News
ஒரே நாளில் 50 சதொச விற்பனை நிலையங்களை ஜனாதிபதி, பிரதமரின் பங்ககேற்புடன் திறக்க ஏற்பாடு. கூட்டுறவுத்துறைக்கு புதிய கொள்கை வகுக்கும் மாநாட்டில் அமைச்சர் ரிஷாட் அறிவிப்பு
ஊடகப்பிரிவு ஜனாதிபதி, பிரதமர், மற்றும் கைத்தொழில் வர்த்தக அமைச்சரின் பங்கு பற்றுதலுடன் இம்மாதம் 28 ஆம் திகதி ஒரே நாளில் நாடு முழுவதிலும் 50 சதொச விற்பனை நிலையங்களை திறந்து வைக்க கூட்டுறவு மொத்த விற்பனை நிலையம் முடிவு செய்துள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கூட்டுறவுத்துறைக்கான கொள்கையைத் தயாரிக்கும் வகையிலான இறுதிக்கட்ட மாநாடு பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற போது அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். மாகாண கூட்டுறவு அமைச்சர்கள்,…
கருவலகஸ்வெவயிலிருந்து முஸ்லிம் கொலனி வரையான கிராமிய வீதி செப்பணிடும் வேலைத்திட்டதினை ஆரப்பித்து வைத்த இஷாக் எம்.பி.
அநுராதபுரம் கஹடகஸ்திகிலிய பிரதேச செயலகத்திற்குற்பட்ட 232 – கஹடகஸ்திகிலிய மேற்கு கிராம சேவகர் பிரிவின் கருவலகஸ்வெவயிலிருந்து முஸ்லிம் கொலனி வரையான கிராமிய வீதி செப்பணிடும் வேலைத்திட்டம் அநுராதபுரம் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் இஸ்ஹாக் ரஹுமான் அவர்களின் கரங்களால் ஆரம்பிக்கும்போது
வாழைச்சேனை மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் கூட்டம் இக்கலந்துரையாடலில் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார்.
வாழைச்சேனை மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் கூட்டம் இன்று 18.03.2017 ஆம் திகதி வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையின் பிரதான மண்டபத்தில் பிரதி அமைச்சரின் இணைப்பாளர் தொளபீக் தலைமையில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார். மீனவர்களின் பல பிரச்சனைகள் ஆராயப்பட்டு அதற்கான தீர்வுகளும் பெற்று கொடுக்கப்பட்டது. இக்கலந்துரையாடலில் கடற்படை அதிகாரி விஜயரத்ன , Cosate Guard அதிகாரி சில்வா, வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திபிடுமுனை, வாழைச்சேனை…
நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பாடசாலைகளுக்கு இடையிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியில்பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார்.
ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பாடசாலைகளுக்கு இடையிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டி இன்று 18.03.2017 பாடசாலை அதிபர் ஹலீம் இஷாக் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார். இச்சுற்றுப்போட்டியில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 12 பாடசாலைகள் பங்கு பற்றும் இப்போட்டி ஓட்டமாவடி தேசிய பாடசாலை மைதானம் மற்றும் ஓட்டமாவடி அமீர் அலி விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது. பங்கு பற்றிய பாடசாலைகளும் மூன்று…
பிறைந்துரைச்சேனை சாதுலியா வித்தியாலயத்தின் 10வது இல்ல விளையாட்டுப்போட்டி நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர்அலி கலந்து கொண்டார்.
பிறைந்துரைச்சேனை சாதுலியா வித்தியாலயத்தின் 10வது இல்ல விளையாட்டுப்போட்டி அதிபர் இஸ்மாயில் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர்அலி கலந்து கொண்டார். இந்நிகழ்வில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜவாஹிர்சாலி, பிரதி கல்விப் பணிப்பாளர் அஷ்ரப் , உதவிக் கல்விப்பணிப்பாளர் றகுமான் , அதிபர்களான பிர்தௌஸ் , சுபைதீன், பரீட் , ஜிப்ரி கரீம் , ஆப்தீன், மன்சூர்,சலாம் மனேஜர் மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்.
Disaster Risk Management தொடர்பான கலந்துரையாடளில் பிரதியமைச்சர் அமீர் அலி..
Disaster Risk Management தொடர்பான கலந்துரையாடல் இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் திருமதி சாள்ஸ் தலைமையில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் கௌரவ அநுர பிரியதர்சன யாப்பா கலந்து கொண்டார். இக்கலந்துரையாடலில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன், ஸ்ரீநேசன் மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இனவாதம் பிரதேசவாதங்களின் மூலம் தனி நபர்கள் வெற்றி பெற்றாலும் சமூகத்திற்கு கிடைப்பது தோல்வியே – மன்னாரில் அமைச்சர் ரிஷாட்
-சுஐப் எம் காசிம் அரசியல்வாதிகள் சிலரின் கடந்த கால அரசியல் செயற்பாடுகளினாலேயே இனங்களுக்கிடையே பிரிவுகள் ஏற்பட்டு முரண்பாடுகளும் பிரச்சினைகளும் தோற்றுவிக்கப்பட்டதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னார் மாவட்டத்தில் இளைஞர் கழகங்களின் மாவட்ட சம்மேளன நிர்வாகிகள் தெரிவு, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் இன்று காலை இடம்பெற்ற போது அந்த நிகழ்வில் பிரதம அதிதியாக அமைச்சர் கலந்து கொண்டார். தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மாகாணப் பணிப்பாளர் முனவ்வர் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மாவட்ட இளைஞர்…
மூதூர் பிரதேசத்துக்கு அமைச்சர் றிஷாட் விஜயம் தீவிர டெங்கு பரவலைத் தடுக்க அவசர நடவடிக்கை
அமைச்சின் ஊடகப்பிரிவு மூதூர் மற்றும் தோப்பூர் பிரதேசங்களில் டெங்கு நோயைத் தடுப்பதற்கும் டெங்கு முகாமைத்துவத்துத்தை மேற்கொள்வதற்கும் அவசர நிதியுதவியாக 5 மில்லியன் ரூபாவை, அகில இலங்கை மக்;கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் வழங்கியுள்ளதாக கிண்ணியா நகரசபை முன்னாள் தவிசாளர் டொக்டர் ஹில்மி தெரிவித்தார். நேற்று மாலை(2017.03.16) மூதூர் தள வைத்தியசாலைக்கு விஜயம் செய்த அமைச்சர் அந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் டெங்கு நோயாளர்களை பார்வையிட்டார். மூதூர் தள வைத்ததியசாலை மருத்துவ அத்தியகட்சகர் டாக்டர்…
பிறைந்துறைச்சேனை 206 C அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வட்டாரக் கிளை உறுப்பினர் தெரிவு
இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தவிசாளரும் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார். இந்நிகழ்வில் சிரேஷ்ட அறிவிப்பாளரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கல்முனை தொகுதி அமைப்பாளர் ARM. ஜிப்ரியும் கலந்து கொண்டார். வட்டாரக் கிளை அமைப்பாளர் மன்சூர் வட்டாரக் கிளை செயலாளர் தொளபீக் கொள்கை பரப்புச் செயலாளர் நளீம் பொருளாளர் நாஸர் நெளஷாட் , ஜெளபர், சையினுத்தீன் ஹாஜி, ஜெமீல், மனாப், அசனார் , ஹானீம்…
வாகன உதிரிப்பாக விற்கனையில் மோசடி பஞ்சிகாவத்த சுற்றி வளைப்பில் 30 பேர் சிக்கினர்
அமைச்சின் ஊடகப்பிரிவு கொழும்பு பங்சிகாவத்தையில் வாகன உதிரிப்பாகங்கள் விற்பனை செய்யும் 30 வர்த்தக நிலையங்களை இன்று மாலை நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை அதிகாரிகள் சுற்றி வளைத்ததில் சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்டு ஜப்பான் ஜேர்மன் போன்ற நாடுகளின் முத்திரைகள் பதிக்கப்பட்டு விற்பனை செய்த பல இலட்சம் பெறுமதியான வாகன உதிரிப்பாகங்களை கைப்பற்றினர். அத்துடன் பல வரத்தக நிலையங்களில் விலைகள் பொறிக்கப்படாது விற்பனை செய்யப்பட்ட உதிரிப்பாகங்களையும் கைப்பற்றியதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் ஹசித்த திலரட்ன தெரவித்தார் தெரிவித்தார். கைதொழில் வரத்தக…
அமைச்சர் றிஷாட் கிண்ணியா விஜயம் அவசர தேவைக்காக 7.9 மில்லியன் நிதி ஒதுக்கீடு
சுஐப் எம் காசிம் கிண்ணியாவில் டெங்கு நோயினால் மக்கள் படுகின்ற அவஸ்தைகளை மீண்டும் இன்று ஜனாதிபதியை சந்தித்து நேரில் விளக்குவதோடு மேலும் பல அவசர நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் இன்று தெரிவி;த்தார். கிண்ணியாவிற்கு இன்று(2017.03.16) மாலை விஜயம் செய்த அமைச்சர் கிண்ணியா பொதுநூல் நிலையத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ருப், கிண்ணியா முன்னாள் நகரபிதா ஹில்மி மஹ்ருப்,; உட்பட பிராந்திய சுகாதார சேவைப்பணிப்பாளர், வைத்திய அதிகாரிகள் மருத்துவ அலுவலர்கள் ஜம்யியத்துல் உலமா, மஜ்லிஸுல் ஸுரா…
மனிதாபிமான பொறுப்புக்களை இனங்கண்டு செயற்பட வேண்டும் – ஜனாதிபதி
சட்டத்தின் மூலம் அரசாங்கம் மேற்கொள்ளும் முகாமைத்துவத்தை விடவும் தமது மனிதாபிமான பொறுப்புக்களை இனங்கண்டு நடவடிக்கை எடுப்பதற்கு உணவு, பானங்கள் உள்ளிட்ட மக்களுக்கு தேவையான ஏனைய நுகர்வுப் பண்டங்களை வழங்கும் அனைத்து நிறுவனங்களும் செயற்பட வேண்டுமென ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். உணவு பானங்கள் உள்ளிட்ட ஏனைய நுகர்வு பண்டங்களின் தரம் நாட்டு அபிவிருத்தியின் முக்கிய அளவுகோலாக இருப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், கொழும்பு தொடக்கம் நாடு முழுவதுமுள்ள உணவக சமையலறைகளில் அந்த தரம் மற்றும் தூய்மையை காண முடியாதெனவும்…
