ற பட்டதாரிகள் உண்ணாவிரதத்தை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதாகவும், இந்தப் பிரச்சினையைத் தீர்த்து வைக்க வேண்டிய அவசியத்தையும் தெளிவு படுத்தினார். கிழக்கு மாகாணத்தில் சுமார் 4500 பட்டதாரிகள்…
காப்பெட் பாதையாக மாற்றமடையும் குவைத் வைத்திசாலை வீதி: அ.இ.ம.கா.வின் அபிவிருத்திப் பணி
குவைத் வைத்திசாலை வீதி (Kuwait Hospital Road) காப்பெட் பாதையாக புனர்நிர்மானம் செய்யும் பணிகள் நேற்று (2017-02-27) நடைபெற்றது. இந்நிகழ்வில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கெளரவ அல்ஹாஜ் எம்.எச்.எம். நவவி அவர்களும், அலி சப்ரி ரஹீம் அவர்களும் கலந்துகொண்டனர்.
வடக்கு முஸ்லிம்களுக்காக பரிந்து பேசும் புத்தி ஜீவிகள் பாராட்டப்பட வேண்டியவர்கள் – அமைச்சர் றிஷாத்
-சுஐப் எம் காசிம் – வில்பத்தை முஸ்லிம்கள் நாசமாக்குகிறார்கள் என்ற கசசலுக்கு மத்தியிலேயே இதன் உண்மை நிலையையும் நமது மக்களின் வாழக்கை கஷ்டங்களையும் வெளிக் கொணரும் மனித நேயம் கொண்ட சிங்கள புத்தி ஜீவிகளினதும் மத குருமார்களினதும் பணி பாராட்டத்தக்க தென கைத தொழில் அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். ” மரங்களில் கருணை காட்டுவோம் எனும் தொனிப் பொருளில் இன்று( 27) காலை மறிச்சிக்கட்டியில் ஆரம்பித்து வைக்கப்பட்ட பயன் தரும் மரங்கள் நடம் திட்டத்தின் போதே…
கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சு காரியாலயம் திறந்து வைப்பு
கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சு காரியாலயம் இன்று 27.02.2017 ஆம் திகதி புதிய கட்டிடத்தில் திறந்து வைக்கப்பட்டது. இக் கட்டிடத் திறப்பு விழா அமைச்சின் செயலாளர் திருமதி ரேனுகா ஹேரத் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் பி.ஹர்ஸன், பிரதி அமைச்சர் அமீர் அலி ஆகியோரின் பங்கு பற்றுதலுடன் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்டது. பிரதி அமைச்சர் உரையாற்றுகையில் கடந்த காலத்தில் மூன்று இடங்களில் இயங்கி வந்த…
வக்பு சொத்துகள் அனைத்தையும் பதிவுசெய்ய நடவடிக்கை எடுக்குக
அமைச்சர் ஹலீமிடம் கோரிக்கை வக்பு சொத்துகள் சட்டத்திற்கு முரணாக கையாளப்பட்டு வருவதைத் தடைசெய்வதற்காக சொத்துகளை வக்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்வதற்கான சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி வக்பு சபையின் தலைவர் சட்டத்தரணி எஸ்.எம்.எம். யாசீன் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் மற்றும் முஸ்லிம் பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் ஆகியோரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். குறிப்பாக அரபு மத்ரஸாக்களும் அவற்றுக்குரிய வக்பு சொத்துக்களும் வக்பு சபையில் பதிவு செய்யப்படாததால் மத்ரஸா வக்பு சொத்துக்கள் பலவற்றில் முறையீனங்கள் இடம்பெறுவதாகவும்…
அரபா மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற விளையாட்டுப் போட்டி; பிரதம அதிதியாக அமைச்சர் றிஷாத்
-ஊடகப்பிரிவு வவுனியா புளிதறித்த புளியங்குளம், அரபா-மகா-வித்தியாலயத்தில் நேற்று முன்தினம் (25) இடம்பெற்ற வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் வட மாகாண சபை உறுப்பினர்களான ரிப்கான் பதியுதீன், வி ஜயதிலக, வவுனியா மாவட்ட கல்வித் திணைக்கள அதிகாரிகள், அமைச்சரின் இணைப்புச் செயலாளர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
எல்லை நிர்ணய வர்த்தமானி அறிவித்தலை எதிர்த்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வழக்குத்தாக்கல்
-சுஐப் எம். காசிம் உள்ளூராட்சி மன்ற தேர்தல் முறைத் திருத்தச்சட்ட எல்லை நிர்ணயம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் சிறுபான்மை மக்களுக்கு, குறிப்பாக முஸ்லிம், மலையக சமூகத்தவருக்கு பாதிப்பை ஏற்படுத்துவதால் அதற்கெதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீன் தெரிவித்தார். இது தொடர்பில் வெகு விரைவில் மக்கள் காங்கிரசின் அரசியல் அதியுயர் பீடம் கூடி அடுத்தகட்ட நடவடிக்கையை ஆராய்ந்து தீர்க்கமான முடிவை மேற்கொண்ட பின்னர் வழக்குத் தாக்கல்…
இனவாதததுக்கு எதிராக செயற்படும் துணிவினை நாம் கொண்டுள்ளோம் – மஹிந்த அமரவீர
-Irshad Rahumadullah இந்த நாட்டில் இனவாத சக்திகளை தோற்கடிகத்து சகலரும் விரும்பும் சமாதான சூழலை ஏற்படுத்தும் கூட்டு முண்ணனியுடன் பயணிக்கும் அரசியல் கலாசாரத்தை தோற்றுவிப்பதே எமது இலக்காகும் என ஜக்கிய மக்கள் மக்கள் சுதந்திர முண்ணணயின் பொதுச்செயலாளரும்,அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்தார். மன்னார் ஓலைத்தொடுவாவில் இடம் பெற்ற திறப்பு விழாவொன்றில் சனக்கிழமை கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மெற்கண்டவாறு கூறினார். இன்று இனவாதிகள் அதிகாரப் பகிர்வை எதிர்க்கின்றனர். எமது ஜனாதிபதி இந்த நாட்டில் வாழும் அனைத்து…
மீனவத் தொழிலுக்கான தடைகளை ஒட்டுமொத்தமாக மேற் கொள்வது ஆரோக்கியமானதல்ல – அமைச்சர் றிஷாத்
-ஊடகப்பிரிவு மீனவத் தொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கு ஒரேயடியாக பல்வேறு தடைகளை ஏற்படுத்தும் போது அவர்கள் தமது வாழ்வாதாரத்தைக் கொண்டு செல்வதில் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருவது தொடர்பில் கடற்றொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சருக்கும், உயர் மட்டத்தினருக்கம் தான் வெகுவாக உணர்த்தியுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான றிசாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னார் ஓலைத் தொடுவாவில் வருடமொன்றுக்கு 750 மில்லியன் ரூபா வருமானம் பெறக்கூடிய அட்டைப் பண்ணைத் தொகுதிக்கான அடிக்கல் நாட்டுவிழாவில் கௌரவ அதிதியாக…
பிரதமர் ரணில் – பிரதியமைச்சா் அமீா் அலி அவசர சந்திப்பு
மட்டக்களப்பு வேலையற்ற பட்டதாரிகள் தொடர்பில் தீர்வு வேன்டி பிரதமர் ரணில் விக்கிரம சிங்க அவா்களை பிரதியமைச்சா் எம்.எஸ்.எஸ். அமீா் அலி நேற்று அவசர சந்திப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் வேலையற்ற பட்டதாரிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் அவா்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் பிரதமர் ரணில் விக்கிரம சிங்க அவா்களை பிரதியமைச்சா் எம்.எஸ்.எஸ். அமீா் அலி நேற்று (24)நேரில் அவசர சந்திப்பு ஒன்றினை மேற்கொண்டிருத்தார். நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் இச்சந்திப்பு பிரதமர் ரணில் விக்கிரம…
பாவனையாளர் அதிகார சபையின் பாய்ச்சல் தொடர்கின்றது.
அமைச்சின் ஊடகப் பிரிவு நாட்டின் வர்த்தக நிலையங்களை நுகர்வோர் அதிகார சபை நேற்றும் 22 நடாத்திய தேடுதல் நடவடிக்கைகளில் முறைகேடான விற்பனைகளில் ஈடுபட்ட 106 வர்த்தகர்கள் அகப்பட்டுள்ளனர். கொழும்பு – 13, கம்பஹா – 8, களுத்துறை – 5, பதுளை – 3, புத்தளம் – 6, காலி – 5, ஹம்பாந்தோட்டை- 4, மாத்தளை – 5, நுவரெலியா – 6, கண்டி – 12, மட்டக்களப்பு -6, திருகோணமலை- 4, அம்பாறை –…
