News
மக்கள் காங்கிரஸ் வேற்பாளரை ஆதரிக்கும் புதுவெளி வட்டார மக்கள்!
ஏ.எம்.ரிஸாத் நடைபெறவிருக்கும் முசலி பிரதேச சபை தேர்தலில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சார்பாக, புதுவெளி வட்டாரத்தில் போட்டியிடும் அப்துர் ரஹ்மான் மெளலவியை ஆதரித்து, கரம்பை கிராமத்தில் வசிக்கும், புதுவெளி கிராம மக்கள் ஏற்பாடு செய்த கூட்டத்தில் கல்விமான்கள், ஊர் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மூலம் எமது கிராமத்துக்கு பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் செய்து தரப்பட்டு இருக்கிறது. அதேபோல் வேலைவாய்ப்புகள் இன்னும்…
‘மு.கா. தலைவர் சோரம் போய் கிடப்பதை, மௌனியாக பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை’ சட்டத்தரணி அன்சில்!
-ஊடகப்பிரிவு- முஸ்லிம் சமூகத்தின் காவலுக்காக உருவாக்கப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமை, முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலத்தை எதிரிகளிடம் அடகு வைத்தபோது, வாய்மூடி மௌனியாக இருக்க – தன்னால் முடியவில்லை என்று, முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட முன்னாள் உறுப்பினரும், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான சட்டத்தரணி எம்.ஏ.அன்சில் தெரிவித்துள்ளார். அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான தேர்தலில் பாலமுனை வட்டாரத்தில், ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பாக மயில் சின்னத்தில் அன்சில் போட்டியிடுகின்றார். இந்த நிலையில், அவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றிலேயே…
“கல்முனை மாநகரம் இம்முறை மக்கள் காங்கிரஸ் வசம். மக்கள் மீது பூரண நம்பிக்கை உண்டு” ஜவாத்!
-ஊடகப்பிரிவு- பல்லாண்டு காலமாக வினை திறன் அற்றவர்களிடம் சிக்கி சீரழிந்து வீழ்ச்சி அடைந்திருக்கும் கல்முனை மாநகரத்தை, வினை திறன் உள்ளவர்களின் கைகளில் கொடுத்து அழகுற பார்க்க வேண்டும் என்று ஆதங்கப்பட்டு கொண்டிருக்கும் மக்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு வாக்களித்து, கல்முனை மாநகரத்தை அகில இலங்கை மக்கள் காங்கிரஸிடம் மனம் உவந்து தருவார்கள் என்று கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஜவாத் தெரிவித்தார். இவர் கடந்த வாரம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து…
சாய்ந்தமருது மக்களின் போராட்டம மு.கா கொச்சைப்படுத்துகிறது.. அ.இ.ம.கா கெளரவப்படுத்துகிறது..
-துறையூர் ஏ.கே.மிஸ்பாஹுல் ஹக்- சாய்ந்தமருது மக்கள் தங்களது போராட்டத்தின் இன்னுமொரு வடிவமாக, நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சுயேட்சை குழுவொன்றை களமிறக்கியுள்ளனர். இவர்களின் இந்த முடிவு மிகவும் நியாயமானதும், அவசியமானதும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இதேபோன்ற திடமான முடிவை அட்டாளைச்சேனை மக்கள் எடுத்திருந்தால், இன்று அவர்களின் கையில் தேசியப்பட்டியல் இருந்திருக்கும். இதே முடிவை பொத்துவில் மக்கள் எடுத்திருந்தால், இன்று அவர்களின் கையில் தனியான கல்வி வலயம் கிடைந்திருக்கும். சம்மாந்துறை மக்கள் எடுத்திருந்தால், சம்மாந்துறை பிரதேசசபை, நகர சபையாகி…
“மக்கள் சேவைக்காகவே உருவான கட்சி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்” டாக்டர்.ஹஸ்மியா தெரிவிப்பு!
-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மக்களுக்காகவே உருவான கட்சி எனவும் ஏனைய அரசியல் கட்சிகளைப் போன்று கட்சித் தலைமையினதும், கட்சியினதும் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக மக்களை முன்னிறுத்தி உருவான கட்சி அல்ல எனவும் மக்கள் காங்கிரஸின் தேசிய மகளிர் அணித்தலைவி டாக்டர். ஹஸ்மியா உதுமாலெப்பை தெரிவித்தார். நடளாவிய ரீதியில் மக்கள் காங்கிரஸின் மகளிருக்கான பொதுக்கூட்டங்கள் டாக்டர்.ஹஸ்மியாவின் ஊடாக நடைபெற்று வருகின்றன. அந்தவகையில், திருகோணமலை மாவட்டத்தின் நிலாவெளி, குச்சவெளி, புடவைக்கட்டு, புல்மோட்டை ஆகிய இடங்களில் கடந்த சனிக்கிழமை…
நீர்கொழும்பு மாநகர சபை வேட்பாளர்களை ஆதரித்த கூட்டம்!
-ஊடகப்பிரிவு- எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் கம்பஹா மாவட்டத்தின், நீர்கொழும்பு மாநகரசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற கூட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்துகொண்டார். நீர்கொழும்பில் நேற்று (25) இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் வர்த்தக சங்கங்கள், பாடசாலை பழைய மாணவர் சங்கங்கள், விளையாட்டுக் கழகங்கள் உட்பட பல்வேறு அமைப்புக்கள் மற்றும் சிவில் சமூகம் என்பன காலந்துகொண்டு வேட்பாளர்களுக்கான தமது ஆதரவினை தெரிவித்ததுடன், அமைச்சர்…
நீர்கொழும்பு மாநகர சபை வேட்பாளர்களுடனான கலந்துரையாடல்!
-ஊடகப்பிரிவு- எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பில் கம்பஹா மாவட்டத்தின், நீர்கொழும்பு மாநகர சபையில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களுடனான கலந்துரையாடல் இன்று (25) நீர்கொழும்பு சோண்டர்ஸ் மண்டபத்தில் இடம்பெற்றது. முன்னாள் மாநகர சபை உறுப்பினரும், நீர்கொழும்பு மாநகர சபை முதன்மை வேட்பாளருமான இஹ்ஷான் தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்துகொண்டு உரையாற்றினார். இந்நிகழ்வில் மக்கள் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட…
வருடாந்த மாணவர் வெளியேற்று விழா!
-ஊடகப்பிரிவு- கல்குடா சர்வதேச பாடசாலையின் வருடாந்த மாணவர் வெளியேற்று விழா நேற்று முன்தினம் (23) ஒட்டமாவடி, பாத்திமா பாலிக்கா மகா வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், பிரதி அமைச்சருமான அமீர் அலி கலந்துகொண்டு உரையாற்றினார். சர்வதேச பாடசாலையின் தலைவர் கலீல் ரஹ்மானின் ஏற்பாட்டில், பணிப்பாளர் றுவைத் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், சிரேஷ்ட விரிவுரையாளர் ரிஸ்வி, திருமதி.ஹைருன் நிஷா அமீர் அலி, சட்டத்தரணி ராசிக், அதிபர்களான இஸ்மாயில், சுபைர்தீன்,…
மருதமுனையில் பலமடையும் மயில்!
ஏ.எச்.எம். பூமுதீன் கல்முனை மாநகர சபையை கைப்பற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வியூகத்துக்குப் பக்கபலமாக செயற்பட மருதமுனை இளைஞர் சமூகம் உறுதிபூண்டுள்ளது. மருதமுனை திறந்த வெளியில் நேற்று மாலை (24) இடம்பெற்ற கலந்துரையாடலில் நான்கு வட்டாரங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி சுமார் 50 இளைஞர்கள் கலந்துகொண்டனர். குறுகிய நேர அழைப்பின் பேரில் கலந்துகொண்ட இவர்கள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வெற்றிக்கு உழைப்பதென்றும், தலைமையின் கரத்தை பலப்படுத்தவும் உறுதிபூண்டனர். அத்துடன், மருதமுனையில் களமிறங்கியுள்ள…
பாலமுனை வட்டார ஆலோசனைக் கூட்டம்!
-ஊடகப்பிரிவு- எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்காக, பாலமுனை மின்ஹாஜ் வட்டாரத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக, ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளரை வெற்றிபெற வைக்கும் ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை (24) சின்னப் பாலமுனை காரியாலயத்தில் இடம்பெற்றது. பாலமுனை வட்டார முதன்மை வேட்பாளரும், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸில் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில், கட்சியின் அரசியல் நடவடிக்கைகளை எவ்வாறு முன்னெடுப்பது என்பன பற்றி சின்னப்பாலமுனை…
‘யாழ் முஸ்லிம்களின் காணிப் பிரச்சினையைத் தீர்க்க தமிழ் தலைமைகள் முன்வர வேண்டும்’ அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!
-ஊடகப்பிரிவு- 2017 ஆம் ஆண்டிற்கான தேசிய மீலாத் விழா கடந்த சனிக்கிழமை (23) யாழ் உஸ்மானியாக் கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக சபாநாயகர் கரு ஜயசூரிய கலந்துகொண்டார். இங்கு உரையாற்றிய அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கூறியதாவது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனது பிறந்த நாளை கொண்டாடுங்கள் என்று எங்கும் சொல்லவில்லை. முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மிகவும் எளிமையாக வாழ்ந்து காட்டியிருக்கின்றார்கள் என்றும், எல்லோருக்கும் முன்மாதிரியாகவும் அருட்கொடையாகவும் அல்லாஹ் நபிகளாரை அனுப்பி மாக்களாக…
சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டோருக்கான உதவித் தொகை வழங்கல்!
-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், அனுராதபுரம், கஹட்டகஸ்திகிலிய பிரதேச செயலகத்திற்குரிய (215 திவுல்வெவ கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட) முக்கிரியாவ கிராமத்தில் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டோருக்கான உதவித் தொகை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மானின் நிதி ஒதுக்கீட்டில் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டது. இதன்போது, சிறுநீரக நோயினால் பாதிப்புற்ற 16 பேருக்கான உதவித் தொகை பா.உ இஷாக் ரஹ்மான் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.
